தெறி – சினிமா விமர்சனம்

இளையதளபதி விஜய் – இன்று தமிழின் மிகமுக்கியமான 4 நடிகர்களில் ஒருவர். தமிழகம்தாண்டி கேரளாவிலும் சூப்பர்ஸ்டாராக ஒளிருபவர். தேமே என்று ஒரே ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த விஜயை, சிறிதளவு நடிப்பிலும் கதையிலும் மாற்றம் செய்ய முயற்சித்த திரைப்படம் என்றால் அது காவலன். அதற்குமுன்வரை காது கிர்ரென்று ஆகும்வரை மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்த விஜய் எனும் மாஸ் ஹீரோவை, நடிகர் விஜயாக அடையாளப்படுத்திய திரைப்படம் காவலன். அதன்பின் அவரது சினிமா கேரியரில் அவர் சூஸ் செய்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்குள் இருக்கும் நடிகரையும், ரசிகர்கள் உண்மையாகவே எதிர்பார்த்த விஜயையும் திரையில் காட்டிக்கொண்டே வந்தது எனலாம். துப்பாக்கி, கத்தி, வேலாயுதம், நண்பண் என ஒவ்வொரு திரைப்படமும் விஜயை ஒவ்வொரு தளத்திற்கு கொண்டு சென்றது. சென்ற ஆண்டு வெளியான புலி சிறிது அதிருப்தியான திரைப்படம் எனினும் , ஒரு மாஸ் ஹீரோவான விஜய் குழந்தைகளுக்காக ஒரு படம் செய்த தில் அவ்வளவு எளிதாக மற்ற ஹீரோக்களுக்கு வராது. ஆம்; நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்தான்; எனினும் விஜய் ஹேட்டர் கிடையாது. விஜயின் இடைப்பட்ட காலத்திரைப்படங்கள் மற்றும் அவர...