HORRIBLE BOSSES – சினிமா விமர்சனம்



எச்சரிக்கை இது அமெரிக்கர்களுக்கே உரிய வகையில் எடுக்கப்பட்ட காம(நெ)டித்திரைப்படம் . எனவே வயதுக்கு வராதவர்கள் , தமிழ்க்கலாசாரங்களில் ஊறித்திளைத்தோர்கள் ரிவர்ஸ் கியர் போட்டுக்கொண்டுச் செல்லாலம் .

மேனேஜர் என்ற பெயரையே டேமேஜர் எனமாற்றும் அளவிற்கு நம்மூரில் மேனேஜர்களின் தொல்லைத்தாங்க முடியாதளவிற்குள்ளது (நல்லவேளை என்னோட மேனேஜர் அப்படியில்லை ). மேனேஜர்களின் டார்ச்சர் குறித்து எண்ணற்ற ட்விட்காமெடிகளை ட்விட்டரில் சாதாரணமாக பார்க்கமுடியும் . ஒரு சில நேரங்களில் அவர்களையெல்லாம் போட்டுத்தள்ளிவிட்டால் என்ன என்று நம்மை நினைக்கச்செய்யும் அளவிற்குக்கூட நம்மைத்தள்ளிவிடுவார்கள் நம் டேமேஜர்கள் . இது நம்மூரில் மட்டுமல்ல , உலகின் அனைத்து இடங்களிலும் இதேநிலைதான் . அமெரிக்காவில் அப்படியொரு மூன்று பேர் தங்களின் பாஸ்களை போட்டுத்தள்ள முயற்சிக்க நினைத்து என்ன ஆனார்கள் என்பதே இப்படத்தின் கதை .

நிக் என்பவன் ஒரு கம்பனியில் வேலைசெய்துகொண்டிருக்கிறான் . தனக்கு வைஸ் பிரசிடன்ட் பதவி தருவதாக கூறும் தன் பாஸ் பேச்சைக்கேட்டு  ஒரு நாளைக்கு 18 மணிநேரம் தாருமாறாக உழைக்கிறான் . காலையில் முதல் ஆளாக ஆபிசில் நுழைபவனும் அவன்தான் . கடைசியில் வெளியேறுபவனும் அவன்தான் . மாடுமாதிரி உழைத்த அவனுக்கு , வைஸ் பதவியைத்தராமல் தானே அப்பதவியையும் எடுத்துக்கொள்கிறார் அவருடைய பாஸ் . நியாயம் கேட்க போனவனை மிரட்டி , வேறு கம்பனிக்குச்சென்றால் அங்கே உன்னைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வேலையை விட்டேத்தூக்க வைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறான் .

டேல் என்பவன் ஒரு பல் மருத்துவரிடம் (பெண்)  கம்பவுன்டராக வேலைசெய்கிறான் . படுபயங்கர செக்ஸ் பிரியையான அந்த டாக்டர் , இவனுடன் செக்ஸ்வைத்துக்கொள்ள முயற்சிக்கிறாள் . இவனோ தன் வருங்கால மனைவிக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்ற ஏகபத்தினிவிரதனாக இருக்க , அவள் தொடர்ந்து வனை டார்ச்சர் செய்கிறாள் . ஒரு கட்டத்தில் இவனுக்கு மயக்கமருந்து கொடுத்து , இவனுடன் உல்லாசத்தில் ( நன்றிதினத்தந்தி ) இருப்பதுபோல் போட்டோக்கள் எடுத்துவிடுகிறாள் . அந்த போட்டோவை அவனிடம் காட்டி , நீ என்னுடன் படுக்கவில்லையெனில் இதையெல்லாம் உன் வருங்கால மனைவியிடம் காட்டி உன் திருமணத்தை நிறுத்திவிடுவேன் என மிரட்டுகிறாள் (அடியாத்தி !!! ).

குர்ட் என்பவன் வேலையையும் தன் வாழ்க்கையும் ஜாலியாக என்ஜாய் செய்துகொண்டிருக்கிறான் . மற்ற இருவரைப்போலில்லாமல் இவனின் பாஸ் , இவனைத்தன் மகன் போல் வைத்திருக்கிறார் . ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் இறந்துவிட , அவரது மகன் பொறுப்பேற்கிறான் . அவரது மகனைப்பற்றிச்சொல்ல வேண்டுமானால் அவனிடம் ல்லாத கெட்டப்பழக்கங்களே இல்லை , அதேநேரம் ஒரு நல்ல பழக்கமும் இல்லை . அவனுக்கு குர்ட்டின் மீது ஏற்படும் காழ்ப்புணர்ச்சியால் அங்கு வேலைசெய்யும் மற்றவர்களிடம் குர்ட்டின் மதிப்பைச்சரிக்கிறான் . மேலும் கோவில் மாதிரி இருந்த நிறுவனத்தை , பார் போல மாற்றிவிடுகிறான் . நாளுக்கு நாள் அவன் அட்டகாசம் அதிகரிக்கிறது .


இப்போது கதை என்னவென்றால் நிக் , டேல் , குர்ட் மூவரும் நண்பர்கள் . அவர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்யலாம் என்று நினைக்கும்போது ஏற்கனவே வேலையை ராஜினாமா செய்துவிட்டு சோற்றுக்கு ______ ஊம்பும்நிலையில் (நிஜமாங்க) இருக்கும் தங்களின் முன்னால் நண்பன் ஒருவனைப்பார்த்துவிட்டு ராஜினாமா முடிவைக் கைவிடுகிறார்கள் . சரி இதற்கு வழி தங்களின் பாஸ்களைக் கொல்வதுதான் என்று முடிவுசெய்து கூலிப்படைத் தேடுகிறார்கள் . அப்போது MOTHERFUCK*R ஜோன்ஸ் என்பவனைச் சந்திக்கிறார்கள் . அவன் பார்ப்பதற்கு கொலையாளிபோல இருக்க , அவனை நம்பி பணத்தைக்கொடுக்கிறார்கள் . ஆனால் அவன் கொலைசெய்பவன் அல்ல என்றும் வெறும் ஐடியா மட்டும்தான் கொடுப்பேன் என்றுசொல்லி ஐடியா போட்டுக்கொடுக்கிறான் . அதன் பின் அவனது ஐடியாவின்பேரில் ஒவ்வொருவரின் முதலாளிகளையும் மற்ற இருவர் கொல்வது என முடிவுசெய்துவிட்டு அவர்களின் முதலாளிகளை FOLLOW செய்கிறார்கள் . அப்போது ஏற்படும் தகிடுதத்தங்களில் நிக்குடைய பாஸ் , குர்ட்டின் பாஸைப்போட்டுத் தள்ளிவிடுகிறான் .  ஆனால் பழி , இம்மூவர் பெயரிலும் விழுகிறது . அவர்கள் மூவரும் சேர்ந்து எப்படி இப்பிரச்சனையிலிருந்தும் அவர்களின் பாஸ்களின் தொல்லையிலிருந்தும் தப்பித்தார்கள் என்பதே மீதிக்கதை .

படத்தின் பெரும்பலம் என்றால் திரைக்கதை தான் . படம் முழுக்க முழுக்க காமெடிதான் . ஆனால் கொஞ்சம் செக்ஸும் ஆங்கிலப்படங்களுக்கே உரிய பலவிதமான கெட்டவார்த்தைகளும் கலந்திருப்பதால் நாம் மட்டும் தனியாகத்தான் பார்த்தாகவேண்டும் . இதன் இரண்டாம் பாகம்கூட தொடர்ந்து வெளிவந்தது . ஆனால் அது ஒன்றும் அவ்வளவாக நன்றாக இல்லை .  இந்தப்படம் அமெரிக்காவைத்தாண்டிய வெளிநாடுகளில் வசூல்செய்ததில் ரஷ்யா தான் முதலிடம் . அப்படியானால் ரஷ்யர்கள் எந்தளவிற்கு தங்களின் பாஸின் மேல் வெறுப்பிலிருப்பார்கள் ? கிட்டத்தட்ட நம் உலகநாயகனின் மகளிர் மட்டும் திரைப்படம் மாதிரியேதான் இத்திரைப்படமும் . ஒருவேளை ஆங்கிலத்தில் இத்திரைப்படம் முதலில் வந்திருந்தால் கமலை வழக்கம்போல காபிப்புயல் என்று கிளம்பியிருப்பார்கள் .



Comments

  1. ஹிஹி...செம என்ஜாய்மண்டான படம்.. நானும் எழுத நினைத்தேன்...

    ReplyDelete
  2. ஆங்கில ' மன்மத லீலை ' போலிருக்கே :)

    ReplyDelete
  3. அசத்தலான விமர்சனம் நண்பா....
    த.ம.2

    ReplyDelete
  4. அடியாத்தி... என்னவொரு வில்லத்தனம்...!

    ReplyDelete
  5. //கிட்டத்தட்ட நம் உலகநாயகனின் மகளிர் மட்டும் திரைப்படம் மாதிரியேதான் இத்திரைப்படமும் . ஒருவேளை ஆங்கிலத்தில் இத்திரைப்படம் முதலில் வந்திருந்தால் கமலை வழக்கம்போல காபிப்புயல் என்று கிளம்பியிருப்பார்கள் .//
    மகளிர் மட்டும் 1980இல் வெளி வந்த Nine To Five படத்தின் காப்பி! ஆகவே, இந்தப் படமும் அதன் காப்பி!

    ReplyDelete
    Replies
    1. சொன்னதற்கு நன்றி தல . நான் அத இன்னும் பாக்கல . பார்த்துடறேன் .

      Delete
  6. அவர்களுக்கே உரியதை உலகமெல்லாம் பரப்புவார்கள் அவரகள்....நண்பரே...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை