AVENGERS 2 – சினிமா விமர்சனம்

AGE OF ULTRON இப்படத்தின் இயக்குநர் ஜோஸ் வேட்டன் மீது சென்ற வாரம் ஒரு புகார் எழுந்தது . அதாவது தலைவர் 2012-ல் எழுதிய CABIN IN THE WOODS எனும் பேய்த்திரைப்படம் , தன்னுடைய கதையைத் திருடித்தான் எழுதப்பட்டது என ஒருவர் வழக்குத்தொடுத்திருந்தார் . என்னடா இது என்று அதிர்ந்து நின்றேன் . பின்ன ! தலைவர் யாரு ? 2012 –ல் உலகையே கலக்கிய அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தை எழுதி, இயக்கிவர் . அப்பேர்பட்டவர்மேல் அபாண்டமாக பழிசுமத்துகிறார்களே என்று பொங்கி எழுந்தேன் . அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்று இன்றுதான் புரிந்துகொண்டேன் . உண்மையாகவே இவர் கதையைத்திருடியிருப்பாரோ என்று சந்தேகப்படுமளவுக்கு என்னை வதக்கியெடுத்து விட்டார் . அதற்குமுன் ஒரு சிறுகுறிப்பு . இது என்னுடைய பார்வையில் எழுதும் பதிவு . இப்பதிவில் வந்து ‘யோவ் ! நீ சீட்டுக்கு அடியில படுத்துகினு படம்பாரு யா . இது ஒரு அற்புதமான காவியம் ’ என்றெல்லாம் கமெண்ட வேண்டாம் . அப்படி கமெண்ட ஆசையிருந்தால் என்னுடைய நம்பருக்கு டிக்கட் சார்ஜ் 70 + பார்க்கிங் டோக்கன் 10 + பெட்ரோல் சார்ஜ் 30 என மொத்தம் 110 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்துவிட்டு , பின் கமெண்டலா...