கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும்
கள்ளக்காதல் நிகழ்வுகளும் சீரழியும் சமூகமும்
(இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்ட கட்டுரை இல்லை!அவ்வாறு இருந்தால் தயை கூர்ந்து மன்னித்துவிடவும்)
சிறப்பாயிரம்
இப்போது எந்த தமிழ்ச்செய்தித்தாள்களைத்
திருப்பினாலும்,எங்காவது ஒரு மூலையில் கள்ளக்காதலால் கணவனைக்கொன்ற மனைவி,குழந்தையைக்
கொன்ற தாய்,மனைவியை எரித்த கணவன்,போன்ற செய்திகளையெல்லாம் தாண்டி முதல் கள்ளக்காதலன்,இரண்டாம்
கள்ளக்காதனை கதறக்கதற கொன்றான் எனும் அளவிற்கு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.இந்தக்கள்ளக்காதலால்
யாருக்கு நன்மையெனில் தமிழின் முன்னனி நாளிதழ் என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ளும்
நாளிதழ்,இன்று கள்ளக்காதல் செய்திகள் மூலமாகவே வாழ்ந்துவருகிறது.அந்த செய்தித்தாளைத்தவிர
மற்ற அனைவருக்கும் ஒரு சோகம் தரக்கூடிய விஷயமே.
சரி,முதலில் கள்ளக்காதல்
ஸ்டேஜ்களை,பாலின் அடிப்படையிலும்,வயதின் அடிப்படையிலும்,செயலின் அடிப்படையிலும் காணலாம்.
ஆண்கள்
பிஞ்சிலே பழுக்கும்
வகையறா.
இன்றைய காலகட்டத்தில்,தொழில்நுட்பம்
என்பது,எவ்வளவுக்கெவ்வளவு பயனளிக்கிறதோ,அவ்வளவு கெடுதலையும் உண்டாக்குகிறது.மனிதனின்
மனம் என்றும் நல்ல விஷயங்களை நாடிச்செல்லாது.அதற்கு தீயவைதான் என்றும் பிடிக்கும்.20
ரூ புத்தகம் வாங்க ஆளில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியின் எதிரில்
உள்ள டாஸ்மாக்கில் போட்டி போட்டு சரக்கு வாங்குவதைப்பார்த்தாலே இது விளங்கும்.இன்று
இணையத்தில் உள்ள பல நல்ல விஷயங்களை விட அதிகமான கெட்ட விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.வெறும்
6-ம் வகுப்பு மாணவனுக்கு இன்று முகநூலில் 200 பெண்நண்பர்கள்.டீன்-ஏஜ் பிராயத்தை அவன்
அடையும்போது அவன் இன்டெர்நெட் முதல் ஆபரேட்டிங் சிஸ்டம் வரை கரைத்துக்குடித்துள்ளான்.அன்றைய
காலகட்டத்தில்,நடிகையின் தொப்புளை க்ளோஸ்-அப்பில் காட்டினாலே ஜொள்ளு விடுபவர்கள் நம்
ஆட்கள்.ஆனால்இன்று,நடிகையின் முக்கால் நிர்வாணம் கூட எளிதாக தெரிகிறது மனதுக்கு.காரணம்,பார்த்து
பார்த்து புளித்துவிட்டது.அதைவிட பலவகையான பலான படங்கள் நெட்டில் கொட்டிக்கிடக்கின்றன.இந்த
செல்போனைக்கண்டுபிடித்தவர் பேசும் நோக்கத்திற்காகத்தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்
என எண்ணிய எனக்கு,இப்போது அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் ஒரு சாத்தானாக தான் தெரிகிறான்.பலான
படங்களை பதின்ம வயதில் பார்க்கும் ஒருவனுக்கு,காம ஆசை துளிர்விடுவது இயற்கை.ஆனால் அதற்கு
வடிகாலாக அவன் செயல்படுத்தத்துணியும் விஷயம்,மிகக்கொடுமையானது.ஏனெனில் அவன் வயதை ஒத்த
மாணவன்,எங்கோ ஒரு பள்ளியில்,அவனுடன் படிக்கும் பெண்ணை அனுபவிக்கும் வீடியோ,இவன் கையில்.அவ்வாறு
இருக்கும்போது உடன்படிக்கும் மாணவிகளை அவன்எவ்வாறு பார்க்கத்துணிவான்.கிட்டத்தட்ட அம்மாணவிகளைப்பற்றி
வேசியைப்போன்ற எண்ணம் தான் அவன் மனதில் எழும்.தன் தாகத்தை தணிக்கும் முயற்சியில் அவன்
ஈடுபடும்போது,தவறானதொரு பாதையை நோக்கி செல்கிறான். அவ்வாறு இருக்கும் மாணவனை மயக்க,காம
இச்சைக்கு ஏங்கித்தவிக்கும் ஏதேனும் ஒரு பெண் அவனை தன்பால் ஈர்க்கிறாள்.அரவணைக்கிறாள்.ருசி
கண்ட பூனை சும்மா இருக்குமா?தன் திருவிளையாடல்களைத்தொடர ஆரம்பிக்கும்.அவன் அதன்பின்
திருமணமே ஆனாலும் பிற பெண்களை ருசிக்கவே எண்ணுவான். இவ்வாறான ஆண்கள் என்ன ஆனாலும் திருந்தவே
மாட்டார்கள்.இவர்களைப்போன்றோர் தான் மனைவிகளை கொல்லக்கூட துணிவர்.
கட்டிய மனைவி,காமத்திற்கு
சரியானபடி உடன்படாததால்,கள்ளக்காதலியை ஏற்படுத்தி கொள்ளும் வகையறா.
மனைவிக்கு,கணவனைப்பிடிக்காததால்,கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் வகையறா.
இந்த வகையறா ஆண்கள்,மனைவியுடன்
முழு தாம்பத்ய வாழ்க்கை வாழ முயற்சிப்பர்.ஆனால்,மனைவிமார்கள்,வீட்டின் மிரட்டல்கள்
காரணமாகவோ,முன்னால் காதலனின் நினைவு காரணமாகவோ,அல்லது கணவன் அசிங்கமாக இருக்கிறான்
என்ற நினைப்பின் காரணத்திலோ,ஆண்களை தம் பக்கம் அண்டவே விடமாட்டார்கள்.பின்,வழக்கம்போல
ஆண்கள்,தன்னுடன் பணிபுரியும் பெண்ணையோ,அல்லது தன் வீட்டின் அருகில் இருக்கும் பெண்களையோ
நாடிச்சென்று நாசமாய்ப்போவார்கள்.கிட்டத்தட்ட முதல்மரியாதை கான்செப்ட் தான் இவர்கள்.
மனைவியை பிடிக்காத
ஆண்கள் வகையறா.
இவ்வகை ஆண்களும்
கிட்டத்தட்ட மேற்கூரிய வகையறாவைச்சார்ந்தவர்கள் தான்.ஆனால் அவர்கள் விதியே என்று வேறோரு
பெண்ணைத்தேடிச்சென்றால்,இவர்கள் வேண்டுமென்றே நாடிச்செல்வார்கள்.இவர்களுக்கு முதல்
பிரச்சினை,மனைவியின் அழகின்மையே.இரண்டாவது முன்னால் காதலி.
மேல்கண்ட வகைகளையும்
தாண்டி ஒருசிலர் இருக்கின்றனர்.அவர்களைப்பொறுத்தவரை காமம் மட்டுமே வாழ்வின் பிரதானம்.அவர்களுக்குத்தன்
மனைவியையும் பிடிக்கும்,மாற்றான் மனைவி என்றால் இன்னும் பிடிக்கும்.இவர்கள் தம் வீட்டினுள்ளும்
அன்பைப்பொழிவார்கள்.மாற்றான் வீட்டினுள்ளும் அன்பைப்பொழிவார்கள்.இத்தனைக்கும் இவர்களின்
மனைவி என்னதான் அனைத்துவிஷயங்களுக்கும் உடன்பட்டாலும்,மற்றொரு பெண்ணைத்தொடமல் இவர்களால்
இருக்கவே முடியாது.
பெண்கள்
பெண்களைப்பொறுத்தவரை
அன்புக்கு ஏங்கும் பெண்கள்,ஆசைக்கு ஏங்கும் பெண்கள் என்ற இருவகையே எனக்குத்தெரிந்து
இருக்கிறது.
அன்புக்கு ஏங்கும்
பெண்களைப்பொறுத்தவரை,அவர்களுக்கு தேவை முதலில் பாசம்.பின் ஆறுதல் வார்த்தைகள்.
கணவன்,தன்னை காரணமேயின்றி
நிராகரிக்கப்படும்போது ஏற்படும் அந்த வலி,பாசம் சிறிதுமின்றி தன் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கத்தெரியாத
கணவன்,ஒரு சில விதவை கைம்பெண்கள்,எப்போதும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கும் கணவன்
போன்ற வகையறா பெண்கள் இதில் அடங்குவர்.இந்த மாதிரியான சமயத்தில் தன்மீது அன்பு காட்டுவது
போல் ஒருத்தன் நடிக்கிறான் என்று தெரிந்தாலும்,அவர்களுக்கு அந்த பொய்யான அன்பாவது கிடைக்காதா?என்றெண்ணி
அவனுக்காக எதையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்களுக்கு தன் குழந்தைகள்,சமூகம் பற்றிய
பயம் இருந்தாலும்,அன்பு மட்டுமே பிரதானமாக தெரியும்.
அடுத்த வகையறா
தான்,தற்போது தாறுமாறாக கொலைகளை செய்து கொண்டிருக்கும் வகை பெண்கள்.இவர்களுக்கு கணவனிடத்தில்
நல்ல அன்பும்,காம சுகமும் கிடைத்தாலும்,அவர்களுக்கு போதுமானாதாக தோன்றாது.அதன்காரணமாக,தன்னிடம்
கண்டிப்பாக விசுவாசமாக இருப்பான் என்று நினைக்கும் ஆட்களை வளைத்துப்பிடித்து விடுவார்கள்.இதில்
சிக்கி சீரழியும் ஆண்களில் பலர் திருமணமாகதவர்களாகத்தான் இருப்பார்கள்.இவர்களுக்கு
காம இச்சையின் காரணமாக, அந்த நேரத்தில் என்ன தோன்றினாலும் செய்துவிடுவார்கள்.அவ்வாறாக
நடப்பது தான் கள்ளக்காதல் கொலைகள்.இவர்களின் கணவனாலோ,குழந்தைகளாலோ காமம் தடைபடுமாயின்
அவர்களைக்கொலை செய்யவும் யோசிக்கமாட்டார்கள்.
விளைவுகள்
1.குடும்பத்தின்மீது
சமூகத்தில் கேவலமான எண்ணம்.
2.குழந்தைகளின்
எதிர்காலம் நாசம்.
3.ஜெயில் தண்டனை,
4.வாழ்க்கை வீணாதல்
யாரோ ஒருவர் செய்யும்
தவறுக்கு இவர்கள் குடும்பத்தையே நாசமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்சிறப்பாயிரம்
கள்ளக்காதல் ஏற்படாமல்
இருக்கவும்,தடுக்கவும் ஓரே வழி,அன்பு மட்டுமே.பெண்களே!நீங்கள் உங்கள் கணவரைப்புரிந்து
கொண்டு வாழப்பழகுங்கள்.அவரிடம் விட்டுக்கொடுத்துச்செல்ல முயலுங்கள்.முடிந்தவரை அவரை
உங்கள் முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்களின் கண்சிமிட்டல் போதும்,உங்கள்
கணவரை காலியாக்குவதற்கு.
கணவன் மார்களே!உங்கள்
மனைவியை புரிந்துகொள்ள முயலுங்கள்.அவர்களிடம் அன்பாக பேசி உங்கள் பேண்ட் ஜோப்பில் சொருகிக்கொள்ளுங்கள்.அவர்களை
சிறுசிறு பரிசு,சுற்றுலா,அன்பான வார்த்தை,ஆறுதலான ஸ்பரிசம் போதும்,மடக்குவதற்கு.
உங்கள் மனைவியோ
அல்லது கணவனோ நடத்தைத்தவறுகிறார் என்றால் அது உங்கள் மேல் உள்ள தவறுதானே தவிர,அவர்கள்
மீது இல்லை.முடிந்தவரை அதைக்களையப்பாருங்கள்.இருப்பது வெறும் 50 ஆண்டுகள்தான் இந்த
பூமியில்.அதிலும் சாவு என்பது எக்கணத்திலும் வரும்.இறந்த பின் நாம் அவர்களை அப்படிப்பார்த்திருக்கலாம்,இப்படி
கவனித்திருக்கலாம் என்று ஒப்பாரி வைப்பதற்கு பதில்,இருக்கும்போதே நினைத்ததை செய்யுங்கள்.
(இது எப்பவும்
திருந்தாத கேசுங்களுக்கு பொருந்தாது.அந்த கேசுங்கள டைவர்ஸ் பண்ணிட்டு எஸ் ஆகறது தான்
புத்திசாலித்தனம்)
(சிறப்பாயிரம்னா-முன்னுரை,தற்சிறப்பாயிரம்னா-முடிவுரை)
Migavum arumai tholare ! ungal payanam thodaratuum !
ReplyDeleteநன்றி சகோ!!!
Deleteநல்ல கட்டுரை. அதுவும் டைவர்ஸ் பண்ணிட்டு எஸ் ஆகற அறிவுரை சிறப்பு.
ReplyDeleteமிக்க நன்றி அண்ணே!!!!
Delete