மாஸ் - சினிமா விமர்சனம்

இது பேய்ப்படம் என்று பலர் கூறியபோது நான் நம்பவில்லை . வெங்கட்பிரபாவது பேய்ப்படங்கள் எடுப்பதாவது . மனிதர் ஜாலியாக படம் எடுத்து பார்க்கவருபவர்களையும் ஜாலியாக இருக்கவைத்து , நிம்மதியாக அனுப்புவதில் வல்லவர் . அவர் போய் பேய்ப்படம் எடுக்கிறாரா ? அப்படியே எடுத்தாலும் கிளையேக்ஸில் பேயும் இல்லை , அது படுத்த பாயும் இல்லை என்பதுபோல் ஒரு ட்விஸ்ட் அடித்து முடித்துவிடுவார் என்று சென்றேன் .ஆனால் அந்நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி உண்மையாகவே பேயை வைத்து படமெடுத்திருக்கிறார் வெங்கட் . அதுவும் ஒரு பேய் , இரண்டு பேயல்ல . படம் முழுதும் பேய்மயமாகவே இருக்கிறது . படத்தில் மனிதர்களைக்காட்டிலும் அதிகமாக திரையில் உலாவுவது பேய்கள் தான் . இது மட்டுமா ? எல்லாரும் அடிக்கடி வெங்கட் பிரபு என்றாலே ஒன்று சொல்லுவார்கள் . ‘கதைனா என்னனே அவருக்கு தெரியாது . அவர் படத்துல பெரிய கதைய கண்டுபிடிச்சா பொற்காசுகள் சன்மானம் ’ என்பதுபோல அடித்து விடும் ஆட்களுக்கு ஆப்படித்துவிட்டார் வெங்கட்பிரபு . முதன்முறையாக ஒரு ஆழமான கதையையும் உள்நுழைத்திருக்கிறார் . இதுமட்டுமா ? தலைவர் கதையினுள் சென்டிமென்ட் காட்சிகளையும் புகுத்தி, தன் ...