DAWN OF THE APS-2014,3D
DAWN OF THE PLANET OF THE APES
2011,ஆகஸ்டு மாதம் வெளிவந்து,பெரிய ஹிட் அடித்த RISE OF THE PLANET OF THE APES திரைப்படத்தின் இரண்டாம்பாகம்.கிட்டத்தட்ட,இந்த வருடத்தில் நான் எதிர்பார்த்த 5 ஹாலிவுட் திரைப்படங்களில்,இதற்கு இரண்டாம் இடம்(முதல் இடம்,வேறயாரு,நோலனோட INTERSTELLAR தான்).காரணம்,இதன் முதல் பாகம்,அவ்வளவு அருமையாக எடுத்திருப்பார்கள்.முதல்பாகம் பார்க்கதவறியவர்களுக்காக அதைப்பற்றிய சிறிய முன்னோட்டம்.
வில் எனும் பயோகெமிக்கல் ஆராய்ச்சியாளர்,ஒரு ஆராய்ச்சி நிலையத்தில்,ALZ-112 எனும் மருந்தினைக்கண்டுபிடிக்கும் பணியில் இருப்பார்.அதாவது,மனிதர்களின் மூளையின் வேகத்தையும் செயலையும் அதிகரிக்கச்செய்யும் மருந்து.அந்த சோதனைச்சாவடியில்,கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை டெஸ்ட் செய்ய,சிம்பன்சி குரங்குளை வைத்திருப்பார்கள்.மருந்தை,ஒரு சிம்பன்சியின் மேல் செலுத்தி,அதற்கு சிலவற்றைக்கற்றுக்கொடுப்பார்கள்.ஆராய்ச்சி முடிவை,நேரடியாக பார்க்க வரும் பெரிய ஆட்கள் முன்னிலையில்,அந்த சிம்பன்ஸி பயங்கர அட்டகாசம் செய்ய,அதை பரிசோதனை அறையிலேயே கொன்றுவிடுவார்கள்.இறந்த அந்த சிம்பன்ஸியை செல்லமாக பார்த்துக்கொண்டிருந்த வில்,அதன் திடீர்தாக்குதலுக்கான காரணத்தை அறிகிறான்.காரணம் என்னவென்றால்,அந்த சிம்பன்ஸி குட்டி போட்டிருக்கும்(இவர்களுக்கு தெரியாம தாங்க).இறந்த அந்த சிம்பன்ஸியின் குட்டிக்கு சீசர் என்று பெயரிட்டு,தன் வீட்டிற்கு கொண்டு சென்று,தினமும் அவன் கண்டறிந்த அந்த புத்தியூட்டும் மருந்தைக்கொடுத்து,அந்த குரங்கிற்கு நிறைய கற்றுத்தருகிறான்.பெரியவன் ஆகும் சீசர் போக்கில் திடீர் மாற்றம் வர,வனவிலங்கு போலிசாரிடம் பக்கத்துவீட்டுக்காரர்,போட்டுக்கொடுக்கிறார்.அவர்கள் வந்து சீசரை அங்கிருந்து பிரித்து,ஒரு ZOOவில் கொண்டுசென்று விடுகிறார்கள்.அங்கு,இதைப்போலவே இருக்கும் குரங்குகளை ஒன்று சேர்த்து,போராடி,அங்கிருந்து தப்பி காட்டிற்கு செல்வதோடு முந்தைய பாகம் முடியும்.கடைசிக்காட்சியில்,நாயகன் வில் வந்து காட்டிலிருக்கும் சீசரிடம் ‘நம் வீட்டிற்கு வா சீசர்’கேட்கும் போது,சீசர் ஆங்கிலத்தில் ‘இதுதான் என் வீடு’ என்று பேசி அனுப்பி விடுவான்.-தொடரும்
எனக்கு,இரண்டாம் பாக படங்கள் என்றாலே,செல்வதற்கு பயமாகத்தான் இருக்கும்.ஹல்க்-2,ட்ரான்ஸ்பார்மர்ஸ்-2,300-2,G.I.JOE-2,EXPANDAPLES-2 னு நான் பார்த்த 2ம்பாகம் எல்லாம் எனக்குத்தூக்கத்தைத்தான் தந்தன.பேட்மேன்,பேக் டூ தி ப்யூச்சர்,X-MEN,PIRATES OF CARIPEAN போன்ற சில படங்களே என் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளன.இந்த சிம்பன்ஸி படத்திலும் ஏதாச்சும் சொதப்பி,நம் 120 ரூபாயை காலி செய்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும்,படம் நல்லா இருக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.என்னுடைய நம்பிக்கையை பூர்த்தி செய்ததா என்பதை வாருங்கள் காணலாம்.
