தமிழகத்தைத்தாக்கும் குழந்தை ஏசு
தமிழகத்தைத்தாக்கும் குழந்தை ஏசு
நேற்று ‘சிவகாசிக்காரன்’
அண்ணன் ராம்குமாருடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது மழையைப்பற்றிய பேச்சு வந்தது.தமிழ்நாட்டில்
தாறுமாறாக மழைபெய்தாலும் எங்கள் சேலத்தில் சிறு சாரல் மட்டுமே வீசும்.ஆனால் அதிசியமாக
நேற்று தமிழகத்தை இன்ச் பை இன்ச்சாக அளந்துகொண்டிருந்த சூரியக்கதிர்களிடம் இருந்து
காக்க ஹைட்ரஜனும்,ஆக்ஸிஜனும் கலந்து எங்கள் சேலத்தை மழையாக குளிர்வித்துக்கொண்டிருந்தது.இதுவரை
ஒரு கட்டுரை எழுத தலைப்புக்கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த எனக்கு கணநேரத்தில் உதயமானது
இந்த யோசனை.
இப்போது எந்த செய்தித்தாள்களிலும்
மழையைப்பற்றி செய்தி இருந்தால் கூடவே ‘எல்நினோ’ என்ற அழையாவிருந்தாளியும் அவ்விடத்தில்
இருப்பார்.யார் அந்த எல்நினோ?எதற்கு நம்மை படுத்தி எடுக்கிறார்?அவரால் என்ன பிரயோஜனம்
என்று பலருக்கும் பல குழப்பம் இருக்கும்.அவரைப்பற்றியும் அவரின் செயல்களைப்பற்றியும்
சிறிது அலசுவதே இந்தக்கட்டுரையின் நோக்கம்.
நமக்கு மழை எவ்வாறு
வருகிறது?நிலத்திலோ அல்லது கடலிலோ இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்திற்கு இரையாகி,ஆவியாகி,கருமேகமாகி
வளிமண்டலத்தின்மேல் சென்று அங்கு குளிர்விப்பதால் தான் மழைவருகிறது என்று ஆறாம் வகுப்புக்குழந்தைக்குகூடத்தெரியும்.ஆனால்
ஏன் ஆவியாகும் இடத்திலே அம்மழை பெய்வதில்லை?இப்போது ஆப்பிரிக்கா ஒரு வெப்ப நாடு.சராசரியாக அங்குதான்
அதிக வெயில் அடிக்கும்.அதனால் ஆவியாகும் செயலும் அந்த கண்டத்தைச்சுற்றியே நடக்கும்.அவ்வாறிருந்தும்
அங்கு மழையளவு நம் மழையளவைக்காட்டிலும் குறைவே.காரணம் அங்கு சிறந்தபடியான குளிர்விப்பான்
கிடையாது.சகதியான இடங்களில் மேலும் சகதியும், புழுதியான இடங்களில் மேலும் புழுதியும்
தான் ஆப்பிரிக்காவில் உள்ளது. இதற்கெல்லாம் கிளைமேட் என்றழைக்கப்படும் காலநிலையே காரணம்.
உலகில் மொத்தம்
6 வகையான காலநிலைகள் நிலவுகின்றன.காலநிலை என்பது சூரியனுக்கும் அவ்விடத்திற்கும் இடைப்பட்ட
தொலைவு மற்றும் கோணம் ஆகியவற்றைப்பொருத்து அமைத்திருப்பார்கள். ஆனால் இந்தியா அதற்கு
மாறானது.இந்த 6 காலநிலைகளைத்தாண்டி இந்தியாவிற்கு மட்டும் புதிதாக இரண்டு காலநிலையை
உருவாக்கி உள்ளார்கள் அறிஞர்கள்.இந்தியாவை வடக்குத்தெற்காகப்பிரிக்கும் கடகரேகையைக்கொண்டு
பிரித்துள்ளார்கள்.அதாவது வட இந்தியாவில் நிலவும் காலநிலை கண்ட காலநிலை எனவும்,தென்
இந்தியாவில் நிலவும் காலநிலை மிதவெப்ப காலநிலை என்றும் பிரித்துள்ளனர்.(இதுவும் இந்தியாவை
துணைக்கண்டம் என்று கூற ஒரு காரணம்)வட இந்தியாவைப்பொறுத்தவரை,கோடை காலங்களில் அதிக
வெப்பமும்,குளிர் காலங்களில் அதிக குளிரும் நிலவும்.இதற்கு காரணம் வட இந்தியாவானது
கடல் பகுதியிலிருந்து அதிக தொலைவில் அமைந்திருப்பதே!தென் இந்தியாவானது குளிர் காலத்தில்
மிதவெப்பமும்,வெயில்காலத்தில் கொடுர வெப்பமும் நிகழும்.
வட இந்தியாவை வாழவைப்பது
தென்மேற்குப்பருவக்காற்று.அதுதான் கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் மழையைக்கொட்டிவிட்டுச்செல்லும்.தமிழகத்தின்
மேல் என்ன கோவமோ,தமிழ்நாட்டைத்தவிர மற்ற சகோதரி மாநிலங்களான ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம்
ஆகியவற்றை நனைத்துவிட்டுச்செல்லும்.அதனால் அங்கு நதிகளில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடும்.நாம்
அவர்களிடம் நீரைப்பிச்சைகேட்டுகொண்டிருக்கவேண்டும்.நம் தமிழகத்தின் மேல் துளிகூட கரிசனை
இல்லாத காற்று.
