பயணம் @ டைம் மிஷின்-1




அத்தியாயம்-1

21-ம் நூற்றாண்டு



இவனலாம் ஃப்ரண்டா வச்சிகிட்டு என்ன தான் பன்றது?பாத்தே பல நாள் ஆச்சு.உயிரோட இருக்கானானு கூட தெரில.இவனுக்கு மனசுல பெரிய ஐன்ஸ்டின்னு நினைப்பு.எந்த நேரத்துல காலேஜ்ல ஃபிஸிக்ஸ் எடுத்தானோ,அப்போலர்ந்து ஃப்ரெண்ட்ஷிப்பே பிச்சிகிச்சு’                என்று மனதில் யாருக்கும் கேட்காமல் உரக்க சொல்லியபடியே பாலாவின் வீட்டை அடைந்தேன்.

காலேஜ் முடித்தவுடன் எப்படியோ அடிச்சி பிடிச்சி,  ஒரு ஐடி கம்பனியில் அமெரிக்காகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு லோல்ப்பட்டுக்கொண்டிருக்கும் சாதாரண இளைஞன் நான். எனக்கு விவரம் தெரிந்து,முதன்முதலில் சைக்கிள் பழகியதிலிருந்து,கடைசியாக காலேஜில் சிகரெட் பழகியது வரை,அனைத்துப்பழக்கங்களிலும் முதன்மையானவன்,என் பாலா.    காலேஜில் படிக்கும் போது கருந்துளை எனப்படும் ப்ளாக் ஹோல்ஸைப்பற்றி,பாடம் எடுக்கும் வரையில்,அவன் என்னுடன் இருந்தான். பாடம் முடிந்து 5 வருடம் ஆகிவிட்டது,அவன் பிரிந்தும்தான்.     என் நண்பர்கள் அனைவரையும் பார்த்து,என் திருமணத்திற்கு அழைத்தாயிற்று,பாலாவைத்தவிர. இன்று எப்படியாயினும் அவனைக்கண்டறிந்து,அழைப்பிதழை கொடுத்தே ஆகவேண்டும். அதனுடன் அவன் என்ன வேலை செய்கிறான் என்பதனையும் அறிய ஆவலுடன் அவன் வீட்டை அடைந்தேன். சிறுவயதில் இருந்தபோது என் வீட்டின் அருகில் இருந்த அவனது முகவரி,காலேஜ் முடித்தவுடன் மைலாப்பூருக்கு இடம் மாறியது.     தெரு, அஹ்ரகாரம் எனும் பெயருக்கு மாற்றம் அடைந்திருந்தது.தூரத்தில் மெட்ரோ ரெயில்,மின்சாரத்தை சாப்பிட்டு ஹாயாக பறந்தது.


என்னுடைய போன் ஒரு ஆங்கிலப்பாடலைப்பாடி,என்னை அழைத்தது.எடுத்தால் என் வருங்கால மனைவி.அவளிடம் விஷயத்தைக்கூறி முடித்து என்னவென்று கேட்டால்,எந்த கலர் சேலை எடுக்கலாம் என்ற ஒரு மாபாதக கேள்வியை எழுப்பினாள்.இதுக்குத்தான்,இந்த மாமா பொண்ணுங்களைலாம் கட்டிக்கவே கூடாது,ஊர்ல ‘பே’னு திரிஞ்சிட்டு இங்க நம்ம உயிர எடுக்குதுங்க.இதுவே ஒரு ஐ.டி பொண்ணா இருந்தா,சேலையாவது,நைட்டியாவது னு ஜாலியா இருந்திருக்கலாம்.அந்த நொடியில்,நகரத்துப்பெண்கள், தேவதையாக கண்முன்னே தோண்றினார்கள்.

கல்லூரியில் காலை எடுத்துவைக்கும்போதே அறிவியல் மீது அதீத ஆர்வம் அவனுக்கு.எப்போது பார்த்தாலும் ப்யூரெட்டையும்,ட்யூப்லைட்டையும் வைத்து ஏதாவது செய்து கொண்டே இருப்பான்.புரியாத பல பெயர்களை கூறி என்னை நன்றாக வெறுப்பேற்றுவான்.அவன் கூறியதிலிருந்து ஒரு விஞ்ஞானி தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா கிளம்ப போகிறான் என்ற எண்ணம் சில தடவையும்,கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ஒரு அட்மிஷன் விழப்போகிறது என்ற எண்ணம் பல தடவையும் வந்துள்ளது.எப்படியோ,இப்போது இவன் எங்கே இருப்பான்?அமெரிக்கா வா? கீழ்ப்பாக்கமா என்று குழம்பிகொண்டே அவன் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினேன்.கதவு திறக்கப்பட,எங்களின் அம்மா,பொலிவிழந்த முகத்துடன் கதவை திறந்தார்.

