வேலையில்லா பட்டதாரி-விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி


வணக்கம் நண்பர்களே!!!இன்று நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திரைப்படத்தை காணச்சென்றேன்.முதலில் நம் நாட்டில் இன்றைய நிலைமையில் அத்தியாவாசிய பிரச்சினைகளில் ஒன்று,வேலையின்மை.கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கிய காரணி என்று பல பொருளாதார வல்லுநர்கள்,நாளோரு தினமும்,பொழுதொரு மேனியும்,தினப்பத்திரிக்கைகளில் அறிவிக்கை கொடுத்து வருகிறார்கள்.இந்தியாவை பொறுத்தவரை கல்வியறிவு என்பது 100க்கு 74 சதிவீதம் என்ற விகிதத்தில்தான் உள்ளது.ஆனால் இவர்களில் படித்து பட்டம் பெற்று,அவர்கள் துறை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோர் எனக்கணக்கிட்டால்,100க்கு 10 சதவீதம் பேர்கூட தேர மாட்டார்கள்.அவர்கள் படிப்பது எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்,ஆனால் வேலை செய்வதோ சிஸ்டம் அனலிஸ்ட் எனப்படும் கணிணித்துறை.காரணம்,படிப்பது என்பது பணம் சம்பாதிப்பதற்கு எனும் ஒரு சூழல் உருவாகி உள்ளது.இன்று நோயாளி ஒருவரைப்பார்ப்பதற்கு, 500,1000 என சம்பாதித்துத்துக்கொண்டிருக்கும் பல டாக்டர்கள்,+2வில் மாநில அளவில் ரேங்க் வாங்கி,தினசரி நாளிதழ்களில்,டாக்டர் ஆகி சேவை செய்வோம் எனக்கூறியவர்களே!இன்னும் சிலர் என்ஜினியர் ஆகி நாட்டில் புதிய வகைத்தொழில்நுட்பத்தைக்கண்டுபிடிப்போம் என உறுதியளித்தவர்களே.ஆனால்,எனக்குத்தெரிந்து எந்த ஒரு டாக்டரும் இலவசமாக சிகிச்சையளித்தோ,எந்த ஒரு என்ஜினியரும் புதிய தொழில்நுட்பத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தோ கேள்விபட்டதில்லை.காரணம்,அவர்களை இந்த சமுதாயம் பணத்திற்கு அடிமையாக்கிவிட்டதே.நாட்டிற்கு அர்ப்பணிக்கும் உன் தொழில்நுட்பத்தை என்னிடம் தந்தால்,உன் வீட்டிற்கு இதை அர்ப்பணிக்கிறோம்,அதை அர்ப்பணிக்கிறோம் எனக்கூறும் தனியார் நிறுவனத்திடத்தில் அவன் அடிமையாக்கப்பட்டுவிடுகிறான்.இலவசமாக மருத்துவம் செய்யும் டாக்டர்களை,நம் மக்கள்,இவன் டாக்டர் தானா,இல்லை போலி டாக்டரா?இவனிடம் மருத்துவம் பார்த்தால் சரி ஆகாது என உள்ளுற முடிவெடுத்துக்கொள்வதால்,சேவை செய்ய எண்ணுபவன்கூட தனியார் மருத்துவமனைக்குத்தாவிச்செல்கிறான்.இவர்களை ஓரம் கட்டி விட்டு பார்த்தால்,பேட்டியளிக்காத பலரின் நிலைமை,கம்ப்யூட்டர் முடித்த என்ஜினியரிங் மாணவன்,துணிக்கடையில் டேலி வேலையும்,மெக்கானிக்கல் முடித்த மாணவர்,பேட்டா ஷோரூமில் செருப்பைவிற்றுக்கொண்டும்,எலக்ட்ரிக்கல் முடித்த மாணவர்,கார் கம்பனியில் விற்பனைபிரதிநிதியாகவும் தான் அதிகமாக செல்கின்றனர்.இத்தனைக்கும்,இவர்களுல் பலர்,படிக்கும்போது அவர்களின் துறையையே விரும்பாமல்,பெற்றோர் மற்றும் உறவினர்களின் வற்புருத்தலினால் படிப்பார்கள்.நம் நாட்டில் மட்டுமே கல்வி என்பது,நாடு மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியைப்பற்றி எண்ணாமல்,பணம் ஒன்றையே பிரதானமாக கொண்டு செயல்பாட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான துறையாகும். விரும்பிப்படித்த துறையின்கீழ் வேலைக்குச்செல்லாமல்,வருமானத்திற்காக வேறொரு துறையில் வேலைக்குச்சென்று,தான் படித்த துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்,தன் கண்முன்னே இரட்டைக்கோபுரம் சரிவதைப்போல அழிவதைக்கண்டு,சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்,தொண்டையில் சிக்கிய மீன் முள் போன்று,சிக்கித்தவிக்கும் பல இளைஞர்கள் நம் நாட்டில் இன்னும் மனதினுள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.



