PK – சினிமா விமர்சனம்



‘3 இடியட்ஸ்’ கூட்டணி ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு திரைப்படம் . படத்தின் கரு என்னவென்றால் ‘மனிதம்’  . மனிதம் தான் முதலில் , மனிதத்துள் தான் மதம் இருக்கிறது என்பதை அழகாய் , அதேநேரம் நெற்றிப்பொட்டில் அடித்திருப்பது போன்றதொரு திரைப்படம் .



வேற்றுகிரகவாசி அமீர்கான் . பூமிக்கு வந்து ரிமோட்டை திருட்டுக்கொடுக்கிறார் . ரிமோட் இல்லாமல் அவரால் திரும்ப தாய்க்கிரகம் செல்லமுடியாது . பூமியில் மனிதர்கள் பேசும் பாஷை அவருக்குப்புரியவில்லை .ஆனாலும் மனிதர்களின் உடை, நடை , செயல் ஆகியவற்றை ஓரளவு அறிந்துகொள்கிறார் . ஒருகட்டத்தில் சஞ்சய்தத்தை சந்திக்கிறார் . அமீர்கானுக்கு ‘டேட்டா ட்ரான்ஸ்வர்’ செய்யும் சக்தி உள்ளது . அவரால் , மற்றவர்களிடமிருக்கும் செய்திகளை , அவர்களின் கையைத்தொட்டே அறிந்துகொள்ளமுடியும் . ஒரு முறை ஒரு விபச்சாரியிடமிருந்து , அவளின் கையைத்தொட்டு , அவளின் பாஷையை ட்ரான்ஸ்பர் செய்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் . தன்னுடைய ரிமோட் தொலைந்துபோனதைப்பற்றி சஞ்சய் தத்திடம் தெரிவிக்க , அவரோ அதுமாதிரியான காஸ்ட்லியான பொருட்கள் எல்லாம் டெல்லியில் தான் திருடர்கள் விற்பார்கள் என சொல்லி , அமீரை டெல்லி அனுப்பிவைக்கிறார் . அங்கு சென்றதும் சில சம்பவங்களால், கடவுள் என்பவரால் தன்னுடைய ரிமோட் கிடைக்கும் என்பதை நம்புகிறார் . அதற்காக அனைத்துக்கடவுள்களையும் வெறித்தனமாய் வேண்டுகிறார் . ஆனால் கிடைக்கவில்லை . அப்படியொரு சூழலில்தான் அனுஷ்கா சர்மாவை சந்திக்கிறார் . டி.வி ரிப்போர்ட்டரான அனுஷ்கா , அமீரிடம் இருக்கும் ஒருவித துடுக்குத்தனமான செய்கைகள்மீதும் , அவரின் கருத்துகளின் மீதும் ஆர்வமாகி அவரைப்பற்றி அறிந்துகொள்ள முயற்சிக்கிறார் . ஒரு கட்டத்தில் தான் யாரென்ற உண்மையை அமீர் உடைக்கிறார் . அதன்பின் அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து போலி மதகுருமார்களையும் , நம்முடைய மதம்சார்ந்த ஒடுக்கப்படவேண்டிய மூடநம்பிக்கைகளையும் அறவழியில் எதிர்க்கிறார் . அதேநேரம் அனுஷ்கா சர்மா மீது காதல் வர , அவளோ ஏற்கனவே ஒருவனைக்காதலித்து , பிரிந்துவிட்டாள் என்பதை அமீர்கான் அறிகிறார் . இன்னொருபுறம் ஒரு  சாமியார் (அவரிடம்தான் அமீரின் ரிமோட் இருக்கும் .) அமீரை ஒரு போட்டிக்கு இழுக்க , அதேநேரம் அமீர்கான் முன்னிலையிலே ரயில்வெடிவிபத்தில் சஞ்சய் தத் இறக்க , அதன்பின் அமீர்கான் என்ன ஆனார் ? காதல் என்ன ஆனது ? போன்றவற்றை தியேட்டரில் சென்று களித்து மகிழுங்கள் .



