முறைகேடான திருமணங்கள்-ஒரு அலசல்
முறைகேடான திருமணங்கள்-ஒரு அலசல்
எங்கள் சேலத்தில்,என்
மாமா பையன் ஊரில் ஒரு கலவரம்.ஒருவீட்டின் முன் 200 ஆட்களுக்கு மேல் கூடி இருந்தனர்.சரி,ஏதோ
பிரச்சினை என்று,வழக்கமாக அனைவரும் செய்யும் வேலையான,வேடிக்கை பார்த்தேன்.அங்கே ஒரு
பெண்,முகம் முழுக்க கண்ணீருக்கு வார்த்துவிட்டு,கதறிக்கொண்டிருந்தால்.
பெண்-’அவர விட்ருங்க,அவர
எதுவும் செஞ்சிடாதிங்கப்பா’
அப்பா-‘எனக்கு
வர்ற ஆத்திரத்துக்கு ,உன்னையும்,அவனையும் பொழி போடாம விடமாட்டேன் டீ’
அப்படி இப்படினு
கத்திருட்ந்தாங்க.
எனக்கு கொஞ்சம்,விளங்க
ஆரம்பிச்சது..அந்த பெண்ணின் கழுத்தில் தாலி தொங்கிட்டு இருப்பதை கண்டதும்,சரிஇது கன்ஃபார்ம்,காதலிச்சிருக்காங்க,கல்யாணம்
பண்ணிருக்காங்க,வீட்டுல கண்டுபிடிச்சி அடிச்சி இழுத்துட்டு வந்துருக்காங்க,அப்படினு
என் 8-ஆம் அறிவு எனக்கு விளங்க வச்சது.சரி பொண்ணு இருக்கா,பையன் எங்க னு கூட்டத்துல
தேடிப்பார்த்தேன்.பையன,காணோம்.அச்சோ பாவம்.அந்த பையனுக்குத்தெரியாம பொண்ண இழுத்துட்டு
வந்துருக்காங்க,அந்த பையன் மனசு என்ன பாடுபடும்?அப்படினு என் மனசு இரங்கற்பா,பாட ஆரம்பிச்சது.
ஒருவேளை,அந்த ஜாதிக்கார
பசங்க இழுத்துட்டுப்போயிருப்பாங்களா?இந்த ஜாதிக்காரன் இழுத்துட்டுப்போயிருப்பானா? என்று
பலவாறாக மனம் எண்ண ஆரம்பித்தது.சரி,வாய்விட்டுக்கேட்டே விடுவோம்,என்றெண்ணி பக்கத்திலிருந்த
ஒரு தம்பியிடம் கேட்டேன்.அந்த தம்பியிடம் 4 தடவை கேட்டபின்தான்,என் கேள்வியை அந்த தம்பி
உணர்ந்தார்.என்ன செய்வது அந்த தம்பிக்கு வயது 75 ஆகிடுச்சே.
அவர் கூறியது,என்னை
ஆச்சரியப்படுத்தியது.ஏனெனில்,இழுத்துக்கொண்டு ஓடிய பையனும் எங்கள் ஜாதியைச்சார்ந்தவர்
தான்.என்னடா இது?நம்ம ஜாதிக்காரப்பையன்,நம்ம பொண்ணை லவ் பண்ணி கல்யானம் பன்றதுல என்ன
இருக்கு?ஏதோ வேற ஜாதிக்கார பசங்கனா கூட ,இவங்க ஆத்திரப்படுரதுல ஒரு காரணம் இருக்குனு
சொல்லலாம்.பாவம் அந்த பொண்ணு எப்படிலாம் கதறுது,என்றவாறே நினைத்துப்பரிதாப பட்டுக்கொண்டிருந்தேன்.
அப்போது,அந்த சபையின் மத்தியில்,ஒருவர் கடும்கோபத்துடன்
வெள்ளைச்சட்டை,வெள்ளை வேட்டி நிமித்தமாக வந்து நின்றார்.அந்த பெண்ணின் தகப்பனாரிடம்,சொன்னாளா?அப்டினு
கேட்டார்.யாருங்க அவரு அப்படினு நானும்,என் பக்கத்துல இருந்த அதே தம்பிக்கிட்ட 3 தடவ
கேட்டதும்,அந்த தம்பி சொன்னாரு,அந்த கம்பீர வெள்ளவேட்டி தான் கூட்டிட்டு ஓடுன பையனோட
அப்பா.என்னடா இது?இந்த குழப்பு குழப்புறானுங்க?பொண்ணோட அப்பனும் இருக்கான்,பையனோட அப்பனும்
இருக்கான்.இந்தப்பையன் என்ன ஆனான் யார் இவங்க?இது உண்மையாலும் காதல் விவகாரமா?இல்ல
கள்ளக்காதல் விவகாரமா அப்படினு குழம்பி மறுபடியும் அந்த தம்பிகிட்ட வந்து ,
பொண்ணுக்கு ஏற்கனவே
கல்யாணம் ஆயிடுச்சா தம்பினு கேட்டேன்.இல்லப்பா,இந்த பொண்ணு காலேஜ்ல ஏதோ பெரிய படிப்புலாம்
படிச்சிருக்குன்னு சொன்னாரு.