சரி கதைக்குவருவோம்.சராசரி நடுத்தர வர்க்கக்குடும்ப தலைவர் சமுத்திரக்கனி.மனைவி சரண்யா மற்றும்  இரண்டு மகன்களுடன் வாழ்ந்துவருகிறார்.முதல் மகன் ரகுவரன்(தனுஷ்),இரண்டாம் மகன் கார்த்திக்(புதுமுகம்).இரண்டாம் மகன் ஒரு பெரிய கம்பனியில் வேலைசெய்து கொண்டுவருகிறான்.ஆனால் சிவில் என்ஜினியரிங் முடித்து நான்கு வருடமாகியும் வேலையில்லாமல் சிக்கித்தவிக்கிறார் தனுஷ்.அவருக்கு,அவருடைய சிவில் துறை வேலையே வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும்,நேர்மையின் காரணமாகவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் திறமைசாலி.அதனால் வீட்டில் தண்டச்சோறு என்ற பட்டம்.வீட்டுவேலைகளை செய்வது,வீட்டிற்கு தெரியாமல் சமூக வேலைகளான மது,சிகரெட் போன்ற வேலைகளை செய்வது என வாழ்ந்துவருகிறார்.அவரது பக்கத்துவீட்டிற்கு ஹீரோயின்,அதாங்க திருமதி அமலாபால் விஜய் குடிவருகிறார்.சிறிய மோதலில் அறிமுகம்.வளர்ந்து காதல்.ஒரு முக்கியமான கட்டத்தில் தனுஷின் அம்மா இறக்கிறார்.தனுஷன் அப்பாவோ,அதற்கு காரணம் தனுஷ்தான் என நினைத்து வெறுக்கிறார்.அம்மா செய்த உடல்தானத்தின்மூலம் உயிர்பெற்ற பிஸினஸ் மேனின் பெண்ணொருத்திமூலம் ஒரு வேலை,சிவில் துறை சார்ந்து தனுஷிற்கு  கிடைக்கிறது.அவ்வேலையில் அவர் காட்டும் திறமையின் காரணமாக,அவருக்கு ஒரு பெரிய கவர்மென்ட் பிராஜக்ட் கிடைக்கிறது.அந்த பிராஜக்டை வெற்றிகரமாக செய்தால்,அவரது திறமையை வெற்றிகரமாக நிருபணம் செய்யலாம்.ஆனால்,அந்த பிராஜக்டை கைப்பற்ற நினைக்கும்,ஒரு பெரிய கம்பனியின் ஓனரின் மகன்,அது கிடைக்காததால் தனுஷிற்கு குடைச்சல்கள் கொடுத்து,பிராஜக்டை கைப்பற்ற நினைக்கிறார்.தனுஷ் அதை எப்படி முறியடித்தார்?தனுஷின் அப்பா மனம் மாறினாரா?அமலா பால் கைகூடினாரா?வில்லனை என்ன செய்தார்?போன்ற சந்தேகங்களெல்லாம் திரையில் கண்டு விடையை அறிக.



தனுஷ்-இவர் இந்த மாதிரியான படங்களை தேர்வு செய்து நடிக்கிறதுதான்  சூட் ஆகுது.தயவு செஞ்சி,சைக்கோ,பைத்தியக்காரன்,பேக்கு,இந்த மாதிரியான  பாத்திரங்களை கைவிட்டுவிட்டு இதையே தொடருங்க.உங்களின் ரசிகர்கள் மட்டுமின்றி,குடும்பங்களும்,உங்களிடம் இந்த மாதிரியான படங்களைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள்.ஊரறிந்த உங்களின் நடிப்பை ஓரங்கட்டிவிட்டு,இந்த மாதிரியான படங்களை கொடுத்தால்,உங்களின் மார்க்கெட் இன்னும் கொஞ்சகாலத்துக்குத்தாங்கும்.அப்புறம் வழக்கம்போல் இவரின் நடிப்பைப்புகழைப்பாட தேவையில்லை.சிறப்பான நடிப்பு.தயவு செஞ்சு கொஞ்சம் உணர்ச்சிவசப்படறதெல்லாம் நடிப்போட வச்சிக்கிங்க.நல்ல வாய்ஸ் இருக்கிறதால,பாடறேன்னு சொல்லி எல்லாப்பாட்டையும் பாடதிங்க.ஏற்கனவே கத்தி டீசர் மியூசிக்க ரிங்டோனா வச்சிருந்த என் ப்ரண்ட்கிட்ட,VIP தீம் மியூசிக் நல்லா இருக்கே-னு சொல்லி வாங்கி கட்டிகிட்டேன்.அந்த அளவுக்கு அனிருத்,மியூசிக் போடறாரு.நீங்க வேற எல்லாபாட்டையும் பாடி இது 3 ஆ?இல்ல எதிர்நீச்சல் பாட்டானு கன்பூயூஸ் பண்ண வைக்காதிங்க.


அனிரூத்-பாடல்கள் எல்லாம் படத்தோடு கேட்கும்போது சூப்பர்.என்ன,பாட்டுக்கு நடுவுல வர்ற இசைலாம் கேட்கறப்ப,அப்படியே தெரியுது,எந்தெந்த படத்துல சுட்டுப்போட்ருக்கார் னு.ஆனா நல்லா இருக்கு.இவரு அடுத்த ரஹ்மானு நா ட்விட்டர்ல தட்டுன ட்விட்ட வாபஸ் வாங்கிக்கறேன்.இவரு கண்டிப்பா அடுத்த DSP தாங்க.படத்துக்கு நடுவுல,3,எதிர்நீச்சல்,மான் கராத்தே,இரண்டாம் உலகம் BGMலாம் வர்றப்ப, சரக்கு இவர்கிட்ட அவ்ளோதானானு நினைக்கவச்சது.ஆனா,எல்லாமே நல்லா இருக்கு.படத்துல பல இடங்கள்ல BGM படத்துக்கு உயிரோட்டமா இருந்துச்சி.

அமலாபால் –பக்கத்துவீட்டு பொண்ணு.கண்ணியமா இருக்கு.தெய்வத்திருமகள்-ல வர்ற கேரக்டரோட EXTEND மாதிரி தோணுச்சு.நடிப்பு சுமார்.என்ன,ஒரு சில சீன்ல பஸ்ஸ்டாண்ட்ல நின்னு கண்ணாலயே கூப்புட்ற ____ மாதிரி இருந்துச்சு.தனுஷ்க்கு கிட்டத்தட்ட ஓகே கேரக்டர்.

விவேக் – இவரோட காமெடி ஒன்னும் அவ்ளோ நல்லா இல்ல.ஆனா,காசு தியேட்டர்ல கொடுத்திருக்கோமே,இவரும் ட்ரை பண்றாரே னு ஏதோ சிரிக்க வேண்டிருக்கு.

சரண்யா பொண்வண்ணன் – அம்மா கேரக்டர்.வழக்கம்போல தாளிச்சிட்டாங்க.

சமுத்திரக்கனி – அப்பா கேரக்டர்ல வாழ்ந்து இருக்காரு மனுஷன்.கிட்டத்தட்ட நம்ம அப்பாவ,அப்படியே கண்முன்ன நிறுத்தி இருக்காரு.இவ்ளோ நாளா,கருத்து வசனங்கள மட்டும் பேசிட்டு இருந்தவரு இதுல பிச்சிருக்காரு.இனிமே அப்பா கேரக்டர்ல இவர நிறைய படங்கள்ல பாக்கலாம்னு நினைக்கிறேன்.


கதை,எதுவுமே இல்லை.ஒரு நார்மலான கதையை வைத்து,சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி,கைத்தட்டவைக்கும் வசனத்துடன் அமர்க்களம் செய்துள்ளார்,இயக்குனர் வேல்ராஜ்.தனுஷின்,பக்கத்துவீட்டுப்பையன் இமேஜை வைத்து,அட்டகாசம் செய்துள்ளார்.வெறும் கமர்சியலைத்தாண்டி,ஒரு எதார்த்தையும் நம் மின்னே முடிந்தவரைக்காட்டியுள்ளார்.சென்டிமென்ட் காட்சிகளை அருமையாக எடுத்துள்ளார்.முடிந்தவரை,நாம் கொடுத்த காசிற்கு பங்கம் வராமல் நம்மைக்காப்பாற்றியுள்ளார்.கிளைமேக்ஸ் காட்சிகள் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.ஆனால் பாடல்களை இன்னும் சிறப்பாக படம் எடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது.

முதல் பாதி – காமெடி + காதல் + பாசம்
இரண்டாம் பாதி – விறுவிறுப்பு + சென்டிமென்ட் + கொஞ்சம் காமெடி

மொத்தத்தில்,
பலம் = வசனம்,திரைக்கதை,காமெடி,இசை.எடிட்டிங்,எதார்த்தம்,தனுஷின் நடிப்பு,சென்டிமென்ட் காட்சிகள்,காதல்காட்சிகள்,
பலவீனம் = மெகா சீரியல் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் நகருவது,சப்பையான இடைவேளை,BGM இசை.



குடும்பத்துடன் காணலாம்.தனுஷின் ரசிகர்கள்,இளைஞர்களுக்கு பிடிக்கும்.எனக்குத்தெரிந்து பொல்லாதவன்,யாரடி நீ மோகினிக்கு பின் தனுஷின் பெரிய ஹிட்டாக இது இருக்கும்.


Comments

  1. சுவையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. நண்பா ஒரு சிறிய விண்ணப்பம், பெரிய பெரிய பாராவாக எழுதமால் ஆங்காங்கு என்டர் தட்டினால் வாசிப்பதற்கு கொஞ்சம் இலகுவாக இருக்கும் .. அப்புறம் அப்படியே இந்த word verification ஐ எடுத்து விடுங்கள்.. வரக்கூடிய கருத்துரையும் வராது போய்விடும் :-)

    ReplyDelete
    Replies
    1. சரிங்க அண்ணா!! ! இதைலாம் சரி செஞ்சுடறேன். மேலும் இந்த தளத்தில் இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்