என்னைப்பார்த்த சந்தோஷ ரேகை அவர் முகத்தில் தென்பட்டாலும்,அதைத்தாண்டிய கவலை நிரந்தரமாக குடிகொண்டிருந்தது.அவர்களிடம் உடல்நலம்,பொருளாதார நலம் எல்லாம் கடமைக்காக விசாரித்துவிட்டு பாலாவைப்பற்றி பயத்துடன் வினவினேன்.நல்லவேளை,அவன் அமெரிக்காவுக்கும் செல்லவில்லை,கீழ்ப்பாக்கமும் செல்லவில்லை.மைலாப்பூரில்தான் அவன் வீட்டில் இருக்கிறான் என்ற செய்தி மேலும் என்னை ஆனந்தமாக்கியது.அமெரிக்கா சென்றிருந்தால்கூட பரவாயில்லை,கீழ்ப்பாக்கத்தில் இருந்தால்,போய் வர நேட்சுரோ பெட்ரோல் செலவு,ஹார்லிக்ஸ்,ஆப்பிள் போன்றவற்றை என் பர்ஸில் இருந்து தானே அழவேண்டும்.அதுவும் பெட்ரோல் என்ற வஸ்து அழிந்து பல வருடங்கள் ஆகியுள்ளதால்,இப்போது இயற்கை பெட்ரோல் என்று தயாரித்து விற்கின்றனர்.அதன் விலை சாதாரணமானது எனினும் அதன் தட்டுப்பாடு மிக மிக அதிகம்.அதை வாங்குவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.

மாடியில் இருந்த அவனது அறையை அடைந்து கதவைத்தட்டினேன். பதில் வராத காரணத்தினால் மீண்டும் தட்டினேன்.உள்ளே இருந்து அவன் குரல்.

‘சாப்பாட்ட வெளியலயே வச்சிட்டு போ மா! உங்கிட்ட எத்தனி தடவ சொல்லுவேன்’

‘டேய்,நான்தான்டா சந்துரு.கதவ தொறடா சைன்டிஸ்ட்’

கதவு திறக்கப்பட்டது.

சுமாரான ஒரு ஃபிகருக்கு நாம் வலை வீசும்போது ,அதில்  ஒரு சூப்பரான ஃபிகர் தானாக வந்து மாட்டினால் எவ்வளவு சந்தோஷம் இருக்குமோ,அவ்வளவு சந்தோஷத்துடன் அவன் முகம் என்னை வரவேற்றது.

‘எப்படி மச்சி இருக்க?’   -நான்.

‘நல்லா இருக்கேன்டா! நீ எப்படி இருக்க’   -பாலா

பரஸ்பர விசாரனைக்குப்பின்தான்,மக்கள் கண்ணோட்டத்தில் அவனைப்பார்த்தேன்.ஒட்டிய கன்னம்,கூன் முதுகு,முட்டை கண்கள்,மெலிந்த தேகம் என திரைப்படங்களில் பிச்சைக்காரன் வேடம் ஏற்க அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தான்.

அவன் பேச ஆரம்பித்தான்.ஐன்ஸ்டைன்லிருந்து ஆரம்பித்து சந்திரசேகர் என பல பெயர்களை கூறி,அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா என கேட்டு அதை என்னிடம் கூறினான்.எப்படியாவது இங்கே இருந்து தப்பிக்க மாட்டோமா?என்ற எண்ணம் அவ்வப்போது என் சிந்தையில் வந்து போனது.

‘என்ன மச்சி,ரொம்ப போர் அடிக்கிறனா?’

‘ஆமான்டா,செம போர்’

‘சரி இங்க வா.உனக்கு இன்ட்ரஸ்டிங்கான விஷயத்த காட்டறேன்’

அவன்,அந்த ஹாலில் இருந்து உள்ளறைக்குள் நுழைந்தான்.கண்டிப்பாக அவன் காட்டப்போகும் விஷயம் எனக்கு இன்ட்ரெஸ்ட்டை தராது என்று எனக்குத்தெரியும்.

