Tuesday, 24 March 2015

TANGLED – சினிமா விமர்சனம்இம்மாதம் ஏதோ நம் தளத்தில் சூனியம் வைத்துவிட்டார்கள் . அனிமேசன் மற்றும் காமெடித்திரைப்படமாகவே எழுதிக்கொண்டிருக்கிறேன் . இதுவும் ஒரு அனிமேசன் திரைப்படம் தான் . டிஸ்னி நிறுவனத்தாரின் மோசன் கேப்சர் திரைப்படங்களைப்பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை . அதிலும் டிஸ்னி நிறுவனத்தாரின் 50வது அனிமேசன் மோசன் கேப்சர் திரைப்படமாக வந்திருக்கும் இத்திரைப்படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம் . உண்மையில் நான் பார்த்த முதல் மோசன் கேப்சர் திரைப்படம் இதுதான் . முதன்முறை பார்க்கும்போதே மனதைக்கொள்ளையடித்த இப்படத்தைப்பார்க்கும் போது எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரைவேக்காட்டுத் தனமாகத்தான் இருந்தது . அதன்பின் FACEBOOK –ன் துணைகொண்டு , நிறைய பெண்களுடன் HI WHATS UO ? என்று மொக்கை போட்டு மொக்கை போட்டு ஆங்கிலத்தை அறைகுறையாக கற்றுக்கொண்டேன் . தொடர்ந்தாற்போல என் ஹாஸ்டலில் இருக்கும் வடநாட்டு நண்பர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் மேளாவில் தமிழ் கற்றுக்கொடுத்த அவர்களிடம் ஓரளவு ப்ராப்பரான ஆங்கிலத்தை கற்றுக்கொண்டதும் என் திரையுலகப்பயணம் ஓரளவு புரியும்படி தொடர ஆரம்பித்தது . அதன்பின் எத்தனையோ திரைப்படங்கள் பார்த்திருந்தாலும் கலேவலாவில் வரும் வைனாமொயினன் போல மனதில் சிறு துக்கம் கவ்வியே இருந்தது . அது வேறொன்றுமில்லை , இந்த படத்தைப்பார்க்க வேண்டுமென்பதுதான் . கிராமத்திற்கு வந்தபின் பி.எஸ்.என்.எல்லின் இந்தியா முழுதும் பரவியிருக்கும் பிராட்பேன்ட் இணைப்பு எங்கள் ஊரில் மட்டும் தன் அலைவரிசையைக்காட்டாமல் கைவரிசைக்காட்டியதால் டவுன்லோட் என்பது மகா கொடுமையான விஷயமாகிவிட்டது . எப்படியோ அடித்துப்பிடித்து நெட்சென்டரில் டவுன்லோட் செய்யலாம் என்று சென்றால் USP PORT யே புடுங்கி எறிந்திருந்தார்கள் நெட் சென்டர்காரர்கள் . அதன்பின் தெரிந்த நண்பரைப்பிடித்து ஒருவழியாக டவுன்லோடி படத்தைப்பார்த்தாகிவிட்டது . எழுதாமல் விட்டால் என்னையே நம்பியிருக்கும் ரசிகக்கண்மணிகள் (?) கோவித்துக்கொள்வார்கள் என்பதால் , இதோ பதிவு உங்கள் கண்ணுக்கு விருந்தாக .


அழகான , எளிமையான , அர்த்தமுள்ள காதல் கவிதையை வாசிக்கும்போது நமக்கு என்னவெல்லாம் தோன்றுமோ , அத்தனையும் இப்படத்தைப்பார்க்கும் போது எனக்குத் தோன்றியது . ஆங்காங்கே தமிழிலக்கணத்தில் பயின்று வரும் அணிகளைப்போல அழகழான பாடல்கள் ஒருசேர , மனதில் ஒருவித மென்னமையான உணர்வு எழும் வகையில் படம் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது . அப்படி ஒன்றும் படத்தில் பெரிய கதையெல்லாம் இல்லை . இருந்தாலும் படம் ரசிக்கும் வகையில் இருக்கும் . இன்னும் சொல்லப்போனால் சப்பைக்கதை . ஆனால் அருமையான திரைக்கதையால் படம் அழகாக நகரும் .  அனிமேசன் திரைப்படங்களைப் பொறுத்தவரை அத்தனைக்கதைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் . கதை மட்டுமல்லாது திரைக்கதையும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான் இருக்கும் . HOW TO TRAIN YOUR DRAGON யும் BIG HERO 6 – யும் ஒன்றாகப் பார்த்து 7 பெரிய வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச்சொன்னால்  எப்படி நமக்குத்தடுமாற்றம் வருமோ , அதே போல் தான் மற்ற அனிமேசன் திரைப்படங்களும் . இன்னும் சிம்பிளாக சொல்லவேண்டுமெனில் இவ்வகை கருத்துருத்திரைப்படங்கள் ( மோஷன் கேப்சர் படங்களைத்தமிழில் கருத்துரு படங்கள் என்று அழைப்பார்களாம் ) அனைத்தும் ஆதிகாலத்தமிழ்ப்படங்களின் கான்செப்டையே தன்னுள் கொண்டிருக்கும் . அடச்சீ , அனிமேசன் திரைப்படங்கள் கட்டுரையில் எழுதவேண்டிய கதையையெல்லாம் இதில் எழுதுகிறேன் . சரிவாருங்கள் படத்தைப்பார்ப்போம் .

