ஒரு SOFTWARE , ஒரு PLAYER , ஒரு TRICK


1.   KM PLAYER –ம் சில OPTION களும் .


பொதுவாக கணினியில் நாம் திரைப்படங்களை பார்ப்பதற்கு VLC MEDIA PLAYER தான் நம் மக்கள் உபயோகிக்கிறார்கள் . சிலர் KM PLAYER உபயோகித்தாலும் அதில் இருக்கும் எனக்குத்தெரிந்த சில OPTIONகளைப்பற்றி இங்கே பதிவிடுகிறேன் . பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருந்தாலும் , தெரியாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் .KM PLAYER டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள் .


KM PLAYER- ல் RIGHT CLICK செய்தால் MENU BAR ஒன்று தோன்றும் . அதில் AUDIO எனும் ஆப்சனை கிளிக்குங்கள் . அதில் இருக்கும் EQUALISER என்பதனை ஓகே செய்துவிட்டு அதன் கீழ் இருக்கும் PRESETS என்பதில் உங்கள் SOUND SYSTEM –க்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள் . என்னுடைய கணினியில் ஹெட்போன் அதிகமாக பயன்படுத்துவதால் FULL BASS & TREPLE என்பதை தேர்வு செய்திருப்பேன் . ஒருவேளை இதில் வரும் BANDWIDTH பிடிக்கவில்லையெனில் MANUAL ஆக ஈகுவலைசர்  நாமே செட் செய்ய MAIN MENUவில் இருக்கும் CONTROL BOX –னுள் நுழையுங்கள் .


மேலே கூறிய விஷயங்களை முடித்துவிட்டு MENU வில் இருக்கும் AUDIO வை மீண்டும் கிளிக்கி , கடைசியில் இருக்கும் RARE FILTER எனும் ஆப்சனை கிளிக்குங்கள் . அதில் கடைசியாய் இருக்கும் 3D EFFECT-ஐ ஆன் செய்துவிட்டு , அதன் கீழே இருக்கும் 3D INCREASE என்பதனை 8000 அளவிற்கு வரும் வரை மீண்டும் மீண்டும் கிளிக்குங்கள் . இப்போது உங்களுக்கு ஒரு அட்டகாசமான SOUN EFFECT-யை கொடுக்கும் PLAYER ரெடி .




சிலருக்கு KM PLAYER – ல் ASPECT RATIO மாற்றுவது சிரமமாக இருக்கும் . அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு ,
KM PLAYER –ல் RIGHT CLICK கொடுத்து SCREEN CONTROLS எனும் ஆப்சனிற்கு சென்று உங்கள் மவுசை வையுங்கள் . அதிலிருந்து கீழே படத்திலுள்ளவாரு ஒரு SUB MENU உருவாகும் . அதில் KEEP 1.78:1 (16 : 9 HDTV) எனும் ஆப்சனை கிளிக்கினால் , முழுத்திரைக்கும் திரைப்படம் தெரியும் . அது ஒருவேளை சரியாக இல்லையெனில் அதன் கீழே இருக்கும் ஆப்சனை கிளிக்கலாம் .



பிறமொழிப்படங்களை சப்டைட்டிலுடன் பார்க்கும்போது , ஒரு சில படங்களின் சப்டைட்டில் லேட்டாகவோ , அல்லது வேகமாகவோ வரும் . VLC யில் சப்டைட்டில் டிளே ஆப்சன் இருந்தாலும் அதற்காக அவ்வபோது MANUAL ஆக கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் . ஆனால் KM ல் , நமக்குத்தேவையான இடத்தில் எந்த வசனம் ஓடவேண்டும் என்பதனை SUBTITLE EXPLORER உதவியுடன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் .




KM PLAYER ல் RIGHT CLICK அழுத்தி MENU BAR – ஐ திறங்கள் . அதில் SUBTITLE EXPLORER எனும் ஆப்சனை தேர்ந்தெடுத்தால் பின்வருவன போன்ற ஒரு பாக்ஸ் வரும் அதில் இருந்து நமக்குத்தேவையான இடத்திற்கு ஏற்ற வசனங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் .




