Thursday, 4 December 2014

பிடித்த பிடிக்காத ஆங்கிலப்படங்கள்

ஹாலிவுட்டில் ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு எனக்கு பிடிக்காமல்  மற்றும் பிடித்துப்போன சில படங்களைப்பற்றிய எனது பார்வையே இந்த பதிவு ! இந்த படங்கள் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு புரிந்திருக்கலாம் , பிடித்தும் இருக்கலாம் . எனகுப்பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று இப்பதிவில் முடிந்தவரை அலசிப்பார்ப்பதே இப்பதிவு.பிடிக்காமல் போன படங்களின் வரிசையில் முதலில் இடம் பிடிப்பவை டோரன்டினோவின் படங்கள் . இவரின் படங்களில் Kill Bill – Volume-களே நான் முதலில் பார்த்தேன் . எனக்கு இன்னமும் புரியாத விஷயம் இந்த படம் என்ன ஜானர் என்று ? இது ஒரு ஸ்பூஃப் வகையறா படமா ? ரிவெஞ்ச் ஆக்சன் படமா என்று வடிவேல் மாதிரி புரியாமல் குழம்பி கிடக்கிறேன் . Hansel Ang Gretal Witch Hunters மாதிரியான படமாக இருக்குமோ என்று கூட நினைத்திருக்கிறேன் .  ஏதோ மனம் போன போக்கில் எடுக்கப்பட்டிருக்கும்  படமோ எனவும் எண்ணநினைக்கிறது . இப்படத்துடன் SIN CITY படங்களைக்கொண்டும் கம்பேர் செய்து பார்த்தாலும் ஒத்துவரவில்லை . ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படம் பண்ணனும் என்ற நினைப்பில் , டோரன்டினோ எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தைப்பார்த்தால் நமக்குள்தான் டரியல்ஆகிறது . இந்த படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி சிவப்பு சாயத்திற்கே ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும் . ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோயின் கத்தியை எடுத்து ஒவ்வொருவரையும் வெட்டுவார் பாருங்கள் , 10HP மோட்டார் வைத்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் கூட அவ்வளவு வேகமாக வராது . ஆனால் அனைவர் கைகளிலும் இருந்து ரத்தம் தெறிக்கும் பாருங்கள் ! அப்பா ! பார்க்கும் எனக்கு தான் ரத்தம் வந்தது . தமிழில் இருக்கும் துளியளவு லாஜிக் கூட இப்படத்தில் இருக்காது . பார்ப்பவனை தன் அரைகுறை திரைக்கதையால் அடிமுட்டாளிக்கிவிட்டு , வன்முறை அழகியல் என்ற சப்பைக்கட்டு கட்டுகிறாரோ என என் மனதில் பிம்பம் உருவானதுதான் மிச்சம் . கிளைமேக்ஸ் காட்சியில் , எதிரிகள் இருவரும் ஏதோ டீக்கடை வாசலில் நாட்டுநடப்பு பேசும் கிழடுகள் கணக்காய் சகவாசமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதெல்லாம் பார்க்கும்போது படத்த எப்படா முடிப்பிங்க என்று மைன்ட் வாய்ஸ் கெஞ்ச துவங்கிவிட்டது . இப்படத்தின் ஒரு காட்சி கூட எனக்குப்பிடிக்கவில்லை . ஆங்காங்கே வரும் காமெடி வசனங்கள் மற்றும் இசை மாத்திரமே தாக்குப்பிடித்து படத்தை பார்க்கவைத்தது . அதிலும் இப்படத்தின் திரைக்கதை இருக்குதே ! ம் என்ன ஒரு அற்புதமான திரைக்கதை !

