பிடித்த பிடிக்காத ஆங்கிலப்படங்கள்

ஹாலிவுட்டில் ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்டு எனக்கு பிடிக்காமல்  மற்றும் பிடித்துப்போன சில படங்களைப்பற்றிய எனது பார்வையே இந்த பதிவு ! இந்த படங்கள் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு புரிந்திருக்கலாம் , பிடித்தும் இருக்கலாம் . எனகுப்பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று இப்பதிவில் முடிந்தவரை அலசிப்பார்ப்பதே இப்பதிவு.



பிடிக்காமல் போன படங்களின் வரிசையில் முதலில் இடம் பிடிப்பவை டோரன்டினோவின் படங்கள் . இவரின் படங்களில் Kill Bill – Volume-களே நான் முதலில் பார்த்தேன் . எனக்கு இன்னமும் புரியாத விஷயம் இந்த படம் என்ன ஜானர் என்று ? இது ஒரு ஸ்பூஃப் வகையறா படமா ? ரிவெஞ்ச் ஆக்சன் படமா என்று வடிவேல் மாதிரி புரியாமல் குழம்பி கிடக்கிறேன் . Hansel Ang Gretal Witch Hunters மாதிரியான படமாக இருக்குமோ என்று கூட நினைத்திருக்கிறேன் .  ஏதோ மனம் போன போக்கில் எடுக்கப்பட்டிருக்கும்  படமோ எனவும் எண்ணநினைக்கிறது . இப்படத்துடன் SIN CITY படங்களைக்கொண்டும் கம்பேர் செய்து பார்த்தாலும் ஒத்துவரவில்லை . ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படம் பண்ணனும் என்ற நினைப்பில் , டோரன்டினோ எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தைப்பார்த்தால் நமக்குள்தான் டரியல்ஆகிறது . இந்த படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி சிவப்பு சாயத்திற்கே ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும் . ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோயின் கத்தியை எடுத்து ஒவ்வொருவரையும் வெட்டுவார் பாருங்கள் , 10HP மோட்டார் வைத்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால் கூட அவ்வளவு வேகமாக வராது . ஆனால் அனைவர் கைகளிலும் இருந்து ரத்தம் தெறிக்கும் பாருங்கள் ! அப்பா ! பார்க்கும் எனக்கு தான் ரத்தம் வந்தது . தமிழில் இருக்கும் துளியளவு லாஜிக் கூட இப்படத்தில் இருக்காது . பார்ப்பவனை தன் அரைகுறை திரைக்கதையால் அடிமுட்டாளிக்கிவிட்டு , வன்முறை அழகியல் என்ற சப்பைக்கட்டு கட்டுகிறாரோ என என் மனதில் பிம்பம் உருவானதுதான் மிச்சம் . கிளைமேக்ஸ் காட்சியில் , எதிரிகள் இருவரும் ஏதோ டீக்கடை வாசலில் நாட்டுநடப்பு பேசும் கிழடுகள் கணக்காய் சகவாசமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதெல்லாம் பார்க்கும்போது படத்த எப்படா முடிப்பிங்க என்று மைன்ட் வாய்ஸ் கெஞ்ச துவங்கிவிட்டது . இப்படத்தின் ஒரு காட்சி கூட எனக்குப்பிடிக்கவில்லை . ஆங்காங்கே வரும் காமெடி வசனங்கள் மற்றும் இசை மாத்திரமே தாக்குப்பிடித்து படத்தை பார்க்கவைத்தது . அதிலும் இப்படத்தின் திரைக்கதை இருக்குதே ! ம் என்ன ஒரு அற்புதமான திரைக்கதை !