அப்படி இருந்தும்
நம் தமிழகத்தின்மேல் காலம்காலமாக தீரா காதலுடன் வந்து பாசத்தை நீராகக்கொட்டிச்செல்லும்
காற்று நம் வடகிழக்குபருவக்காற்றுதான்.
பொதுவாக காற்று
என்பது எங்கும் நிறைந்திருக்கும்.காற்றும் நீரைப்போல தான்.சூரிய வெப்பத்தால் ஆவியாகும்
தன்மை உடையது.ஒரு இடத்தில் சூரிய வெப்பத்தின் மூலம் காற்று ஆவியாகினால் அங்கு ஏற்படும்
மாற்றம் தான் குறைந்த காற்றழுத்தம் எனப்படும்.அதை சமன் செய்யும் பொருட்டு வேறோரு இடத்தில்
இருந்து காற்றானது அந்த குறைந்த இடத்தை நோக்கி வரும்ப்படி வரும்போது நீராவியான மேகமும்
அடித்துவரப்பட்டு மழையும் பெயும்.
இப்போது எல்-நினோக்கு
வரலாம்.எல்-நினோ என்பதன் பொருள் குழந்தா ஏசு.இது கிறிஸ்துமஸ் காலங்களில் தோண்டி சில
மாதங்கள் நீடிக்கும்.இது 5 அல்லது 6 ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் பருவநிலை மாற்றமாகும்.இந்த
குழந்தை ஏசுவிற்கு தமிழகத்தின்பால் பயங்கர பாசம்.அதனால் தான் கடந்த 2002 முதல்
2004 வரை 3 ஆண்டுகள் தமிழகத்தில் குடிகொண்டு பெருத்த வறட்சியை உண்டுபண்ணியது.
பெரு மற்றும் ஈக்வேடர்
நாடுகளில் உள்ள கடற்கரையில் வெப்பநிலை துரிதமாக அதிகரிக்கும்.அதனால் அங்குள்ள இதனால்
அங்கு குறைந்த காற்றழுத்தம்உருவாகும்.இதனை ஈடுகட்டும் பொருட்டு அனைத்துத்திசைகளிலிருந்தும்
காற்று அங்கு இழுக்கப்படும்.இதன் காரணமாக பசுபிக் மற்றும் இந்தியப்பெருங்கடல்களில்
உருவாகும் பருவக்காற்றுகள் வலுவிலந்து திசை மாறும்.இதன் காரணமாக இந்தியாவை நோக்கி வீசும்
தென்மேற்கு பருவக்காற்று காலதாமதத்துடன் தொடங்கும்.1மாதம் பெய்யவேண்டிய மழை 15 நாட்கள்
தள்ளி வெறும் 15 நாட்களே பெய்யும்.
நம் தமிழகத்துக்கு
தான் அந்த பருவக்காற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லையே என்று நினைப்பவர்கள் கவனிக்கவும்.நாம்
பருவமழையைவிட அண்டை மாநிலங்களின் நதிகளையே பெரிதும் சார்ந்திருக்கிறோம்.அவர்களுக்கே
மழையில்லையெனில் நமக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்?தண்ணீர் இல்லாத காரணத்தினால் வறட்சி
ஏற்படும்.விவசாயம் நசியும்.பொருளாதாரம் சீர்குலையும்.நமக்கு இப்படியென்றால் ஆஸ்திரேலியாவின்
நிலைமை இன்னும் மோசம்.புதர்க்காடுகளுக்கு பெயர் போன ஆஸி புதர் தீ மற்றும் வறட்சி நம்மைவிட
அதிகமாக இருக்கும்.பிரேசில்,இந்தோனிசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த
எல்-நினோ ஒரு காட்டு காட்டிவிடும்.
சரி பழைய கதையை
விடுவோம்.இந்த ஆண்டு குழந்தை ஏசுவின் பார்வை நம்மீது விழுமா,என்றால் கண்டிப்பாக விழும்.ஆனால்
இந்த முறை அவர் பார்வை கொஞ்சம் சிறிய அளவிலே தான் என்பதால் இந்த முறை நம் தென்மேற்கு
பருவக்காற்றில் 20 % மட்டும் அவர் எடுத்துக்கொண்டு மிச்சத்தை நம்மிடமே கொடுத்துவிட்டுச்செல்ல
போகிறார்.அதனால் முடிந்தவரை பெய்கின்ற மழையை சேகரித்தால் மட்டுமே நம்முடைய நீர்வளத்தையும்,நம்மையும்,நாட்டையும்
எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும்.
(குறிப்பு:-இந்த
பதிவின் வார்த்தைகள் மட்டுமே என்னுடையது.விஷயங்கள் அனைத்தும் விக்கிப்பீடியா மற்றும்
சில புத்தகங்களுடையது)
Comments
Post a Comment