ரசிகர்களா? முட்டாள்களா?

ரசிகர்களா? முட்டாள்களா?

சிறப்பாயிரம்


நான் முகநூலில் பல வகையான குழுமங்களிலும்,பக்கங்களிலும் உலவிக்கொண்டிருக்கும்போது கணநேரத்தில் உதயமானது இந்தபதிவு.ஒரு காலத்தில் நான் இணைந்திருக்கும் குழுமங்கள் மற்றும் பக்கங்களை முகநூலில் பார்த்தால், ஒன்று அஜித் அண்ணானைப்புகழும் குழுமங்கள் அல்லது பக்கங்கள்.மற்றொன்று விஜய் அண்ணாவை இகழும் குழுமங்கள் அல்லது பக்கங்கள்.இந்த இகழ்ந்து தள்ற குரூப்ல இணைஞ்சாதாலோயோ என்னவோ,எனக்கு சுத்தமா பிடிக்காம இருந்த விஜய் அண்ணாவை கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சது.அதுல பாத்தோம்னோ ரசிகர்கள்னு இவனுங்க பன்ற அட்ராசிட்டி கொஞ்சம் நஞ்சம் இருக்காது.இவர்களுக்குப்பிடித்த நடிகரை,அப்பா,அம்மாவ விடவும் அதிகமா புகழ்றதும்,பிடிக்காத நடிகர்கள எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ (ஆணைப்பெண்ணாகவும்,பெண்ணை போண்டா வாகவும்லாம் மாத்தியிருக்காங்க)அவ்ளோ அசிங்கப்படுத்தியும்,போட்டோஷாப்,கோரல் ட்ரா உதவியோட கிழிச்சி தொங்கவிட்ருப்பாங்க.இந்த க்ரூப் நடத்தறவங்கலாம் யாரு?இவனுங்க என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருப்பாங்க?இவங்களுக்கு இப்படிலாம் போட்டோ போட,கமெண்ட் போட யார் தைரியம் கொடுத்திருப்பானு நான் என்னோட 1250 கிராம் மூளைய கசக்கினப்போ தான் தெரிஞ்சது,இவர்களில் பெரும்பான்மையானோர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டோ மூன்றாம் ஆண்டோ பயிலும்.நடுத்தர வர்க்கத்தைச்சார்ந்த அரைகுறை போட்டோஷாப் வேலைகள் தெரிந்த டீன்-ஏஜ் மாணவர்கள் என்று.


பொதுவா நமக்கு பிடிச்ச நடிகர்னா,கண்டிப்பா அவங்கள பத்தின சில நல்ல விஷயங்கள நாம தெரிஞ்சி வச்சிருப்போம்.அவங்கள நார்மலாவே புகழ நம்ம மனசு விரும்பும்.ஒரு வட இந்திய ரயில் பயணம் செஞ்சிகிட்டிருக்கோம்.சுத்தியும் இந்திக்காரனுங்க “ஹே சாலே”னு கத்திகிட்டு இருக்கப்ப “த்தா”னு ஒரு குரல் வந்தா நமக்கு எப்படி இருக்கும்.எப்படியாச்சும் அந்த ‘த்தா’வை கூட்டின்டு வந்து பேசுனுனும்னு தோணும்.அப்படி அவர்கூட பேசுறப்ப,அவருக்கும் நமக்குப்பிடிச்ச நடிகரத்தான் பிடிக்கும்னு தெரிஞ்சா,நம்ம கூடப்பிறந்த அண்ணன்,தம்பி மேல கூட காட்டாத பாசத்த காட்டுவோம்.அவங்க கூட சேர்ந்து தலபுராணமோ,தளபதிக்காரமோ,கமல் சிந்தாமணியோ,ரஜினி நானூறோ பாடம இருக்கமாட்டோம்.இது இயல்பான ஒரு விஷயமே.அப்படி நாம பேசுறத கேட்டு இந்திக்காரன் சாயல்ல,மூலை முடுக்குல ஹெட்போன மாட்டிட்டு கிடக்கற இன்னும்  2 தமிழ்க்காரங்க வருவாங்க.அவங்களும் அவங்க பங்குக்கு பேசிட்டு இருப்பாங்க. இப்ப இந்த ரயில்க்கு பதிலா முகநூல போட்டுக்குங்க.இப்ப வந்தவங்கள ஒரு க்ரூப்பா நினைச்சிக்கோங்க.இந்த க்ரூப்ல வர்றவங்களுக்கு பலருக்கு தன் நடிகனைப்பிடிச்சிருந்தாலும்,மற்ற நடிகனை வெறுப்பது அவர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும்.



இதுக்கு ஆகச்சிறந்த உதாரணம் தல ரசிகர்கள் தான்.பாவம் அஜித் அண்ணா.அவருபாட்டுக்கு படத்த நடிச்சிகிட்டு பைக்க ஓட்டிக்கிட்டுதிரியுறாரு.ஆனா அவரு ரசிகர்கள்ல பலர் பண்றத பார்த்தா அவரே காண்டாகிடுவார்.இதுவரைக்கும் நா முதல்நாள்,முதல் ஷோ போன தல படங்கள்ல தலய புகழ்றத விட தளபதிய தியேட்டர்க்குள்ள எப்படிலாம் திட்ட முடியுமோ,அப்படிலாம் திட்டிக்கத்தி கூச்சலிட்றத கண்கூடா பாத்துருக்கேன்.


சென்னைல சத்யம்னு ஒரு திரையரங்கம்.கிட்டத்தட நல்ல பேமசான தியேட்டர்.அந்த தியேட்டர்ல அஜித் படம்னா கொஞ்சம் நல்லா ஓடும்.காரணம் அந்த தியேட்டர் இருக்கும் ராயப்பேட்டை,பெல்ஸ் ரோடு,சிந்தாதிரிப்பேட்டைலாம் அஜித் ரசி்கர்கள் அதிகம்.அந்த தியேட்டர்ல ஏதாச்சும் புகையிலைப்பொருள் கொண்டுபோறாங்களானு கண்டுபிடிக்கவே பாம் செக் பண்ற மாதிரி செக் பண்ணுவாங்க.உள்ள எவனாச்சும் ஏய்,ஓய்னு கத்திட்டா,அவன அலேக்கா தூக்கிட்டு வந்து பலேக்கா வெளிய வீசிடுவாங்க.ஆனா தல படத்தோட முதல்நாள் ரிலிசுல மட்டும் இந்த பருப்பு அந்த தியேட்டர்ல வேகாது.உள்ள போனோம்னா,தெருக்குழாய்ல தண்ணிக்கு சண்ட போடற சென்னை ஆண்டிங்க பேசுற வார்த்தைகள விட அவ்வளவு நாராசமா இருக்கும்.அவ்வளவு மோசமா தளபதிய திட்டிட்டு இருப்பாங்க.இப்ப சூர்யாவையும் தியேட்டர்க்குள்ள திட்டரதலாம் நடக்குது.

இதவிட கொடுமை என்னன்னா,எங்க ஊர்ல இப்போ ரிலிசான ஜில்லா-வும்,வீரமும் 5 தியேட்டர் என அழைக்கப்படும் ARRS மல்டிப்ளக்ஸில் ரிலிசாச்சு.ஏற்கனவே தல படத்தையும்,தளபதி படத்தையும் ஒட்டுக்கா ரிலிஸ் பண்ணி ஸ்கீரின் கிழிஞ்ச கோயம்புத்தூர் தியேட்டர் நிலைமைய தெரிஞ்சிகிட்டும்,இந்த 2 படத்தையும் ஒட்டுக்கா ரிலிஸ் பண்ணாரு இந்த தியேட்டர் ஓனர்.ஆனால் நல்ல உஷாராகத்தான் பண்ணினார்.

அதவது முதல் காட்சி,5 தியேட்டர்களிலும் வீரத்தையும்,2வது காட்சி 5 தியேட்டர்களிலும் ஜில்லா வையும் ரிலிஸ் பண்ணினார்.முதல் காட்சி சென்ற தல ரசிகர்கள் படம் முடிந்ததும்,அடுத்த காட்சி தளபதி படம் எனத்தெரிந்து கொண்டு படம் பார்த்த ஸ்கிரினை ப்ளேட் கொண்டு கிழித்துவிட்டு எஸ் ஆகினர்.அடப்பதருங்களா,ஜில்லா முடிஞ்சா மீண்டும் வீரம் அந்த ஸ்கீரின்ல தானடா ஓடும்?இப்படி பண்ணா,எப்படிடா மறுபடியும்ந்த தியேட்டர்ல தல படத்த எடுப்பானுங்கனு மனசிலயே நெனச்சிகிட்டு வந்ததுதான் மிச்சம்.சரி தியேட்டர்ல முதல்நாள் முதல் ஷோ-னாலே பெரும்பாலும் அந்த நடிகரின் ரசிகர்களே இருப்பதால இதையெல்லாம் சகிச்சிக்கிலாம்.ஆனா எல்லோரும் வந்து போற முகநூல்ல இதே மாதிரி வார்த்தைகள பிரயோகிக்கறது,ஒரு மோசமான மனநிலையை கொண்டவர்களின் முட்டாள்தனமான பேச்சு என்றே என்னுள் தோன்றுகிறது.இப்போ மேலே சொன்ன ரயில் பயணத்துல நம்ம நேரத்த கடத்தியாகுனுமேன்னு இந்த விஷயங்களப்பத்தி பேசிப்போம்.நம்மோட,அந்த வீராவேசப்பேச்சுகள்,உயிர்நட்புகள் எல்லாம் மூட்டைக்கட்டி வச்சிட்டு,அவங்கவங்க பொட்டி,படுக்கைலாம் எடுத்துகிட்டு ஸ்டேசன் வந்தா இறங்கிப்போய்டுவாங்க.

சரி கட்டுரைக்குள்ள வருவோம்.மேல பாத்தவங்களாச்சும்,ஏதோ ஒரு நடிகரின்மேல் இருக்கும் அன்பினாலோ,இல்லை எதிரி நடிகரின்மேலுள்ள கோவத்தினாலோ,தியேட்டரை ஒரு ஊடகமாக்கொண்டு தன் கோவத்தையும் ஆசையையும் தணித்துக்கொள்ள முயல்கிறார்கள்.அவர்களைக்கூட விட்டுவிடலாம்.

ஆனால்,ஒருசிலர் முகநூலில் எப்படியாச்சும் பிரபலமாக வேண்டும் என எண்ணுகிறார்கள்.தன்னுடன் படிக்கும் மாணவன் முகநூலில் போடும் ஒரு ஸ்டேடஸ்க்கு 10 லைக் விழுகிறது.ஆனால் தன்னுடைய ஸ்டேடசிற்கு ஒரு லைக் கூட விழமாட்டன்தே என்ற ஏக்கம் அவர்கள் மனதில் ஊடுருவுகிறது.நாமும் பிரபலமாக வேண்டும் என எண்ணும்போது,ஒரு அறைகுறை குழுமத்திலோ,பக்கத்திலோ வெளியிடப்படும் ஏதோ ஒரு அஜித் போட்டோவோ விஜய் போட்டோவோ வாங்கும் லைக்ஸ்கலை அவன் காண்கிறான்.அதைக்கண்டதும் அப்போ தோண்றும் பாருங்க ஐடியா!!!யுரேகா யுரேகா னு அம்மணத்தோட ஓடாத விஞ்ஞானி மாதிரி அவனுக்குள்ள இருக்கும்.உடனே CREATE GROUP தான்.
அடுத்து இவங்க ஆரம்பிக்கிற GROUP(OR) PAGE யாரப்பத்திங்றது தான்.பெரும்பாலும் இவர்களின் முதல் ஜாய்ஸ் விஜய் தான்.ஏனென்றால் விஜய்க்குத்தான் கிட்டத்தட்ட முகநூலில் பெண்ரசிகர்களும் அதிகம்,ஆண்ரசிகர்களும் அதிகம்(தல-க்கு ரவுடி ரசிகர்களும் மோசமானவர்களிலைலேயே முக்கியமான ஆண்ரசிகர்களும் அதிகம்.பெண் ரசிகர்கள் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாரும் காதல் மன்னன் கால ரசிகைகள்).உடனே அந்த பக்கத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள் ஒரு பெயரை.அது இன்னும் கொடுரமாக இருக்கும்.”ALL THALAIVAA VIJAY FANS,NEXT SUPERSTAR VIJAY,விஜய் என் உயிர்,பிறப்பும் இறப்பும் நீயே,விஜய் என்று சொல்லடா தல-யை வெல்பவர் தானடா”இப்படிலாம் வைச்சிக்கிறாங்க.அப்புறம் நெட்ல கிடக்குற பல போட்டோவ தேடிப்பிடிச்சி அப்லோட் பண்ணி கொஞ்சம் கொஞ்சம் லைக்ஸ வாங்க ஆரம்பிக்கிறாங்க.ஆடியன்ஸ் லிஸ்ட் ஏறனதும்,இவங்களுக்குனு ஒரு பொறுப்பு வந்துடுது.இனிமேல் நாமாள ஏதாச்சும் கிரியேட் பண்ணாதான்,இந்து குரூப்போட பருப்பு வேகும்னு.உடனே வீட்டுல பெரிய கோர்ஸ் படிக்கிறேன்னு பணத்த வாங்கிட்டு அறைகுறை போட்டோஷாப்பும்,அட்வான்ஸ்டு இன்டெர்நெட் எனப்படும் ப்ரவுசிங் கோர்சையும் அறைகுறையாக படித்து,அதன் உதவியுடன் இவர்களின் கைவண்ணத்தை கணினியில் காட்டி பட்டி,டிங்கரிங்லாம் செஞ்சு அப்லோட் பண்றாங்க.லைக்ஸும் வாங்கறங்க.அந்த லைக்ஸ்லாம் அவங்களுக்கு ஒரு போதை மாதிரியான விஷயத்த உண்டுபண்ணுது.