ஹீரோயினை ஒரு காட்சியில் புதைதுவிடுவார்கள் . ஹீரோயின் சில ஆண்டுகளுக்குமுன் மூச்சுப்பிடிக்க ட்ரைனிங் எடுத்துக்கொண்டார் என்ற ஒரு சப்பை ப்ளாஷ்பேக் . எதற்கெடுத்தாலும் அதை ஞாயப்படுத்த ஒரு காட்சி . ஏதாவது படம் எடுத்தாகவேண்டும் என்று டோரன்டினோ யோசித்திருப்பார் போல . பழிவாங்கும் கதையாக எடுத்தால் என்ன என்று தோன்றியிருக்கவேண்டும் . உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்திருப்பார் .  என்னைப்போலவே நிறைய சோம்பேறித்தனத்தின் காரணமாய் , எழுதியதை அப்படியே படமாக்கி விட்டார் போல . இவரின் Pulp Fiction கூட ஓரளவு பார்க்கும் வண்ணம் அழகாய் எடுத்திருப்பார் . அந்த நம்பிக்கையில் இந்த படத்தைப்பார்த்து குழம்பியதுதான் மிச்சம் . எந்த தைரியத்தில் இவரை குப்ரிக்குடன் ஒப்பிடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை . இவரின் மாஸ்டர்பீசாக இருக்கும் Pulp Fiction (iMDb யில் மட்டும்) படம் , குப்ரிக்கின் Eyes Wide Shut படத்தின் ஆரம்பகாட்சிக்குகூட ஈகுவல் ஆகாது என்பதே என் எண்ணம் . அப்படி இருக்கும் பட்சத்தில் வாழ்நாளின் பெரும்பகுதி திரைப்படத்திற்காகவே ஒதுக்கி , ஒவ்வொரு படத்திற்கும் தீயாய் உழைத்தவர் குப்ரிக் . FULL METAL JACKET படத்திற்குப்பின் 12 வருடம் இடைவெளி விட்டு தான் EYES WIDE SHUT படத்தினை இயக்கினார் . EYES WIDE SHUT படத்தில் , டாம் க்ரூஸ் மாஸ் ஆர்ஜியில் கலந்துகொள்ள செல்லும்போது சொல்லும் பாஸ்வேர்டான FEDELIO என்பதற்காகவே பல நாட்கள் அழைந்து திரிந்து எழுதியவர் குப்ரிக் . அப்படி இருக்கும்போது வாய்க்கு வந்ததை அடித்துவிடும் டோரன்டினோவை குப்ரிக்குடன் ஒப்பிட மனம் மறுக்கிறது . ஒரு படத்தில் சொல்லவேண்டியவற்றை , குப்ரிக் ஒரு காட்சியிலேயே காண்பித்துவிடுவார் . உதாரணத்திற்கு THE SHINING படத்தில் ஹீரோ ஒரு காட்சியில் பாத்ரூமில் நுழைவார். அங்கே ஒரு இளம்பெண் நிர்வாணமாய் ஹீரோவை நோக்கி நடந்துவருவாள் . ஹீரோவை வந்து அவள் கட்டியனைக்கும் காட்சியில் அப்படியே மெல்ல மெல்ல மாறி கிழவியாகிவிடுவாள் . அதாவது பெண்களின் உடல்மீது ஆண்களுக்கு இருக்கும் இச்சை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்பவர்களுக்கு முகத்தில் அடித்தது போல சொல்லியிருப்பார் . ஆனால் அரை மணிநேரத்தில் முடிக்கவேண்டிய படத்தை இரு VOLUMEகளாக இழுத்து திரித்து பிரித்து தந்திருக்கிறார் க்வென்டின்.

அடுத்து இந்த படத்தின் நான் – லீனியர் திரைக்கதையைப்பற்றி சிலர் சிலாகித்திருப்பதை பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தம் பொங்குகிறது . இவரின் சமகாலத்தவர்களான டேரன் அரவனாஸ்கியின் THE FOUNTAIN , நோலனின் பெரும்பாலான படங்கள் , அதிலும் THE PRESTGE மாதிரியான படங்கள் மற்றும் ETERNAL SUNSHINE OF SPOTLESS MIND போன்ற படங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால்  , அவர்களின் திரைக்கதைக்கு முன்னால் டோரன்டிடோவின் திரைக்கதை பெரிதாக தெரியவில்லை .ஆனாலும் இவரின் INGLORIOUS BASTARDS பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் இப்போதுதான் வருகிறது . கண்டிப்பாக PULP FICTION மாதிரி ஓரளவு ரசிக்கும்படிதான் தந்திருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது .




அடுத்து THE USUAL SUSPECTS . இப்படம் வந்த புதிதில் ஏதேதோ மாற்றங்களை செய்தது என்று ஹாலிவுட் பட்சிகள் பேட்டியளித்திருந்தனர் . ஆனால் என்னைப்பொறுத்தவரை ஒரு சுமாரான படமாகவே தெரிந்தது . அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்டிற்காக அவ்வளவு நேரம் அப்படி இப்படி என்று இழுத்திருக்கிறார்களோ என்று என்னவைத்தாலும் BRYAN SINGER –ன் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்க்கும் வண்ணமே இருக்கும் . இது அவருடைய மாஸ்டர்பீஸாக இன்னும் IMDB யில் இருக்கிறது . THE SIXTH SENCE படம் கூட இதேபோல் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் இருந்தாலும் அவ்வளவாக போர் அடிக்காமல் செல்லும் .ஆனால் இப்படம் சிறிது போர் தான் .



SE7VEN படம் எப்படி IMDB TOP 25 –யில் இருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது . அதுவும் COPYCAT மாதிரியான சீரியல் கில்லர் படம்தான் எனினும் ப்ராட்பிட் , மோர்கன் ஆகியோரின் நடிப்பால் ஒருமுறை பார்க்கும் வண்ணம் தான் இருக்கிறது .இதேபோல் THE SILENCE OF THE LAMPS திரைப்படமும் எனக்கு பிடிக்காமல் தான் போனது . அது என்னவோ தெரியவில்லை, சீரியல் கில்லர் வகையறா திரைப்படங்களில் HALLOWEEN  , PSYCHO தாண்டி அவ்வளவாக எதுவும் பிடிக்கவில்லை .




