SUPER HERO – சினிமா விமர்சனம்
பொதுவாக
ஹாலிவுட்டில் சுதந்திரம் என்பது எந்த அளவில் என்றால் , அவர்களின் தலைவர்களான ஆபிரஹாம்
லிங்கன் முதல் ஒபாமா வரை சதாம் உசேன் முதல்
நெல்சன் மண்டேலா வரை அனைவரையும் பிடித்து எப்படி வேண்டுமானாலும் ஓட்டிக்கொள்ளலாம்
. ஆனால் தமிழில் இப்படியொரு சம்பவம் நடந்தால் , இயக்குநரும் தயாரிப்பாளரும் நடுரோட்டில்
எரிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை . இவ்வகையில் முயற்சிசெய்த கமல்கூட ஜார்ஜ் புஷ்ஷை
, சூதானமாக ஓட்டுவாரே தவிர நமது ஆட்களை பெரும்தியாகிகளாகவே சித்தரித்திருப்பார் . காரணம்
ஹாலிவுட்டில் மக்களுக்கு சினிமா என்றால் என்ன ? நிஜ உலகம் என்றால் என்ன என்ற பேதம்
தெரியும் . ஆனால் நமக்கு சினிமா மட்டுமே நிஜ உலகமாய்த்தெரியும் . கிட்டத்தட்ட இந்தியர்களில்
பெரும்பாலானோர் , இன்செப்ஷன் படத்தில் வரும் மால் கேரக்டர் போலத்தான் . தமிழில் ஏன்
ஸ்புஃப் வகையறாப்படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் ஒன்றே ஒன்று விளங்குகிறது . பெரும்பாலான
தமிழ்ப்படங்களில் ஹீரோ என்பவரின் ரசிகராய்த் தவிர்த்துப்பார்த்தால் , முக்கால்வாசி
படங்கள் ஸ்பூஃப்பின் உச்சமாகத்தான் இருக்கும் .
இந்நேரம்
நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உங்களுக்குத்தானாக புரிந்திருக்கும் . அதேபோல் இன்னொரு
வகையறா உள்ளது . இதன் நோக்கமும் முழுக்கமுழுக்க ஓட்டுவதுதான் என்றாலும் இது மனிதர்களை
ஓட்டாமல் ஏற்கனவே வந்து உலகம்முழுவதும் மெகாஹிட்டான படங்களை ஓட்டுவது . இம்மாதிரியானவர்களின்
சாய்ஸ் பெரும்பாலும் பேய்த்திரைப்படங்கள் மற்றும் திகில்திரைப்படங்கள் . அதற்கடுத்த
இடத்தில் இருப்பது சூப்பர்ஹீரோ படங்கள் . ஏற்கனவே MEET THE SPARTANS , SCARY MOVIE
போன்ற படங்களையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவ்வகையில் சூப்பர்ஹீரோ படங்களை
வைத்து தாருமாறாய் ஓட்டி எடுத்திருக்கும் திரைப்படம் தான் இந்த SUPERHERO . தமிழில்
சூப்பர்ஹீரோ படங்கள் அவ்வளவாக இல்லை என்பதால் இம்மாதிரியான படங்கள் வருவதில்லை . தமிழ்ப்படம்
எனும் ஒரே ஒரு ஸ்பூஃப் படத்தைத்தவிர . முகமுடி எனும் சூப்பர்ஹீரோவை உருவாக்குவதாய்
நினைத்து பேட்மேன் பிகைன்ஸை அமைதியாக ஓட்டிய மிஷ்கின் , அப்படத்தை ஹாலிவுட்டில் டப்
செய்திருந்தால் ஓரளவு பணம் பார்த்திருக்க முடியும் ( யாருயா அது தொரசிங்கத்த விட்டுட்டிங்கனு சொல்றது
?) .
இப்படத்தைப்பார்க்கும்முன்
நீங்கள் குறைந்த பட்சம் X-MEN , SPIDERMAN , BATMAN BEGINES போன்ற திரைப்படங்களைப் பார்த்திருந்தால் நல்லது . மிகமுக்கியமாக
SPIDERMAN திரைப்படத்தைப் பார்த்திருக்கவேண்டும் . ஏனென்றால் முழுக்கமுழுக்க அந்த படத்தை
எவ்வளவு SPOOF செய்து கலாய்க்கமுடியுமோ , அந்தளவு மரணகலாய் கலாய்த்திருப்பார்கள் .
சரி
, படத்தின் கதைக்கு வருவோம் . ஹீரோ வழக்கம்போல தன்னுடைய UNCLE மற்றும் AUNTY-யினால்
வளர்க்கப்படுகிறார் . ஒரு மரபியில் லேபிற்கு IV செல்லும்போது ஒரு பூச்சி கடித்துவிடுகிறுது
. அதன்பின் ஹீரோவுக்கு சூப்பர்பவர் கிடைக்கிறது . இன்னொருபுறம் ஒரு மரபியில் விஞ்ஞானி
, தான் கண்டுபிடித்து மிஷினால் ஒரு சக்தி பெறுகிறான் . சாவும் தருவாயில் இருக்கும்
வில்லனுக்கு கிடைக்கும் புதுசக்தி என்னவெனில் , அவன் யாரைத்தொடுகிறானோ அவர்களின் இளமையை
இவன் இழுத்துக்கொண்டு வாழமுடியும் . ஆனால் அது ஒருநாள் வரை மட்டுமே வேலிடிட்டி . சரி
, என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது கிடைக்கும் ஒரு ஐடியாவை வைத்து , நகரத்தில்
இருக்கும் அனைவரின் இளமையையும் ஒரேநேரத்தில் கொள்ளையடிக்கத்திட்டமிடுகிறான் . அதை எப்படி
ஹீரோ முறியடித்தார் என்பதே கதை . கதை அச்சுஅசலாக ஸ்பைடர்மேன் முதல்பாகத்தில் வருவது
தான் என்றாலும் , இதுதான் ஸ்பூஃப் படமாயிற்றே ! விடுவார்களா ? அத்தனைபேரையும் வறிந்துகட்டி
கலாய்த்திருக்கிறார்கள் .
ஹீரோவின்
தாய் – தந்தை இறந்தது எப்படி எனுமிடத்தில்
BATMAN BEGINES – ல் ப்ரூஸ் வெய்னின் சிறுவயதில் நடக்கும் நிகழ்ச்சியை வைத்து மிமிக்ஸ் பண்ணியது , ஹீரோவுக்கு அடிக்கடி வினோதமாக கேட்கும் வாய்சை
X-MEN படத்தின் சேவியர் பாத்திரத்தோடு இணைத்தது என ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்து
ஒரு அட்டகாசமான காமெடிப்படத்தைத் தந்திருக்கிறார்கள் . ஆங்காங்கே FANTASTIC FOUR ,
X-MEN கேரக்டர்களான WOLVARINE போன்றோர்களும் தலாய்லாமா , ஸ்டிபன் ஹாக்கிங்ஸ் போன்றோர்களையும்
போகிறப்போக்கில் ஓட்டியுள்ளார்கள் . காமெடிக்குப்பஞ்சம் வைக்காமல் அதேநேரம் தேவையில்லாமல்
செக்ஸை இழுத்து காமெடி என்ற பெயரில் XX ஆக்காமல் ஜாலியானதொரு படமாக இருக்கிறது . நேரமிருப்பின்
கண்டிப்பாக டவுன்லோடிப்பாருங்கள் .
//ஹாலிவுட்டில் மக்களுக்கு சினிமா என்றால் என்ன ? நிஜ உலகம் என்றால் என்ன என்ற பேதம் தெரியும் . ஆனால் நமக்கு சினிமா மட்டுமே நிஜ உலகமாய்த்தெரியும்//
ReplyDeleteஸூப்பர் நெத்தியடி நண்பரே... வழக்கம்போல் அழகாக விமர்சித்து இருக்கிறீர்கள்.
தமிழ் மணம் 1
ஹா ஹா ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே
Deleteசிவா நடித்த படம் போல...?
ReplyDeleteஆமாங்ணே ! சிவாவுதே தான்
DeleteSuper
ReplyDeleteLink irruntha kodunga
ReplyDeleteடரன்ட்ல தேடிப்பாருங்க தல . கிடைக்கும்
Deleteசினிமாதான் இங்கே எல்லாத்தையும் தீர்மானிக்கிறது என்று கூட சொல்லலாம்.
ReplyDeleteசரியாச்சொன்னிங்கணா .
Delete/ஹாலிவுட்டிலும் வரும் சமூக- வரலாற்று படங்களையும் அறியத்தாருங்கள் நண்பரே...
ReplyDelete