பயணம் @ டைம்மெஷின் - 11
உயிரும் உணர்வும் முந்தைய பதிவுகள் பயணம் @ டைம்மெஷின் - 1 பயணம் @ டைம்மெஷின் - 2 பயணம் @ டைம்மெஷின் - 3 பயணம் @ டைம்மெஷின் - 4 பயணம் @ டைம்மெஷின் - 5 பயணம் @ டைம்மெஷின் - 6 பயணம் @ டைம்மெஷின் - 7 பயணம் @ டைம்மெஷின் - 8 பயணம் @ டைம்மெஷின் - 9 பயணம் @ டைம்மெஷின் - 10 இருவருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே இருந்தனர் . ‘ம் கிளம்புங்கள் .’ என்ற தலைமைக்காவலனின் குரலுக்கு அடங்கி எழுந்தனர் . தலைமைக்காவலன் முன்னே செல்ல , பின்னாள் சந்துருவும் பாலாவும் வந்தனர் . அவர்கள் இருவரின் கழுத்தையும் பதம் பார்க்கும்வண்ணம் , சுற்றியும் வேல்கள் இருக்க , அந்த வேல்களை உடைய வீரர்கள் அவர்களை பாதுகாத்த வண்ணம் கிளம்பினர் . மண்டபத்தைத்தாண்டி வெளியே வரும் நேரம் ‘ஐயகோ’ என்ற குரலும் அதைத்தொடர்ந்து வாள்களும் வேலும் மோதிக்கொள்ளும் சத்தமும் கேட்டது . இவர்கள் இருவரையும் கைது செய்து கிளப்பிய நேரத்தில் வளவன் துரிதமாக செயல்பட ஆ...