முதல்பாகத்தில்,லேப்பில் இருந்து தப்பித்த சில சிம்பன்ஸி குரங்குகளால் ALZ-113 என்ற மோசமான வைரஸ் பரவுவதாகவும்,அதனால் மனித இனம்,கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.அந்த வைரஸிடம் இருந்து தப்பிப்பிழைத்த,அந்த ஏரியா மக்களை,ஒரு பெரிய கட்டிடத்தில் குடி வைக்கிறார் பேட்மேன் புகழ் GARY OLDMAN.அங்கு கிட்டத்தட்ட 2000 பேர்களுக்கு மேல் இருக்கிறார்கள்.அந்த நகரமே அழிந்து போய்விட்டது.அங்குள்ள மக்களை ஒன்று திரட்டி,அந்த கட்டிடத்தினுள்,ஒரு மினி நகர வாழ்வு நடத்தி வருகின்றனர்.அவர்களுக்குத்தேவைப்படும் மின்சாரம்,கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.மின்சாரம் இருந்தால் மட்டுமே,இங்குள்ள மக்கள்,ரேடியோ சிக்னல் அனுப்பி,வெளியுலகை தொடர்பு கொண்டு,இவர்களைப்போல் யாரேனும் இருக்கிறார்களா என அறிய முடியும்.அங்கு வனத்தில் உள்ள ஒரு அணையின் மூலம் மின்சாரம் பெற முடியும் என்று நம்பி,ஒரு குழு செல்கிறார்கள்.குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மால்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ்.மால்கெம்மின் மனைவி கேரி என்ற மருத்துவ உதவயாளர்,அந்த வனத்தில் நமது கதாநாயகன் சீசர்,அவரின் மனைவி,மூத்தப்பையன்,புதிதாக பிறந்த இளைய மகன்,மற்றும் முந்தைய பாகத்தில்,ZOOவிலிருந்து தப்பித்த நண்பர்கள்,மற்றும் தன் இன குரங்குகள்,எல்லாவற்றுடனும் கிட்டத்தட்ட நம்ம கிராமங்களில் இருப்பது போன்றுவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த கூட்டத்தின் பலமானவன் மற்றும் திறமை வாய்ந்தவன் சீசர் என்பதால்,அவனையே அனைத்துக்குரங்குகளும் தலைவனாக கொண்டாடுகிறார்கள்.அங்கு வரும் மனிதர்களை எதேச்சையாக காணும் சிம்பன்ஸியை ஒருவர் தவறுதலாக சுட,அந்த சத்தத்தைக்கேட்ட மற்ற குரங்குகள் அங்கு வருவதைப்பார்த்து வந்த குழுவினர் பிரம்மிக்கின்றனர்.இதை அறிந்த சீசர்,வந்த மனிதர்களை ‘போ’ என்று சொல்லி விரட்டி விடுகிறார்.மனிதர்கள் உயிருடன் இருப்பதை தெரிந்துகொண்ட சீசர்,அவர்கள் எங்கு வாழ்கிறார்கள்?என்ன செய்கிறார்கள்?என்பதை அறிய,அந்த குழுவை பின் தொடர்ந்து செல்ல,3 ‘ஏப்’களை அனுப்பி,மனிர்கள் வாழும் இடத்தினை கண்டறிகிறான்.ஒரு சிம்பன்ஸி ஆங்கிலத்தில் பேசியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த குழு,கேரியிடம் சொல்ல,அவர் கண்டும் காணமல் விட்டு விடுகிறார்.
சீசர்,மனிதர்களுக்கு சப்போர்ட் செய்வான்.ஆனால்,ஏப்(அதாங்க,குரங்கு) இனம் மனிதர்களைவிட உயர்ந்தது என எண்ணுபவன்.புத்திசாலி,பலசாலி.எதையும் பொருமையாக யோசிப்பவன்.அவன்தான்,’ஏப்’களை ஒன்றினைத்து,ஒரு குடும்பமாக வாழவைப்பவன்.அவனுக்கு,மனிதர்களைப்போல பேசத்தெரியும்.ஆனால் ஹாலிவுட் படங்களுக்கே உரிய,அப்பா மகன் உறவு,மனிதர்களுக்கு மட்டுமின்றி,குரங்குகளுக்கும் அவ்வாறே காண்பித்திருப்பார்கள்.சீசரின் மகன்,சீசரைப்புரிந்து கொள்ளாமல்,கோபா என்ற ஒரு ஏப்பிடம் தான் வளருவான்.கோபா-விற்கு மனிதர்கள் என்றாலே பிடிக்காது.காரணம் முந்தைய பாகத்தில்,மனிதர்கள்,கோபாவை zoo-வில் பல கொடுமைகள் செய்திருப்பார்கள்.
ஒரு ஏப்-பை சுட்ட மனிதர்களை நாம் தாக்கவேண்டும் என்று கோபா,சீசரிடம் சொல்ல மற்ற குரங்குகளும் ஆதரிக்கின்றன.மறுநாள்,சீசர் மனிதர்கள் வாழும் இடத்தினை நோக்கி தன் கூட்டத்தோடு சென்று,மனிதர்களை எச்சரிக்கிறான்.’இது மனிதர்கள் வீடு,அது எங்கள் வீடு,கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது,நானும் வரமாட்டேன்’-னு சொல்லிட்டு கிளம்பி விடுகிறான்,சீசர்.ஒரு சிம்பன்னஸி வந்து மிரட்டி சென்றதைப்பார்த்த மக்கள் பயத்தில் அலறுகின்றனர்.உடனே கேரி,ஆயுதங்களை சேகரித்து,அந்த குரங்குகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயுத்தமாகிறார்.ஆனால் மால்கம்,தான்அவர்கள் இடத்தில் இருக்கும் அணையில்,தன் குழுவுடன் சென்று அந்த ஏப்-பிடம் பேசி,அணுமதி வாங்கி வேலையை செய்வதாக கூறி தன் குழுவை அழைத்துச்செல்கிறான்.சீசரும் சில நிபந்தனைக்கு பின்,அவர்களை வேலை செய்ய அனுமதிக்க,கோபாவும் சீசரின் மகனும் கோவமாகிறார்கள்.கோபா,தன் நண்பர்கள் சிலரைக்கூட்டிச்சென்று நகரத்தை நோட்டமிடும்போது,மனிதர்கள்,ஆயுதக்கிடங்குகளில் பயிற்சி மேற்கொள்வதைப்பார்க்கின்றான்.ஆனால் அதைப்பற்றி சீசரிடம் சொல்லவில்லை.இங்கு வேலை செய்யும் மால்கம் குழுவில்,குரங்குகளைப்பிடிக்காத ஒருவன் இருக்கிறான்.அங்கு மனிதர்களைப்பிடிக்காத கோபா.மால்கம் குழு மின்சார உற்பத்தியை தொடங்குகின்றனர்.அதேநேரம்,உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் சீசரின் மனைவியையும் மருந்து கொடுத்து காப்பாற்றுகிறார்கள்.அதனால் சீசர் மற்றும் அங்குள்ள சில ஏப்-களுக்கு மால்கம் குழுவினர் மீது நம்பிக்கை வருகிறது.அச்சமயம் கோபா,ஆயுதக்கிடங்கில் இருந்து துப்பாக்கியை எடுத்துவந்து,மறைவிடத்தில் இருந்து சீசரை சுட்டுவிடுகிறான்.மேலும்,சீசரைக்கொன்றது மனிதர்கள்தான் என்று மற்ற ஏப்-களையும் நம்ப வைத்து மனிதர்களுக்கு எதிராக போரைத்தொடங்குகிறான்.
ஏப்-கள் மனிதர்களுக்கு எதிராக போரில் இறங்குகின்றனர்.பின்னர்,கோபா மனிதர்களை என்ன செய்தான்?மால்கம் குழுவினர் என்ன ஆனார்கள்?சீசரின் குடும்பம் என்ன ஆனது?சீசரின் நிலை என்ன?மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்ற பல கேள்விகளுக்கு விடை திரையரங்கில் காண்க.
