சலீம் – சினிமா விமர்சனம்

‘நான்’ என்ற சிறந்த கிரைம்-திரில்லரில் நடித்த விஜய் ஆண்டனியின் இரண்டாம் படம் . படத்தைப்பற்றி பார்க்கும்முன் , நம்மை கொஞ்சம் நோக்குவோம் . நம்மில் எத்தனை பேர் , சிக்னலில் 0 SEC எனக்காட்டி , பச்சை சிக்னல் விழுந்தபின் , நம் வாகனத்தை , சிக்னலில் இருந்து கிளப்பியுள்ளோம் ? ஒன்வே ரோட்டில் , எதிராக ஒருமுறையேனும் பயணிக்காதோர் எத்தனை பேர் உள்ளனர் ? லஞ்சம் பற்றி வாய்கிழிய கூவும் நாம் , நமக்கென்று ஏதேனும் தேவைப்படும்போது , லஞ்சம் கொடுக்காமல் இருந்திருக்கிறோமா ? நாம் சிக்னலை சரியானபடி பின்பற்ற நினைத்தாலும் , பின்னாலிருப்பவன் விடமாட்டான் . ஓயாமல் ஹார்ன் அடித்து , ஏதேனும் வசைபாடி விட்டு , சிக்னல் விழும்முன்னே பறப்பான் . அவனின் ஏச்சுபேச்சுகளுக்கு பயந்தே நம் வாகனத்தை எடுத்துக்கொண்டு , விதிகளையும் மனக்குமுறல்களையும் விழுங்கியபடி செல்வோம் . நாம் எவ்வளவுதான் நல்லவனாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும் , நம்மைச்சுற்றியுள்ள சமூகம் , அப்படி இருக்கவிடாது . அதையும்மீறி இருப்பவனை , ‘வேஸ்ட் , அட்டு , மொக்கை’ என்று பட்டம் சூட்டி மகிழ்வார்கள் . திடிரென ஒருநாள் நமக்கு இச்சமூகத்தின்மீது க...