பின்குறிப்பு   : நான் குறிப்பிட்டது VERSION 3.2.0.19 . மற்ற VERSION களில் சில மாற்றங்கள் இருக்கலாம் .



2.   C CLEANER

நமது கணினியில் தற்காலிக கோப்புகள் (TEMPERORY FILES ) மற்றும் COOKIES , CACHE எனப்படும் தற்காலிக இணையகோப்புகள் அதிகரித்தால்  நமது கணினியின் செயல்பாடு குறையும் . இதுபோன்ற பதிவுகளை ஒவ்வொருமுறையும் RUN – ல் சென்று அழிக்கவேண்டாம் . அதற்குபதில் இந்த C CLEANER – ஐ உபயோகித்தால் இன்னும் உபயோகமாய் இருக்கும் . C CLEANER-ஐ டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள் .



மேலும் இதில்  கணினியின் தற்காலிகமாக ஏற்படும் REGISTRY பிரச்சனைகளையும் சரிசெய்யலாம் . C CLEANER – ன் LEFT SIGHT – ல் இருக்கு REGISTRY என்பதனை தேர்வு செய்து கீழே இருக்கும்  SCAN FOR ISSUES என்பதனை அழுத்தி , உங்கள் கணினியில் இருக்கும் REGISTRY சம்பந்தமான பிரச்சனைகளை கண்டறியலாம் . பின் FIX SELECTED ISSUES எனும் OPTION மூலம் அப்பிரச்சனைகளை சரிசெய்யலாம் .



மேலும் C CLEANER ல் உள்ள DRIVE WIPER எனும் OPTION மூலம் , உங்கள் கணினியின் பார்ட்டீஷியன்களில் இருக்கும் வெற்றிடங்களில் தேங்கியிருக்கும் மறைமுக பைல்களை WIPE செய்யலாம் .இதற்கு TOOLS என்பதை SELECT செய்து DRIVE WIPER என்பதை கிளிக்குங்கள் . அதன்பின் எந்த பார்ட்டீஷயன் என்பதை கிளிக் செய்து WIPE என்பதைக்கொடுங்கள் .



பின்குறிப்பு  : CCLEANER VERSION  4.14.4797


3.   AIRCEL 3G இலவசமாக பெற

ஏர்செல் நிறுவனம் , வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது சில திட்டங்களை ஒருசிலருக்கு மட்டும் அறிமுகப்படுத்தும் . அப்படி ஒரு திட்டம் தான் 1GB இலவச 3G . NOKIA என டைப் செய்து 121 க்கு அனுப்பினால் 3 நாளைக்குள் 1 GB இலவச டேட்டா கிடைக்கும் . ஆனால் இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை . ஆனாலும் பெரும்பாலான சிம்களுக்கு கிடைக்கிறது . முயற்சியுங்கள் , கிடைத்தால் சந்தோஷமே ! மெசேஜிற்கு கட்டணம் எதுவும் இல்லை .



இந்த தகவல்கள் புரியவில்லையெனில் கீழே கமெண்ட் மூலம் தெரிவியுங்கள் . என்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன் .

அப்பாடா ! எப்படியோ அடிச்சு பிடிச்சு ஒரு தொழில்நுட்பம் சார்ந்த பதிவினையும் எழுதியாச்சு . அடுத்தது சமையல் குறிப்பும்  , அழகு குறிப்பும் தான் பாக்கி .






Comments

  1. நல்லா வந்திருக்கு மெக்..
    வாழ்த்துக்கள்
    ஒரு மென்பொருளையே இன்னும் ஆழமாக அறிமுகம் செய்தால் போதும் ..

    ReplyDelete
    Replies
    1. இல்லைங்ணா ! தொழில்நுட்பம் சார்ந்த பதிவெல்லாம் எனக்கு புதுசு ! ஒரே ஒரு பதிவு மாத்திரம் எழுதலாம்னு இதை ட்ரை பண்ணேன் ! அடுத்த முறை , டீடெய்லா ஒரு பதிவு எழுதிடறேன்ணா

      Delete
  2. I am grateful to you as you shared this. I am these days developing an app sharelink.asus for pc that's you might be fascinated to look at it.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்