FIGHT CLUB – சினிமா விமர்சனம்
படம் ஆரம்பித்த முதல் 2 நிமிடத்திலேயே என்னைக்கவர்ந்திழுத்த ஒரு படமென்றால் அது கண்டிப்பாக FIGHT CLUB மட்டுமே . அப்படி என்ன FIGHT CLUB-ல் இருக்கிறது என்கிறீர்களா ? படத்தின் டைட்டிலை பார்த்ததும் ஏதோ குத்துச்சண்டை சம்பந்தமான படமாக இருக்கும் என்று நினைத்து, வேண்டா வெறுப்பாக இருந்த எனக்கும் ஆரம்பத்தில் அப்படி ஒரு கேள்வி எழுந்தது . முதல்காட்சியிலேயே ஒருவன் , ஒரு சேரில் கட்டப்பட்டிருக்கிறான் . அவனுக்குப்பின்னால் ஒருவன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கிறான் . கட்டப்பட்டிருக்கும் நபர் நம்மிடம் பேச ஆரம்பிக்கிறான் . அவன்தான் படத்தின் ஹீரோ . அவனுக்கு பின்னால் இருக்கும் நபர் டெய்லர் (துணி தைக்கற ஆளு இல்லைங்க . பேரே TYLOR தான் ) எனவும் , அவன் அந்நகரத்தில் இருக்கும் பெரிய பெரிய அடுக்குமாடி அலுவலக கட்டிடங்களில் பாம் வைத்திருக்கிறான் எனவும் , அவையனைத்தும் இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப்போகிறது என்றும் கூறுகிறான் . இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால் , டைலர்க்குத்தெரிந்த விஷயம் எனக்கும் தெரியும் என்கிறான் . இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் மர்லா எனும் பெண்தான் என்று கூறுபவன் , அதற
Good info
ReplyDeleteநன்றிங்க!! ஆனா இன்னமும் நான் கடைசியா கேட்டட கேள்விக்கு பதில் கிடைக்கலை!!!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-