UNBREAKABLE –சினிமா விமர்சனம்

மனோஜ் ஷ்யாமளன் . ஹாலிவுட்டில் பெருமை நாட்டிய இந்தியர் . மலையாளி தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவர் . நோலனைப்போல சிறுவயதிலே சினிமா தான் வேண்டும் என்று அடம்பிடித்து 8 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு படம்பிடித்தவர் . இவரின் படங்களை உற்றுநோக்கினால் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பைத்தான் அதிகமாய் காட்சிப்படுத்தியிருப்பார் . குடும்ப உறவைத்தான் பெரும்பாலும் படம்பிடிப்பார் . முதல் படத்திலேயே அடுத்த ஸ்பில்பெர்க் , ஹாலிவுட்டைக்காக்க பிறந்த ரட்சகன் என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர் . துப்பாக்கி தோளில் சுமந்து வெடிகுண்டை அல்லையில் வைத்துக்கொண்டு திரிந்த ப்ரூஸ் வில்லிசை வைத்து எடுத்த THE SIXTH SENSE படத்தின்மூலம் வில்லிசை வேறொரு லெவலுக்கு அழைத்துச்சென்றவர் . SIXTH SENSE-ன் தாக்கம் எனக்கு எந்தளவிற்கு என்றால் என்னுடைய முதல் குறும்படத்திற்கு அந்த படத்தின் தலைப்பையே வைத்தேன் (நீங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் , இல்லையெனில் என்னுடைய குறும்படமும் நன்றாக வந்து உங்களை படுத்தி எடுத்திருக்கும்). தான் வாழ்ந்த ஊர்களிலேயே தான் ஷூட்டிங்கை நடத்துவார் . இவரின் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் ஒரு ட்விஸ்ட் இருக்கும...