Wednesday, 18 March 2015

21 JUMP STREET – சினிமா விமர்சனம்சென்ற பதிவான HORRIBLE BOSSES  திரைப்படத்தைத்தொடர்ந்து அடுத்தும் ஒரு காமெடித்திரைப்படத்தையே பார்க்கப்போகின்றோம் . இதிலும் ஆங்கிலத்திரைப்படங்கள் என்றாலே வரும் சிற்சில கெட்டவார்த்தைகள் இடம்பெறும் . அதிலும் நமது ICE CUBE இருப்பதால் மனிதர் வரும் காட்சியெலெல்லாம் தாருமாறான புதுப்புது வார்த்தைகளாக பேசியிருப்பார் . மற்றபடி ஒரு பார்ட்டி காட்சியில் ஒரே செகன்ட் மட்டும் சில பிட்டுகள் வரும் . பரவாயில்லை  என்றால் , பெரிய உறுத்தலாக இல்லாமல் காமெடியாகவே இருக்கும் .

படத்தின் கதை என்று சொன்னால் பள்ளிகளில் நடக்கும் போதைப்பொருள் விற்பனையைக்கண்டுபிடிக்க , பள்ளிமாணவர்களாகச்செல்லும் இரு போலிஸ்காரர்களின் சாகசம் என்று சிம்பிளாக சொல்லிவிடலாம் . என்னது ? இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா ? அது நம்ம தல நடித்த ஏகன் படத்தைப்போத்தான் இருக்கும் . ஆனால் ஏகன் படமல்ல  . இப்படம்  1987 – ல் 21 JUMP STREET எனும் பெயரிலேயே வெளிவந்த ஒரு சீரியலின் தழுவல் . இதேபோல் நம் தளத்தில் ஏற்கனவே THE FUGITIVE திரைப்படத்தையும் பார்த்திருக்கிறோம் . சரி , விரிவான கதையை நோக்கிப்பயணிப்போம் .ஷிமித் , ஜெங்கோ இருவரும் தங்களின் பள்ளிநாட்களிலேயே எதையோ இழந்தவர்கள் போலிருப்பவர்கள் . இருவரும் 7 ஆண்டுகளுக்குப்பின் போலிஸில் சேர்கிறார்கள் . பயிற்சியின்போது படிப்பில் கில்லாடியான ஷிமித் ஜெங்கோவுக்கு உதவ , பிஸிக்கலில் ஜெங்கோ ஷிமித்திற்கு உதவுகிறார் . இருவரும் போலிஸ் அகாடமியில் வெற்றிபெற்று போலிசானபின் ஒரு கும்பலைக் கைது செய்கிறார்கள் . ஆனால் சில விதிகளின் காரணமாக அந்த கும்பல் வெளிவந்துவிடுகிறது . இவர்களிருவரையும் JUMP STREET எனுமிடத்தில் கேப்டன் டிக்சன் தலைமையில் செயல்படும் அன்டர்கவர் அமைப்பில் அனுப்பிவிடுகிறார்கள். அங்கே இருவருக்கும் ஒரு அசைன்மென்ட் கிடைக்கிறது .   அதாவது ஒரு பள்ளியில் HFS (இதற்கான மீனிங்கை அறிய விக்கிக்குச் செல்லுங்கள் ) எனப்படும் ஒருவிதமான புதிய போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது . அதன்காரணமாக மாணவன் ஒருவன் இறந்துவிட , அந்த போதைப்பொருள் கும்பலைக் களையெடுக்க வேண்டியது தான் இவர்களின் அசைன்மென்ட் . இவர்கள் இருவரும் பள்ளியில் சேர்ந்தபின் தங்களின் ஐடென்டிகளை மாற்றிக்கொள்கிறார்கள் . படிப்பில் கெட்டியான ஷிமித் EXTRA CURRICULAR ACTIVITY – யிலும் , ECA –வில் வல்லவரான ஜெங்கோ படிப்பிலும் என தங்களின் துறைகளைத்தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள் . அதன்பின் பள்ளியில் எப்படி அவர்கள் துப்பறிந்து அந்த போதைக் கும்பலைப் பிடித்தார்கள் என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளவும் .

ஷிமித் ஆக ஜோனா ஹில் . WOLF OF THE WALL STREET படத்தில் இவர் செய்யும் விஷயங்களைப்பார்த்து சிரிக்காமல் இருக்கவே முடியாது .அதேப்போல தான் இப்படத்திலும்  . ஜெங்கோவாக டாட்டும் , THE LEGO MOVIE யில் சூப்பர்மேன் கேரக்டருக்கு குரல் தானம்  செய்தவர் இவர்தான் . GI JOE திரைப்படங்களில் DUKE கேரக்டரில் நடித்திருக்கிறார்  . ஆங்காங்கே சில காட்சிகளில் வந்தாலும் ICE CUBE தனக்கே உரிய இழுத்து இழுத்து திட்டும் முரட்டுத்தனமான புதிதுபுதிதான திட்டல்கள் அட்டகாசம் . இதுபோதாதென்று திடீரென என்ட்ரி கொடுத்து பட்டென செத்துப்போகும் வேடத்தில் ஜானி டெப் .  வால்டர்ஸ் ஆகவும் வில்லனாகவும் வரும் ராப் ரிக்கல்ஸும் தன்னால் முடிந்தவரை சிரிக்கவைத்துள்ளார் . பள்ளி நாடகவிழாவில் இவர் செய்யும் காமெடிகள் அட்டகாசம் . வழக்கமாக ஆங்கில காமெடித்திரைப்படங்களாகட்டும் , அனிமேஷன் திரைப்படங்களாகட்டும் , பார்ப்பதற்கு புஷ்டியாக , ஒருவிதமான பாவமான முகத்தை வைத்திருப்பவர்களைத்தான் குழந்தைத்தனமாக காட்டுவார்கள் . அவரின் கேரக்டர் தான் எதையாவது இழந்தது போல இருக்கும் . இந்த கேரக்டர் தான் கடைசியில் தான் தான் ஹீரோ என்பதுபோல ஏதாவது வித்தியாசமாக சிந்தித்து படத்தின் கிளைமேக்சை முடித்துவைக்கும் .இன்னொரு கேரக்டர் செம ஜாலியாகவே இருக்கும் . அது பாட்டுக்கு பெண்கள் , நட்பு  , விளையாட்டு என்றே மனம்போன போக்கில் திரியும் . ஏதாவதொரு ஆபத்தான கட்டத்தில் பரிதாபத்திற்குரிய கேரக்டர் , இந்த கேரக்டரின் உயிரை வில்லனிடமிருந்து காப்பாற்றி இதனுடைய நட்பைப்பெறும் . நம்ம ஆமைமுயல் கதை போல . எகாவாக சொல்லவேண்டுமெனில் மான்ஸ்டர்ஸ் யுனிவர்சிட்டி போன்ற படங்களைக்குறிப்பிடலாம் . ஆனால் இப்படத்தில் அப்படியே உல்டாவாக்கி இருப்பார்கள் . ஆள் பார்க்க பரிதாபமாக , துளிகூட பிஸிக்கல் பிட்னஸ் இல்லாமல் பேக்கு போல இருக்கும் ஷிமித் தான் அட்டகாசம் செய்வார் . அதனாலேயே இத்திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

மொத்தத்தில் ஒரு ஜாலியான காமெடித்திரைப்படத்தைப் பார்க்கவேண்டுமெனில் இத்திரைப்படத்தைக்காணலாம்.  ஹீரோக்களை வில்லன்கள் துரத்தும் காட்சிகள் , கிளைமேக்ஸில் ஒரிஜினல் வில்லனின் மெயின் பாயிண்டை ஹீரோ சுடுவது , இருவரும் வேறுவழியின்றி HFS –ஐ சாப்பிட்டுவிட்டு செய்யும் விளையாட்டுகள் என ஒவ்வொரு காட்சியிலும்


அடுத்த பதிவு ,வேறென்ன  இதன் இரண்டாம் பாகம் தான்
உங்கள் விருப்பம்

4 comments:

 1. உல்டாவாக மாற்றியது தான் படத்தின் வெற்றியோ...? நல்ல விமர்சனம்...

  ReplyDelete
 2. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 3. விமர்சனம் கலக்குறீங்க.... நண்பரே....
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 4. ரொம்பநாளா டவுன்லோட் பண்ணி பார்காம வச்சு இருந்தன் இனி பாத்திட வேண்டியதுதான்...

  ReplyDelete