Sunday, 22 March 2015

22 JUMP STREET – சினிமா விமர்சனம்

சென்றபாகத்தில் பள்ளியில் நடக்கும் போதைப்பொருள் பிரச்சனைகளை ஓழித்தபின் ஜெங்கோ மற்றும் ஷ்மித் இருவரும் அன்டர்கவர் ஏஜென்டாக மாறுகிறார்கள் . முதல் காட்சியிலேயே ஜெங்கோ மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு மிஷனுக்குச்செல்ல , அங்கே ஸ்மித்தின் குளறுபடிகளால் மிஷன் நாசமாய்ப்போகிறது . இருந்தாலும் ஜெங்கோ எதுவும் சொல்லாமல் வழக்கம்போல நட்பு பாராட்டுகிறான் . இவர்களின் சொதப்பல்களைத்தொடர்ந்து இருவரையும் மீண்டும் JUMP STREET – க்கு அனுப்பிவைக்கபடுகிறார்கள் . 21  JUMPSTREET ல் இருந்த நிக்சனின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது . அதுதான்  22 JUMP STREET. ஏற்கனவே இருந்த கொரியன் ஜீசஸ்க்கு பதில் வியட்நாம் ஜீசஸ் , கண்ணாடி ரூம் , சென்ற பாகத்தில் ஜெங்கோவிற்கு  உதவிய  பள்ளிநண்பர்கள் மூவரும் இங்கு வேலைசெய்ய என ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பிக்கிறது திரைப்படம் . இம்முறை அவர்களிருவருக்கும் கொடுக்கப்பட்ட வேலை கல்லூரியில் போதைமருந்து விற்கும் கும்பலைப்பிடிப்பது . இந்த போதைமருந்தின் விளைவால் ஒரு மாணவி இறந்துவிட்டதாகவும் , WHYPHY எனும் போதைப்பொருளை அந்த இறந்த பெண்ணுக்கு ஒருவன் கொடுப்பது போன்ற ஒரு போட்டோ மாத்திரமே க்ளூவாக கிடைக்கிறது . அதைவைத்துக்கொண்டு கல்லூரிக்குள் மாணவர்களாக இருவரும் நுழைகிறார்கள் .

