Mr.PEABODY & SHERMAN – சினிமா விமர்சனம்

டைம் ட்ராவல் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ? நாமும் 17-ஆம் நூற்றாண்டிலிருந்து மண்டையைக்குடைந்து கொண்டேதானிருக்கிறோம் . இன்னும் காலப்பயணம் என்பது கனவுப்பயணமாகவே இருக்கிறது . (17-ஆம் நூற்றாண்டு என்பது மேலைநாட்டினவர்க்கு . நமக்கெல்லாம் மஹாபாரதத்திலேயே ஒரு இன்டர்ஸ்டெல்லர் கிளைக்கதை இருக்கிறது .) சரி , அம்மாதிரியான விஷயங்களைத்திரைப்படத்தில் பார்த்து சிலாகிப்பது தான் நம்விதி என்றால் யாரால் மாற்றமுடியும் . இந்த படம் டைம்ட்ராவலை அடிப்படையாகக்கொண்ட ஒரு அனிமேஷன் , அட்வெஞ்சர் , பேமிலி ட்ராமா . இது நான் எழுதும் இரண்டாவது அனிமேஷன் திரைப்படம் என தினைக்கிறேன் . ஏற்கனவே டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு THE TIME TRAVELER’S WIFE , INTERSTELLAR ஆகிய திரைப்படங்களைப்பார்த்துள்ளோம் . இந்த படத்தில் நம்மை அசத்தும் விஷயம் என்னவென்றால் , படத்தில் காலப்பயணம் செய்யும் இடங்களும் சந்திக்கும் மனிதர்களும்தான் . அப்படி யார் யாரை சந்திக்கிறார்கள் என்கிறீர்களா ? எகிப்திய பாரோ டட்டான்க் ஆமன் , மோனலிசா புகழ் ஓவியர் லியானர்டோ டாவின்ஸி , பிரஞ்சுப்புரட்சியின்போது பிரான்ஸ் அரசியான மேரி அன்டோனன்ட...