THE CONJURING 2 – சினிமா விமர்சனம்

பேய் திரைப்படம் என்றாலே உடனே நினைவுக்கு வரும் ஆள் ஜேம்ஸ் வான். ஆள் பார்க்க பாஸ்ட்புட் கடையில் நூடுல்ஸ் கிளறும் வட இந்திய பையன்போல் இருந்துகொண்டு ஹாரர் ஜானரில் கலக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக பேய் திரைப்படங்களில் ஜேம்ஸ் வான் செய்த சாதனைகளை மறக்கவே முடியாது. DEATH SILENCE, THE CONJURING, INSIDIOUS இரண்டு பாகங்கள் இயக்கியதோடு ANNABELLE , INSIDIOUS 3, வெளிவர இருக்கும் LIGHTS OUT ஆகிய பேய்த் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இது போதாதென்று SAW திரைப்படங்களைத் துவக்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் 6 பாகங்களை தொடர்ந்தார்போல் தயாரித்துள்ளார். என்னால் இன்னும் நம்பமுடியாத விசயம் FAST AND FURIOUS 7 திரைப்படம் இவர் இயக்கத்தில் உருவானது என்பதுதான். THE WARREN FILES எனப்பெயரிடப்பட்டு இன்ஷிடியஸ் முதல் சாப்டரை முடித்த கையோடு ஜேம்ஸ் வான் இயக்க ஆரம்பித்த திரைப்படம் தான் கான்ஜுரிங். வெறும் 20 மில்லியன் பட்ஜெட்டில் உருவான அத்திரைப்படம் அடித்த கலெக்ஷனைப் பார்த்து ஹாலிவுட்டே ஸ்தம்பித்தது எனலாம். கிட்டத்தட்ட 320 மில்லியன் டாலர் வசூல்வேட்டை நடத்திய அமிட்டிவில்லி பேயைப் பார்த்த...