இதேபோல் நான் பார்த்து எனக்கு  பிடித்துப்போன ஒரு படம் NO COUNTRY FOR OLDMAN . ஒரு நாவலை எப்படி திரைப்படமாக்கவேண்டும் என்பதை இப்படத்தையும் அப்படத்தின் மூலநாவலான அதேபெயரில் இருக்கும் புத்தகத்தையும் படித்தால் தெரிந்துவிடும் . இப்படத்தில் CASTING மற்றும் திரைக்கதை மிகச்சிறப்பாக செய்யப்படிருக்கும் . படத்தில் மூவரின் குணாதிசயங்களையும் , சூழ்நிலைகளையும் விளக்கும் காட்சிகள் அருமை . கிளைமேக்ஸ் காட்சியில் ஆன்டன் , மோஸ்சின் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும்போது போலிஸ் சைரன் சத்தம் கேட்டு ஓடும்போது ஆ்கசிடன்ட் ஆவதும் அதைத்தொடர்ந்து அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களிடம் பணத்தைக்கொடுத்துவிட்டு துணியை வாங்கிக்கொண்டு ஆன்டன் ஓடும் ஒரு காட்சிக்காகவே எனக்கு இப்படத்தை மிகவும் பிடித்திருந்தது . ஆஸ்கார் விருதுகளை சிறந்த திரைப்படத்திற்காகவும் , சிறந்த டைரக்டர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதைக்காக அள்ளிய இத்திரைப்படத்தை பொறுமையும் நேரமும் இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம் .


பிடித்த படங்களில் இன்னும் SEVEN SAMURAI , CHILDRENS OF HEAVEN , FORREST GUMP , THE WAYS BACK , THE TERMINAL , CATCH ME IF YOU CAN , BLOOD DIAMOND என எக்கச்சக்க படங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் அவற்றுடன் சந்திக்கிறேன் .

Comments

  1. இவ்வளவு ஆழமாக திரைப்படங்களை பார்ப்பவர் பேசுபவர் மிகவும் குறைவு ...
    பதிவு எனக்கு மிகவும் பிடித்திருகிறது..
    அசத்தல் தளம் ஒன்றை இன்று பிடித்திருக்கிறேன்...
    தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா ! உங்களின் தளம் கண்டபோது நானும் இதே உவகைதான் அடைந்தேன்

      Delete
  2. Wow wow.....i had seen most of ur listed movies. But l like the movie seven. I cant understand one thing , that is how the "no country for old man " title suitable for that story..i cant get it from them..i like mostly tom hang. , morgon freeman,denzel Washington, liam neeson movies.

    ReplyDelete
    Replies
    1. என்ன காரணத்தினால் seven எனக்குப்பிடிக்காமல் போனது என்று எனக்கேத் தெரியவில்லை ஜீ ! no country for oldman படத்தின் தலைப்பு எனக்கென்னவோ ஒரு கவித்துமான டைட்டிலாகவே படுகிறது ! என்னால் அதை விவரிக்க இயலவில்லையெனினும் உணரமுடிகிறது ! நானும் வெறித்தனமான டாம்ஹாங்ஸ் ரசிகன் . நன்றிங்க !!!

      Delete
  3. நீங்க சொன்ன எல்லா படமும் எனக்கு பிடிக்கும் பட் ஒரு சின்ன டவுட் no country for oldman படத்தோட கிளைமாக்ஸ் எனக்கு புரியல கொஞ்சம் விளக்கம் தர முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. அந்த படத்தோட ஓபனிங் சீன்ல , போலிஸ்காரர் பேசற வசனத்தையும் , கிளைமேக்ஸ்ல அவர் பேசுற வசனத்தையும் கொஞ்சம் நல்லா கேட்டுப்பாருங்க ஜீ ! ஓரளவு புரியும் . அதுவுமில்லாம , இந்த படத்துக்குனு ஒரு முடிவு இல்ல . இந்த படத்தின்படி , அவரவர் தரப்பில் வாழ்க்கை அப்படினு எடுத்துக்கலாம் . இதுல , இவன் நல்லவன் , இவன் கெட்டவன்னு சொல்லமுடியாது . அதேமாதிரி , படத்தோட முடிவுனு எதுவுமே இல்ல . ஐ மீன் , நீங்க எந்த கேரக்டர எடுத்துக்கிறிங்களோ , அவங்களோட முடிவு தான் படத்தோட முடிவு .

      Delete
  4. ஓகே ஜீ பட் அந்த போலீஸ் சொல்ற கிளைமாக்ஸ் வசனம் எனக்கு சுத்தமா புரியல, கிளைமாக்ஸ் ல அந்த போலீஸ் அவண புடிக்குற மாதிரி வச்ருந்துருக்கலாம் ......
    தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வலியனுக்கு மட்டும்தான் உலகம் நாடு எல்லாம் . வலிமையற்றவனுக்கு எதுவும் இல்லைனு சிம்பிளா இந்த படத்த சொல்லலாம் ஜீ ! நமக்குப் பிடிக்கனும்னுலாம் இந்த படத்த எடுத்துருக்கமாட்டாங்க ! என்னதான் இருந்தாலும் இதுதான் நாட்டுல நடக்குதுனு ஆனியால அடிச்சமாதிரி சொல்லிருப்பாங்க !

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை