Tuesday, 29 July 2014

சதுரங்கவேட்டை –விமர்சனம்பலரும் பாராட்டிய இத்திரைப்படத்தை ,நேற்றுதான் பார்க்கமுடிந்தது.ஏற்கனவே அனைவரும் விமர்சனம் எழுதிய நிலையில் நாமும் எழுதவேண்டுமா என்று தோன்றினாலும், இம்மாதிரியான ஒரு சிறந்த படைப்பை பற்றி நாம் எழுதும் விமர்சனம் மூலம், வாசிக்கும் நண்பர்களில் சிலரேயாயினும் திரையரங்கில் சென்று பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் எழுதுகிறேன்.

கதை  ****

சிறுவயதில் சமூகத்தால் ஏமாற்றப்பட்ட ஒருவன் ,வளர்ந்து அச்சமூகத்தை ஏமாற்றத்தொடங்குகிறான். அவனுடன் இருக்கும் நண்பர்கள் , ஒரு சூழ்நிலையில் அவனை ஏமாற்ற ,அவனுக்கு ஏற்கனவே அறிமுகமாயுள்ள ஹீரோயினிடம் தஞ்சம் அடைகிறான்.இருவருக்குமிடையே காதல் மலர ,திருமணம் செய்து ,ஏதோ ஒரு ஊரில் விவசாயம் செய்துபிழைத்து மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.விதி வசத்தால் , முன்பொரு முறை அவன் ஏமாற்றிய வில்லன் கூட்டத்தார் அவனை இனம்கண்டு, அவனை போட்டுத்தள்ள முயல,அவனிடம் உள்ள ஒரு திட்டத்தின் மூலம் 100கோடி கிடைக்கும் என வாக்குறுதி அளித்து ,அவர்களுடன் தன் கற்பவதிநான மனைவியை விட்டு செல்கிறான். வில்லன் ,தன் அடியாளை அவன் மனைவியுடன் நிறுத்தி, ஹீரோவை கூட்டிச்செல்கிறான்.

ஹீரோ , பணத்தை ஏமாற்றினாரா? வில்லன் ஹீரோவை என்ன செய்தான்? ஹீரோயின் என்ன ஆனாள்? என்பதே , சதுரங்க வேட்டை .


திரைக்கதை  ****

வேகம் , விறுவிறுப்பு , படபடப்பு என ஹைவேயில் , ஹைஸ்பீடில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் , இப்படத்தின் திரைக்கதை . ஒரு இடத்திலும் சலிப்பு தராத வகையில் இப்படியொரு திரைப்படம், அபூர்வம். ஏமாற்றுத்தனம் என்றதும் ‘மங்காத்தா’ போன்று பெட்டிங் , ‘தில்லாலங்கடி’-போன்று திருட்டையோ காட்டாமல் ,நாம் தினமும் பேப்பரில் படிக்கும் MLM , மண்ணுளிப்பாம்பு , ரைஸ் புல்லிங் எனப்படும் இரிடியம் பிஸினஸ் ,நகைக்கடை மோசடி ,இவற்றையெல்லாம் விட அட்டகாசமான ஈமுகோழி பண்ணை  , என அனைத்தையும் , ஒற்றைப்படத்தில் திரைக்கதையாக்கி , அதற்கு உயிரூட்டியுள்ளார் ,டைரக்டர் H.வினோத்.படத்திற்கு வலுவூட்ட ஆங்காங்கே அமைந்த ட்விஸ்டுகள் , சிறப்பு .ட்விஸ்டுகள் மட்டுமின்றி , படத்தின் வேகம் ஒரு இடத்திலும் குறையாமல் அதன் பாதையில் பயணிப்பது, திரைக்கதையின் நேர்த்தி. ப்ளாஸ்பேக் காட்சிகள் ,எங்கே ? எப்படி வைக்கவேண்டும் என்பதை சிறப்பாக செய்திருந்தார்.அதுவும் ஹீரோவின் பிளாஸ்பேக் அழகாக,மிகவும் எளிமையாக காட்டப்பட்டிருக்கும்.வெறும் ஏமாற்றுத்தனத்தை மட்டும் காட்டாமல், ஆங்காங்கே சில சமூக விஷயங்கள், மக்கள் மனநிலை ஆகியவற்றை தொட்டு செல்வது சிற(ரி)ப்பு.  


வசனம்  *****


படத்திற்கு இரண்டாம் பெரிய பலம் ,வசனம். படத்தில் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கும் ஒரு கைத்தட்டலை வாங்கவைக்கும்படியான வசனங்கள்.கிட்டத்தட்ட ‘பில்லா-2’-ல் அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் எப்படி இருக்குமோ, அதே போன்று செம ஷார்ப்பான, எளிமையான மற்றும் சிறப்பான வசனங்கள் .

‘முதலாளி இருந்தா தான் தொழலாளினு நினைக்கிறது முதலாளித்துவம்
தொழிலாளி இருந்தா தான் முதலாளினு நினைக்கிறது கம்யூனிசம்’

‘பொய்யுடன் சில உண்மைகள் இருந்தா தான் ஏமாத்த முடியும்’

‘குற்ற உணர்ச்சி இல்லாம செய்ற எந்த தப்புமே , தப்பே இல்ல’

இன்னும் பல வசனங்கள், நம் மனதை தொடுவதாக இருக்கும்.படத்தில் பெரும்பான்மையான காட்சிகளை,எளிமையான வசனத்தின் விளக்கும் யுக்தி அருமை.மேலும் , ஒவ்வொரு ஊர்களிலும் பேசிவரும் பேச்சுமுறைகளை சரியாக பயன்படுத்தி உள்ளது ,அருமை.

