ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

ஒரு திரைப்படத்தின் ட்ரைலரைப் பார்த்ததுமே , இந்த படத்துக்கு கண்டிப்பாக போகனும் எனும் எண்ணத்தை சமீபகாலமாக எந்த திரைப்படத்தின் ட்ரைலரும் எனக்குள் ஏற்படுத்தவில்லை . ஆனால் இந்த படத்தின் ட்ரைலர் வந்ததுமே கண்டிப்பாக போயாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை ; ஆனால் பார்க்கவேண்டும் . படத்தின் கதையை , தினத்தந்தி பேப்பர் விளம்பரங்களிலேயே போட்டுவிட்டார்கள் . முதல்பாதி ஹீரோ , ஹீரோயினைத் துரத்துகிறார் ; இரண்டாம் பாதி ஹீரோயின் , ஹீரோவைத் துரத்துகிறார் . இதைவைத்துக்கொண்டு மிக எளிமையாக , போரடிக்காத திரைக்கதையினால் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மணன் . ஹீரோ கார்த்திக் , ஒரு ஜிம் பயிற்சியாளர் . ஜாலியாக , பாஸிட்டிவாக இருப்பவர் . இவர் பணிபுரியும் ஜிம்மின் வாடிக்கையாளர்கள் பெரும்பணக்காரர்கள் என்பதால் இவருடன் அனோன்யம் . ஹீரோயின் சுப்புலட்சுமி , ஒரு அனாதை . சிறுவயதுமுதலே மிடில்கிளாஸ் வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறார் . ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொண்டு தான் நினைத்தபடி வாழவேண்டும் என்பதே அவருடைய ஆசை . அப்போதுதான் பிரபலங்...