பிடித்த பிடிக்காத ஆங்கிலப்படங்கள்
ஹாலிவுட்டில் ஆஹா
ஓஹோ என்று கொண்டாடப்பட்டு எனக்கு பிடிக்காமல் மற்றும் பிடித்துப்போன சில படங்களைப்பற்றிய எனது
பார்வையே இந்த பதிவு ! இந்த படங்கள் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு புரிந்திருக்கலாம்
, பிடித்தும் இருக்கலாம் . எனகுப்பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று இப்பதிவில்
முடிந்தவரை அலசிப்பார்ப்பதே இப்பதிவு.
பிடிக்காமல் போன
படங்களின் வரிசையில் முதலில் இடம் பிடிப்பவை டோரன்டினோவின் படங்கள் . இவரின் படங்களில்
Kill Bill – Volume-களே நான் முதலில் பார்த்தேன் . எனக்கு இன்னமும் புரியாத விஷயம்
இந்த படம் என்ன ஜானர் என்று ? இது ஒரு ஸ்பூஃப் வகையறா படமா ? ரிவெஞ்ச் ஆக்சன் படமா
என்று வடிவேல் மாதிரி புரியாமல் குழம்பி கிடக்கிறேன் . Hansel Ang Gretal Witch
Hunters மாதிரியான படமாக இருக்குமோ என்று கூட நினைத்திருக்கிறேன் . ஏதோ மனம் போன போக்கில் எடுக்கப்பட்டிருக்கும் படமோ எனவும் எண்ணநினைக்கிறது . இப்படத்துடன்
SIN CITY படங்களைக்கொண்டும் கம்பேர் செய்து பார்த்தாலும் ஒத்துவரவில்லை . ரத்தம் தெறிக்கும்
ஆக்சன் படம் பண்ணனும் என்ற நினைப்பில் , டோரன்டினோ எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தைப்பார்த்தால்
நமக்குள்தான் டரியல்ஆகிறது . இந்த படத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதி சிவப்பு சாயத்திற்கே
ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும் . ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோயின் கத்தியை எடுத்து ஒவ்வொருவரையும்
வெட்டுவார் பாருங்கள் , 10HP மோட்டார் வைத்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தால்
கூட அவ்வளவு வேகமாக வராது . ஆனால் அனைவர் கைகளிலும் இருந்து ரத்தம் தெறிக்கும் பாருங்கள்
! அப்பா ! பார்க்கும் எனக்கு தான் ரத்தம் வந்தது . தமிழில் இருக்கும் துளியளவு லாஜிக்
கூட இப்படத்தில் இருக்காது . பார்ப்பவனை தன் அரைகுறை திரைக்கதையால் அடிமுட்டாளிக்கிவிட்டு
, வன்முறை அழகியல் என்ற சப்பைக்கட்டு கட்டுகிறாரோ என என் மனதில் பிம்பம் உருவானதுதான்
மிச்சம் . கிளைமேக்ஸ் காட்சியில் , எதிரிகள் இருவரும் ஏதோ டீக்கடை வாசலில் நாட்டுநடப்பு
பேசும் கிழடுகள் கணக்காய் சகவாசமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதெல்லாம் பார்க்கும்போது
படத்த எப்படா முடிப்பிங்க என்று மைன்ட் வாய்ஸ் கெஞ்ச துவங்கிவிட்டது . இப்படத்தின்
ஒரு காட்சி கூட எனக்குப்பிடிக்கவில்லை . ஆங்காங்கே வரும் காமெடி வசனங்கள் மற்றும் இசை மாத்திரமே தாக்குப்பிடித்து
படத்தை பார்க்கவைத்தது . அதிலும் இப்படத்தின் திரைக்கதை இருக்குதே ! ம் என்ன ஒரு அற்புதமான
திரைக்கதை !
