கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும்
கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும் (இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை இல்லை!அவ்வாறு இருந்தால் தயை கூர்ந்து மன்னித்துவிடவும்) சிறப்பாயிரம் இப்போது எந்த தமிழ்ச்செய்தித்தாள்களைத் திருப்பினாலும்,எங்காவது ஒரு மூலையில் கள்ளக்காதலால் கணவனைக்கொன்ற மனைவி,குழந்தையைக் கொன்ற தாய்,மனைவியை எரித்த கணவன்,போன்ற செய்திகளையெல்லாம் தாண்டி முதல் கள்ளக்காதலன்,இரண்டாம் கள்ளக்காதனை கதறக்கதற கொன்றான் எனும் அளவிற்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தக்கள்ளக்காதலால் யாருக்கு நன்மையெனில் தமிழின் முன்னனி நாளிதழ் என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும் நாளிதழ்,இன்று கள்ளக்காதல் செய்திகள் மூலமாகவே வாழ்ந்துவருகிறது.அந்த செய்தித்தாளைத்தவிர மற்ற அனைவருக்கும் ஒரு சோகம் தரக்கூடிய விஷயமே. சரி,முதலில் கள்ளக்காதல் ஸ்டேஜ்களை,பாலின் அடிப்படையிலும்,வயதின் அடிப்படையிலும்,செயலின் அடிப்படையிலும் காணலாம். ஆண்கள் பிஞ்சிலே பழுக்கும் வகையறா. இன்றைய காலகட்டத்தில்,தொழில்நுட்பம் என்பது,எவ்வளவுக்கெவ்வளவு பயனளிக்கிறதோ,அவ்வளவு கெடுதலையும் உண்டாக்குகிறது.மனிதனின் மனம் என்றும் நல்ல ...