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் . அந்த ராஜாவின் மனைவிக்கு தட் மீன்ஸ் ராணிக்கு கர்ப்பம் ஏற்படுகிறது . ஆனால் ராணியின் உடல்நிலை மிகமோசமாக இருக்கிறது . அதேநேரம் அவ்வூரை ஒட்டிய காட்டில் ஒரு சூனியக்காரி இருக்கிறாள் . சூரியனின் கதிர்களினால் உண்டான ஒரு அரிய மலரை அவள் பார்க்கிறாள் . அந்த மலரின் சக்தி மூலம் , தன் இளமையை நாளுக்கு நாள் இலவசாக டாப்அப் செய்துவருகிறாள் . ராணியின் உடல்நிலை மிகமோசமாக இருப்பதால் ராஜா அந்த மலரைப்பறித்துவந்து ராணியின் உயிரைக்காப்பாற்றுகிறார் . ராணிக்கு ஒரு அழகான பெண்குழந்தை பிறக்கிறது .  தன் இளமையைக்காக்கும் மலர் போய்விட்டதே என்ற கோவத்தில் இருக்கும் சூனியக்காரி , யாருக்கும் தெரியாமல் அரண்மனைக்கு வந்து , அக்குழந்தையைப்பார்க்கிறாள் . அக்குழந்தையின் தலைமுடியில் அந்த மலரின் சக்தி இருப்பதை உணர்ந்த அவள் , சக்திக்காக குழந்தையைக்கடத்திக்கொண்டு சென்று வனத்தில் யாருக்கும் தெரியாத ஒரு டவரில் குடிவைக்கிறாள் . அக்குழந்தைக்கு தான்தான் தாய் என்று அக்குழந்தையை நம்பவைக்கிறாள் . மேலும் , டவரை விட்டு வெளியே சென்றால் இவ்வுலகில் வாழும் மனிதர்கள் உன் சக்திக்காக உன்னை நாசம் செய்துவிடுவார்கள் என்று ஏதேதோ கூறி அக்குழந்தையை சிறுவயதில் இருந்தே வெளியுலகம் காட்டாமல் வளர்க்கிறாள் . குழந்தைக்காணாமல் போன துக்கத்தில் இருக்கும் ராஜா , ஒவ்வொரு ஆண்டும் அக்குழந்தையின் பிறந்தநாளன்று மெழுகுவர்த்தி ஏந்திய பட்டங்களை (அதை எப்படி தமிழில் சொல்வதென்று தெரியவில்லை . அதாவது சதுரமாக ஒரு பெட்டியினுள் விளக்கை ஏற்றி வானில் பறக்கவிடுகிறார்கள் ) பறக்கவிடுகிறார்கள் . தன் பிறந்தநாளன்று வருடாவருடம் அந்த பட்டங்களின் அணிவகுப்பைப்பார்த்து ஆச்சர்யப்படும் ரேபன்சல் (அந்தக்குழந்தையின் பெயர்தான்)  தன் தாயாக நினைக்கும் சூனியக்காரியிடம் தன்னுடைய பதினெட்டாவது பிறந்தநாளில் அதைநேரில் பார்க்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறாள் . ஆனால் அதை நைசாக மறுத்துவிட்டு சூனியக்காரி கிளம்பிவிடுகிறாள் . அந்நேரத்தில் யூஜின் எனும் இயற்பெயர் கொண்ட ரைடர்  என்றழைக்கபடும் திருடன் , அரண்மனையில் தன் இரு சகாக்களுடன் சேர்ந்து காணாமல் போன இளவரசியின் மகுடத்தை லவட்டிவிட்டு தப்பிக்கிறான் . அந்நேரத்தில் காவலர்கள் சேசிங் செய்ய , தன் இரு சகாக்களுக்கும் டாடா காட்டிவிட்டு ஓடுகிறான் . மேக்ஸிமஸ் எனும் முரட்டுக்குதிரை அவனை துரத்த , வழிதவறி ரேபன்சல் இருக்கம் டவருக்கு வருகிறான் . அவளோ அவனை அடித்து உட்காரவைத்து டீல் பேசுகிறாள் . அதாவது அந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க ரைடர் உதவினால் , ரைடர் திருடிய மகுடத்தை அவள் தருவதாக கூறுகிறாள் . வேறுவழியின்றி ரைடரும் அவளிடம் ஒப்புக்கொள்கிறான் .