சரி பையன் எப்படினு
கேட்டேன்.
பையன் தறிதான்
ஓட்டுறான்,அப்படினு சொன்னாரு.(நெசவுத்தொழிலைத்தான் அவ்வாறு கூறுவார்கள்)
சரி இந்த காலத்துப்பொண்ணுங்களுக்கு,எல்லாத்தையும்
சீக்கிரமா பாத்துடனும்னு ஆசைப்பட்டு ,இப்படி தகுதி இல்லாத பசங்கள லவ் பண்ணி வீணாப்போகுதங்க,னு
நெனச்சிகிட்டே மறுபடியும் வேடிக்கை பார்த்தேன்.
அந்த வெள்ளை வேட்டி
அந்த பெண்ணின் அருகில் வந்து,
‘எங்கம்மா,அவன்?னு
கேட்டார்.
‘நான் சொன்னா,நீங்க
அவர அடிப்பிங்களா மாமா?’-னு அந்த பொண்ணு சொன்னதும்,பயங்கர காண்டானார்,அந்த வெள்ளை வேட்டி.
நானும்,நார்மல்லா
எல்லாருக்கும் வர்ற கோவம்தான்னு நெனச்சேன்.அப்போ தான் அவரு சொன்னாரு
‘யாருடி உனக்கு
மாமா அடிப்பாவி,சொந்தப்பெரியப்பன மாமானு கூப்புட்றியே,நீயெல்லாம் காலேஜ் போய் என்னத்தடீ
படிச்சு கிழிச்ச?’அப்படினு அவர் சொன்னார்.அந்த பெண்ணோ ’நாங்கள் இருவரும்,ஒரே வயிற்றிலா
பிறந்தோம்’எனத்திமிராக கூறினார்.
அப்போ தான் எனக்கு விளங்கியது.அந்த வெள்ளை வேட்டிக்காரரின்
தம்பி மகளைத்தான்,அவரது மகன் கூட்டிச்சென்று கல்யாணம் செய்துள்ளான்.பின்,இவர்கள் இருவரும்,3
நாட்கள் ஆசைதீர படுத்து விட்டு,அழுத்துப்போனதும் பிடிக்கலை எனக்கூறி சொந்த ஊருக்கே
வந்துள்ளனர்.பையன்,முதலில் சென்றால்,தர்ம அடி விழும் என்று அந்த பெண்ணை அனுப்பியள்ளான்.அவன்,அந்த
ஊரின் ஒரு மூலையில் பதுங்கி இருந்திருக்கிறான்.இதைவிடக்கொடுமை என்னவெனில்,அந்த பையனும்,பெண்ணும்
கிட்டத்தட்ட 6 வருடங்கள்,காதல் எனும் போர்வையில் காம லீலைகள் செய்துள்ளனர்.அந்த பெண்
M.Sc படித்தவராம்.
இப்போது இது போன்ற
கேவலமான விஷயங்கள்,எங்கள் சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்போது நடைபெறத்துவங்கியுள்ளது.பங்காளிபையனுடன்
ஓடிய பெண்,சித்தி மகளை மணந்த அண்ணன்,பெரியம்மா மகளுடன் சல்லாபம் செய்த தம்பி என பல்வேறு
இன்செஸ்ட் செக்ஸ் கதைகள் எழுதுமளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
காதல் பண்ணித்தொலைங்க.யார் வேண்டாம்னு சொன்னது.அதுக்குனு அண்ணனையோ,தம்பியவோ,தங்கச்சியவோ,அக்காளையோ
ஏன்டா காதல்ங்ற பெயர்ல,இழுத்துகிட்டு போய்,உறவுகளுக்கிடையேயான மதிப்புகள அசிங்கப்படுத்துறிங்க?
இதில்,கொடுமை என்னவெனில்,அந்தபெண்களும்,இதற்கு
ஒப்புக்கொள்வதே!இவர்களால் எவ்வாறு வாழமுடிகிறது.ஒரு குறிப்பிட்ட சமூகத்தில்,இது போன்ற
நிகழ்வுகள் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால் நமது இந்து சமூகத்திலோ,இது ஒரு பெரிய பாவம்.இந்த
மாதிரி கல்யாணம் செய்து கொண்டு வாழ்பவர்கள்,தகாத உறவுகளை வளர்ப்போர்,ஆகியோர்,கள்ளக்காதல்
செய்பவர்களைவிட கேவலமானோர்.
சரி,இவ்வாறு ஓடிப்போய்த்திருமணம்
செய்து பிள்ளைப்பெற்றுக்கொள்கிறீர்கள்.அப்போது உங்கள் மகன் ஒருவரை தந்தை என்று அழைத்தால்,அதன்
அம்மாவை அத்தை என்று தானே அழைக்கமுடியும்.அவர்களிடம் பொய் சொல்லிமறைத்தாலும்,ஊர்உலகம்
அவர்களின் மனதில் இவ்விஷயத்தினை விளைவிக்காதா?அப்படி அந்த குழந்தைகளின் மனதில் விஷயம்
பதிந்தால்,உங்களை எவ்வாறு நினைக்கும்?ஆண்குழந்தையெனில் சரி என்று விட்டுவிடலாம்.பெண்குழந்தையாக
இருந்தால்,என்ன செய்வீர்கள்?அந்த குழந்தைக்கு சடங்கு என வரும்போது எந்த மாமனை அழைத்துக்கொண்டு
வருவீர்?எந்த மாமன் மடியில் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு காது குத்துவீர்?திருமனத்திற்கு
சீர் செய்ய அண்ணனிடம் செல்வீர்களா?மாமனிடம் செல்வீர்களா?அல்லது உங்கள் குழந்தைகளை,உங்கள்
சமூகத்தில்தான் திருமணம் செய்துவைக்க முடியுமா?உங்கள் கணவருக்கு மாமன் முறையெனில் உங்களுக்கும்
மாமன் முறை தானே வரும்?உங்கள் மனைவிக்கு அண்ணன் முறையெனில்,உங்களுக்கும் அண்ணன் முறை
தானே வரும்?அப்படி முறை மாறும் போது எவ்வாறு உங்கள் உறவுகளை அழைப்பீர்?உங்கள் குழந்தைகளுக்கு
எவ்வாறு ,உங்கள் உறவுகளை அறிமுகப்படுத்துவீர்?
இவ்வாறு,உங்கள்
வாழ்க்கையும் அழித்துவிட்டு,உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நாசமாக்கிவிட்டுச்செல்லும்
முறைகேடான திருமணங்களைச்செய்வதில் என்ன லாபம்?தாழ்த்தப்பட்ட பெண்ணைத்திருமணம் செய்யும்போது
அந்த மணமகன் குடும்பத்தில் சப்போர்ட் இல்லையாயினும்,மணமகள் வீட்டாரின் சப்போர்ட் இருக்கும்.ஆனால்,உங்கள்
சமூகத்திலே இவ்வாறு திருமணம் செய்வீர்களானால்,நீங்கள்,தீண்டத்தகாதவர் எனும் நிலைமையைத்தான்
அடைவீர்.நீங்கள் தவறு செய்ததால் உங்களுக்கு அந்த தண்டனை கிடைக்கிறது.ஒரு பாவமும் அறியாத
உங்களின் குழந்தைகளுக்கும் அந்த தண்டனைக்கிடைக்க நீங்களே காரணம்.
அடுத்து,நம்ம நாடோடிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.உங்களைப்போன்ற தியாகச்செம்மல்கள் இருப்பதால்தான்,காதலர்கள்
ஓடிச்சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.தயவு செய்து அவர்களுக்கு உதவும்முன்,அவர்கள்
இருவரின் உறவுமுறைகள் மற்றும் சமுதாயங்களைத்தெரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையைப்பின்
பாழாக்குங்கள்.மேலே குறிப்பிட்ட திருமணத்தின் முடிவில் அந்த பெண்,தாலியை கழட்டி அந்த
பையன் முகத்தில் செவிட்டி அடித்துவிட்டாள்.அவளை,அவள் வீட்டார் ஏற்றுக்கொண்டனர்.அந்த
பையனோ ஊரைவிட்டே சென்றுவிட்டான்.அவர்களுக்கு திருமணம் புரிய உதவி செய்தவர்கள்,மற்றும்
லாட்ஜ் புக் செய்து விளக்குப்பிடித்தவர்கள் ஜெயிலுக்கு சென்றனர்.இப்போது அவர்களைப்பார்த்து
ஊர் கேட்கும் கேள்வி இதுதான்.உன் தம்பி,உன் அக்காளை காதலிக்கிறேன் எனக்கூறினால் ,அவளை
உன் தம்பிக்கே கூட்டிகொடுத்துவிடுவாயா?
What you've told here is absolutely correct. Today , Many of our buddies are just get fatally attracted by sexual pleasures and they think that nothing is wrong . ithu migavum vedhanai tharakoodye oru visyam .Enne seivathu....
ReplyDeleteநாம என்ன சகோ பண்றது?பசங்க தான் இப்படினா,பொன்னுங்க அதுக்குமேல!!!
Delete