படத்தின் பெரும்தூண் வசனம் . ஒவ்வொன்றும் செம ஷார்ப் . வசனம் வரும் டைமிங்கும் அற்புதம் . ஹீரோயின் இன்ட்ரோ காட்சியிலேயே வசனத்தின் மூலம் இப்படம் எதைச்சொல்ல வருகிறது என்பதனைக்கணித்துவிடலாம் . அதற்கடுத்து இசை . அழகாய் , அதேநேரம் ரசிக்கும்படியான பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை . மூன்றாவது ஒளிப்பதிவு . சரி , இந்த டைரக்டர் , அமீர்கான் பத்தி எதுவும் எழுதமாட்டியா ? னு பொங்காதிங்க . அவங்களப்பத்தியெல்லாம் 3 இடியட்ஸ்லயே எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சி . மேலும் இவர்களைப்பற்றி சொன்னால் , அந்த காட்சி இப்படி , அப்படினு முழு படத்தையும் எழுதிவிடுவேன் .


இந்த அனுஷ்கா சர்மா எதுக்காக குட்டைப்பாவாடை போட்டுக்கிட்டு இன்ட்ரோ சீனுக்கு வந்தாங்கனு தெரியல . என் பக்கத்துல இருக்க பெருசு ஒன்னு , அனுஷ்கா சைக்கள் ஓட்டுற சீனுக்கு , கீழ இருந்து குனிஞ்சி பாக்குது . அப்புறம் எங்கிட்ட ‘தம்பி ! உனக்கு எதாச்சும் தெரியுதா ?’-னு வேற கேட்டாப்ல ! அந்த நேரத்துல அனுஷ்கா டைமிங்கா ஒரு வசனம் பேசிச்சு !  அத படத்தப்பார்த்து  தெரிஞ்சிக்கிங்க ! (இதேபோல் ஒரு பெருசு கிக் என்ற இந்திபடத்திற்கு வந்து ,கொஞ்சம் கிளாமரான ஒரு பாடலைப்பார்த்துவிட்டு ‘பரவால்ல தம்பி ! இவளோட குத்துக்குனே 50 ரூபா கொடுக்கலாம்’னு சொன்னுச்சு !)


எனக்குப்படத்திலேயே மிகமிகச்சிறப்பாகத்தோன்றிய ஒரு விஷயம் அந்த கடவுள் எங்கே பாடலும் அதைப்படமாக்கிய விதமும் . அந்தப்பாடலைப்பார்க்கும் போது மதத்தின்பெயரால் , மனிதன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை உருக்கத்துடன் காட்டியிருப்பார்கள் . இன்னொரு காட்சி , சஞ்சய்  தத் ரயிலைவிட்டு இறங்கியதும் ‘ஹரே பாய்’ என்ற அழைப்பதும் தொடர்ந்து குண்டுவெடிப்பதும் , அப்போது தவறுதலாக அமீர்கானின் ரேடியோ ஆன் ஆகி , அதில் ஓடும் பாடலின் வரிகளுமென புதுவிதமான அனுபவத்தினைக்கொடுத்திருக்கிறார்கள் .



படத்தின் 70 சதவீதம் காமெடிதான் . மிச்சம் இருக்கும் 20 சதவீதம் பாடல்கள். மீதமுள்ள 10 சதவீதம் சென்டிமென்ட் .மொத்தத்தில் மனிதர்கள் அனைவரும் தவறாமல் ஒருமுறையாவது பார்த்து ரசிக்கவேண்டும் . இந்தி தெரியாதவராய் இருந்தால் சப்டைட்டில் போடும் தியேட்டருக்குச்சென்று பார்க்கவும் . சேலத்தில் சங்கீத் தியேட்டரில் சப்டைட்டில் போடுகிறார்கள் . மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை . படத்தின் முடிவில் கூறும் அந்த 4 கருத்துகளை மறந்துவிடாதீர்கள் .


Comments

  1. என்னா படம் ... வாவ்..
    கலகிட்டான் தல ...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா நல்லதொரு முயற்சிங்ணா இந்தபடம் !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை