X-Men : APOCALYPSE – சினிமா விமர்சனம்

வெல், X-MEN சீரிஸ்களைப் பற்றித் தனியாக சொல்லத்தேவையில்லை. ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமான பெயர்களில் மிகமுக்கியமான ஒன்று X-MEN. சூப்பர்ஹீரோக்கள் என்றாலே உடனுக்குடன் நியாபகம் வரும் மார்வல் காமிக்ஸ் படைத்த மிகமுக்கியமான காமிக்ஸ்களில் எக்ஸ்மேனும் ஒன்று. காமிக்ஸ் உலகபிதாமகன் ஸ்டான் லீயால் 1963 உருவாக்கப்பட்ட X-MEN இன்று 2016-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு மிகமுக்கிய மூன்று காரணங்கள் என்று பார்த்தால் இயக்குநர் ப்ரைன் சிங்கர், FIRST CLASS-ன் இரண்டாம் படைப்பான DAYS OF FUTURE மற்றும் இதுவரை சூப்பர் ஹீரோக்கள் கண்டிராத மிகபலசாலியான வில்லன் என் சபா நர் என்றழைக்கப்படும் அபோகலிப்ஸ். வெளிவர இருக்கும் அபோகலிப்சை, உருவான இடமான அமெரிக்காவிற்கு முன்பே நாம் காண இருக்கிறோம். ஆம், இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகுவதற்குள் ஒருவாரம் முன்பே இந்தியாவில் ரிலிஸ் செய்யப்படுகிறது. இந்தியாவில் X-MEN ஃப்ரான்சீஸ்களுக்கென மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருப்பதால் இந்தியாவில் முதலில் ரிலிஸ் செய்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. (இப்போதெல்லாம் ரில...