இவ்விடத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால் ரேபன்சலின் முடியை வெட்டிவிட்டால் அவளுடைய சக்தி போய்விடும் என்பதை அறிந்த சூனியக்காரி , அவளின் முடியை வெட்டாமலே வளர்த்துவருவாள் . அதன்பின் ரைடரும் , ரேபன்சலும் தங்களின் பயணத்தைத்தொடங்குகிறார்கள் . இதை எப்படியோ சூனியக்காரி கண்டுபிடித்துவிடுகிறாள் . இன்னொருபுறம்  ஏமாற்றப்பட்ட சகாக்கள் ஒருபுறம் ரைடரைத்தேட , மேக்ஸிமசும் ரைடரைத்தேடுகிறது . இவ்வாறான பயணத்தில் ரைடருக்கும் ரேபன்சலுக்கும் காதல்வர , சூனியக்காரியோ அதை அறிந்து நயவஞ்சகமாக இருவரையும் பிரித்து ரைடரை அரண்மனையில் மாட்டவைத்துவிடுகிறாள் . தூக்குத்தண்டனை பெற்ற  ரைடர் அதன்பின் எப்படி பிழைத்து   , ரேபன்சலை அந்த சூனியக்காரியிடமிருந்து காப்பாற்றுகிறான் என்பதே கிளைமேக்ஸ் .


படத்தில் அந்த ஹீரோயின் கேரக்டரை எப்படித்தான் உரவாக்கினார்களோ தெரியவில்லை . கொள்ளை அழகு . அனிமேசன் என்பதை மறந்து நாமே அவளைக்காதலிக்கத் துவங்குகிறோம் . மேக்ஸிமஸ் எனும் குதிரைக்கும் ரைடருக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் மற்றும் இருவரும் பழகும் காட்சிகள் எல்லாம் சிரிப்பை வரவழைப்பதில் வெற்றிபெறுகின்றன . கிளைமேக்ஸ் நெருங்கும் வேளையில் அந்த பரபரப்பு நமக்கும் தொற்றிக்கொள்கிறது . அதேபோல் படத்தில் வரும் வசனநடையிலான பாடல்களும் நம் மனதைக்கவரும் . I see the light எனும் பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் நாமிநேட் ஆகியதும் கவனிக்கத்தக்கது . மொத்தத்தில் வெறும் டைம்பாசுக்கு மட்டுமின்றி , நம்மையும் மறந்து ரேபன்சல்லை நேசிக்க ஆரம்பிக்கிறோம் . 
உங்கள் விருப்பம்

11 comments:

 1. ஓகே டவுன்லோட் பண்ணிக்கிறேன்...

  ReplyDelete
 2. சிறப்பாள விமர்சனம் நண்பரே
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. நானும் நேசிக்கிறேன்...!

  ReplyDelete
 4. மொக்கை மொக்கை போட்டு ஆங்கிலம் கத்துக்கிறலாமா...??ஃ நிஜமாத்தானங்களா...? நானும் ஆங்கிலம் கத்துக்கிறலாம்முன்னு இருக்கேன். அப்பத்தானே ஆங்கிலப் படமெல்லாம் பாத்து புரிஞ்சிக்க முடியும்........

  ReplyDelete
 5. பல படங்களை அறிமுக படுத்தியதற்கு நன்றி.. சிறந்த இலவச ஆண்ட்டி வைரஸ் எதுவும் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. இலவசம்னால அது கண்டிப்பா நல்லா இருக்காதுங்க . நீங்க AVG TRIAL PACK ட்ரைபண்ணுங்க . நல்லா இருந்தா உங்க நண்பர்கள யார்யார் கணிணி வச்சிருக்காங்கனுபார்த்து , அவங்களோட சேர்ந்து வாங்கிக்கோங்க . 500 அந்தமாதிரி ரேஞ்ச் தான் வருது ஒரிஜினல் . வாங்கிட்ட 6 முதல் 15 பேர் வரை யூஸ் பண்ணிகலாம் .

   Delete
 6. கதை நல்லா இருக்கு, தம்பிக்கு ஏன் இந்த ஆசை அதான் ஏற்கனவே இருத்தன் இருக்கானே? அக்கா பக்கம் வரல போல இருக்கு.

  ReplyDelete
 7. சூனியம் வைத்துவிட்டார்களா??? எவர் ..அவர்கள்... தாங்கள் எதற்கும் பயப்படவேண்டாம்.வலையுலக சித்தர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்பேர்பட்ட சூனியத்தையும் ஓட ஓட விரட்டிவிடுவார்.

  ReplyDelete
 8. நான் கடைசியாக பார்த்த அனிமேஷன் படம். . மோஷன் கேப்சர் என்று நீங்கள் சொல்லி தான் தெரியும். . உண்மையில் அந்த ஹீரோயின் செம...

  ReplyDelete
 9. அந்த அசையும் போட்டோவை எப்படி இணைத்தீர்கள் ?

  ReplyDelete
  Replies
  1. நா எதுவும் செய்யலைங்க . ஜஸ்ட் டவுன்லோட் பண்ணும்போது gif format -ல டவுன்லோட் செஞ்சேன் . அநேகமா மற்ற ப்ளாக்ல அது எடுத்துக்காது . இந்த டெம்ப்ளேட்டால வொர்க் ஆகுதுனு நினைக்கிறேன் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ..

   Delete