உள்ளே அந்த அறை முழுவதும் பல்வேறு சார்ட்களாலும்,அந்த சார்ட்களுக்குள்ளே பல வித பென்சில்களின் கைவண்ணத்தால் உருவாகியிருந்த நேர்க்கோட்டு கோலங்கள் என்னை அலங்கோலப்படுத்தியது.சுவற்றில் யாரென்று தெரியாத சில வெள்ளையர்களும்,எங்கேயோ பாத்திருக்கமே என எண்ணச்செய்யும் பல போட்டோக்களும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தன.அந்த ரூமின் நடுவே ஏதோ ஒரு சைக்கிள்ரிக்ஷா மாதிரி ஏதோ ஒன்று இருந்தது.

மச்சி! இதான்டா என்னோட புது கண்டுபிடிப்பு!!! எப்படி இருக்கு?’

‘சூப்பர் மச்சி! இது எவ்ளோ மைலேஜ் தரும்? பெட்ரோல்லா?  இல்ல கரெண்டா?’

இந்த கேள்வியை நான் உண்மையாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கேட்டேன்.ஆனால் அதற்கு அவன்,

‘டேய் இது ரிக்ஷா கிடையாதுடா.இட்ஸ் எ டைம் மெஷின்.ஐ ஆல்ரெடி டோல்ட் அபௌட் திஸ் இன் அவர் காலேஜ் டேய்ஸ்.ஆர் யூ பர்காட்?’



ஆ!சத்திய சோதனை.ஒரு ஐ.டி என்ஜினியர் முன்பே ஆங்கிலத்தில் திட்டுகிறானே.பதிலுக்கு நாமும் ஆங்கிலத்தில் கதறவேண்டும்.

ஓ! ஐ எம் ஸாரி டா’

இதற்குபின் எந்த வார்த்தையும் இந்த நேரத்தில் பேசவராமல் சிக்கிக்கொண்டேன்.காரணம்,எதிரே இருக்கும் சைக்கிள் ரிக்ஷா..  சாரி, டைம் மிஷின்.அவன் கூறுவது மட்டும் உண்மையாக இருந்தால்,அந்த டைம் மிஷினை பயன்படுத்தி,நான் கோட்டைவிட்ட ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வை மிண்டும் எழுதிவிடலாம்.இல்லையேல்,இப்போது ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் படத்தின் கதையை,இறந்த காலத்திற்கு சென்று என் சொந்தக்கதையென்று சொல்லி டைரக்ட் செய்துவிடலாம்.அடச்சீ,இது எதுக்கு,பேசாம ஷேர் மார்க்கெட்தான் கரெக்ட்.உக்காந்துகிட்டே லட்சம் லட்சமா சம்பாதிச்சிடலாம்.அப்படியே , காலேஜ்ல காதலிச்ச செல்விகிட்ட,எப்படியாச்சும் லவ்வ சொல்லி ஓ.கே பண்ணிடலாம்.என்னுள் பல பல சிந்தனைகள்,அகத்திரையில்,டிடிஸ் மற்றும் 5.1 எஃபக்டில் ஓடிக்கொண்டிருந்தது.

என் அகத்திரையினுள் ஓடிக்கொண்டிருந்த படத்திற்கு, பாலா இன்டர்வெல் சவுண்ட் கொடுத்து,இடைவேளை விட்டான்.அவனிடம்,

‘மச்சி! இது நெஜமா வேலை செய்யுமாடா?’

‘இன்னும் ஒரு சின்ன வேலை இருக்கு மச்சி.அத முடிச்சிட்டோம்னா,கண்டிப்பா இது பக்காவான,உலகின் முதல் உண்மையான டைம் மெஷினே தான்டா’

‘சரி மச்சி’

அவனிடம் பேசியபடியே அவனது கண்டுபிடிப்பை இஞ்ச் பை இஞ்சாக பார்த்துக்கொண்டிருந்தேன்.எனக்கு அறிவியல் அறிவும், தமிழ்லும் தடுமாற்றம் என்பதை நினைத்து இப்போது தான் நொந்து கொண்டேன்.ஏதோ இதை நான் சொல்லசொல்ல மெக்னேஷ் எழுதுவதால்,உங்களுக்குப்புரியும் என்று நினைக்கிறேன்.

எனக்கு அந்த மெஷினைப் பார்க்கும்போது ரிக்ஷாவைத்தவிர வேறு எதுவுமே ஞாபகம் வரவில்லை.எனக்கு டைம் மெஷின் பற்றிய படங்கள் ஞாபகம் வந்தது.அந்த படங்களில் வரும் டைம் மெஷினைப்போல் இது இல்லை.