ஹீரோயினை ஒரு காட்சியில்
புதைதுவிடுவார்கள் . ஹீரோயின் சில ஆண்டுகளுக்குமுன் மூச்சுப்பிடிக்க ட்ரைனிங் எடுத்துக்கொண்டார்
என்ற ஒரு சப்பை ப்ளாஷ்பேக் . எதற்கெடுத்தாலும் அதை ஞாயப்படுத்த ஒரு காட்சி . ஏதாவது
படம் எடுத்தாகவேண்டும் என்று டோரன்டினோ யோசித்திருப்பார் போல . பழிவாங்கும் கதையாக
எடுத்தால் என்ன என்று தோன்றியிருக்கவேண்டும் . உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்திருப்பார்
. என்னைப்போலவே நிறைய சோம்பேறித்தனத்தின் காரணமாய்
, எழுதியதை அப்படியே படமாக்கி விட்டார் போல . இவரின் Pulp Fiction கூட ஓரளவு பார்க்கும்
வண்ணம் அழகாய் எடுத்திருப்பார் . அந்த நம்பிக்கையில் இந்த படத்தைப்பார்த்து குழம்பியதுதான்
மிச்சம் . எந்த தைரியத்தில் இவரை குப்ரிக்குடன் ஒப்பிடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை
. இவரின் மாஸ்டர்பீசாக இருக்கும் Pulp Fiction (iMDb யில் மட்டும்) படம் , குப்ரிக்கின்
Eyes Wide Shut படத்தின் ஆரம்பகாட்சிக்குகூட ஈகுவல் ஆகாது என்பதே என் எண்ணம் . அப்படி
இருக்கும் பட்சத்தில் வாழ்நாளின் பெரும்பகுதி திரைப்படத்திற்காகவே ஒதுக்கி , ஒவ்வொரு
படத்திற்கும் தீயாய் உழைத்தவர் குப்ரிக் . FULL METAL JACKET படத்திற்குப்பின் 12 வருடம்
இடைவெளி விட்டு தான் EYES WIDE SHUT படத்தினை இயக்கினார் . EYES WIDE SHUT படத்தில்
, டாம் க்ரூஸ் மாஸ் ஆர்ஜியில் கலந்துகொள்ள செல்லும்போது சொல்லும் பாஸ்வேர்டான FEDELIO
என்பதற்காகவே பல நாட்கள் அழைந்து திரிந்து எழுதியவர் குப்ரிக் . அப்படி இருக்கும்போது
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் டோரன்டினோவை குப்ரிக்குடன் ஒப்பிட மனம் மறுக்கிறது
. ஒரு படத்தில் சொல்லவேண்டியவற்றை , குப்ரிக் ஒரு காட்சியிலேயே காண்பித்துவிடுவார்
. உதாரணத்திற்கு THE SHINING படத்தில் ஹீரோ ஒரு காட்சியில் பாத்ரூமில் நுழைவார். அங்கே
ஒரு இளம்பெண் நிர்வாணமாய் ஹீரோவை நோக்கி நடந்துவருவாள் . ஹீரோவை வந்து அவள் கட்டியனைக்கும்
காட்சியில் அப்படியே மெல்ல மெல்ல மாறி கிழவியாகிவிடுவாள் . அதாவது பெண்களின் உடல்மீது
ஆண்களுக்கு இருக்கும் இச்சை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்பவர்களுக்கு முகத்தில் அடித்தது
போல சொல்லியிருப்பார் . ஆனால் அரை மணிநேரத்தில் முடிக்கவேண்டிய படத்தை இரு VOLUMEகளாக
இழுத்து திரித்து பிரித்து தந்திருக்கிறார் க்வென்டின்.
அடுத்து இந்த படத்தின்
நான் – லீனியர் திரைக்கதையைப்பற்றி சிலர் சிலாகித்திருப்பதை பார்க்கும்போது அவ்வளவு
ஆனந்தம் பொங்குகிறது . இவரின் சமகாலத்தவர்களான டேரன் அரவனாஸ்கியின் THE FOUNTAIN ,
நோலனின் பெரும்பாலான படங்கள் , அதிலும் THE PRESTGE மாதிரியான படங்கள் மற்றும்
ETERNAL SUNSHINE OF SPOTLESS MIND போன்ற படங்களை எல்லாம் எடுத்துப்பார்த்தால் , அவர்களின் திரைக்கதைக்கு முன்னால் டோரன்டிடோவின்
திரைக்கதை பெரிதாக தெரியவில்லை .ஆனாலும் இவரின் INGLORIOUS BASTARDS பார்க்கவேண்டும்
என்ற ஆர்வம் இப்போதுதான் வருகிறது . கண்டிப்பாக PULP FICTION மாதிரி ஓரளவு ரசிக்கும்படிதான்
தந்திருப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது .
அடுத்து THE
USUAL SUSPECTS . இப்படம் வந்த புதிதில் ஏதேதோ மாற்றங்களை செய்தது என்று ஹாலிவுட் பட்சிகள்
பேட்டியளித்திருந்தனர் . ஆனால் என்னைப்பொறுத்தவரை ஒரு சுமாரான படமாகவே தெரிந்தது .
அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்டிற்காக அவ்வளவு நேரம் அப்படி இப்படி என்று இழுத்திருக்கிறார்களோ
என்று என்னவைத்தாலும் BRYAN SINGER –ன் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் பார்க்கும் வண்ணமே
இருக்கும் . இது அவருடைய மாஸ்டர்பீஸாக இன்னும் IMDB யில் இருக்கிறது . THE SIXTH
SENCE படம் கூட இதேபோல் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் இருந்தாலும் அவ்வளவாக போர் அடிக்காமல்
செல்லும் .ஆனால் இப்படம் சிறிது போர் தான் .
SE7VEN படம் எப்படி
IMDB TOP 25 –யில் இருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது . அதுவும்
COPYCAT மாதிரியான சீரியல் கில்லர் படம்தான் எனினும் ப்ராட்பிட் , மோர்கன் ஆகியோரின்
நடிப்பால் ஒருமுறை பார்க்கும் வண்ணம் தான் இருக்கிறது .இதேபோல் THE SILENCE OF THE
LAMPS திரைப்படமும் எனக்கு பிடிக்காமல் தான் போனது . அது என்னவோ தெரியவில்லை, சீரியல்
கில்லர் வகையறா திரைப்படங்களில் HALLOWEEN , PSYCHO தாண்டி அவ்வளவாக எதுவும் பிடிக்கவில்லை
.
இதேபோல் நான் பார்த்து
எனக்கு பிடித்துப்போன ஒரு படம் NO COUNTRY FOR OLDMAN . ஒரு நாவலை
எப்படி திரைப்படமாக்கவேண்டும் என்பதை இப்படத்தையும் அப்படத்தின் மூலநாவலான அதேபெயரில்
இருக்கும் புத்தகத்தையும் படித்தால் தெரிந்துவிடும் . இப்படத்தில் CASTING மற்றும்
திரைக்கதை மிகச்சிறப்பாக செய்யப்படிருக்கும் . படத்தில் மூவரின் குணாதிசயங்களையும்
, சூழ்நிலைகளையும் விளக்கும் காட்சிகள் அருமை . கிளைமேக்ஸ் காட்சியில் ஆன்டன் , மோஸ்சின்
மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கும்போது போலிஸ் சைரன் சத்தம் கேட்டு ஓடும்போது
ஆ்கசிடன்ட் ஆவதும் அதைத்தொடர்ந்து அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களிடம் பணத்தைக்கொடுத்துவிட்டு
துணியை வாங்கிக்கொண்டு ஆன்டன் ஓடும் ஒரு காட்சிக்காகவே எனக்கு இப்படத்தை மிகவும் பிடித்திருந்தது
. ஆஸ்கார் விருதுகளை சிறந்த திரைப்படத்திற்காகவும் , சிறந்த டைரக்டர் மற்றும் சிறந்த
தழுவல் திரைக்கதைக்காக அள்ளிய இத்திரைப்படத்தை பொறுமையும் நேரமும் இருந்தால் கண்டிப்பாக
பார்க்கலாம் .
பிடித்த படங்களில்
இன்னும் SEVEN SAMURAI , CHILDRENS OF HEAVEN , FORREST GUMP , THE WAYS BACK , THE
TERMINAL , CATCH ME IF YOU CAN , BLOOD DIAMOND என எக்கச்சக்க படங்கள் இருப்பதால்
அடுத்த பதிவில் அவற்றுடன் சந்திக்கிறேன் .
இவ்வளவு ஆழமாக திரைப்படங்களை பார்ப்பவர் பேசுபவர் மிகவும் குறைவு ...
ReplyDeleteபதிவு எனக்கு மிகவும் பிடித்திருகிறது..
அசத்தல் தளம் ஒன்றை இன்று பிடித்திருக்கிறேன்...
தொடர்ந்து எழுதுங்கள்..
நன்றி அண்ணா ! உங்களின் தளம் கண்டபோது நானும் இதே உவகைதான் அடைந்தேன்
DeleteWow wow.....i had seen most of ur listed movies. But l like the movie seven. I cant understand one thing , that is how the "no country for old man " title suitable for that story..i cant get it from them..i like mostly tom hang. , morgon freeman,denzel Washington, liam neeson movies.
ReplyDeleteஎன்ன காரணத்தினால் seven எனக்குப்பிடிக்காமல் போனது என்று எனக்கேத் தெரியவில்லை ஜீ ! no country for oldman படத்தின் தலைப்பு எனக்கென்னவோ ஒரு கவித்துமான டைட்டிலாகவே படுகிறது ! என்னால் அதை விவரிக்க இயலவில்லையெனினும் உணரமுடிகிறது ! நானும் வெறித்தனமான டாம்ஹாங்ஸ் ரசிகன் . நன்றிங்க !!!
Deleteநீங்க சொன்ன எல்லா படமும் எனக்கு பிடிக்கும் பட் ஒரு சின்ன டவுட் no country for oldman படத்தோட கிளைமாக்ஸ் எனக்கு புரியல கொஞ்சம் விளக்கம் தர முடியுமா ?
ReplyDeleteஅந்த படத்தோட ஓபனிங் சீன்ல , போலிஸ்காரர் பேசற வசனத்தையும் , கிளைமேக்ஸ்ல அவர் பேசுற வசனத்தையும் கொஞ்சம் நல்லா கேட்டுப்பாருங்க ஜீ ! ஓரளவு புரியும் . அதுவுமில்லாம , இந்த படத்துக்குனு ஒரு முடிவு இல்ல . இந்த படத்தின்படி , அவரவர் தரப்பில் வாழ்க்கை அப்படினு எடுத்துக்கலாம் . இதுல , இவன் நல்லவன் , இவன் கெட்டவன்னு சொல்லமுடியாது . அதேமாதிரி , படத்தோட முடிவுனு எதுவுமே இல்ல . ஐ மீன் , நீங்க எந்த கேரக்டர எடுத்துக்கிறிங்களோ , அவங்களோட முடிவு தான் படத்தோட முடிவு .
Deleteஓகே ஜீ பட் அந்த போலீஸ் சொல்ற கிளைமாக்ஸ் வசனம் எனக்கு சுத்தமா புரியல, கிளைமாக்ஸ் ல அந்த போலீஸ் அவண புடிக்குற மாதிரி வச்ருந்துருக்கலாம் ......
ReplyDeleteதங்கள் பதிலுக்கு மிக்க நன்றி
வலியனுக்கு மட்டும்தான் உலகம் நாடு எல்லாம் . வலிமையற்றவனுக்கு எதுவும் இல்லைனு சிம்பிளா இந்த படத்த சொல்லலாம் ஜீ ! நமக்குப் பிடிக்கனும்னுலாம் இந்த படத்த எடுத்துருக்கமாட்டாங்க ! என்னதான் இருந்தாலும் இதுதான் நாட்டுல நடக்குதுனு ஆனியால அடிச்சமாதிரி சொல்லிருப்பாங்க !
Delete