ஒரு சராசரி நடுத்தரவர்க்க வீடுகள்ல கண்டிப்பா என்ஜினியரிங் படிக்கற பசங்க படிப்புக்காகவோ,இல்லாட்டி  தமிழக அம்மா கொடுக்கறதாலோயோனு எப்படியோ லேப்டாப் இடம்புடிச்சிடுது.அண்ணன் சிவகாசிக்காரன் ஒரு ஸ்டேடஸ் போட்டுருந்தாரு.பல லட்சம் செலவு பண்ணி கார் வாங்க முடிஞ்ச நடுத்தர வர்கத்துக்கு சில நூறு செலவு பண்ணி பெட்ரோல் போட யோசிப்பாங்க .அது இந்த லேப்டாப் விஷயத்துலேயும் 100க்கு 100 உண்மை.என்னதான் 40000 போட்டு கம்ப்யூட்டர வாங்கினாலும்,அதுக்கு 1000 ரூபாய் மாதவாடகை கொடுத்து நெட் கனெக்சன் போடும் நிலையில் என் மக்கள் இல்லை.இந்த மாதிரி நேரத்துல மேல பாத்த பசங்க வீட்டுல எதாச்சும் சொல்லி ஒரு 800ரூபாய்ல டேட்டா கார்டு.மூலைக்கு மூல இருக்க செல்போன் கடைல ஏதாவது ஒரு சிம் கார்டு.டெய்லி 10ரூ ரீசார்ஜ்.இதப்பண்ணா,அன்னைக்கு முழுக்க அழகா நெட்ல விளையாடலாம்.இந்த மாதிரி க்ரூப் ஆரம்பிச்சி,அதுக்காக மாங்கு மாங்குனு போட்டோஷாப் பண்றதெல்லாம் எதுக்காகனு பாத்தா,FACEBOOKல தான் ஒரு பிரபலமாகவும்,தனக்கு அனைவரும் மதிப்பு தரவேண்டும் என்றும் மேலும் பெண்நண்பர்கள் கிடைக்கவேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.’தமிழ்நாட்டின் தலைவா’ என்று விஜய்க்கு பக்கம் ஆரம்பிக்கும் ஒருவரே தான் ‘இது தல நாடு’னு அஜித்திற்கும் ஒரு பக்கம் உருவாக்குகிறார்.

இவ்வாறெல்லாம் இவர்கள் உங்கள் நேரத்தையும்,பணத்தையும் செலவளித்து பக்கங்களையும்,குரூப் களையும் ஆரம்பிப்பதால் என்ன உபயோகம்?ஒரு லைக்க்கு 10 ரூ பணமும் ஒரு மெம்பர் இணைவதால் 100ரூ பணமும் கிடைத்தால் கூட பரவாயில்லை.சரி நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்று எண்ணினால் அதுவும்கிடையாது.இவர்கள் செய்வதேஒரு உருப்படியற்ற வேலை.இதை ஆதரிக்கும் இவர்களின் நண்பர்கள் எவ்வாறு உருப்படியானவர்களாய் இருப்பார்கள்?அவர்கள் எப்படி இவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் உதவும் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்?இந்த மாதிரி போட்டோஷாப் வேலைகள் செய்து ஒருவேளை இவர்கள் சைபர்க்ரைம் போலிஸிடம் மாட்டிக்கொண்டால் ‘நாங்கள் சொல்லிதான் அவர் செய்தார்’என்று லைக் போடும் புண்ணியவான்களும்,கமெண்ட் போடும் ஆவேசப்பேச்சாளர்களும் மார்தட்டிக்கொண்டு இவர்களுக்கு ஆதரவாக வருவார்களா?இல்லை இவர்களின் பெண்நண்பர்கள்,நீ விஜய் போட்டோவை அழகாக போடுகிறாய்,அதனால் நான் உன்னை காதலிக்கப்போகிறேன் என்றோ அஜித் பத்தி நிறைய நல்ல விஷயங்களைத்தெரிவிக்கிறாய்,அதனால் உன்னைத்திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றோ வந்து விடுவார்களா?இதில் ஒன்று கூட சாத்தியமே இல்லை,போலிஸில் மாட்டுவதைத்தவிர.

இணையம் என்பது அறிவை வளர்க்கவும்,சிந்தனையை மேம்படுத்தச்செய்யும் ஒரு ஊடகமாகத்தான் உருவாக்கப்பட்டது.சமூக வலைத்தளங்கள் என்பது சமூக மாற்றத்தினையும்,மக்களின் கருத்தினையும் பிரதிபலிக்கும் ஒரு மனம்சார்ந்த ஊடகமாகவே உருவாக்கப்பட்டது.வீட்டைத்தாண்டி ஜாதி என்று சொல்லக்கூட பயப்படும் பலர் தான் இன்று வன்னிய வேங்கையாகவும்,தலீத் புலி யாகவும்,நாடாளும் நாடானாகவும்,கண்டம் செய்யும் கவுண்டனாகவும் சமூக வலைத்தளங்களில் உலவுகின்றனர்.இவர்கள்கூட தன் ஜாதி,இனம்,மக்கள்,மொழி என்று கிட்டத்தட்ட ஒரு கூட்டத்தின் ஆக்கத்திற்காகவோ,அழிவிற்காகவோ பாடுபடுகின்றனர்.ஆனால்,ஒன்றுக்கும் உதவாத நடிகன் பெயரை வைத்து,அவனைத் துதி பாடி,லைக் வாங்கி,பிரபலமாக ஆகநினைப்பது என்பது,யானையை வைத்துப்பிச்சை எடுக்கும் பாகனின் நிலைதான்.யானைக்குத்தான் காசே தவிர பாகனுக்காக எவனும் 10 பைசா தரமாட்டான்.

 தற்சிறப்பாயிரம்









க்ரூப்களை உருவாக்கி எதிர்காலத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் என் நண்பர்களே,சகோதரர்களே!நீங்கள் பிரபலமாக,நடிகன் போட்டோவை வைத்துப்பிச்சை எடுக்காதீர்கள்.ஆனால்,யானைப்பிச்சை எடுக்கும் காசு அந்த பாகனின் வயித்துப்பசியை போக்கும்.இந்த 'லைக்'கால் உங்களுக்கு என்ன கிடைக்கும்.அவ்வாறு நீங்கள் பிரபலமானாலும் அதனால் 10 பைசா பிரயோஜனம் இல்லை உங்கள் குடும்பத்திற்கு.இன்றைய நிலைமையில் மதுவைக்காட்டிலும்,புகையிலையைக்காட்டிலும் மிக கொடுமையான போதை என்றால் அது போலியான புகழ் போதையே!அதிலிருந்து வெளியே வாருங்கள்.ஒரு எழுத்தாளனாக,படைப்பாளியாக,அரசியல்வாதியாக,விஞ்ஞானியாக பிரபலமடைய விளையுங்கள்.இவற்றைவிட,ஒரு சராசரி குடிமகனாக பிரபலமடையுங்கள்.அதுவே உங்கள் குடும்பத்திற்கும்,நாட்டிற்கும்,சமூகத்திற்கும்  நீங்கள் செய்யும் கடமை.உங்களில் பலரின் தாய்,தந்தை எலும்பை உருக்கி,ரத்தத்தை உருட்டி உங்களை சிறந்தவர்களாக மாற்ற,நொடிதோறும் கவலை கொண்டு உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்.நீங்கள் இதனால் உங்களின் படிப்பின்மீதுள்ள கவனம் மட்டுமன்றி உறவுகள் மீதான கவனத்தையும் இழக்கிறீர்கள். 