கல்லூரியில் வழக்கம்போல ஆள் பார்க்க கெத்தாக இருக்கும் ஜெங்கோவிடம் மாணவர்கள் ஜாலியாக பழக ஆரம்பிக்கிறார்கள் . ஆனால் ஷ்மித்தின் நிலை அப்படியில்லை . ஷ்மித் ரகசிய விசாரணையில் ஈடுபடும்போது இறந்த பெண்ணின் ரூமிற்கு எதிர்ரூமில் இருக்கும் மாயாவை சந்திக்கிறான் . இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள் . இன்னொருபுறம் ஜெங்கோ , ஷூக் மற்றும் அவனது நண்பர்களுடன் படுபயங்கர நட்புடன் இருக்கிறான் . ஷூக் குழுவினர் , ஷ்மித்தை எப்போது பார்த்தாலும் கலாய்க்கிறார்கள் . ஆனால் ஜெங்கோவை ,ஷூக் தலையில் வைத்துக்கொண்டாடுகிறான் . ஜெங்கோவுக்கும் ஷ்மித்துக்கும் எந்த க்ளூவும் கிடைக்காத காரணத்தினால் , இதற்கு உதவுமாறு சென்ற பாகத்தில் ஜெயிலுக்கு அனுப்பிய வால்டர்ஸ் மற்றும் எரிக்கைச்சந்திக்கிறார்கள் . அவன் போட்டைவைப்பார்த்துவிட்டு அதிலிருக்கும் ஆளின் கையில் இருக்கும் டாட்டுவைக்கவனித்து சொல்கிறார்கள் . அந்த டாட்டு ஷூக்கின் நண்பனான ரூஸ்டரிடம் இருக்கும் என நினைக்கையில் அது ஷூக்கிடன் கையில் இருக்கிறது . ஜெங்கோவிற்கு இவ்விஷயம் தெரிந்திருந்தும் அதை ஷ்மித்திடம் சொல்லாமல் மறைக்கிறான் . ஏனென்றால் ஷூக் தவறு செய்திருப்பான் என்று அவன் மனம் நம்பமறுக்கிறது . ஒருகட்டத்தில் இறந்துபோன அந்த பெண்ணே ஏன் வியாபாரியாக இருந்திருக்க கூடாது என்ற ரீதியில் யோசிக்கிறார்கள் . சரியாக GHOST எனும் அந்த வில்லனைப்பிடிக்கும் நேரத்தில் இருவரும் சொதப்பி  வில்லனைக் கோட்டைவிட்டதால் ஷ்மித்திற்கும் ஜெங்கோவிற்கும் முட்டிக்கொள்ள இருவரும் பிரிகிறார்கள் . ஜெங்கோ தன் வேலையை விட்டுவிட்டு கல்லூரியிலே ஷூக்குடன் இருந்துவிடுகிறான் . ஷ்மித்தோ வழக்கம்போல குளத்தில் கல் எறியும் சிறுவனை மிரட்டும் போலிசாக இருக்கிறான் .இன்னொருபுறம்  போலிசாரோ சம்பந்தமே இல்லாமல் ஒரு அப்பாவி புரபொசரைக்கைது செய்து அவன்தான் வில்லன் என்று சொல்லிவிடுகிறார்கள் . இதனைப்பார்த்து பொங்கியெழும் இருவரும் , கடைசிவேலை என்று கூறிவிட்டு வில்லனைத்தேடி செல்கிறார்கள் . வழக்கம்போல ஒரு ட்விஸ்ட் , அட்டகாசமானதொரு காமெடி கிளைமேக்சுடன் படம் சுபம் போடுகிறார்கள் . இந்த ஷ்மித் , ஆள் பார்ப்பதற்கு காற்றடைக்கப்பட்ட LAYS  இன்டர்நேசனல் அமெரிக்கன் ஆனியன் ஃப்ளேவர் சிப்ஸ் பாக்கெட் போல இருந்துகொண்டு எப்படித்தான் பிகர்களை கரெக்ட் செய்கிறாரோ ? இதிலும் மாயாவை கரெக்ட் செய்து , செய்து , கடைசியில் அவள் தன் மேலதிகாரி டிக்சனின் மகள் என்று தெரியும்போது அல்ட்ரா காமெடி . நண்பர்களின் பிரிவும் அதைத்தொடர்ந்த இருவரின் தனித்தனி வாழ்க்கையும் காட்சிப்படுத்தியதெல்லாம் அக்மார்க் தமிழ் திரைப்படங்களின் டெம்ப்ளேட் .  சென்ற பாகத்தைப் போன்றே டெம்ப்ளேட் காட்சிகள் இருப்பினும் ( எகா – போதைப்பொருளை உட்கொண்டு இருவரும் அட்டகாசம் செய்யும் காட்சிகள் , ஆரம்ப காட்சியில் வரும் கும்பலே படத்தின் இறுதியில் வில்லன் கேங்காக வருவது . ) , படம் உங்களின் நேரத்தை வீணாக்காது .  முக்கியமாக படம் முடிந்ததும் franchise படங்களை ஓட்டவது போல எடுக்கப்பட்டிருக்கும் போஸ்டர்களைப்பார்க்க மறக்காதிர்கள் . இதில் விளையட்டாக மூன்றாம் பாகம் எடுக்கப்படுவதாக சொல்லியிருந்தாலும் இரண்டாம் பாகமும் பெரியவெற்றிபெற்றதால் உண்மையாகவே 23 JUMP STREET எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் .
உங்கள் விருப்பம்

3 comments:

  1. தொடர்கிறேன் பாகத்தை நண்பரே நலம்தானே... காணவே இல்லை.
    த.ம.3

    ReplyDelete
  2. ஹோ.... அடுத்த சீரிஸ்ஸிம் வருதா... ஆன எனக்கு படம் பெரிசா பிடிக்கவில்லை..

    ReplyDelete