பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும்

பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும்





          இன்று எனது மாமா வீட்டில் தொலைக்காட்சிகளை சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது,சன் DTH ன் உருப்படியான சேனலான தமிழ் சினிமா கிளப்பை காண நேர்ந்தது.அதில் ஏதோ கருப்பு வெள்ளைத்திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நிமிடக்காட்சியைப்பார்த்ததும் தான் தெரிந்தது,அது பாதாள பைரவி என்ற தமிழ் டப்பிங் தெலுங்கு படம் என்று.நான் போன வாரம் இந்த படத்தின் அரைமணிநேரக்காட்சிகளை ,இதே சேனலில் பார்த்ததால்,எனக்கு இந்த படம் முழுவதையும் பார்க்க வேண்டுமென தோன்றியது.படத்தையும் பார்த்தேன்.என்னை வியப்புக்குள்ளாக்கி,ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல்,அவ்வளவு அருமையாக இழுத்துச்சென்றது இத்திரைப்படம்.

சரி,கதையை பற்றி சிறிதளவு சொல்லிவிட்டு ,நான் சொல்லவந்த கருத்தை தெரிவித்தால்,கொஞ்சம் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
உஜ்ஜயினி எனும் நகரத்தில்,ஒரு வறுமையான விவசாயி மகன்,ராமன்.அவனுக்கு அந்நாட்டு மன்னனின் மகளான,இந்துவின் மீது காதல்.இந்துவிற்கும்,ஒரு நிகழ்வுக்குப்பின் அவன் மேல் காதல் பிறந்துவிடுகிறது.ஆனால்,ஏழை என்பதால்,இந்துவின் தந்தை மறுத்து விடுகிறார்.என்ன செய்வது என்று அறியாமல் குழம்பிக்கொண்டிருக்கும்,ராமனைத்தேடி ஒரு மந்திரவாதி,அவனுடைய அஸிஸ்டென்ட் டிங்கிரியுடன்,நேபாளத்தில் இருந்து வருகிறான்.பாதள பைரவி எனும் தெய்வத்திற்கு நரபலி அளித்தால்,அந்த மந்திரவாதிக்கு,ஒரு சிறிய சிலை கிடைக்கும்.அதை வைத்து வேண்டினால்,அவன் முன் அத்தெய்வம் தோன்றி,அவன் நினைத்ததை எல்லாம் செய்யும்.ஆனால்,அத்தெய்வம்,பாதாளத்தின் அடியில் இருக்கிறது.அதன் கோவிலுக்கு செல்லவே எண்ணற்ற வீரதீர செயல்கள் செய்யவேண்டி இருக்கும்.அங்கு அந்த மந்திரவாதியின் சக்தி எடுபடாது.அந்த கோவிலினுள் நுழையவும்,அந்த தெய்வத்திற்கு நரபலி கொடுக்கவுமே,ராமனைத்தேடி வருவான்.ராமனிடம்,தந்திர வார்த்தைகளையும்,இந்துவை மணக்க உதவி செய்வதாகவும் சொல்லி மந்திரவாதியின் எடுபிடி டிங்கிரி,உஜ்ஜயினியிலேயே விட்டுவிட்டு பாதாள பைரவி கோவிலை நோக்கி இருவரும் செல்கின்றனர். எதுவும் அறியாத ராமனும் வழியில் எண்ணற்ற தடங்கள்கள்,சாகசங்கள் எல்லாம் செய்து கடைசியில்,அக்கோவிலை அடைகிறான்.அக்கோவிலை அடைந்ததும்,மந்திரவாதி,ராமனை அருகில் இருக்கும் குளத்தில்,குளித்துவிட்டு வருமாறு சொல்கிறான்.அக்குளத்தில்,ராமன் குளிக்கும்போது,ஒரு முதலை அவனை கொல்ல முயல்கிறது.





போராடி அந்த முதலையைக்கொண்டவுடன் தான் தெரிகிறது,அது ஒரு பெண் என்று.அந்த பெண்ணிற்கு கிடைத்த சாபத்தால்,அவள் முதலையாக,அங்கு இருந்திருக்கிறாள்.இவன் முதலையை கொண்றதும்,அவள் சாபவிமோசனம் நீங்கி,மீண்டு வந்திருக்கிறாள்.அவள்,ராமனிடம்,அந்த மந்திரவாதியைப்பற்றிய உண்மையை சொல்கிறாள்.உண்மையை அறிந்த ராமன்,நயவஞ்சகமாக அந்த மந்திரவாதியை பலிகொடுத்து,பாதள பைரவியின் சிலையைப்பெற்று நாடு திரும்புகிறான்.
நாடு திரும்பியவன்,அச்சிலையை வணங்கி,தெய்வத்தை வரவைத்து,பெரிய மாயமாளிகை உருவாக்கி,திடீர் பணக்காரன் ஆகிறான்.நடந்ததை எல்லாம்,தன் உயிர்த்தோழனான,அஞ்சியிடம் தெரிவிக்கிறான்.பின்,ராஜாவை தன் மாய மாளிகைக்கு வரவைத்து,அவரின் மகளை அவனுக்கே மணமுடிக்க ஒப்புக்கொள்ள வைக்கிறான்.ஒரு நல்ல நாளில்,திருமணம் நடக்க ஆரம்பிக்கிறது.இதையெல்லாம் அறிந்த மந்திரவாதியின் எடுபிடி டிங்கிரி,உடனே தன் குருநாதரைத்தேடிச்செல்கிறான்.டிங்கிரியிடமிருந்த தொலைநோக்கி மூலம் தேடினால்,தமக்கு வேண்டியவர்கள் எங்கிருப்பார்கள் எனக்காட்டும்.அதில்,குருநாதர் இறந்து கிடப்பதை அறிந்து,அவரைத்தேடிச்சென்று,தன்னிடம் இருந்த சஞ்சீவி வேர் மூலம்,மந்திரவாதியின் தலையை ஒட்டவைத்து,உயிர்ப்பித்து,நடந்ததை அனைத்தும் கூறுகிறான்.உடனே,மந்திரவாதி உஜ்ஜயினியை நோக்கிச்செல்கிறான்.செல்லும் வழியில்,ஒருவன் தூக்கில் தொங்க முயற்சிப்பதைப்பார்த்த மந்திரவாதி, அவனிடம் யாரென்று கேட்கும்போது தான் தெரிகிறது,அவன் இந்துவின் தாய்மாமன் என்று.அவனுக்கு இந்துவின் மீது ஒரு கண்.அவனுக்கு இந்து கிடைக்காததால் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.
அவனிடம் நயவஞ்சகமாக பேசி,அந்த மந்திர டெலஸ்கோப் உதவியுடன்,ராமனிடம் இருக்கும் அந்த பாதாளபைரவி சிலையை எடுத்து வந்து தந்தால்,இந்துவை அவனுக்கு மணமுடிப்பதாக கூறுகின்றான்.அவன் பேச்சை நம்பி,இவனும் சென்று அந்த மந்திர சிலையை கொண்டுவந்து தருகிறான்.அதை வாங்கிய மந்திரவாதி,பாதாள பைரவியை அழைத்து,இந்துவையும்,அந்த மந்திர மாளிகையும்,தன்னையும் தன் உதவியாளன் டிங்கிரயையும்,தன் இருப்பிடமான, இமய மலைக்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகிறான்.சரியாகத்தாலி கட்டும் நரத்தில்,இந்து மற்றும் மாய மாளிகை மறைகிறது.ராஜா உட்பட அனைவரும்,ராமனைப்பிடித்துக்கொள்கிறார்கள்.

அப்போது அங்கே வரும்,இந்துவின் தாய்மாமன்,நடந்த விஷயங்களைத்தெரிவிக்கிறான்.பின்,ராமன் தன் நண்பன் அஞ்சியுடன்,மந்திரவாதியைத்தேடிச்செல்கிறான்.காடு மலையெல்லாம் அலைந்த கலைப்பில்,இருவரும் ஒரு இடத்தில் உறங்கினர்.
இந்துவின்மீது ஏற்கனவே காமத்துடன் இருந்த மந்திரவாதி,அவளைத்தன் மனைவியாக்க முயல்கிறான்.அவள் மறுக்கவே,மீண்டும் பாதாள பைரவியை அழைத்து,ராமனைக்கட்டி இங்கே கொண்டு வருமாறு வேண்டுகிறான்.ராமனும் அடுத்த நொடியில்,மந்திரவாதியின் முன் கட்டுண்டு கிடக்கிறான்.




அவனை,இநதுவின் முன்னே அடித்துத்துன்புறுத்தி,அவளைச்சம்மதிக்க சொல்கிறான்.அவளுக்கு ஒருநாள் டைம் கொடுத்து,நாளைநீ சம்மதிக்கவில்லை எனில் உன் ராமன் நரபலியாக்கப்படுவான் என எச்சரித்து செல்கிறான்.
அஞ்சி,எழுந்துப்பார்த்ததும் தன் நண்பன் ராமனை காணமால்,அந்த வனத்தில் தேடி அலைகிறான்.அப்போது 2 பூதங்கள்,அஞ்சியைப்பிடித்து அறிவுரைக்கேட்கிறார்கள்.அந்த பூதங்களிடம்,ஒரு ஜோடி மாய செருப்பும்,ஒரு மந்திர சால்வையும் இருக்கின்றது என்றும்,எதை யார் எடுத்துக்கொள்வது என்றும் புரியாமல் அஞ்சியை அழைத்ததாக கூறுகின்றன.அஞ்சி,அவர்களை ஏமாற்றி அந்த மந்திர சால்வையையும்,செருப்பையும் எடுத்துக்கொள்கிறான்.அந்த மந்திர சால்வையைப்போற்றி கொண்டால் மாயமாய் மறையச்செய்யும்.அந்த செருப்பு,நாம் வேண்டிய இடத்திற்கு கூட்டிச்செல்லும்.அஞ்சி அங்கிருந்து,ராமனுடைய இடத்திற்கு சென்று அவனை விடுவிக்கிறான்.பின் மந்திரவாதியின் சக்திகளெல்லாம் அடங்கியிருக்கும் அவனுடைய தாடியை நயவஞ்சகமாக பேசி எடுக்க வைத்து,பின் ராமனும் மந்திரவாதியும் கட்டிப்பிடித்து சண்டையிட்டு,மந்திரவாதியைக்கொண்டு அந்த மந்திரசிலையையும்,இந்துவையும் எப்படி மீட்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.


ராமனாக,மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் NTR.இந்துவாக மாலதி.மந்திவாதியாக நம்ம S.V.ரங்காராவ்.டைரக்சன் கத்ரி வெங்கட ரெட்டி.


இந்த படம் எடுத்த காலத்தில்,ஆங்கிலப்படங்களிலும்,இப்படிப்பட்ட தந்திரக்காட்சிகள் வந்திருக்குமா?என்பது ஆச்சரியமே.அவ்வளவு அருமையாக எடுக்கப்படிருக்கும்.இந்தப்படம் இப்போது,DIGITAL முறையில் வெளிவந்தாலும் கண்டிப்பாக நல்லபடியாக ஓடும் என்பதில்,எனக்கு துளி மாற்றுக்கருத்தும் இல்லை.அந்த காலத்திலேயே அற்புதமான,பிரம்மாண்டமான செட்கள்,அழகான ஒளிப்பதிவு,பிரம்மாண்ட மற்றும் சிறப்பான இசை.இதையெல்லாம் விட,நடனக்காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.ராமன்,தன் மாய மாளிகைக்கு,ராஜாவை அழைத்துச்செல்லும் காட்சியில்,ஒவ்வொரு அரங்கிலும் ஒவ்வொரு நடனக்கலைஞர்கள் இருப்பார்கள்.அவர்கள் ஆடும் நடனம் அவ்வளவு,வளைவு ,சுளிவுடன் மனதை ஈர்ப்பது போலிருக்கும்.அந்த நடனமங்கைகளையும்,நடன மாஸ்டரையும் எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.இத்தனைக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த ஆண்டு 1951 என்று கூறினால் நம்ப முடியுமா உங்களால்?

அந்த காலத்திலே,ஒரு சோகப்பாடலை,குறிஞ்சி,முல்லை,மருதம்,பாலை,நெய்தல் என ஐவகை நிலங்களிலும் படமாக்கி உள்ளார்கள்.நான் பார்த்ததிலேயே மிகப்பிரம்மாண்டமான இந்தியப்படம் என்றால் இதைத்தான் கூறுவேன்.அதே போல் உலக அளவில் நான் பார்த்த FANTASY,ADVENTURE  திரைப்படங்களில்,இதுவே என்னை அதிகம் கட்டிப்போட்டது.இந்த படம் தான் உலகத்திரைப்பட விழாவில் கலந்த முதல் இந்தியத்திரைப்படமாம்.கண்ணடிப்பாக இந்த படத்திற்கு அந்த தகுதி இருக்கிறது.

சரி தலைப்பிற்கு வருவோம்.இப்போது நம் ஊரில் ஒருவிஷயம் சில பதிவர்களால் தாருமாராக விமர்சிக்கப்பட்டு வருகிறது.அதாவது தென்னிந்தியப்படங்கள்,குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்குப்படங்கள்,எல்லாம் அப்படியே ஈயடிச்சான் காப்பியாக ஆங்கில,ஜெர்மானிய,ஈரானியத்திரைப்படங்ஙகளிலிருந்து திருடி எடுக்கப்படுகிறது.இப்போது அந்த காபியைக்கண்டுபிடிக்கும் முந்திரி கொட்டைகளிடம் நான் கேட்பது இதுதான்.நீங்கள் ஹாரிபாட்டரின் 8 பாகங்களையும் பார்த்திருப்பீர்கள்.அந்த 8 பாகங்களிலும் ஒரு காட்சி,கண்டிப்பாக வரும்.அதாவது ஒரு மாயக்கம்பளியை,ஹாரிபாட்டர் அணிந்தால்,அவன் உடலை யாராலும் பார்க்கமுடியாது.இந்த மாயக்கம்பளியை வைத்துதான் இந்த ஹாரிபாட்டர் சீரீஸ்களையே முடிப்பார்கள்.



இந்த ஹாரிபாட்டர் கதை எழுதப்பட்டு வெறும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தான் ஆகிறது.ஆனால் இந்த பாதாள பைரவியில் வரும் மாயப்போர்வை கான்செப்ட் கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் பழமையானது.அப்படியானால்,ஹாரிபாட்டர் படம் இந்த பாதாள பைரவியின் காப்பி தானே?யாரிடம் உரிமை பெற்று ஹாரிபாட்டர் கதைகளை படமாக எடுத்தார்கள்?இப்படத்தின் தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இவர்கள் அனுமதி வாங்கியதுபோல் தெரியவில்லையே?காப்பி,காப்பி என ஹாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு மெயில்போடும் நீங்கள்,ஏன் இதற்கு மெயில் போடவில்லை,எதிர்ப்பை காட்டவில்லை? இதையெல்லாம் கேட்டால்,ஹாரிபாட்டர் படம் எடுத்தவன் நம்மூர் படத்த பாத்துட்டாலும்னு சொல்லுவாங்க!ஏன் அவன் பார்த்திருக்கக்கூடாதா?அவதார் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் அவதார் இனமக்களின் புளூ கலரை,நம்ம கண்ணனின் கலரின் மேல் இன்ஸ்பிரேசன் காரணமாக உருவாக்கினாராம்.நம்மைப்பார்த்து அவர்கள் எடுத்தால் இன்ஸ்பிரேசன்,நாம் எடுத்தால் காபி!!கேடுகெட்ட பிழைப்பு.




(இந்த மியுட்டண்ட்டிற்கு தான் அந்த சக்தி இருக்கும்-X-MEN)

அதற்கடுத்து இந்த படத்தில் ஒரு காட்சி வரும்.மந்திரவாதியின் பிடியில் சிக்குண்ட ஹீரோயின்,தன்னிடம் வந்து மனதை மாற்ற முயற்சிக்கும் அரக்கியர்களை வெளியேற்றி கதவை மூடிவிடுவாள் இந்து.அப்போது ,மந்திரவாதி,கதவை திறக்காமல்,தன் சக்தி மூலம் நேறே அந்த மூடிய கதவின் வழியே உள்ளே செல்வான்.இது ஒரு சிறு காட்சி தான்.ஆனால் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் X-MEN-DAYS OF FUTURE மற்றும் X-MEN-THE LAST STAND ஆகிய படங்களில் ஒரு மியூட்டன் இளம்பெண்ணிற்கு இதே சக்தி இருப்பது போல் காட்டியிருப்பார்கள்.

கண்டிப்பாக இந்த பாதாள பைரவி படத்தை காணுங்கள்.மிகத்தரம் வாய்ந்த,சிறப்பான திரைப்படம்.எப்படி ஆங்கிலத்தில் 12 ANGRY MAN,PSYCHO கருப்பு-வெள்ளைத்திரைப்படங்கள் சிறப்பானதோ,அதே போல நமக்கு இந்த திரைப்படம்.



Comments

  1. பழமையின் மதிப்பும் நம்மிடமிருக்கும் பொருளின் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை என்பது சுடுகிற நிஜம். அதை உணர்த்தியது உங்களின் பகிர்வு.

    ReplyDelete
  2. //பழமையின் மதிப்பும் நம்மிடமிருக்கும் பொருளின் மதிப்பும் நமக்குத் தெரிவதில்லை என்பது சுடுகிற நிஜம்//-100% உண்மை சார்!!நன்றி,உங்களின் வருகைக்கு!!!

    ReplyDelete
  3. நண்பரே, மாயக்கம்பிளி, மாயச்செருப்பு கான்செப்ட், நம்ம ஊரு எம்ஜியாரு முதன்முதல்ல ஹீரோவா நடிச்ச 'ராஜகுமாரி' படத்துலயும் வரும். ராஜகுமாரி, பாதாளபைரவியை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (1947) வெளிவந்த படம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணே!! இன்னும் நான் ராஜகுமாரி படம் பார்க்கல!! சொல்லிட்டிங்கள!! பாத்துடவேண்டியதுதான்

      Delete
  4. Nice article ! Bro... Keep it up... :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை