நினைவுகள் - சிறுகதை






வேறு வழியில்லை . இவர்கள் எங்கள் காதலை பிரித்துவிடுவார்கள் . அவளைக்கூட்டிக்கொண்டு ஓடுவதைத்தவிர வேறு வழியில்லை . முதலில்  இதை அவளிடம் சொல்லிவிடவேண்டும் என்றவாறு என் போனில் , wife என்று பதிந்திருந்த நம்பருக்கு போன் செய்யலாம் என்று எடுத்தேன் . அச்சமயத்தில் , வேறொரு அழைப்பு வந்துவிட்டது . இவள் வேறு கூப்பிடுகிறாளே ! என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே போனை என் காதில் பொருத்தினேன் .

‘சொல்லு’

‘நா இன்னைக்கு சிங்கப்பூர் கிளம்பறேன் . நைட் ஃப்ளைட்’

‘ம்’

‘உன்னால வரமுடியுமா ? ப்ளீஸ் பாத்துட்டு போயடறேன் ’

‘தெரியல . பாக்கலாம் . இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேன் . நா அப்றமா கால் பன்றேன்’

நான் சொல்லநினைத்ததை , சொல்லமுடியாமல் அவள் குரலை மீண்டும் கேட்க திராணியில்லாமல் கட் செய்தேன். இப்போது , உடனே , என் தேவதைக்கு போன் செய்து விஷயத்தைக்கூறினேன் .

‘தங்கம் . இது சரிப்படாது . நா காலைல 6 மணிக்கு உங்க வீட்டு முன்னாடி வந்து, மூனு டைம் ஹார்ன் அடிக்கிறேன் . நீ அப்படியே கிளம்பி வந்துடு . நா , உனக்கு புடவ , எல்லாம் வாங்கி வச்சிட்டேன் .நாளைக்கு சின்னதிருப்பதில கல்யாணம் ’

‘எனக்கு பயமா இருக்குங்க’

‘கவலப்படாத. நா இருக்கேன் . இத விட்டா வேற வழி நமக்கு இல்ல .’

அவள் குரலில் பயம்கலந்த சோகத்தை என்னால்  உணரமுடிந்தது .அவளிடம் பேசி விட்டு என் நண்பர்களையும் அழைத்துப்பேசினேன் . எல்லாம் ஓகே ஆகிவிட்டது . நாளை காலையில் , எனக்கு திருமணம் .


---------------------------------------------------------------------------------------------------------------------

‘டேய் எழுந்திரிடா . அந்த பொண்ணு வந்துடுச்சி’

என்றுகூரிய என் தாயின் முகத்தைப்பார்த்தவாறே அன்றைய தினமும் விழித்தேன் . தினசரி என் தாயின் எழில்முகத்தில் விழிப்பதாலோ என்னவோ, படித்துமுடித்த ஆறுமாதமாய் வேலைக்கு போகாமல் எவ்வித கமிட்மென்டும் இல்லாமல் ஜாலியாக இருக்கிறேன் . படிக்கும்போதே ‘ஆறுவது சினம்’ என்ற ஔவையின் சொல்லுக்கு அடிபணிந்தவன் என்பதால் , அரசியல்வாதியான அப்பாவின் அனல்பொங்கும் கேள்விகளுக்கு ஜஸ்ட் லைக் தட் என்று சென்றுவிடுவேன் . இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய கடைமையான சிகரெட் புகைத்தலை தவறாமல் செய்துவரும் , குடியைக் கை விட்ட குடிமகன் நான் . மூன்றுமாதங்களுக்கு முன் தாயின் கண்ணீரால் , கைகழுவிய குடியை மட்டும் விட்டிராமல் இருந்தால் , தமிழகத்தை வாழவைக்கும் புண்ணியவான்களுல் இப்போதும் ஒருவனாயிருந்திருப்பேன் . ‘குடி , குடியைக்கெடுக்கும் ‘ . கரெக்ட்தான் . அர்த்தம் தவறாக புரிந்துகொண்ட பலரில் நானும் ஒருவன் . முதலில் வரும் குடி , ‘சரக்கை ’ குறிக்கவில்லை . ‘குடும்பத்தை ‘ தான் குறிக்கிறது என்பது அப்போது தான் புரிந்தது .


-------------------------------------------------------------------------------------------


மனதில் படபடப்பு அதிகரித்தபடி இருந்தது. இன்னும் ஒருநாளில் திருமணம் . காலையில் அவள் என் மனைவியாக போகிறாள் . அவள் கால்களில் மெட்டிப்போட கிழே குனிந்தவன் , இன்னு அவள் காலடியிலேதான் இருக்கிறேன் என்ற என் அண்ணனின் வாசகங்கள் வேறு என்னை பயமுறுத்தியது . ரிசப்சன் என்பதால் , அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோட் வாங்கி என் சுதந்திரத்திற்கு கேட் போட்டுவிட்டார்கள் . அருகில் , என் வருங்கால அருமைப்பத்தினியும் முகம் முழுக்க ப்ளீச்சிங் பவுடரும் ரோஸ்பவுடரும் ஒருசேர அப்பியவள் போல் வேர்வை மழையில் நனைந்துகொண்டிருந்தாள் .இரண்டுமணிநேரமாக , ஒவ்வொருவனையும் மேடையில் வரவேற்று எனக்கு கால் வலிக்க ஆரம்பித்தது .ஏற்கனவே ஒரு வருடத்திற்குமுன் காலில் ஒரு சர்ஜரி வேறு.


--------------------------------------------------------------------------------------------------


‘நாம BREAK – UP பண்ணிக்கலாம் மெக்னேஷ் . இனி நமக்கு செட் ஆகாது ‘

‘என்னாச்சு ஷெரின் . ஏன்டி இப்டி பேசுற ?’

‘Don’t call me டீ . okay ? I don’t Want This bullshit anymore ’

“Just Listen to me .What happened to you ? Pls tell me ”

“Nothing . just leave me alone ”

“ஷெரின் . நீ இல்லனா , நான் செத்துடுவேனு உனக்கு தெரியாதா ? நீ இல்லாம நா எப்டிடீ ?”

‘ஓ ! ப்ளாக்மெய்ல் பன்றியா ?’

‘அப்டி இல்லடா . நா உண்மைய தான் சொல்றேன் . நாம எதுக்காக பிரியனும் ? நா என்ன தப்பு செஞ்சேன் ? ’

‘முதல்ல என்ன புரிஞ்சிக்கோ ! இந்த 2 yearsல , நமக்குள்ள சண்ட தான் அதிகம் . உன்னால என் சந்தோஷமெல்லாம் போய்டுச்சி . அத பன்னாத , இத பன்னாத , அங்க போகாத , இங்க போகாத , அவன்கிட்ட பேசாத , Facebook ல ஆன்லைன் வராத , வெளிய போகாத  , சினிமா பாக்கதனு நீ போட்ட ஒவ்வொரு கன்டிசனும் என்ன எவ்ளோ கஷ்டமாக்குச்சுனு தெரியுமா ? ஆனா அவ்ளவையும் உனக்காக நா செஞ்சேன் . ஆனா நீ , உங்கம்மா இருக்காங்க , அவங்கமுன்னாடி பேசமுடியாது , அம்மா கூப்டறாங்க அப்டி இப்டினு சொல்லி என்ன எவ்ளோ avoid பண்ணமுடியுமோ , அவ்ளோ அவாய்ட் பண்ண .உங்கிட்ட ஒரு சின்ன விஷயம்கூட Share பண்ணமுடியல . லாஸ்ட் 2 மன்த்ஸ்ல , நாம பேசுனது வெறும் 8 நிமிஷம்தான் . உன்ன நினச்சி தினந்தினம் நா அழுததுதான் மிச்சம் . இதுல after marriage, என்ன , என் பேரன்ட்ஸ விட்டு பிரிஞ்சிவேற வர சொல்ற . என்னால இதெல்லாம் முடியாது. நா தெளிவா யோசிச்சுதா சொல்றேன் . Let’s Breakup .என்ன , ரெண்டுபேரும் one weak அழுவோம் . அப்றம் நார்மலா இருக்கப்போறோம் . தினமும் அழுதுட்டே இருக்கறதவிட இது எவ்ளோ பெட்டர் . So , Don’t try to call me ever and Ever . Take Care . Good Bye ’

------------------------------------------------------------------


இன்றைய காலைப்பொழுது , என்னால் என் தாயின் முகத்தில் எழமுடியவில்லை. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள் . ஏற்கனவே , என் நண்பர்களிடம் பேசியபடி , வீட்டின்வெளியே வந்து போன் செய்தேன் .அந்த அதிகாலை நேரத்தில் , எங்கள் ஊரில் இன்னும் யாரும் விழிக்கவில்லை . அவள் கண்டிப்பாக என்னுடன் வந்துவிடுவாள் . காலையில் , கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு , என் கேரள நண்பனின் வீட்டிற்கு சென்றுவிடவேண்டும் . பின் , ஒருவாரம் கழித்து வீட்டிற்கு வந்து பெற்றவர்களின் காலில் விழுந்துவிடவேண்டும் . என்ன ஆனாலும் , அவளின் தந்தை , மண்திட்டு மண்டையன் காலில் மாத்திரம் மட்டும் விழவே கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன் . என் நண்பன் , ஏற்கனவே பேசியபடி பைக்கில் நிற்க , அவனிடமிருந்து பைக்கை வாங்க நான் ஓட்டிக்கொண்டு சென்றேன் .


-----------------------------------------------------




“டேய் எழுந்திரிடா . அந்த பொண்ணு வந்துடுச்சி .”

வேகமாக எழுந்து வீட்டின் வாயிற்படிக்கு வந்தேன். எதிரிலிருக்கும் ரோட்டில் , அவளின் காலேஜ் பஸ்ஸிற்காக காத்திருந்தாள் .மொட்டு அரும்பி , மலராய் மலர்ந்த மல்லிகைப்போல் , பொலிவுடன் காணப்பட்டாள் . வேகவ்வேகமாய் ப்ரஷ் செய்து முகத்தைக்கழுவி , தலையை சிவி , சிறிய அலங்காரம் செய்து , அவளுக்கு என் சிங்கார முகத்தைக்காட்டும்பொருட்டு , வாசலுக்கு வந்தேன் . சரியாய் டீ-யுடன் என் தாயும் வர வாங்கி , அருந்தியபடியே அவளை ரசிக்க ஆரம்பித்தேன் . இன்னும் 25 நிமிடம் உள்ளது ; அவளை அழைத்துச்செல்லும் கல்லூரிப்பேருந்துவர . இன்னும் 10 நிமிடத்தில் அவளின் கல்லூரித்தோழிகள் அவளைச்சுற்றிலும் காணப்படுவார்கள் . இதுதான் தக்க சமயம் . இவளை சந்தித்து , ஒருவாரம் ஆகிவிட்டது .கல்லூரி முதலாமாண்டு சேர்ந்திருக்கிறாள் போல . பார்த்த முதல் பார்வையிலே , பல வார்த்தைகளை கண்களை உதடுகளாக்கி என்னிடம் பேசினாள் . அவளின் கண்வனப்பிற்காகவே அவளை மணம் செய்துகொள்ள மனம் ஏங்கியது .இப்போதுகூட என்னைப்பார்ரத்தவாறு அவள் கண்கள் எனும் உதடுகள் பேசும் வார்த்தைகளை , எனது கண்கள் எனும் காதுகள் கவ்விக்கொள்ள முயர்ச்சித்து தோல்வியைத்தழுவிக்கொண்டிருந்தது . இன்று எப்படியும் அவளிடம் பேசியாக வேண்டும் .அதற்கு முன்னேற்பாடாக , அவளின் பின்னாலிருக்கும் என் சித்தப்பாவின் கடையில் வைத்து என் சித்தியிடம் உதவி கோரியாயிற்று .


-----------------------------------------------------------


‘Good Bye ’ என்ற ஷெரின் சொல்லிய கடைசி வார்த்தையின் சக்தியை அக்கணமே உணர்ந்தேன் .அவ்வார்த்தை என் காதுகளில் கடப்பாறையை இறக்கியதுபோன்றதொரு வலியை  ஏற்படுத்த , அதை என் மனதால் உணர்ந்தேன் . அவள் போன் கட் செய்துவிட்டாள் . உலகின் அனைத்து உயிரினங்களும் கண்டங்களின் மோதலினால் மீண்டும் அழிந்து போனதுபோலும் , நான் ஒருவன் மாத்திரமே , அநாதையாக தவிப்பது போலவும் இருந்தது .முதல் காதல்வலி , என் நெஞ்சைப்பிளந்து மனம் முழுத ஆக்கிரமித்து , உடலை நடுநடுங்க வைத்தது . எப்படியாயினும் அவள் திரும்ப போன் பண்ண மாட்டாளா என்ற என் அசட்டுத்தனம் , மனம் முழுக்கப்பரவ , அந்நம்பிக்கையிலே வாழ ஆரம்பித்தேன் .

----------------------------------------------------------------------


எப்படியோ , ரிஷப்சன் முடிந்தாயிற்று . கட்டிலில் அமரும் போது அத்தனை வலி .மெல்ல தூங்கலாம் என்றால் , இன்னும் 4 மணிநேரத்தில் கல்யாணம் . என் நண்பர்கள் அனைவரும் மிலிட்டரி ரம்மின் முன் தோற்று வாந்தியெடுத்து ஒரு அறையில் படுத்திருந்தார்கள் .என் தந்தை , நாளை திருமண சமையலில் , எப்படி இருக்கவேண்டும் என்று விளக்குவதற்காக சமையலறையில் குடிகொள்ள , என் தாயோ பகல் முழுவதும் ஓடியாடி செய்த வேலையின் களைப்பில் உறங்கச்சென்றுவிட்டாள் . மெல்ல கண்களை மூடி , கனவுகளுக்கு மனதை வார்த்தேன் .


-------------------------------------

அதிகாலை குளிரை உணரமுடியாத நிலையில் நானிருக்க , என் நண்பனோ , குளிரின் தாக்கத்தில் நடுங்கிக்கொண்டிருப்பது எனக்கு தெரிந்தது . இன்னும் 5 நிமிடத்தில் , கார் வைத்திருக்கும் பிரவீன் வீட்டிற்கு சென்று , அங்கிருந்து 4 நண்பர்களுடன் அவள் வீட்டிற்கு செல்லவேண்டும் .மீதமுள்ளவர்கள் , நேராக கோயிலுக்கு சென்றுவிடவேண்டும் என்பது ப்ளான் . அவளுக்கா நான் எடுத்ததிருந்த Skyblue கலர் பட்டு சீலை , என்கையில் இருந்த பையினுள் கிடந்தது .


-----------------------------------------------

டீ டம்ளரை வைத்த கையோடு எதிர்ரோட்டில் இருக்கும் என் சித்தியின் கடைக்கு சென்றேன் .என் தாயிற்கு , நான் இவளை சைட் அடிப்பது உட்பட எல்லாம் தெரியும் .இப்போது கூட நான் அவளிடம் பேசப்போகிறேன் என்பதும் தெரிந்துதான் வைத்திருப்பாள் . இதோ அவளருகில் நெருங்க நெருங்க , எங்கோ மறைந்திருந்த பயமும் என் மனதை நோக்கி நெருங்க ஆரம்பித்தது . எங்கள் வீட்டை சுற்றியும் , என் அங்காளிப்பங்காளிகளின் வீடுகள் ஆக்கிரமித்துள்ளதால் , அவளை நேருக்குநேர் பார்த்துபேசமுடியாது . என்னதான் அவள் எனக்கு மாமன் மகள் என்றாலும் அவளின் குடும்பத்திற்கும் , எங்களின் குடும்பத்திற்கும் அந்தளவு பழக்கமில்லை . நேராக கடைக்கு சென்றேன் . சித்தப்பா காலையில் இருக்கமாட்டார் என்பதும் எனக்குத்தெரியும் . என் சித்தியை நோக்கி ,

‘சித்தி . அவகிட்ட பேசுங்க .ப்ளீஸ் ’

‘இருடா . எனக்கு பயமாயிருக்கு ’

‘அய்யோ. ஏந்தா இப்டி இருக்கிங்ளோ. போய் பேராச்சும் கேளுங்க சித்தி ’ என்று சொல்லி முடிக்கும் முன்னரே , கண்களால் என்னை விழுங்கும் என் ஒருவார கனவு தேவதை என் அருகில் நின்றிருந்தாள் .

          ------------------------------------------------------------------------------------------


ஷெரின் கூறியதும் உண்மைதான் .அவளை காதலித்த 2 ஆண்டுகளில் , நான் போடாத கன்டிஷன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் .ஆனால் , அந்த கன்டிஷன்கள் எதற்கு என்று அவள் புரிந்துகொள்ளாதது என்னுள் வருத்ததை அதிகரித்தது.  நான்குடியிருந்த வீட்டின் எதிர்வீட்டின் உறவினருக்கு , ஷெரின் குடும்பம் ஒருவகையில் தூரத்து சொந்தம் . சிங்கப்பூரில் இருக்கும் ஷெரின் , ஒருமுறை வந்திருந்தபோது , ஏற்பட்ட பழக்கம் காதல் கரையில் முடிந்தது .அந்நாட்டில் , எல்லோரும் சாதாரணமாக பழகுவது , கிராமத்தானான , என் மரமண்டையில் விளங்காததால் , அவளுக்கு போட ஆரம்பித்த கன்டிசன்கள் அதிகரிக்க ,எங்களுக்குள் இருந்த காதல் குறைந்துவிட்டது . சிறுசிறு சண்டைகள் வளர்ந்து பூதாகரமாகி , இப்போது உடைந்த கண்ணாடிபோல் , சிதறிவிட்டது .

                      ---------------------------------------------------------

‘தம்பி . கலெக்டர் ராம்குமார் வந்திருக்காரு . அவர அழச்சிகிட்டு வா .’ நேராக மணமகன் அறையில் சிறிய மேக்கப் போட்டுக்கொண்டிருந்த நான் , வேகமாக சென்று அவரை வரவேற்று , முதல் வரிசையில் அமரவைத்தேன் . .ஒரு தாசில்தாரின் திருமணத்திற்கு , கலெக்டர் வருவது இயல்புதானே . பின் , சிறிதுநேரத்தில் மணமேடையில் அமர்ந்தேன் . இன்னும் 1மணிநேரத்தில் முகூர்த்தம் . மணம் ஆகப்போகின்றது .இருமணம் , திருமணம் எனும் பந்தத்தில் ஒருமணமாக போகுறது .

                            ---------------------------------------------

 காரை கிளப்பியாயிற்று . மற்றவர்கள் , பைக்கை எடுத்துக்கொண்டு , முன்னே கோவிலுக்கு சென்றனர் . இன்னும் 6 மணியாக ஒருமணிநேரமுள்ளது . ஆனால் , அவளின் வீட்டை அடைய 20 நிமிடங்களே போதும் . என்ன செய்யலாம் என்று யோசித்தேன் . பின் ஒருவாறு முடிவெடுத்து , அவளுக்கு ஒரு sms தட்டிவிட்டேன் . அவள் பார்ப்பாலா , என்கின்ற என் சந்தேகத்தை உடைத்தெறியும் வண்ணம் , இன்னும் அவள் தூங்கவேயில்லை என்பதை எனக்கு தெரிவிக்கும் பொருட்டு , உடனே ok என்று மெசேஜ் செய்திருந்தாள் . ஒருவருட காதலாயிற்றே .

                           ---------------------------------------------------------


‘அக்கா ! A4 SHEET இருக்கா ?’

‘எத்தன வேணும்மா ?’

‘4 தாங்க ’

‘இரும்மா . உள்ள இருக்கு . எடுத்து தரேன் .’

‘சரிக்கா ’

என்னை அவள் மீண்டும் பார்க்க , சமாளிக்கமுடியாமல் தவித்த எனக்குள் ஒரு குருட்டுத்தைரியம் வர ,

‘நீங்க ராஜா மாம பொண்ணு தான ?’

‘ஆமாங்க’

‘உங்க பேரு’

‘ரூபா’

‘என்ன படிக்கிறிங்க ?’

“B.Sc Maths’

‘இந்தாம்மா ! 2 ரூ ஆச்சு’

‘இந்தாங்கக்கா .’

ரூபா , A4 பேப்பரை வாங்கிவிட்டு ,மெல்ல என்னப்பார்த்து புன்னகைத்தவாறே கிளம்பினாள் .தூரத்தில் ,அவளின் தோழி வருவது தெரிந்தது .

                          -------------------------------------------------

இரண்டுமாதங்கள் ஆகிவிட்டது .ஷெரின் இன்னும் போன்செய்யவில்லை .என் பிறந்தநாளான இன்று கூட அவளுக்கு போன் செய்ய மனம் வரவில்லை . வேறுவழியில்லை .அவளுக்கு செய்த சத்தியத்தை தகர்ந்தெறிந்துவிட்டு குடிக்க ஆரம்பித்தேன் . இனி ஆறுமாதங்கள் தினமும் என்னுடன் வரப்போகின்றது இந்த குடிப்பழக்கம் என்பது தெரியாமலே குடிக்க ஆரம்பித்தேன் .

              -----------------------------------------------------------------------------

‘கட்டிமேளம் கட்டிமேளம்’ என்ற ஐயரின் குரல் என்காதினுள் ஒலிக்க , தாலியை எடுத்து , அவளின் கழுத்தை நோக்கி என் கை சென்றது.  சுற்றி இருப்பவர்களை ஒருமுறை பார்த்தேன் . ஏற்கனவே மணமான ஆண்களின் முகத்தில் ‘அச்சோ பாவம் இந்த பையன் ’ என்ற ஏளனச்சிரிப்பும் , மணமாகத ஆண்களின் முகத்தில் ‘சே ! செம ஃபிகரு. இன்னைக்கு நைட்டு செமையா என்ஜாய் பண்ணப்போறான்’ என்ற பொறாமையும் இருப்பதை அறிந்தேன் . என்னுள்ளோ ,26 ஆண்டு பேச்சிலர்   வாழ்கை இன்றோடு முடியப்போகின்றது என்ற வருத்தமும் , மணவாழ்க்கை ஆரம்பிக்கப்போகின்றது என்ற சந்தோஷமும் பரவ முதல்முடிச்சைப்போட்டேன் .


                 ------------------------------------------------------------

காரை எடுத்துக்கொண்டு கிளம்பினோம் . இன்னும் சிறிது தூரம்தான் . அந்த வளைவில் என்னவோ பெரிதாக தெரிகின்றதே ! என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் வேளையில் ‘படார்’ என்ற சத்தமும் , காரினுள் ‘அய்யோ’ என்ற சத்தமும் வர ஆரம்பித்தது . என்ன நடந்திருக்கும் என்று யோசிப்பதற்குள் , என் சுயநினைவை இழக்க ஆரம்பித்தேன் .

                             ------------------------------------------------

‘சொல்லு ரூபா’

‘நாம லவ் பன்ற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சி மெகு .’

‘என்னடி சொல்ற ? எப்டி தெரிஞ்சது ?’

அவள் சில விஷயங்களை கூறினாள் . அத்துடன் , அவளுக்கு திருமண ஏற்பாடு நடக்கப்போவதாகவும் கூறினாள் .

‘சரி இரு. நா வீட்டுல பேசிட்டு , உனக்கு திருப்பி கால் பன்றேன் ’

எங்கள் வீட்டில் மெல்ல பேசினேன் .முதலில் மறுத்த என் தந்தை பின் ஒப்புக்கொண்டு அவர்கள் வீட்டில் பேச சென்றார் . அப்போது என் செல்போன் சிணுங்க ,

‘ஹலோ’

‘நா ஷெரின் பேசுறேன்’

‘ம்’

‘எப்டி இருக்கடா ?’

‘நல்ல இருக்கேன் ஷெரின் . என்ன திடீர்னு ?’

‘நா சென்னை வந்துருக்கேன் . உன்னப்பாக்கனும்போல இருக்கு . இங்கதான் மாமா வீட்டுல இருக்கேன் . உன்னால வரமுடியாம ?’

‘இல்ல . நா சேலத்துல இருக்கேன்’

‘ஓ . அப்றம் ?’

‘எதுவுமில்ல’

‘இந்த 3 வருஷமா உனக்கு நா ரொம்ப கஷ்டத்த கொடுத்துட்டேன் தான ? I Am Extreamly Sorry டா . எனக்கு உன்ன உடனே பாக்கனும்போல இருக்கு .ப்ளீஸ் வாடா’

‘ம். நா கொஞ்சம் வேலையா இருக்கேன் . திருப்பிக்கூப்டறேன்’

அவள் அழுகையை பொறுட்படுத்தாமல் என் போனை கட் செய்தேன் . 3 வருஷமா இல்லாத அக்கறை இப்போ எதுக்கு இவளுக்கு என்று கண்டமேனிக்கு அவளை மனதினுள் திட்டிக்கொண்டிருந்தேன் . இருந்தாலும்பாவம் , அவளிடம் ஒருவார்த்தை என்னவென்று கேட்டிருக்கலாம் . மனது ஒருவிதமாய் தவிக்க ஆரம்பித்தது . அதோ என் பெற்றோர் , ரூபா வீட்டிற்கு சென்று திரும்பியுள்ளார்கள் .ஜாதகம் அனைத்தும் வாங்கிவந்துவிட்டார்கள் .மீண்டும் ஷெரினிடம் இருந்துபோன் .

‘I love you So much da . I am Extreamly Sorry for that .Pls Don’t Ignore me’

எனக்கு அவளிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் அவள் போனை கட் செய்தேன் .இன்னும் அறைமணிநேரம் அவளுடன் பேசினால் ,அவளை மணம் கூட செய்துவிடுவேன் . என்ன செய்வதென்று தெரியவில்லை . என் முதல்காதலை புதுப்பிக்க நினைத்தால் , ரூபா ஒருபுறம் கண்ணீரும் கம்பலையுமாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறாள் . ஆம் , எனக்கு ரூபா தான் , பொருத்தமானவள் .இன்னொருமுறை ஷெரின் போன் செய்தால் , அவளிடம் அதைக்கூறியாகவிட வேண்டும் .

                  ---------------------------------------------------------------------

 ‘என்னங்க ! மாப்ள ஒருமாதிரி சொன்டி சொன்டி நடக்குறாரு ?’

‘அது ஒன்னுமில்லைங்க சகல .ஒருவருஷத்துக்குமுன்னாடி ஒரு சின்ன கார் ஆக்ஸிடன்ட் . அதுனால தான் ’

‘சரி சரி .மாப்ள என்ன படிச்சிருக்காரு ’

‘என்ஜினியரிங் . சென்னைல முடிச்சிருக்காரு ’

என் மாமனாரும் , இன்னொரு ஆளும் பேசுவது தெளிவாக கேட்டது . கல்யாணம் முடிந்துவிட்டது . வீட்டிற்கும் வந்தாயிற்று . முகூர்த்த நேரத்தின்போது வரமுடியாமல் சென்றவர்கள் , ஒவ்வொருவராக வந்து வாழ்த்திச்சென்றனர் .

‘தம்பி . நம்ம எம் .எல் . ஏ பாலகணேஷ் வந்திருக்காப்ல . ’ என்ற என் தந்தையின் குரல்கேட்டு ,என் நண்பர்களின் கூட்டத்திலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு அவரை பார்க்கச்சென்றேன் .

                   ----------------------------------------------------------------

‘அம்மா . என்னம்மா ஆச்சு ? ’

‘ராஜா . ஜாதகம் பொருந்தலடா . உனக்கும் அந்தபொண்ணுக்கும் சுத்தமா சரிவரல . வெறும் மூனு பொருத்தம்தா இருக்கு . அதுனால ….’

எனக்கு சுர்ரென்று தலையில் ஏறியது . எவ்வளவு நேரம் மன்றாடினாலும் , எங்கள் குடும்பத்தின் பதில் , அவளை திருமணம் செய்தால் , ஒன்று ரூபா இறந்துவிடுவாள் , இல்லையேல் நான் இறந்துவிடுவேன் .

அவளுடன் வாழாமல் இருப்பதற்கு  பதில் , வாழ்ந்துவிட்டு இறக்கலாம் என்ற முடிவு எப்படி என்னுள் வந்தது என்று தெரியவில்லை . உடனே , என் நண்பர்களுடன் கலந்தாலோசித்து, அவளுடன் ஓடிச்சென்று திருமணம் செய்வதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன் . இப்போது அவளுக்கு உடனே போன் செய்து இதை தெரிவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் என் போனில் , wife என்று பதிந்திருந்த நம்பருக்கு போன் செய்யலாம் என்று எடுத்தேன் . அந்நேரம் , ஷெரினிடம் இருந்து போன் .

                                -------------------------------

அவரை பார்த்து அவரின் வாழ்த்தை பெற்றேன் . என்னதானாயினும் அவர் எனக்கு வேலை வாங்கி கொடுத்தவராயிற்றே .

‘எங்கப்பா பொண்ணு ?’

‘இருங்க சார் .உள்ள இருக்காங்க . கூட்டிட்டு வரேன்’

நேராக உள்ளே சென்று என் மனைவியை அழைத்தேன் .

‘பூஜா . எம்.எல்.ஏ வந்திருக்காரு .’


                      --------------------------------------------------------


என்னால் நம்பவே முடியவில்லை .நான் அடிபட்டு கிடந்த இருபது நாட்களுல் , ரூபாவின் அப்பா , இன்னொருவனுக்கு அவளை மணமுடித்து கொடுத்துவிட்டானாம் . என்ன செய்வதென்றே புரியவில்லை . வாழ்வது எவ்வளவு கொடுமை என்பது , அப்போதுதான் எனக்கு புரிந்தது . இதைக்காட்டிலும் நான் சாவதே மேல் .எதற்கு சாகவேண்டும் , இன்னொருவனை கல்யாணம் செய்த அவளே வாழும்போது நாம் எதற்கு சாகவேண்டும் ? என்றுபலவாறான எண்ணச்சிக்கல்களுக்கிடையே மாட்டித்தவித்தேன் . இவ்வாறகவே 3 மாதம் சென்றது . பின் ஒரு எம்.எல் . ஏ உதவியுடன் , எவனுக்கோ லஞ்சம் கொடுத்து , என் தந்தை அரசுவேலையை வாங்கிக்கொடுத்தார் . வேலைக்கு செல்ல செல்ல , நினைவுகள் மறைய ஆரம்பித்தது . ஷெரினிடம் உண்மையை சொல்லியாயிற்று. அதிலிருந்து , அவள் கடந்த இருமாதங்களாக போன் செய்வதையே நிறுத்தியிருந்தாள் . மனதில் இருந்த காயங்கள் , வலியை மறந்த வடுக்களாய் தங்க , அவ்வடுக்களை பார்க்கும்போது ஏற்படும் நினைவுகள் அவ்வப்போது குறுக்கிட்டாலும் , வலியற்ற அவை , என்னை எதுவும் செய்யாமல் செல்ல ஆரம்பித்தன .

Comments

  1. இடையில் சில வசனங்கள் நல்லா இருந்தது.. கொஞ்சம் டிங்கரிங் பண்ணிருக்கலாம்.. அப்பறம் நிறைய இடங்கள்ள இருக்கும் எழுத்துப் பிழை மீண்டும் ஒருமுறை படித்துத் திருத்தவும்...

    //ன்னொருவனுக்கு அவனை மணமுடித்து கொடுத்துவிட்டானாம் .// இங்க அவளை ன்னு இருக்கணும்.. இது மாதிரியான தப்பு ப்ளோவ கெடுத்ரும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , கருத்துக்கும் , தெரிவிற்கும் , மிக்க மிக்க நன்றிணா !! ஒரு இலக்கியவாதி என் சிறுகதையை படித்திருக்கிறார் என்பதை கேட்கும்போது , மாபெரும் ஆச்சரியாமாகவும் அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .

      டவல் வேற எடுத்துட்டே வராம விட்டுட்டனே ! மகிழ்ச்சி கடல்ல நீந்தி எப்படி வெளிய வருவேண்ணு தெரியலையே !!

      Delete
    2. தக்காளி இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல :-)

      Delete
    3. அண்ணே !! உண்மைய சொன்னாக்கூட இப்படி நினைச்சா எப்படிணே !!!

      Delete
  2. Adengappa....cinema script mathiri irunthathu...

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட என்னோட கதைகள் எல்லாம் ஏதாவதொரு வகையில் சினிமாவின் சாயல் இருக்கும் தல !! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தல

      Delete
  3. இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் ப்ரோ.... தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. இன்னும் நெறைய எதிர்பார்க்கிறேன் ப்ரோ.... தொடர்ந்து எழுதுங்கள்-சதிஸ் செல்லத்துரை

    ReplyDelete
  5. Megneash - I felt like reading a Tamil script in Nolan style. Good. however as Seenu mentioned errors needs to be rectified in few places. And after writing take enough time to filter out few repetitive sentences and try to make it little more crisp. This sTory is a good contender for a short film :)

    ReplyDelete
  6. சின்ன சின்ன தொய்வுகள்இருந்தாலும் விறு விறுவென நகர்த்தி சென்ற விதம் சிறப்பு தம்பி ...
    தெளிந்த நீரோட்டமான நடை, முதலில் கொஞ்சம் குழப்படியா இருந்த உணர்வை தந்தது போக போக பட்டாசாக வெடித்தது. இடையில் உங்க சொந்த கதையும் உள்ள புகுத்திய புத்திசாலி தனத்தை கண்டு வியக்கிறேன் யா ... நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்