ஹீரோயினை ஒரு காட்சியில் புதைதுவிடுவார்கள் . ஹீரோயின் சில ஆண்டுகளுக்குமுன் மூச்சுப்பிடிக்க ட்ரைனிங் எடுத்துக்கொண்டார் என்ற ஒரு சப்பை ப்ளாஷ்பேக் . எதற்கெடுத்தாலும் அதை ஞாயப்படுத்த ஒரு காட்சி . ஏதாவது படம் எடுத்தாகவேண்டும் என்று டோரன்டினோ யோசித்திருப்பார் போல . பழிவாங்கும் கதையாக எடுத்தால் என்ன என்று தோன்றியிருக்கவேண்டும் . உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்திருப்பார் .  என்னைப்போலவே நிறைய சோம்பேறித்தனத்தின் காரணமாய் , எழுதியதை அப்படியே படமாக்கி விட்டார் போல . இவரின் Pulp Fiction கூட ஓரளவு பார்க்கும் வண்ணம் அழகாய் எடுத்திருப்பார் . அந்த நம்பிக்கையில் இந்த படத்தைப்பார்த்து குழம்பியதுதான் மிச்சம் . எந்த தைரியத்தில் இவரை குப்ரிக்குடன் ஒப்பிடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை . இவரின் மாஸ்டர்பீசாக இருக்கும் Pulp Fiction (iMDb யில் மட்டும்) படம் , குப்ரிக்கின் Eyes Wide Shut படத்தின் ஆரம்பகாட்சிக்குகூட ஈகுவல் ஆகாது என்பதே என் எண்ணம் . அப்படி இருக்கும் பட்சத்தில் வாழ்நாளின் பெரும்பகுதி திரைப்படத்திற்காகவே ஒதுக்கி , ஒவ்வொரு படத்திற்கும் தீயாய் உழைத்தவர் குப்ரிக் . FULL METAL JACKET படத்திற்குப்பின் 12 வருடம் இடைவெளி விட்டு தான் EYES WIDE SHUT படத்தினை இயக்கினார் . EYES WIDE SHUT படத்தில் , டாம் க்ரூஸ் மாஸ் ஆர்ஜியில் கலந்துகொள்ள செல்லும்போது சொல்லும் பாஸ்வேர்டான FEDELIO என்பதற்காகவே பல நாட்கள் அழைந்து திரிந்து எழுதியவர் குப்ரிக் . அப்படி இருக்கும்போது வாய்க்கு வந்ததை அடித்துவிடும் டோரன்டினோவை குப்ரிக்குடன் ஒப்பிட மனம் மறுக்கிறது . ஒரு படத்தில் சொல்லவேண்டியவற்றை , குப்ரிக் ஒரு காட்சியிலேயே காண்பித்துவிடுவார் . உதாரணத்திற்கு THE SHINING படத்தில் ஹீரோ ஒரு காட்சியில் பாத்ரூமில் நுழைவார். அங்கே ஒரு இளம்பெண் நிர்வாணமாய் ஹீரோவை நோக்கி நடந்துவருவாள் . ஹீரோவை வந்து அவள் கட்டியனைக்கும் காட்சியில் அப்படியே மெல்ல மெல்ல மாறி கிழவியாகிவிடுவாள் . அதாவது பெண்களின் உடல்மீது ஆண்களுக்கு இருக்கும் இச்சை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்பவர்களுக்கு முகத்தில் அடித்தது போல சொல்லியிருப்பார் . ஆனால் அரை மணிநேரத்தில் முடிக்கவேண்டிய படத்தை இரு VOLUMEகளாக இழுத்து திரித்து பிரித்து தந்திருக்கிறார் க்வென்டின்.

அடுத்து இந்த படத்தின் நான் – லீனியர் திரைக்கதையைப்பற்றி சிலர் சிலாகித்திருப்பதை பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தம் பொங்குகிறது . இவரின் சமகாலத்தவர்களான டேரன் அரவனாஸ்கியின் THE FOUNTAIN , நோலனின் பெரும்பாலான படங்கள் , அதிலும் THE PRESTGE மாதிரியான படங்கள் மற்றும் ETERNAL SUNSHINE OF SPOTLESS MIND போன்ற படங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால்  , அவர்களின் திரைக்கதைக்கு முன்னால் டோரன்டிடோவின் திரைக்கதை பெரிதாக தெரியவில்லை .ஆனாலும் இவரின் INGLORIOUS BASTARDS பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போதுதான் வருகிறது . கண்டிப்பாக PULP FICTION மாதிரி ஓரளவு ரசிக்கும்படிதான் தந்திருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது .
அடுத்து THE USUAL SUSPECTS . இப்படம் வந்த புதிதில் ஏதேதோ மாற்றங்களை செய்தது என்று ஹாலிவுட் பட்சிகள் பேட்டியளித்திருந்தனர் . ஆனால் என்னைப்பொறுத்தவரை ஒரு சுமாரான படமாகவே தெரிந்தது . அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்டிற்காக அவ்வளவு நேரம் அப்படி இப்படி என்று இழுத்திருக்கிறார்களோ என்று என்னவைத்தாலும் BRYAN SINGER –ன் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்க்கும் வண்ணமே இருக்கும் . இது அவருடைய மாஸ்டர்பீஸாக இன்னும் IMDB யில் இருக்கிறது . THE SIXTH SENCE படம் கூட இதேபோல் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் இருந்தாலும் அவ்வளவாக போர் அடிக்காமல் செல்லும் .ஆனால் இப்படம் சிறிது போர் தான் .SE7VEN படம் எப்படி IMDB TOP 25 –யில் இருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது . அதுவும் COPYCAT மாதிரியான சீரியல் கில்லர் படம்தான் எனினும் ப்ராட்பிட் , மோர்கன் ஆகியோரின் நடிப்பால் ஒருமுறை பார்க்கும் வண்ணம் தான் இருக்கிறது .இதேபோல் THE SILENCE OF THE LAMPS திரைப்படமும் எனக்கு பிடிக்காமல் தான் போனது . அது என்னவோ தெரியவில்லை, சீரியல் கில்லர் வகையறா திரைப்படங்களில் HALLOWEEN  , PSYCHO தாண்டி அவ்வளவாக எதுவும் பிடிக்கவில்லை .
இதேபோல் நான் பார்த்து எனக்கு  பிடித்துப்போன ஒரு படம் NO COUNTRY FOR OLDMAN . ஒரு நாவலை எப்படி திரைப்படமாக்கவேண்டும் என்பதை இப்படத்தையும் அப்படத்தின் மூலநாவலான அதேபெயரில் இருக்கும் புத்தகத்தையும் படித்தால் தெரிந்துவிடும் . இப்படத்தில் CASTING மற்றும் திரைக்கதை மிகச்சிறப்பாக செய்யப்படிருக்கும் . படத்தில் மூவரின் குணாதிசயங்களையும் , சூழ்நிலைகளையும் விளக்கும் காட்சிகள் அருமை . கிளைமேக்ஸ் காட்சியில் ஆன்டன் , மோஸ்சின் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும்போது போலிஸ் சைரன் சத்தம் கேட்டு ஓடும்போது ஆ்கசிடன்ட் ஆவதும் அதைத்தொடர்ந்து அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களிடம் பணத்தைக்கொடுத்துவிட்டு துணியை வாங்கிக்கொண்டு ஆன்டன் ஓடும் ஒரு காட்சிக்காகவே எனக்கு இப்படத்தை மிகவும் பிடித்திருந்தது . ஆஸ்கார் விருதுகளை சிறந்த திரைப்படத்திற்காகவும் , சிறந்த டைரக்டர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதைக்காக அள்ளிய இத்திரைப்படத்தை பொறுமையும் நேரமும் இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம் .