பாலா திடிரென்று அழைத்து,அதன் செயல்பாட்டைப்பற்றி கூறினான்.

‘மச்சி,இது ஓடுறத்துக்கும் நேட்சுரோப் பெட்ரோல் வேனும்டா.நியூக்ளியர் பவர் யூஸ் பன்னலாம்னு பார்த்தா,அது நமக்கே வேட்டு வச்சிடும்.இன்கேஸ்,இந்த மெஷின்,பெயிலியர் ஆச்சுனா,நியூக்ளியர் வெடிச்சி’

‘டேய்,வாய மூடுடா.நானே கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க வந்துருக்கேன்.வெடிச்சி,பிடிச்சினுகிட்டு’

‘சாரி மச்சி.சரி நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.நாம இத பிக்ஸ் பண்ணிடலாம்.’

அவன் கேட்ட,கூறிய செயல்களை செய்து முடிக்க 30 நிமிடங்கள் ஆயின.எல்லா வேளையையும் முடித்துவிட்டு நேரத்தைப்பாரத்தால் மணி காலை 11 ஆகிவிட்டது.சரி கிளம்ப வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் கிளம்ப ஆயுத்தமானேன்.

‘என்னடா கிளம்புற?’

‘ஆமா மச்சி,இன்னும் மாமா வீட்டுக்குலாம் பத்திரிக்கை கொடுக்கல.ஊர்ல வேற பத்திரிக்கை தரனும்.நான்தான்டா எல்லாம் கொடுக்கனும்.’

‘இரு மச்சி.இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பலாம்.இப்போதான்டா டைம் மெஷின் ரெடி ஆகிருக்கு.அதுல நீயும் எங்கூட ட்ராவல் பன்னனும்’

என் மனதில் ஆவல் இருந்தாலும்,அதைக்காட்டிலும் பயம் அதிகமாகவே இருந்தது.பயத்துடன் பயணிக்க முடியாது.பயத்தை முறிக்க நமக்கு நெப்போலியனோ,ஜான் எக்ஷா போன்ற வீரர்களின் ஊக்கமூட்டும் மருந்து தேவை.
பாலாவிடம் 2 நிமிடத்தில் வருவதாக கூறி,அந்த தெருவில் இருக்கும் வைன்ஷாப்பை அடைந்தேன்.அங்கு நெப்போலியனும் இல்லை,ஜானும் இல்லை. என்ன செய்வது என யோசித்து ஒரு கையெழுத்தை,தலையெழுத்தாக வாங்கிக்கொண்டு,அதை இடுப்பில் சொருகி மறைத்துக்கொண்டு அவன் வீட்டை அடைந்தேன்.

அவன் ரூமில் உட்கார்ந்து ஒரு பெக் போட்டேன்.பயம் சிறிது போனது.எப்போதும் குடிக்கும் பாலா,அப்புறமாக குடிப்பதாக சொன்னான்.பெட்ரோலை அந்த ரிக்ஷாவினுள் செலுத்தினான்.

‘மச்சி,நா முதல்லயே கேட்டேன்ல,இது எவ்வளவு மைலேஜ் தரும்’

‘லிட்டருக்கு 2000 வருஷம் வரும்னு நினைக்கிறேன் மச்சி’

‘அப்படினா நாம இப்போ 1000 வருஷத்த ட்ராவல் பண்ண போறமா?’

‘எதுக்குடா 1000 வருஷம்.15 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு,உடனே ரிட்டர்ன்’

‘சரி மச்சி’

நான் ஒரு பெக்கை முடித்துவிட்டு மிச்சம் இருந்த பாட்டிலை மீண்டும் இடுப்பினுள் பதுக்கிவைத்துக்கொண்டு,அந்த டைம் மெஷனை பார்த்தபடியே இருந்தேன்.சட்டென்று அந்த அறையில்,எங்களுக்கு பின்னால் பளீரென வெளிச்சம்.திரும்பிப்பார்ப்பதற்குள்,’இது தப்பு டா,டேய் சீக்கரம்டா’என்ற சத்தம் வந்தது.திரும்பிப்பார்ப்பதற்குள் மறுபடியும் வெளிச்சம்.அங்கே யாருமில்லை.என்னைவிட அதிகம் பயத்தில் பாலா சிக்கிக்கொண்டான்.அவனுக்கும் நிவாரணம் தேவை என்பதால், ஒரு பெக்கை ஊற்றித்தந்தேன்.பின் சிறிது நேரத்திற்கு பின்,அது என்னவாக இருக்கும் என்ற குழப்பம் எங்களுக்கு வந்தது.

‘ஒருவேளை பேயாக இருக்கமோ?’
இதெல்லாம் நம்மைத்தடுப்பதற்கான சதி மச்சி என்று ஆறுதல் படுத்தியவாறே,அந்த சைக்கிள் டைம் மெஷனில் ஏறி அமர்ந்தேன்.அவன் முன்னே வந்து அமர்ந்தான்.எனக்குப்பக்கத்தில் கேப்டன் படத்தில் வரும் பாம் டைமரைப்போன்று சிகப்பு நிறத்தில் நேரத்தையும் நாளையும் காட்டிக்கொண்டிருந்தது.பாலா,என் பக்கத்தில் வந்து அந்த டைமரை   எட்டி ஏதேதோ செய்ய   முயற்சித்துக்கொண்டிருந்தான்.




‘மச்சி! ஷல் ஐ ஹெல்ப்?’

‘இல்லடா பரவால்ல.இது டைமர்.இங்க ஏதாச்சும் தப்பு பன்னிட்டா அவ்ளோ தான்’

‘சரிடா சயின்டிஸ்ட்.கீதா என்ன ஆனா?’

கீதா,பாலாவின் காதலி.

‘யூ ஜஸ்ட் ஸ்டாப் லைக் திஸ்.யார் கீதா?’

‘என்ன மச்சி,புட்டுக்கிச்சா?’

அவன் எதுவும் சொல்லாமல்,நேராக வண்டி இருக்கையில் அமர்ந்து பெடல் போட ஆரம்பித்தான்.அந்த டைம் மெஷினின் இருபுறமும் இருந்த பெரிய சக்கரம் உருள ஆரம்பித்தது.ஆனால்,வண்டியோ நகரவில்லை.என்னடா இரு வம்பா போச்சுனு நான் பார்ப்பதற்குள்ளேயே,டைம் மெஷின் சுத்தியும்,ஷங்கர் படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் வர ஆரம்பித்தது.அடித்த போதை இறங்கியது.இவன் உண்மையிலே சயின்டிஸ்ட் தான்.பாலாவை நினைத்துப்பெருமையாக இருந்தது.உண்மையாகவே,நான் ஒரு டைம் மெஷினில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.




‘மச்சி!!சூப்பர்டா! நீ ஒரு லெஜன்ட் டா’

‘சீ!அப்டிலாம் இல்ல மச்சி’

‘மச்சி,இப்போ நாம எந்த வருஷத்துக்குப்போறோம்?’

‘2010 மச்சி.15 வருஷம் ரீவைண்ட் டா’

‘இந்த டைமர்ல எதுனா பிரச்சினை இருக்கா மச்சி?’

‘அப்படிலாம் ஒன்னுமில்லயே’

‘இல்ல,இது பாட்டுக்கு 900,800 னு காட்டுது.அதான் கேட்டேன் மச்சி’

‘என்னாது?’-என்று அலறியவாறே திரும்பியவன்,பேயடித்தது போல் இருந்தான்.ஏதேதோ முயற்சிகளை செய்து கொண்டிருந்தான்.அப்புறம் தலையில் கையை வைத்து மெஷினை ஓட்டிக்கொண்டிருந்தான்.

‘மச்சி!! ஒரு பிரச்சினைடா.’

‘என்ன மச்சி பிரச்சினை?பரவால்ல சொல்லுடா’

‘டைம் மெஷின்ல உங்கிட்ட பேசிகிட்டே தப்பா டைம செட் பன்னிட்டேன்டா’

‘டேய்!என்னடா சொல்ற?அடுத்தவாரம் எனக்கு கல்யாணம்டா.சரி இப்போ எங்க தான் போயிட்டு இருக்கோம்?’

இந்த கேள்வியைக்கேட்டு முடித்தபோது அந்த சைக்கிள் ஒரு காட்டின் நடுவே இருந்தது.பக்கத்தில் இருக்கும் டைமரைப்பார்த்தேன்.

நாள் – 26.03.0010







பயணம் @ டைம்மெஷின்-2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின் -3ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பயணம் @ டைம்மெஷின் -4ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்


Comments

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை