சிறந்த பக்தன் - சிறுகதை

‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன். ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் களமன். அந்த பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது. இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட பிடிக்கமுடியவில்லை. ‘என்ன சிந்தனை முத்தண்ணா?’ ‘எல்லாம் உன் தமக்கையை எண்ணித்தான்.’ ‘அவளுக்கென்ன? பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’ ‘நீ அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்; பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’ ‘இது இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’ ‘நம் தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’ ‘என்ன மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும் கிடைக்காது முத்தண்ணா’ ‘இப்போது மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’ ‘சரி வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்...