Saturday, 7 March 2015

SUPER HERO – சினிமா விமர்சனம்

பொதுவாக ஹாலிவுட்டில் சுதந்திரம் என்பது எந்த அளவில் என்றால் , அவர்களின் தலைவர்களான ஆபிரஹாம் லிங்கன்  முதல் ஒபாமா வரை சதாம் உசேன் முதல் நெல்சன் மண்டேலா வரை அனைவரையும் பிடித்து எப்படி வேண்டுமானாலும் ஓட்டிக்கொள்ளலாம் . ஆனால் தமிழில் இப்படியொரு சம்பவம் நடந்தால் , இயக்குநரும் தயாரிப்பாளரும் நடுரோட்டில் எரிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை . இவ்வகையில் முயற்சிசெய்த கமல்கூட ஜார்ஜ் புஷ்ஷை , சூதானமாக ஓட்டுவாரே தவிர நமது ஆட்களை பெரும்தியாகிகளாகவே சித்தரித்திருப்பார் . காரணம் ஹாலிவுட்டில் மக்களுக்கு சினிமா என்றால் என்ன ? நிஜ உலகம் என்றால் என்ன என்ற பேதம் தெரியும் . ஆனால் நமக்கு சினிமா மட்டுமே நிஜ உலகமாய்த்தெரியும் . கிட்டத்தட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் , இன்செப்ஷன் படத்தில் வரும் மால் கேரக்டர் போலத்தான் . தமிழில் ஏன் ஸ்புஃப் வகையறாப்படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் ஒன்றே ஒன்று விளங்குகிறது . பெரும்பாலான தமிழ்ப்படங்களில் ஹீரோ என்பவரின் ரசிகராய்த் தவிர்த்துப்பார்த்தால் , முக்கால்வாசி படங்கள் ஸ்பூஃப்பின் உச்சமாகத்தான் இருக்கும் .

இந்நேரம் நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்குத்தானாக புரிந்திருக்கும் . அதேபோல் இன்னொரு வகையறா உள்ளது . இதன் நோக்கமும் முழுக்கமுழுக்க ஓட்டுவதுதான் என்றாலும் இது மனிதர்களை ஓட்டாமல் ஏற்கனவே வந்து உலகம்முழுவதும் மெகாஹிட்டான படங்களை ஓட்டுவது . இம்மாதிரியானவர்களின் சாய்ஸ் பெரும்பாலும் பேய்த்திரைப்படங்கள் மற்றும் திகில்திரைப்படங்கள் . அதற்கடுத்த இடத்தில் இருப்பது சூப்பர்ஹீரோ படங்கள் . ஏற்கனவே MEET THE SPARTANS , SCARY MOVIE போன்ற படங்களையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவ்வகையில் சூப்பர்ஹீரோ படங்களை வைத்து தாருமாறாய் ஓட்டி எடுத்திருக்கும் திரைப்படம் தான் இந்த SUPERHERO . தமிழில் சூப்பர்ஹீரோ படங்கள் அவ்வளவாக இல்லை என்பதால் இம்மாதிரியான படங்கள் வருவதில்லை . தமிழ்ப்படம் எனும் ஒரே ஒரு ஸ்பூஃப் படத்தைத்தவிர . முகமுடி எனும் சூப்பர்ஹீரோவை உருவாக்குவதாய் நினைத்து பேட்மேன் பிகைன்ஸை அமைதியாக ஓட்டிய மிஷ்கின் , அப்படத்தை ஹாலிவுட்டில் டப் செய்திருந்தால் ஓரளவு பணம் பார்த்திருக்க முடியும்  ( யாருயா அது தொரசிங்கத்த விட்டுட்டிங்கனு சொல்றது ?) .

இப்படத்தைப்பார்க்கும்முன் நீங்கள் குறைந்த பட்சம் X-MEN , SPIDERMAN , BATMAN BEGINES போன்ற  திரைப்படங்களைப் பார்த்திருந்தால் நல்லது . மிகமுக்கியமாக SPIDERMAN திரைப்படத்தைப் பார்த்திருக்கவேண்டும் . ஏனென்றால் முழுக்கமுழுக்க அந்த படத்தை எவ்வளவு SPOOF செய்து கலாய்க்கமுடியுமோ , அந்தளவு மரணகலாய் கலாய்த்திருப்பார்கள் .

சரி , படத்தின் கதைக்கு வருவோம் . ஹீரோ வழக்கம்போல தன்னுடைய UNCLE மற்றும் AUNTY-யினால் வளர்க்கப்படுகிறார் . ஒரு மரபியில் லேபிற்கு IV செல்லும்போது ஒரு பூச்சி கடித்துவிடுகிறுது . அதன்பின் ஹீரோவுக்கு சூப்பர்பவர் கிடைக்கிறது . இன்னொருபுறம் ஒரு மரபியில் விஞ்ஞானி , தான் கண்டுபிடித்து மிஷினால் ஒரு சக்தி பெறுகிறான் . சாவும் தருவாயில் இருக்கும் வில்லனுக்கு கிடைக்கும் புதுசக்தி என்னவெனில் , அவன் யாரைத்தொடுகிறானோ அவர்களின் இளமையை இவன் இழுத்துக்கொண்டு வாழமுடியும் . ஆனால் அது ஒருநாள் வரை மட்டுமே வேலிடிட்டி . சரி , என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது கிடைக்கும் ஒரு ஐடியாவை வைத்து , நகரத்தில் இருக்கும் அனைவரின் இளமையையும் ஒரேநேரத்தில் கொள்ளையடிக்கத்திட்டமிடுகிறான் . அதை எப்படி ஹீரோ முறியடித்தார் என்பதே கதை . கதை அச்சுஅசலாக ஸ்பைடர்மேன் முதல்பாகத்தில் வருவது தான் என்றாலும் , இதுதான் ஸ்பூஃப் படமாயிற்றே ! விடுவார்களா ? அத்தனைபேரையும் வறிந்துகட்டி கலாய்த்திருக்கிறார்கள் .


ஹீரோவின்  தாய் – தந்தை இறந்தது எப்படி எனுமிடத்தில் BATMAN BEGINES – ல் ப்ரூஸ் வெய்னின் சிறுவயதில்  நடக்கும் நிகழ்ச்சியை வைத்து மிமிக்ஸ் பண்ணியது  , ஹீரோவுக்கு அடிக்கடி வினோதமாக கேட்கும் வாய்சை X-MEN படத்தின் சேவியர் பாத்திரத்தோடு இணைத்தது என ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்து ஒரு அட்டகாசமான காமெடிப்படத்தைத் தந்திருக்கிறார்கள் . ஆங்காங்கே FANTASTIC FOUR , X-MEN கேரக்டர்களான WOLVARINE போன்றோர்களும் தலாய்லாமா , ஸ்டிபன் ஹாக்கிங்ஸ் போன்றோர்களையும் போகிறப்போக்கில் ஓட்டியுள்ளார்கள் . காமெடிக்குப்பஞ்சம் வைக்காமல் அதேநேரம் தேவையில்லாமல் செக்ஸை இழுத்து காமெடி என்ற பெயரில் XX ஆக்காமல் ஜாலியானதொரு படமாக இருக்கிறது . நேரமிருப்பின் கண்டிப்பாக டவுன்லோடிப்பாருங்கள் .
உங்கள் விருப்பம்

10 comments:

 1. //ஹாலிவுட்டில் மக்களுக்கு சினிமா என்றால் என்ன ? நிஜ உலகம் என்றால் என்ன என்ற பேதம் தெரியும் . ஆனால் நமக்கு சினிமா மட்டுமே நிஜ உலகமாய்த்தெரியும்//
  ஸூப்பர் நெத்தியடி நண்பரே... வழக்கம்போல் அழகாக விமர்சித்து இருக்கிறீர்கள்.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே

   Delete
 2. Replies
  1. ஆமாங்ணே ! சிவாவுதே தான்

   Delete
 3. Replies
  1. டரன்ட்ல தேடிப்பாருங்க தல . கிடைக்கும்

   Delete
 4. சினிமாதான் இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது என்று கூட சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. சரியாச்சொன்னிங்கணா .

   Delete
 5. /ஹாலிவுட்டிலும் வரும் சமூக- வரலாற்று படங்களையும் அறியத்தாருங்கள் நண்பரே...

  ReplyDelete