பிடித்த படங்களில் இன்னும் SEVEN SAMURAI , CHILDRENS OF HEAVEN , FORREST GUMP , THE WAYS BACK , THE TERMINAL , CATCH ME IF YOU CAN , BLOOD DIAMOND என எக்கச்சக்க படங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் அவற்றுடன் சந்திக்கிறேன் .
உங்கள் விருப்பம்

8 comments:

 1. இவ்வளவு ஆழமாக திரைப்படங்களை பார்ப்பவர் பேசுபவர் மிகவும் குறைவு ...
  பதிவு எனக்கு மிகவும் பிடித்திருகிறது..
  அசத்தல் தளம் ஒன்றை இன்று பிடித்திருக்கிறேன்...
  தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா ! உங்களின் தளம் கண்டபோது நானும் இதே உவகைதான் அடைந்தேன்

   Delete
 2. Wow wow.....i had seen most of ur listed movies. But l like the movie seven. I cant understand one thing , that is how the "no country for old man " title suitable for that story..i cant get it from them..i like mostly tom hang. , morgon freeman,denzel Washington, liam neeson movies.

  ReplyDelete
  Replies
  1. என்ன காரணத்தினால் seven எனக்குப்பிடிக்காமல் போனது என்று எனக்கேத் தெரியவில்லை ஜீ ! no country for oldman படத்தின் தலைப்பு எனக்கென்னவோ ஒரு கவித்துமான டைட்டிலாகவே படுகிறது ! என்னால் அதை விவரிக்க இயலவில்லையெனினும் உணரமுடிகிறது ! நானும் வெறித்தனமான டாம்ஹாங்ஸ் ரசிகன் . நன்றிங்க !!!

   Delete
 3. நீங்க சொன்ன எல்லா படமும் எனக்கு பிடிக்கும் பட் ஒரு சின்ன டவுட் no country for oldman படத்தோட கிளைமாக்ஸ் எனக்கு புரியல கொஞ்சம் விளக்கம் தர முடியுமா ?

  ReplyDelete
  Replies
  1. அந்த படத்தோட ஓபனிங் சீன்ல , போலிஸ்காரர் பேசற வசனத்தையும் , கிளைமேக்ஸ்ல அவர் பேசுற வசனத்தையும் கொஞ்சம் நல்லா கேட்டுப்பாருங்க ஜீ ! ஓரளவு புரியும் . அதுவுமில்லாம , இந்த படத்துக்குனு ஒரு முடிவு இல்ல . இந்த படத்தின்படி , அவரவர் தரப்பில் வாழ்க்கை அப்படினு எடுத்துக்கலாம் . இதுல , இவன் நல்லவன் , இவன் கெட்டவன்னு சொல்லமுடியாது . அதேமாதிரி , படத்தோட முடிவுனு எதுவுமே இல்ல . ஐ மீன் , நீங்க எந்த கேரக்டர எடுத்துக்கிறிங்களோ , அவங்களோட முடிவு தான் படத்தோட முடிவு .

   Delete
 4. ஓகே ஜீ பட் அந்த போலீஸ் சொல்ற கிளைமாக்ஸ் வசனம் எனக்கு சுத்தமா புரியல, கிளைமாக்ஸ் ல அந்த போலீஸ் அவண புடிக்குற மாதிரி வச்ருந்துருக்கலாம் ......
  தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. வலியனுக்கு மட்டும்தான் உலகம் நாடு எல்லாம் . வலிமையற்றவனுக்கு எதுவும் இல்லைனு சிம்பிளா இந்த படத்த சொல்லலாம் ஜீ ! நமக்குப் பிடிக்கனும்னுலாம் இந்த படத்த எடுத்துருக்கமாட்டாங்க ! என்னதான் இருந்தாலும் இதுதான் நாட்டுல நடக்குதுனு ஆனியால அடிச்சமாதிரி சொல்லிருப்பாங்க !

   Delete