பெற்றோர்களே!உறவினர்களே!!உங்களின் மகனோ,சகோதரனோ கணினியில் ஏதோதோ செய்து கொண்டிருப்பதை எண்ணி பெருமைப்படுவதை விட்டு உண்மையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை,ஒரு நண்பனாக அவனிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.அவர்களுக்கு தேவை உங்களின் பாசமும் அன்பும் தான்.கனவில் கிடைக்கும் நண்பனால் ஒரு எள்ளுருண்டைகூட வாங்கி தர முடியாது என்பதை புரியவையுங்கள்.

அடுத்து நம்மைநோக்கி வருவோம்.நமக்குப்பிடித்த நடிகரின் படத்திற்கு லைக் போட்டு இவர்களை ஊக்குவிப்பதாலே தான் இந்த மாதிரியான எண்ணங்கள் மேலும் அவர்களுக்கு ஊற்றெடுக்க, பெரும்காரணமாக நாம் இருக்கிறோம்.நாம் லைக் போடவில்லையென்றால்,நமக்குப்பிடித்த நடிகர்,நம் சட்டையைப்பிடித்துக்கொள்ளப்போகிறாரா?இல்லை நாம் லைக் போடுவதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் நடத்திப்போகிறாரா?இல்லை படம் நடிப்பதை நிறுத்திவிட்டு சந்நாயாசி ஆகப்போகிறாரா?இவற்றில் எதுவும் இல்லை எனில்,எதற்கு நாம் லைக் போடவேண்டும்.நமக்கு ஒரு விநாடி மிச்சம் தானே!நமக்குப்பிடித்த நடிகரை வாழவைக்கவும் துதிபாடவும் விரும்பினால்,தியேட்டர்க்குச்சென்று பாடுங்கள்,கத்துங்கள்,ஆடுங்கள்.இங்கு நீங்கள் போடும் லைக்,ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையினை,முகநூலிலேயே கழித்து,படிப்பை மறந்து,மீண்டும் வாழ்க்கையை வாழத்தெரியாத,சராசரி பட்டதாரியாக,கற்பனை உலகத்திலே ராஜாவாக வாழ்ந்தும் நிஜ உலகத்தில் நிர்மூலமாகப்போகின்ற ஒருவரை சமூகத்திற்கு கொடுத்து விடாதீர்கள்.
சரி,நா போடுற ஒரு லைக்ல தான் அவன் வாழ்க்க நாசாமா போவுதா-னு மார்தட்டிக்கொண்டு என்னை நோக்கி வராதீர்கள்.ஒவ்வொருவரும் இவ்வாறாக யோசித்தால்,உடனே எல்லா மாணவர்களும் க்ரூப்பை மூடிவிட்டு படிக்கப்போய்விட மாட்டார்கள்.லைக் போட முயலும் நீங்கள் முடிந்தவரை அவர்களுக்கு ,இதனால் என்ன உபயோகம் என்ற ஒரு கேள்வியை கேட்டீர்கள் என்றாலே போதுமானது.10 பேர் இதே கேள்வியை அவனிடத்தில் கேட்கும்போது,அவனுக்குள்ளே இந்த கேள்வி எழும்.இதனால் 100ல் ஒருவனாச்சும் திருந்த வாய்ப்புண்டு.




Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை