CN’s – INTERSTELLAR - சினிமாவிமர்சனம்






இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் வரும்  முன்னே ,நோலனின் அனைத்துப்படங்களை பற்றியும் எழுதிவிடலாம் என்றிருந்தேன் .ஆனால் ,சிலகாரணங்களால் முடியாமல் போய்விட்டது .எனவே இப்பதிவில் INTERSTELLAR திரைப்படத்தின் சினிமாவிமர்சனத்தைப் பற்றி  காணலாம் .  பின்னாளில்  எழுதும்போது இத்திரைப்படத்தைப் பற்றிய விரிவான  அலசலைக் காணலாம் .


கூப்பர்(COOPER) எனும் ஓய்வுபெற்ற  நாசா பைலட், தன் பத்து வயது மகள்  மர்பி ( MURPY )  ,பதினைந்து வயது மகன் டாம் மற்றும் தன் இறந்த மனைவியின் தந்தையுடன் வசித்துவருகிறான் .விவசாயத்தின்மீது  அதீதபிரியம் கொண்டகூப்பர், தன்பண்ணையில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறான் .அச்சூழ்நிலையில் பூமிஎங்கும் புழுதிப்புயல் தாக்கிகொண்டிருக்கிறது .மழையும் இல்லாமல் போய்விடுகிறது .உலகமே உணவுபற்றாக்குறையால் தள்ளாடிக்கொண்டிருக்கிறது .கூப்பரின் மகள் மர்பி,விண்வெளி  ஆராய்ச்சியின்மீது அதிக அக்கறைகாட்ட , அவள் படிக்கும் பள்ளியிலோ அதை மறுக்கிறார்கள். 

கூப்பரின்                 புத்தகஅலமாரியில் இருந்து விநோதமான விஷயங்கள் நடைபெறுவதாய்  மர்பி கூற,அதை  பேய் என கூப்பர் நம்பவைக்கிறான் .ஒருகட்டத்தில் தற்செயலாக கிடைக்கும் பைனரிகோட்களால் ஓரிடத்திற்கு செல்கிறான் . அங்கு நாசாவின் மீதியிருக்கும் விஞ்ஞானிகள் ரகசியமாக ஒருமிஷனை ஆரம்பித்திருப்பது அங்கு இருக்கும் விஞ்ஞானி பிராண்ட் மூலம் கூப்பர் அறிகிறான் .அதாவது சனிகிரகத்திற்கு அருகேWORMHOLE  என்றும்  BLACKHOLE     என்றும் அறியப்படும் கருந்துளைகள் உருவாகியிருப்பதைப் பற்றி பிராண்ட் ,கூப்பரிடம் தெரிவிக்கிறார் .அதாவது ,பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் சூரியகுடும்பம்போல் எண்ணிலடங்கா பலகோள்கள் இருக்கின்றன . நமது சூரியக்குடும்பத்தில் பூமி தவிற மற்றகிரகங்களில் உயிர்வாழ்வெதென்பது சாத்தியமில்லாதது . மற்ற சூரியகுடும்பங்களுக்குச் செல்லவேண்டுமெனில் சிலநூற்றாண்டுகள் ஆகலாம் .அப்படி செல்வதற்கு பதில்  , இக்கருந்துளைகளின் வழியே பயணிக்கும் போது சிலநாட்களில் அக்கிரகங்களை அடையலாம்.    கருந்துளைகள் பற்றி மேலும் விவரங்கள் தெரியவேண்டுமெனில் ஐன்ஸ்டைனின் வார்ம்ஹோல்தியரி அல்லது நமது நாட்டைச்சார்ந்த சந்திரசேகர்விளைவு ஆகிய தியரிகளை படித்தால் தெரியும் . மிகஎளிமையாக தெரியவேண்டுமெனில் தயங்காமல் இப்படத்தினை காணுங்கள்  . 


சரி ,படத்தின் கதைப்படி பிராண்ட் ,  ஏற்கனவே அக்கருந்துளைகளின் வழியே ஒருகுழு பயணித்து சில கிரகங்களைக் கண்டிருப்பதாகவும் ,  அதில் மனிதர்கள் வாழ ஏற்றதாக மூன்றுகிரகங்கள் உள்ளதெனவும் கூப்பரிடம் தெரிவிக்கிறார் . அங்கு சென்று மனிதஇனத்தை காப்பாற்ற தன்னிடம் இரண்டு ப்ளான்கள் இருப்பதாகவும், இதில் இருக்கும் முக்கியபிரச்சனையான ஈர்ப்புவிசைக்கான ரகசியத்தை , கூப்பர் பயணத்தை முடித்துவருவதற்குள் கண்டுபிடித்துவிடுவதாகவும் தெரிவிக்கிறார் . நம்முடைய பூமியோ கிட்டத்தட்ட புழுதிகள் மற்றும் நைட்ரஜன் நிறைந்து   , ஆக்ஸிஜன் குறைந்து காணப்படுவதால்,  பூமி இன்னும் சிலஆண்டுகளில் மனிதர்கள் வாழ லாயக்கற்றதாகிவிடும் என்பதையும் பிராண்ட் மூலம் அறியும் கூப்பர் ,  வேறுவழியின்றி இன்டர்ஸ்டல்லர் எனும் காலபயணத்தை செய்ய ஒப்புக் கொள்கிறான்  . இதை தனது பத்துவயது மகளிடம் தெரிவிக்க முயற்சிசெய்து தோல்வியுற்று, அவளைவிட்டு பிரிந்து விண்வெளிக்குச் செல்கிறான் . அவனுடன் ,பிராண்ட் – டின் மகள் பிராண்ட் (ஹீரோயின் பெயரும் பிராண்ட்தான்)  மற்றும் இன்னும் இருவிண்வெளிவீரர்கள் மற்றும் TARS  எனப்படும் ஆட்டோமேடிக் ரோபோவுடன் இரண்டு வருடம் பயணித்து சனிகிரகத்தை அடைகிறான் . கருந்துளைகளின் வழி பயணத்தைத் தொடர்ந்து ஒருபுதிய சூரியகுடும்பத்தை அடைகிறார்கள் . பிராண்ட் தெரிவித்த இரண்டுப்ளான்களில் முதல்ப்ளானான ஸ்பேஸ்ஸ்டேசன் ஒன்றையும் கூடவே கொண்டு செல்லும் கூப்பர் , விண்வெளியின் ஓரிடத்தில் அதை நிறுத்திவிட்டு பிராண்ட் மற்றும் மற்றொரு விண்வெளிவீரருடன் ஒரு கிரகத்திற்கு செல்கிறான் . அந்தகிரகம் முழுதும் நீரால்இருக்க, அங்கு ஒருவர் இறந்துவிட உடனே திரும்பி ஸ்பேஸ்ஸ்டேசனுக்குத் திரும்புகிறார்கள் . அங்குவரும் பிராண்டும் கூப்பரும் அப்போதுதான் உணருகிறார்கள் . அதாவது அவர்கள் சென்றுதிரும்பியது ஒருநாளிற்குள் நடந்ததுதான் எனினும், ஈர்ப்புவிசையின் (GRAVITY APPARENT TO TIME) காரணாமாக , 23 வருடங்கள் பூமியில் கடந்துவிட்டது என்பதை அறிகிறார்கள் . மேன் எனும் ஆய்வாளர் சென்றகிரகத்திற்கு சென்று அவரை சந்திக்கிறார்கள் . அங்கு மனிதர்கள் வாழமுடியும் என மேன் சொல்ல ,அதைநம்பி கூப்பர் அவனுடன் செல்கிறார் .   அங்கு மேன் கூப்பரை கொல்லமுயற்சிக்கிறான் . காரணம் , அந்த கிரகத்திலும் மனிதர்கள் வாழமுடியாது.  சிலகாரணங்களால் மேன் பொய் சொல்லியிருக்கிறான் . இன்னொருபுறம் ,மர்பி பெரியவளாகி விடுகிறாள் . அவளும் விண்வெளிஆராய்ச்சி மற்றும் இயற்பியல்துறையில் இருக்கிறாள் . அவளின் அண்ணன் டாம்  , திருமணம் முடிந்து தந்தையின் விவசாயத்தில் ஈடுபடுகிறான் . பூமியில் புழுதிப்புயல் அதிகரிக்கிறது .புரபோசர் பிராண்ட் , இறக்கும் தருவாயில் மர்பியிடம் ஒரு உண்மையைக் கூறுகிறார் . அதாவது இன்டர்ஸ்டெல்லர் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் மர்பியின் தந்தை கூப்பர் மீண்டும் பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லாதது என்றும் தான் கண்டுபிடித்ததாக கூறிய அனைத்து டெபினிசன்களும் இன்னும் முழுமையடையவில்லை என்றும் , அதனால் எந்தபயனும் இல்லை என்றும் கூறிவிட்டு இறக்கிறார் . இதன்பின் இவ்வுலகம் என்ன ஆனது  ‘? பூமிக்கு கூப்பர் திரும்பினாரா ? விண்வெளியில் இருக்கும் ஹீரோயின் என்ன ஆனாள் ? என பலகுழப்பங்களுக்கு கடைசி 15 நிமிடத்தில் அட்டகாசமானதொரு கிளைமேக்ஸ் வைத்து நோலன் அதிசயிக்கவைத்துள்ளார் .

முதலில் இப்படத்தின் திரைக்கதை எழுதியதில் பெரும்பங்கு வகித்த ஜொனதனுக்கே பெரும் கிரெடிட் கொடுக்கவேண்டும் . கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் பயின்ற கிறிஸ்டோபர் நோலனுக்கு , இயற்பயில் பட்டம் பெற்ற நோலன் பக்கபலமாய் இருந்து ஒரு அட்டகாசமான திரைக்கதையை எழுத உதவியுள்ளார் என்றே கூறவேண்டும் . நோலனின் படங்கள் அப்படி இப்படி என்று கிளைமேக்ஸ் வரை மெல்ல நகர்ந்து கடைசியில் கிடைக்கும் கிளைமேக்ஸ் அதிர்ச்சிகள் இப்படத்தில் எக்கச்சக்கம் எனலாம் . எனக்கு , இன்செப்ஷனைக் காட்டிலும் இத்திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது .
 
நோலன் தன் அபிமான திரைப்படமான குப்ரிக்கின் 2001 A SPACE ODYSSEY –க்கு இணையான ஒரு படத்தை படைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாய் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாய்த் தானிருக்கும் . அத்திரைப்படம் டெக்னிக்கலாய் பல சாதனைகளை செய்திருந்தாலும் , இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாய் அதன் உச்சத்திற்கு சரிசமமாய் நிற்கிறது எனலாம் . வெறும் விஷூவல் மற்றும் சுமாரான திரைக்கதையால் கொண்டாடப்பட்ட GRAVITY ,  CLOSE ENCOUNTERS OF THE THIRD KIND ஆகிய படங்களை ஓரங்கட்டிவிடக்கூடிய அளவிற்கு, திரைக்கதை மாயாஜாலம் செய்துள்ளார் . வழக்கத்தைக்காட்டிலும் முதல் இரண்டுமணிநேரம் கொஞ்சம்  மெல்லநகர்வது போல தோன்றினாலும் கிளைமேக்ஸ் , படத்தை இன்னும் மூன்றுமுறை பார்க்கத்தூண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .படம் 2 மணிநேரம்  45  நிமிடம் என்பது தியேட்டரைவிட்டு வெளியேவந்து வாட்சைபார்க்கும் போதுதான் தெரிந்தது . பெரும்பாலும் சிஜியை விரும்பாத நோலன் , அந்த BLACKHOLE வழி பயணிக்கும் காட்சியை அமைத்திருக்கும் விதம் அடடா போட வைத்திருந்தது . அதேபோல் ஐன்ஸ்டைன் தியரியை ஐந்துவருடம் படித்தாலும் புரியாதவர்களுக்கு ,வெறும் ஐந்தே நொடிகளுல் , குழந்தைக்குக் கூட புரியும் வண்ணம் சொல்லியிருப்பதும் அருமை . இன்னும் ஈர்ப்புவிசை , காலம் , பைனரிகோடு என எக்கச்சக்க விஷயங்கள் வைத்து இருக்கிறார் . நோலனிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்று எள்ளாடல் செய்தவர்களை,  வாயடைக்கச்செய்யும்வண்ணம் படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளார் .


முதல் கிரகத்திற்கு சென்று பின் ஸ்பேஸ்ஸ்டேசன் திரும்பியதும் , 23 வருடங்கள் கடந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதும் , தன் மகனுக்கு இன்னொரு மகன் இருப்பதை வீடியோமெசேஜில் பார்த்து கண்கலங்குவதுமென கூப்பராக நடித்த மேத்யூ நடிப்பில் கலக்கி இருக்கிறார் .   ஆள் ஒருசாயலில் பார்க்க நம்ம கிறிஸ்டின்பேல் போலவே இருக்கிறார் . அன்னா ஹேத்வே ஹீரோயினாகவும் தன்அழகானநடிப்பில் பார்ப்பவர்களை சுண்டிஇழுக்கிறார் . என்னங்க நோலன் ,அந்த பொண்ணு எப்பேர்பட்ட பிகரு , அதுக்குப்போய் ஹேர்கட் பண்ணிவிட்டு நடிக்கவச்சிருக்கிங்க . தி  டார்க் நைட் ரைசஸ்- சில் நான் அதிகமாய் சைட்அடித்த ஹீரோயின் . புரொபசர் பிராண்ட் ஆகவும் ,ஹீரோயினின் தந்தையாகவும் மைக்கேல் கெய்ன் . நோலனின் ஆஸ்தான நடிகர் இவர் என்று தாராளமாக சொல்லளாம் . மர்பி , டாம் என எல்லோரும் மனதில் நிற்கிறார்கள் .HANS ZIMMER –ன் இசை , பலஇடங்களில் மனதோடு இசைந்தும் சிலஇடங்களில் டெம்போ ஏற்றுவதாகவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது .

மொத்ததில் ,நோலன் ரசிகர்கள் மட்டுமின்றி, சயின்ஸ்பிக்சன் ரசிகர்கள் , குடும்பக் கதையை ரசிப்பவர்கள் மற்றும் சாதாரணரசிகர்கள் என அனைவருக்கும் புரியும் வண்ணம்,  தன் மாயாஜால திரைக்கதை மற்றும் அழகியவிஷூவல்களுடன் கூடிய சிறந்த திரைப்படமாக நோலன் உருவாக்கியிருக்கிறார் .



பணிபுரிந்தவர்கள்




Directed by Christopher Nolan.Screenplay, Jonathan Nolan, Christopher Nolan. Camera (Fotokem color and prints, partial widescreen, 35mm/70mm Imax), Hoyte Van Hoytema; editor, Lee Smith; music Hans Zimmer; production designer, Nathan Crowley; supervising art director, Dean Wolcott; art directors, Joshua Lusby, Eric David Sundahl; set decorator, Gary Fettis; set designers, Noelle King, Sally Thornton, Andrew Birdzell, Mark Hitchler, Martha Johnston, Paul Sonski, Robert Woodruff; costume designer, Mary Zophres; sound (Datasat/Dolby Digital), Mark Weingarten; sound designer/supervising sound editor, Richard King; re-recording mixers, Gary A. Rizzo, Gregg Landaker; visual effects supervisor, Paul Franklin; visual effects producer, Kevin Elam; visual effects, Double Negative, New Deal Studios; special effects supervisor, Scott Fisher; stunt coordinator, George Cottle; assistant director, Nilo Otero; casting, John Papsidera.



நடிகர்கள்

Matthew McConaughey, Anne Hathaway, Jessica Chastain, Ellen Burstyn, John Lithgow, Michael Caine, Casey Affleck, Wes Bentley, Bill Irwin, Mackenzie Foy, Topher Grace, David Gyasi, TimotheeChalamet, David Oyelowo, William Devane, Matt Damon.


தயாரிப்பு

A Paramount (in North America)/Warner Bros. (international) release and presentation in association with Legendary Pictures of a Syncopy/Lynda Obst Prods.production. Produced by Emma Thomas, Christopher Nolan, Obst. Executive producers, Jordan Goldberg, Jake Myers, Kip Thorne, Thomas Tull.

Comments

  1. Hi,

    "அருகே WORMHOLE என்றும் BLACKHOLE என்றும் அறியப்படும் கருந்துளைகள் "...
    இரண்டும் வேறு வேறு. அவர்கள் பயணிப்பது "வார்ம் ஹோல்" எனப்படும் (புழுவின் துளை?). BLACKHOLE அல்லது கருந்துளையின் கிட்டேயே நெருங்க முடியாது. அனைத்தையும் உள்ளே இழுத்துவிடும். ஒளி கூட தப்பிக்க முடியாது. "Event Horizon"என்பது தான் எல்லை.

    மேலும், அவர்கள் சனி கிரகத்தின் அருகே உள்ள WORMHOLE வழியாக் வேறு ஒரு " Galaxy"க்கு செல்கிறார்கள். அங்கு தான் BLACKHOLE உள்ளது. அதை சுற்றி வரும் ஒரு கோள் (Edmaund) மனிதன் வாழ உகந்தது. Dr. பிராண்ட் இறங்குவது அங்கே தான். கதை நாயகன் கூப்பர் கடைசியில் செல்வதும் அங்கு தான்.

    Balck Hole, SEvent Horizon, Gravitational Singlularity, Tessarac, Gravity as a communication tool, 5th Dimensional beings (Future Humans) , Warped Space Time, General Relativity etc are all part of "Theoratical Physics/Quantum Mechanics" in which lot od research still going on. The movie is still a "Fiction"only and Theroarical Physicist, Dr Kip Stephen Thorne helped in this movie with various "science facts".

    Regards,
    Sankara Narayanan T

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !

      இந்த தியரிகளை பற்றிய முழுமையான விவரங்களும் நான் சரிவரபடிக்கவில்லை . திரைப்படத்தை ஒரு சுமாரன தியேட்டரில் பார்த்ததால் எக்கச்சக்க சந்தேகங்கள் இருக்கின்றன. அதைப்பற்றிய முழுமையான விஷயங்களும் தெரிந்துகொண்டு பின்னர் இத்திரைப்படத்தை பற்றிய விவரமான என் பதிவினை பதிவிடுகிறேன் . மேலும் தங்களின் விளக்கங்கள் எளிமையானதாகவும் புரிகின்ற வடிவிலும் இருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது .

      Delete
  2. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !!

      Delete
  3. அசத்தலான பதிவு ...
    தொடருங்கள் ...
    தளம் கண்டதில் மகிழ்வு...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா !!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை