Thursday, 31 July 2014

Abraham Lincoln-சினிமா விமர்சனம்


ஆப்ராகம் லிங்கன் என்று பெரிய எழுத்தில் போட்டிருந்த டைட்டிலை படித்த நான், THE VAMPIRE HUNTER  என சின்னதாக கொடுத்திருந்
த கேப்சனை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் , அவ்வளவு சிரத்தையாக பாத்திருக்கமாட்டேன்.இது ஏதோ ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை பற்றிய படம் என்ற எண்ணம்தான் இருந்தது.THE VAMPIRE, WOLF போன்ற FORMULA-களில் வந்த ஆங்கில படங்களில் எனக்குப்பிடித்தது இரண்டு தான். ஒன்று X-MEN , மற்றும் VAN HELSING.இதைத்தவிர TWLIGHT SERIES படங்கள் அதி அற்புதமாக இருக்கும் என்று கூரிய என் நண்பனை படம் பார்த்துவிட்டு வெளியே வந்து நானே, WOLVERINE-ஆக மாறி கொல்லலாம் என்றுதான் தோன்றியது. ஒருவேஏளை முதல் பாகத்திலிருந்து பார்த்திருந்தால், பிடித்திருக்கலாம்.ஆபிரஹாம் லிங்கன் என்ற மனிதரின் பெயர் இடம்பெறாமல், அமெரிக்காவில் எந்தவிழாவும் நடைபெறாது என என் அமெரிக்கவாழ்நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கிறேன்.நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருந்த , அமெரிக்க கருப்பின மக்களை , அடிமைகள் எனும் சங்கிலியிலிருந்து விடுவித்தவர் இவர்.

'மக்களால் , மக்களுக்காக , மக்களே தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி '-என்ற எதுகை மோனை மாறாத இவரது பஞ்ச் உலக பிரசித்தம்.இவருடைய முகம்கூட ஏதோ ஒரு அமெரிக்க மலையில் செதுக்கி வைத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு உத்தமர், தன் இளம்வயதில் VAMPIRE எனப்படும் ஓநாய் மனிதர்களை வேட்டையாடுபவராக ,இப்படத்தில் காட்டுகிறார்கள்.அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சி, VAMPIREகளை சுற்றியே அமைந்ததாகவும் காட்டுகிறார்கள்.  இதுவே நம் தமிழகத்தில் காமராசர் ஐயா ,இரவானால் குட்டிப்பிசாசுகளை அழிக்க அவதாரம் எடுப்பது போன்றோ, காந்தி மகான் , இரவினில் பேயோட்ட செல்வார் என்றோ எடுத்திருந்தால், டைரக்டருக்கு  இந்நேரம் இரண்டாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருப்பார்கள். ஆனால், இவர்கள் அமெரிக்கர்கள் அல்லவா, அமெரிக்கன் பை-யை ப்ளாக்பஸ்டர் ஆக்கியவர்களுக்கு,லிங்கனாவது சொக்கனாவது என்று இறங்கி களம் கட்டி அடித்துள்ளார்கள்.

கதை  ****ஒரு வேம்பையரின் தாக்குதலால் இறந்துவிடுகிறார்,லிங்கனின் தாயார்.அதனால் , அந்த வேம்பையரை,எவ்வாறாகினும் பழிவாங்கிட ,சந்தர்ப்பம் தேடுகிறார்.ஒரு முறை அச்சந்தர்ப்பம் வாய்க்கும்போது ,அந்த வேம்பயரை சுடுகின்றார்.ஆனால் அது சாகாமல், லிங்கனை கொல்லவருகிறது.அச்சமயம் , ஹென்றி என்பவன் அந்த வேம்பயரை துரத்தி அடித்து, லிங்கனை காப்பாற்றுகிறான்.ஹென்றி ஒரு வேம்பயரை வேட்டையாடும் வேட்டைக்காரன்(நம்ம விஜய்னா மாதிரி இல்லிங்கோ).அவன் லிங்கனுக்கு , வேம்பயரை எவ்வாறு வேட்டையாடுவது என கற்றுத்தருகிறான்.அதாவது வெள்ளி பூசப்பட்ட ஆயுதங்களால் மட்டுமே வேம்பயரை வேட்டையாட முடியும்.லிங்கன், அதில் தேர்ச்சி அடைந்து ,ஒரு நகரத்திற்கு ,ஹென்றியால் அனுப்பப்படுகிறான்.அங்கே ஒரு கடையில்  பகுதி நேரமாக , பகலில் வேலை செய்து கொண்டு,இரவில் அங்குள்ள வேம்பயர்களை பற்றிய தகவல்களை ஹென்றி அனுப்ப, அவர்களை கச்சிதமாக தலை,கை, கால் என அனைத்து உறுப்புகளையும் வஞ்சனை பார்க்காமல் வெட்டி சாய்க்கிறார்,லிங்கன்.ஆனால், தன் தாயைக்கொன்ற கயவன் தலையை கொல்லுவதற்காக ,வெறிகொண்டு அலைகிறான்.இதற்கிடையே வக்கில் படிப்பு, அடுத்தவனுக்கு நிச்சயமான பொண்ணை டாவடிப்பது போன்ற , அமெரிக்க குடிமகனின் சாதாரண கடமையையும் செய்கிறார்.இதற்கிடையே அமெரிக்காவில் நடக்கும் அடிமைத்தனத்தை எதிர்த்து, தன் கருப்பின நண்பருடன் இணைந்து போராட்டாம் செய்கிறான்.ஒரு கட்டத்தில் தாயைக்கொன்ற ,வேம்பயரை , பெரிய கிராபிக்ஸ் கலக்கலில் போட்டுத்தள்ளுகிறான்.அதைக்கண்டு கோபமுற்ற வேம்பயர் தலைவன் , லிங்கனின் கருப்பின நண்பனை கடத்தி வருகிறான். அங்கும் சென்று எல்லோரையும் தாருமாறாக போட்டுத்தள்ளிவிட்டு நண்பனை மீட்டு வருகிறான்.இடையினில் தனக்கு வேட்டையாட கற்றுக்கொடுத்த ஹென்றி , ஒரு வேம்பயர் என்பதனையும் அறிகிறான். ஆனாலும் அவனுடன் நட்பு பாராட்டுகிறான். கருப்பின மக்களுக்கு எதிரான அடிமைசாசனத்தை மாற்ற இனைக்கும் லிங்கனை , ஹென்றி எச்சரிக்கிறான். அதாவது , அடிமை மக்கள் இருப்பதால் தான் வேம்பயர்கள், வெள்ளை நிற மக்களை தாக்கால் இருக்கின்றன. அடிமை முறையை ஒழித்தால், ரத்ததிற்காக அந்த காட்டேரிகள் அனைத்து மக்களையும் போட்டுத்தள்ளிவிடும்.அந்த சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆகிறார் லிங்கன். அடிமை முறையை ஒழிக்கிறார். இதனால் காண்டான வேம்பயர் தலைவன் உள்நாட்டுபோரின் மூலம் , வேம்பயர்களை ஏவுகிறான். போரில் கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் சிக்குகிறார் லிங்கன்.

போரில் வெற்றி பெற்றாரா? லிங்கனின் குடும்பம் என்ன ஆணது? மக்கள் என்ன செய்தார்கள்? வேம்பயர் தலைவன் என்ன ஆனான் என்பதை TORRENT-ல் டவுன்லோட் செய்து கானுங்கள்.


திரைக்கதை  ****


கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தாலும் ஸ்பூஃப் வகை திரைப்படமாக மாறியிருக்கும் இத்திரைப்படத்தை ,வழக்கம்போல் ஆக்ஷன் படமாக மாற்றி கொடுப்பது, திரைக்கதை தான்.கொஞ்சம்கூட போர் அடிக்காமல் , அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிடுகிறது.வசனம்   ***


நான் தமிழில் இத்திரைப்படத்தை பார்த்ததால் , வசனங்கள் பற்றி சரியாக விவரிக்கமுடியவில்லை. ஏறத்தாழ தமிழிலும் வசனங்கள் நன்றாக செட் ஆகியிருந்தது.

நடிப்பு ***


அனைவரும் சிறப்பான நடிப்பு. அதிலும் ஹீரோயின் செம பிகர். நல்லா சைட் அடிக்கலாம். வெள்ளைக்கார பெண்களுக்கு , கருப்பு முடியிருந்தால் , எனக்கு மிக பிடிக்கும். அந்த வகையறா ஹீரோயின். ஹென்றியாக வருபவரின் நடிப்பு அருமை. ஆளும் நம் இந்திப்பட ஹீரோக்கள் போல தான் இருந்தார். மற்றவர்கள் கச்சிதமான நடிப்பு.

இசை ***


பெரிதளவில் இசை இல்லை என்றாலும், ஆக்சன் படத்தை காப்பாற்றும் வகையில்தான் இருக்கிறது. ஓகே ரகம்.

எடிட்டிங்  ****


கச்சிதமான கத்திரிக்கோலால், கச்சிதமாக கத்திரித்துள்ளார் எடிட்டர்.சலிப்பில்லாத , திரைக்கதைக்கு ஏற்ற எடிட்டிங்.

கலை ****


அற்புதமான கலை வடிவாக்கத்தை செய்துள்ள ஆர்ட் டைரக்டருக்கு , இப்பட குழுவினர், ஒரு சிலையே வைக்கலாம்.அக்கால அமெரிக்காவை, தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

இயக்கம் ***


பிரமாதம் என்று சொல்லமுடியாவிட்டாலும், கச்சிதமான ஆக்சன் படத்தை, கிராபிக்ஸ் கலக்கலோடு , கச்சிதமாக சமர்பித்துள்ளார் இயக்குனர்.


மொத்ததில், ஆக்சன் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம். கிராபிக்ஸ்லாம் செம.பரபர திரைக்கதை.வன்முறை கொஞ்சம் அதிகம் எனினும் 300-2 பார்த்தவர்களுக்கு சாதாரணமாக தெரியும்.

என்னுடைய ரேட்டிங் -  3.5 /5


உங்கள் விருப்பம்

4 comments:


  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. among white peoples girls or divided into three types,brunette or black girl,blind or gold like hair,redhead or darkbrown girl,i prefer brunette but most of the white peoples prefer blonde girl,maria sharapova and sharon stone ellarum blonde girls thaen

    ReplyDelete