இவ்வருடத்தில்,ரிலிஸ் ஆன சிறந்த 5 ஆங்கிலத்திரைப்படங்களில்,இதுவும் ஒன்று என்பதில் துளி சந்தேகமும் இல்லை.இந்த படத்தில் பல ஜீவனுள்ள காட்சிகள் வலு சேர்க்கின்றன.சென்டிமென்ட் காட்சிகள்,நம் மனதை இளகச்செய்கின்றன.சீசர் என்ற குரங்கு,நம் மனதில் நீங்கா இடம்பெறும்.இதன் முதல்பாகத்தைவிட,மனதை உருக்கும் வகையிலும்,நம்மை கட்டிப்போடும் விதமாகவும்,கதையும் திரைக்கதையும் பிணையப்பட்டுள்ளன.2 மணிநேரம்,அந்த ஏப் களுடன் நம்மை வாழவைத்துள்ளனர் என்றால் மிகையாகாது.படத்தில் இசை,ஒரு உயிர்தரும் ஜீவனாக இருக்கிறது.
படத்தில் ஒரு போர் காட்சி வரும்.வெறுமனே,டமால் டுமில் என்று வெடிக்கும் துப்பாக்கி சத்தங்களுக்கு நடுவே,சீசரின் மகன் பயத்தில் அங்கும் இங்கும் பயந்து ஓடுவது போலவும்,செல்லும் இடங்களில் எல்லாம்,அவனுடன் போரிடவந்த மற்ற ஏப்-கள் குண்டடி பட்டு இறப்பது போலவும் காட்சிப்படுத்திருப்பார்கள்.அவனுடன் வருபவர்கள் இறப்பதைப்பார்த்து,முகத்தில் ஒருவித மென்சோகம் மற்றும் பயத்துடன்,சீசரின் மகனின் மனம் தவிப்பது,மிச்சிறப்பாக எடுத்திருப்பார்,இயக்குனர்.அதுவரை,போர்!போர் என்று குதித்துக்கொண்டிருந்த சிசரின் மகன்,போரினால் ஏற்படும் இழப்புகளைப்பார்த்ததும் வெளிப்படுத்தும் அந்த எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் மிக அருமை.
படம் முழுக்க டார்க் விஷுவல் எஃபக்டில் எடுத்திருக்கிறார்கள்.ஆக்சன் காட்சிகள்,கிராபிக்ஸ் காட்சிகளுக்கென்று படத்திற்கு செல்லாதீர்கள்.ஒரு சிறந்த திரைப்படத்தை காணச்செல்லுங்கள்.படத்தின் முடிவில்,ஒரு மெல்லிய சோகம்,நம் மனதை வருடும்.அது,அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை,நம்முள் விதைக்கும்.படம் சிறிது மெதுவாகச்செல்லும்,ஆனால் காட்சிகள் உயிர்ப்புடன் இருக்கும்.படம் ஆரம்பிக்கும்ஷாட்டிலே முடித்திருப்பது,கூடுதல் சிறப்பு.
இந்த முறையும் கண்டிப்பாக இந்த படம் ஆஸ்கார் செல்லும்.ஆனால் வெறும் விஷுவல் எஃபெக்ட்ஸ்காக மட்டுமில்லை.சிறந்த கதை,திரைக்கதை,டைரக்சன் என எல்லா துறைகளிலும் போட்டிபோடும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் டான் ஆஃப் பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்-ONE OF THE BEST DON OF THE MOVIE IN THIS YEAR!!!
என்னுடைய ஏழைகளின் வண்டலூர்-அனுபவக்கட்டுரையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்.
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் விமர்னம் படிக்க இங்கே அழுத்துங்கள்
Oh Okay ! Its a nice comment and a good explanation of the storyline. You should keep doing well ! I wish i could watch this movie in theatres soon and i'll acknowledge you back . Good work ! bro .. Kudos..:)
ReplyDeleteகண்டிப்பா பாருங்க சகோ!! ஒரு நிறைவான படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.நா இன்னைக்கு மறுபடியும் போகலாம்னு இருக்கேன்
Delete