நடிப்பு ***

’மிளகா‘ நட்டு ,எளிமையான, அதே சமயம் அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார்.ஹீரோயின் புதுமுகம், அச்சு அசல் கிராமத்து ஏழைப்பொண்ணை கண்ணில் நிறுத்தியிருக்கிறார்.ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமில்லாமல் சென்டிமென்ட் காட்சிகளையும் , நன்றாகவே செய்துள்ளார். இளவரசு , பொன்வண்ணன் , G.M.குமார் என எல்லோரும் சிறப்பாக செய்திருந்தனர்.படத்தின் ஓட்டத்தினால் ,இவர்களின் நடிப்பை அவ்வளவாக , கவனிக்கமுடியவில்லை.


இசை  ***

இரண்டே பாடல்கள் என நினைக்கிறேன்.கேட்கும் ரகம் தான்.மிகச்சரியான இடத்தில் பொறுத்தப்பட்டிருந்தன. பிண்ணனி இசையும் ,90% சதவீதம் சிறப்பாக அமைந்துள்ளது.படத்தின் விறுவிறுப்பை குறைக்காமல் ,படத்தோடு ஒன்ற செய்ய ,BGM உதவுகிறது .

எடிட்டிங் ****

இப்படத்தின் மூன்றாவது பெரிய பலம் என்றே கூறலாம். சிறந்த எடிட்டிங்.தேவையற்ற இடங்களை கத்தரி போட்டு , நம் கழுத்தில் கத்தியை  போடாமல் காப்பாற்றியதற்கு ,ஒரு நன்றியே சொல்லலாம்.

ஒளிப்பதிவு  ****

கதைக்கு தேவையான விதத்தில்,நல்ல அழகான ஒளிப்பதிவு .கிளைமேக்ஸ் காட்சிகளில் , அந்த இருட்டு எஃபக்ட் ஒளிப்பதிவு சூப்பர் .கேமராவை இஷ்டத்துக்கு ஆட்டாமல் , அழகாய் ஓவியம்போல் வரைந்துள்ளார்.

இயக்கம் ****

நான், THE END என போடுவதற்குள் கார் பார்க்கிங் நோக்கி பறக்கும் ஆசாமி. ஆனால், இத்திரைப்படத்தின் இயக்குநர் யார் என தெரிவதற்காக (முதல் 15 நிமிடம் மிஸ் பண்ணியதால் வந்த வினை) கடைசி END CREDIT போடும் வரை அமர்ந்திருந்தேன்.  ஒரு புதுமுக இயக்குநரின் முதல் படமா? எனும் பெருத்த கேள்வி இன்னும் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது.10 படங்கள் டைரக்ட் செய்திருந்தால் கிடைக்கும் பர்பெக்ஷன் ,இத்திரைப்படத்தின் மூலம் திரு.H.வினோத் அவர்களிடமிருந்து கிடைக்கிறது.படத்தைப்பார்த்துவிட்டு வந்த ஆடியன்ஸ் அனைவரும் அப்படத்தைப்பற்றி வெளியில் வரும்வரை பேசிக்கொண்டு தான் வந்தனர். படத்தில் ஏதோ ஒரு காட்சியில் ,ஈமு கோழியின்மீது பணம் கட்டி ஏமாந்தது, மண்ணுளிப்பாம்புக்கு அலைந்தது ,MLM கம்பனியில் வாயைப்பிளந்த படி பார்த்தது என ஆடியன்ஸ்க்குள் ஏதோ ஒரு ஏமாந்த அனுபவம் இருக்கும்.அவையெல்லாம் திரையில் வரும்போது , கைத்தட்டலாக மாறியதே கேட்க முடிந்தது. ஏன் நானே கூட ஒரு காலத்தில் இரிடியம் பிஸினஸ் ,மண்ணுளிப்பாம்பு பிஸினஸ் ,தேவாங்கு பிஸினஸ் என பல பிஸினஸ்களின்பால் ஈர்க்கப்பட்டு ,ஒரு வாரம் கூகிலிலும் , ஒரு மாதம் காட்டிலும் தேடியலைந்தது ஞாபகம் வந்தது. முதல் படத்தில் பதித்த முத்திரை , தொடர வாழ்த்துகள்.
மொத்தத்தில், சிறப்பான தமிழ்படம் காண விரும்புவோர்களுக்கு நல்ல தீனி .குடும்பத்துடன் காணும்படி தரமாக உள்ளது.வழக்கமாக வாங்கும் DVDக்கு பதிலோ,TORRENT DOWNLOADக்கு பதிலோ, தியேட்டருடன் சென்று பார்ப்பதே சிறப்பு .எதார்த்த சினிமாவை நோக்கி , கமர்சியலான ஒரு படம்.

என்னுடைய ரேட்டிங் = **** 4/5

‘சதுரங்க வேட்டை –நம்மை ஏமாற்றாத,ஏமாற்றுக்காரனின் ஆட்டம்’உங்கள் விருப்பம்

6 comments:

 1. /கிட்டத்தட்ட ‘பில்லா-2’-ல் அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் எப்படி இருக்குமோ/// ஒஹ்.. நீங்களும் தல ஃபேனா?

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் வெறித்தனமான தல ரசிகன்ணா!! ஆழ்வார் படத்தையே மூனு தடவ பாத்தேணா, நம்புவிங்களா?

   Delete
  2. நானும் அப்படிதான் பாஸ் ...

   Delete
  3. அப்படி போடுங்கண்ணா!!

   Delete
 2. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அண்ணா!!!

   Delete