அனிமேஷன் திரைப்படங்கள் – ஒரு பார்வை
பொதுவாக
அனிமேஷன் படங்கள் என்றாலே குழந்தைகளுக்கானது என்றவொரு அபிப்ராயம் , அனிமேஷன் படம் பார்க்காதவர்களுக்கு
உண்டு . காரணம் , கார்ட்டுன் தொலைக்காட்சிகளில் போடும் மொக்கையான அனிமேஷன் சீரயல்களைச்
சொல்லலாம் . ஆனால் அந்த பார்வையெல்லாம் மேலைநாடுகளில் எப்போதோ வழக்கொழிந்துவிட்டது . அனிமேஷன் படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும்
பார்த்தாலே நமக்குத்தானாக புரியும் . நம் இந்தியாவிலும் இத்தகைய மனோபவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது . இப்போதெல்லாம் எங்கள் சேலத்தில்கூட ஆங்கிலத்தில்
ரிலிசாகும் அனிமேசன் படங்கள் , அமெரிக்காவில் ரிலிசாகும் அதேநேரத்தில் ரிலிசாகிறது
. FROZEN எனும் அனிமேசன் படம் , நோலனின் பெரும்ஹிட்டான டார்க்நைட் ரைசஸின் வசூலையேத்
தூக்கிச்சாப்பிட்டது . TOYSTORY 3 ஆம் பாகம் 1 பில்லியன் டாலர் வசூல் செய்து சினிமா
உலகையே வாயைப்பிழக்கவைத்தது . ஒருசில ஆண்டுகளில் வெளிவந்த அனிமேசன் திரைப்படங்கள் ,
அந்தந்த காலங்களில் வந்த மாபெரும் இயக்குநர்களின் வசூல்களையெல்லாம் தூக்கி அலேக்காய்
சாப்பிட்டு ஏப்பமெல்லாம் விட்டிருக்கிறது .
இதற்கெல்லாம்
என்னகாரணமாக இருக்கும் என என் கை,கால்களைக்
கசக்கிப்பிழிந்து நான் கண்டுபிடித்தது என்னவெனில் , ஆரம்பகாலகட்டங்களில் வெளிவந்த அனிமேசன்
திரைப்படங்களாகட்டும் , தொடர்களாகட்டும் , எல்லாமே குழந்தைகளிடமிருக்கும் குழந்தைத்தனத்தை
வெளிக்கொணரவே முயற்சித்தன . அதனால் பெரியவர்களுக்கு அனிமேசன் படங்களின் மேல் ஈடுபாடில்லாமல்
போய்விட்டது . எல்லாருக்கும் உண்டான ஒரே மனநிலை , அனிமேஷன் எனும் ஜெனர் குழந்தைகளுக்கென்ற
பிரத்தியோகமானது . ஆனால் இந்த எண்ணத்தை முதன்முதலில் மாற்றிக்காட்டிய திரைப்படமென்றால்
1992-ல் வெளிவந்த அலாவுதீனைக் ( ALADDIN ) குறிப்பிடலாம் . BASIC INSTINCT , டேவிட்
ஃபிஞ்சரின் ALIEN 3 , டிம் பார்டனின் BATMAN RETURNS , ரோலன்ட் எம்ரிச்சின்
UNIVERSAL SOLDERS , ராபர்ட் செமிக்ஸின் DEATH BECOMES HER , கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் UNFORGIVEN , ரிட்லி ஸ்காட்டின்
1492 , க்வென்டினின் RESERVOIRS DOGS போன்ற பெருந்தலைகளின் படங்கள் வெளிவந்த காலம் அது
. ஆனால் அத்தனை பேரையும் ‘ஆ!’வென வாயைப்பிழக்கவைத்து 500 மில்லியன் வசூல் செய்து அவ்வாண்டின்
வசூல் சக்கரவர்த்தியாக அலாவுதின் இருந்தது . (க்வின்டின் அப்போது அறிமுக இயக்குநராகத்தான்
இருந்தார் . இருப்பினும் இன்றளவும் அவரின் சிறப்பான ஒரே படமாக நான் கருதுவது RESERVOIRS
DOGS என்பதால் தான் லிஸ்ட்டில் இணைத்தேன் ) . இவ்விடத்தில் இன்னொன்றையும் கூறியாகவேண்டியிருக்கிறது
. 1937 – ல் வால்ட் – டிஸ்னியின் தயாரிப்பில் வெளிவந்த SNOW WHITE AND SEVEN DWARFS என்ற அனிமேஷன்
திரைப்படம் தான் முதன்முதலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வெற்றிவாகை சூடியது . ஆனால்
அதன்னபின் ஏறத்தாழ 67 ஆண்டுகள் குழந்தைகளுக்கு
மட்டும் என்றிருந்த சங்கதியை மாற்றிக்காட்டியது அலாவுதின் என்பதால்தான் அப்படத்திற்கு
நான் முன்னுரிமை கொடுத்தேன் . அலாவுதீனுக்குப்பிறகு 1994 –ல் வெளிவந்த THE LION
KING –ம் வசூலில் கலக்கியது . எனக்கு LION KING – ல் வரும் TIMON & PUMBAA –வின்
காட்சிகளெல்லாம் மிக மிகப்பிடிக்கும் . பின்னாட்களில் டிஸ்னியின் தமிழ் சேனலான டூன்
டிஸ்னியில் கூட TIMON மற்றும் PUMPAA ‘கூல் நாம தாதா’-வென்று தமிழில் அட்டகாசம் செய்த
ஒவ்வொரு எபிசோடையும் விடாமல் பார்த்த காலம் உண்டு . எப்படிப்பார்த்தாலும் அதன்பின்
வந்த அனிமேஷன் திரைப்படங்கள் பெரியவர்களிடம் இருக்கும் குழந்தைத்தனத்தை வெளிக்கொணர
முயற்சித்து , அதில் பெருவாரியான வெற்றியும் பெற்றுவிட்டது . அதேபோல் அனிமேசன் படங்கள்
அனைத்தும் அட்லீஸ்ட் ஒருமுறையாவது ரசிக்கும்வண்ணம் இருக்கும் . எந்த படமும் பார்க்கவே
முடியாத அளவிற்கு மொரட்டு மொக்கையாக இருக்காது என்ற மினிமம் கியாரண்டி அனிமேசன் படங்களில்
உண்டு . இன்றைய காலகட்டத்தில் அனிமேஷனுக்கென்றே தனி ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்
.
அன்று
பெனக்டோஸ்கோப்பில் ஆரம்பித்த டெக்னாலஜி இன்று கார்ட்டுன், அனிமேஷன் , மோசன் காப்சர்
எனப்பலவகையான பரிணாம மாற்றத்திற்குள்ளாகியுள்ளன . TRADITIONAL ANIMATION FILMS , COMPUTER
ANIMATION FILMS , STOP MOTION ANIMATION FILMS , ANIME ANIMATION FILMS போன்ற வகையறாக்கள்
மற்றும்
அதன் டெக்னாலஜிகள் பற்றியும் மெசபடோமியர்களின் பொற்காலமாக கருதப்படும் ஹம்முரபி காலத்திலான உலகின் முதல் அனிமேஷன் ஓவியத்தைப்பற்றியும்
, பிரெஞ்ச் நாட்டின் சார்லஸ் ரெய்னாட் , எமைல் கோல் , வால்ட் டிஸ்னி என ஒவ்வொருவரைப்பற்றியும்
தனித்தனியாக வரலாறுபாடம் நடத்தும் ஐடியா எனக்கில்லாத காரணத்தால் படங்களைப்பற்றி மட்டும்
காண்போம்
.
A BUG’S LIFE –
ஒரு எறும்புக்கூட்டம் . அதை அடிமைப்படுத்தி வேலைவாங்கும் கரப்பான்பூச்சிகள் கூட்டம்
. ஒருவேலையும் உருப்படியாக செய்யத்தெரியாத எறும்பு ஹீரோ . ஆனால் ஏதாவது புதிது புதிதாய்
கண்டுபிடிப்பான் . ஒருமுறை வில்லன் கூட்டத்திற்காக சேர்த்துவைத்திருந்த தானியமெல்லாம்
ஹீரோவின் செயல்களால் வீணாகிவிட , கரப்பான் பூச்சிகளின் கடுமையான கோவத்திற்கு எறும்புக்கூட்டம்
ஆளாகின்றன . கெடு ஒன்று வைத்துவிட்டு கரப்பான்கள் சென்றதும் , எறும்புக்கூட்டத்திலிருந்து
ஹீரோவை தள்ளிவைக்கிறாள் இளவரசி . அதன்பின் ஹீரோ காடுமேடெல்லாம் அலைந்து சில பூச்சிகளைக்கண்டறிகிறான்
. அந்த பூச்சிகளை 7 சாமுராயாக நினைத்து ஊருக்கு அழைத்துச்செல்கிறான் . கடைசியில் அவை
ட்ராமா போடும் பயந்தாங்கொள்ளிப்பூச்சிகள் எனத் தெரிகிறது . அதன்பின் வில்லன் க்ரூப்பிடம்
இருந்து எப்படி எறும்புக்கூட்டத்தை ஹீரோ ரக்ஷித்தார் என்பதே கிளைமேக்ஸ் . இப்படத்தை
டவுன்லோட் செய்யும்முன் தமிழ் பிரிண்ட் கிடைத்தால் அதையே டவுன்னலோட் செய்யுங்கள் .
தமிழில் இப்படத்திற்கு அட்டகாசமான வாய்ஸையும் வசனங்களையும் கொடுத்திருப்பார்கள் .
RIO – இப்படம் பற்றி பார்க்கும்முன் , நான் இப்படத்தை
எப்படிப்பார்த்தேன் என்று ஒருமுறை பார்த்துவிடலாம் . அதற்குமுன் (குடி , குடியைக்கெடுக்கும்
. குடிப்பழக்கம் உடலுக்கு தீங்கானது ) . ஒருமுறை
என் நண்பன் ஒருவனின் அழைப்புக்கேற்ப பெங்களூர்
சென்று , ஜாலியாக ஒருவாரம் ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன் . மாரத்தள்ளியில் உள்ள ஒரு மல்ட்டிபிளக்ஸ் அருகே இருந்த
பாரில் , பீரடித்துக்கொண்டிருந்தபோதுதான் , அந்த தியேட்டரில் RIO பட போஸ்டரைப்பார்த்தேன்
. சரி , வந்து ஒரு அனிமேசன் படத்திற்க்குகூட போகவில்லையெனில் அப்புறம் என்ன ஜாலி என்று
, அரைபோதையில் ரெண்டு டின் பீரை வாங்கி பாக்கெட்டில் சொருகிக்கொண்டு மாலினுள் நுழைந்தேன்
. டிக்கெட் எடுத்தபின்தான் தெரிந்தது , படம்போட இன்னும் ஒருமணிநேரம் ஆகும் என்று .
என்னடா இது வம்பா போச்சு என்று அருகிலிருந்த ரெஸ்டாரன்ட் சென்று சான்ட்விச்சின் உதவியால்
ஒரு பீரை முடித்துவிட்டு நேரே திரையரங்குச்சென்றேன் . படம்போட ஆரம்பித்த நேரம் என் பக்கத்தில் வாளிப்பான
இளைஞியும் , அவளுக்கென்றே அளவெடுத்து செதுக்கிய லூசு போன்ற ஒருவனும் வந்து அமர்ந்தார்கள்
. RIO படத்தைப்பற்றி என்ன சொல்வது ? HUM APKE HAIN KOUN படத்தைப்பற்றி தெரியாதவர்கள்
இருக்கமுடியாது . அந்த படத்தின் இயக்குநர்கூட இப்படத்தில் வரும் பாடல்களுக்குமுன் தோற்றுப்போய்விடவேண்டும்
என்றெண்ணி , காண்டில் சொருகிவைத்திருந்த இன்னொரு பீரையும் எடுத்து குடிக்க ஆரம்பித்தேன்
. அருகில் இருந்தவளோ என்னைத்திரும்பி பார்த்தாள் . அவள் பார்த்தால் என்ன ? பாக்காட்டி
என்ன ? என்று ஓரளவு தைரியம் வரவைத்துக்கொண்டே படத்தைப்பார்த்துக்கொண்டிருந்தேன் . சில
நிமிடங்களில் அவள் அருகோலிருந்த அவளின் காதலன் (OR) நண்பனிடம் ஏதோ சொல்ல , அவன் எழுந்து
சென்றான் . இந்த படத்த பாக்கறதுக்கு பதிலா எழுந்தே போயிடலாம் என்ற மனநிலையில் தானிருந்தேன்
. சிறிது நேரத்தில் அவனும் திரும்பி வர , அவர்களிவரும் ஏதோ வாய்ச்சண்டையில் ஈடுபட்டது
தெரிந்தது . பின் அவள் என்னிடம் திரும்பி ‘R U DRINKING ..?’ என வினவ , “Ya . Any
problem ?” என்று நான் கேட்க , “Do u have Additional one ?” என்று மறுபடியும் அவள்
கேட்டாள் . அப்புறம் என்ன ? அவளுக்கு நான் குடித்துக்கொண்டிருந்த பீரைக்கொடுத்துவிட்டு,
அந்த லூசு வாங்கிக்கொடுத்த டயட் பெப்சியை நான் குடித்துக்கொண்டிருந்தேன் . சரி , படத்தப்பத்தியா ? யோவ் ! நா போன தியேட்டர்ல
சப்டைட்டில் போடல . இதுக்கு நடுவுல நான் வேற புல் மப்பு . பக்கத்தில இதுங்க டார்ச்சர்
வேற . இந்த லட்சணத்துல எப்படியா படத்த பாக்கமுடியும் ? ஆனால் RIO , RIO -2 ஆகிய இரண்டுமே
டைம்பாஸுக்கு கேரண்டியான படங்கள் . தாராளமாய் பார்க்கலாம் . முதல் பாகம் பாடல்கள் அதிகம் கொண்ட அனிமேஷன் படங்களில் ஒன்றாக இருப்பினும் விஷுவலாக செம ட்ரீட்டாக இப்படம் இருக்கும் .
THE LEGO MOVIE –
இந்த படத்தை நான் பார்த்ததற்கு ஒரே காரணம் பேட்மேன் . ஒரு சாதாரண என்ஜினியர் , அவனுக்கேத்தெரியாமல்
வாழ்க்கையில் நடக்கும் அதிரடியான சம்பவங்கள் தான் கதை . இப்படத்தில் WB – ன் அனைத்து
சூப்பர் ஹீரோக்களும் ( சூப்பர்மேன் , பேட்மேன் , க்ரீன் லான்டர்ன் , கேட் உமன்
,,….) வருகிறார்கள் . STOPMOTION மாதிரியானடெக்னாலஜியில் படத்தை எடுத்திருப்பார்கள்
. இன்ட்ரஸ்டிங்காக சென்று கொண்டிருக்கும் படத்தில் கடைசி கிளைமேக்ஸ் ட்விஸ்ட் கண்டிப்பாக
உங்கள் மனதைக்கவரும் .
WRECK IT RALPH – கேம் சென்டர்களில் நாம் விளையாடும் கேம்களை
வைத்து ஒரு திரைப்படம் . ஆனால் கண்டிப்பாக உங்கள் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்
திரைப்படம் . இப்போது TEKKEN கேம் நாம் விளையாடுகிறோம் . விளையாடிமுடித்ததும் , நாம்
சென்றுவிடுவோம் . ஆனால் உள்ளே இருக்கும் எட்டி , லீ முதலான கேம் கேரக்டர்கள் உள்ளுக்குள்ளே
உயிருடன் உலாவுவதாக இருந்தால் எப்படி இருக்கும் ? அதுபோல தான் FIX IT FELIX எனும் கேமினுள் , வில்லனாக
வலம்வருபவன் WRECK IT RALPH . ஆனால் அவன் மிகவும் நல்லவன் . அவன் மனதைப்புரிந்துகொள்ளாமல்
, கேமுக்குள் உள்ள எல்லோரும் FIX IT FELIX – ஐயே கொண்டாடுகிறார்கள் . அதனால் RALPH
கோவித்துக்கொண்டு , கேம் PROGRAM வழியே உள்நுழைந்து வேறொரு கேமிற்குள் சென்றுவிடுகிறான்
. வில்லன் இல்லாத காரணத்தினால் FIX IT FELIX கேமை சிறுவர்கள் யாரும் விளையாட வரவில்லை
. எனவே அந்த மெஷினை அவுட் ஆப் ஆர்டரில் போட்டுவிட , கேமினுள் வாழ்பவர்களைக்காப்பாற்ற RALPH-ஐ கண்டுபிடித்தாக
வேண்டும் என்று FELIX –ம் கிளம்பிச்செல்வான் . அதன்பின் நடக்கும் அட்வெஞ்சர்களே படத்தின்கதை
.
WALL E –
அனிமேசன் திரைப்படங்களில் அட்டகாசமானதொரு படமாக என் நினைவில் உள்ளவைகளில் இப்படத்திற்கும்
தனியிடம் உண்டு . இம்மாதிரியான சயின்ஸ் – பிக்சன் கதைகளையெல்லாம் எத்தனைமுறைப்பார்த்தாலும்
சலிக்கவே சலிக்காது . அப்படி என்ன கதை என்கிறீர்களா ? உலகில் மனித இனமே இல்லை . மனித
இனம் மாத்திரமில்லை , உயிரினமே இல்லை . அந்நிலையில் WALL E எனும் ரோபாட் புவியில் இருக்கிறது
. ஒருமுறை ஒரு ஸ்பேஸ்சிப் ஒன்று வர , அதில் EVE எனும் அட்வான்ஸ்ட் பெண் ரோபோ வருகிறது
. WALL E க்கு அதைப்பார்த்ததும் காதல் வருகிறது . EVE புவியை முழுவதும் சர்ச் செய்ய
, ஒருகட்டத்தில் WALL Eயிடம் உள்ள ஒரு மாஞ்செடியைப்பார்க்கிறது . உடனே ஸ்பேஸ்சிப்பில்
WALL E-யைக்கைதியாக்கி அழைத்துச்செல்லப்பட , அதைத்தொடர்ந்து என்னவாகின்றது என்பதே இத்திரைப்படம்
. இப்படத்தின் பாதிக்குமேற்பட்ட காட்சிகள் வசனமில்லாமலே நகரும் என்பது கூடுதல் சிறப்பு
. கண்டிப்பாக பார்க்கவேண்டிய அனிமேஷன் படங்களில் இதுவும் ஒன்று .
PUSS IN BOOTS –
ஏற்கனவே இப்படத்தைப்பற்றி தனி விமர்சனமே எழுதிவிட்டேன் . இருந்தாலும் படிக்காதவர்கள்
இங்கே க்ளிக்கி படித்துக்கொள்ளுங்கள் .
RATATOUILLE – அல்பிரடோ எனும் அரைகுறை சமையல்கலைஞனுக்கு
, ரெமி எனும் எலி உதவி செய்து எப்படி சமையல் கலையில் வல்லுனனாக்குகிறது என்பதே இப்படம்
என்று ஒருவரியில் சொல்லமுடியவில்லை . அதைவிட நிறைய விஷயம் படத்தில் இருக்கிறது . கண்டிப்பாக
இத்திரைப்படமும் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் .
CARS – வெல் , இந்த படத்தை உங்களில் பலர் பார்த்திருக்கலாம்
. ஏனென்றால் இந்தியாவில் வெளியான அனிமேசன் படங்களில் ஒரு கலக்கு கலக்கியது இந்த திரைப்படம்
எனலாம் . பிஸ்டன் எனும் கார் ரேசுக்கான உலகக்கோப்பையில் ஜெயிக்க லைட்னிங் மெக்குய்ன்
எனும் காரிற்கு அதிக வாய்ப்பிருக்கும் . ஆனால் அந்த காரோ கொஞ்சம் சீன் போடும் . ஒருமுறை
பிரயாணத்தில் , 4 மரைகழண்ட மென்டல்கார்களால் வழிதப்பிப்போய் ஒரு ஊரில் மெக்குய்ன் மாட்டிக்கொள்ளும்
. அந்த ஊர்க்கார்கள் கிடைத்தானடா ஒரு அடிமை என அதை பயங்கரமாக வேலை வாங்க , இது தப்பி
ஓட முயல என நகரும் கதை அட்டகாசமாக முடியும் . கிட்டத்தட்ட தமிழில் சம்திங் சம்திங்
படத்தின் பாதிப்பை ஆங்காங்கே இப்படத்திலும் உணரமுடியும் . இதன் இரண்டாம் பாகமும் அருமையாக
இருக்கும் . தமிழில் கூட டப் செய்யப்பட்டது என நினைக்கிறேன் .
பின்குறிப்பு - மேற்கண்ட படங்களில்
ஒருமுறை பார்க்கும் வண்ணம் உள்ள திரைப்படங்கள் - RIO , RATATUILLE , THE LEGO MOVIE , A BUG'S LIFE .
மற்ற படங்கள் என்னைப்பொறுத்தவரை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காதவண்ணம் இருக்கும் .
இன்னும்
எழுத எக்கச்சக்கமான படங்கள் இருந்தாலும் பதிவின் நீளம் கருதி MONSTERS.inc , THE
CROODS , TOY STORY , TANGLED , ASTRO BOY , EPIC , FROZEN , DESPICAPLE ME , FINDING
NEMO , ICE AGE , SHREK , MADAGASKAR ,UP , THE INCREDIBLES , MEGA MIND , HOW TO
TRAIN YOUR DRAGON , BIG HERO 6 , HAPPY FEET போன்ற படங்களைப் பற்றியெல்லாம் வரும்
பதிவுகளில் பார்க்கலாம் .
தளம் கூட புதுப் பொலிவோடு இருக்கிறது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇதுக்கெல்லாம் காரணம் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனும் பாலகணேஷ் அண்ணனும் தாங்ணா .
Deleteவழக்கமான பாணியில் பிரமாண்டமாக எழுதியுள்ளீர்கள் இதைப் பார்க்கும்போது நானும் காரைக்கால் அம்மையார் விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது....
ReplyDeleteதமிழ் மணம் 3
பேயார் பற்றி எழுதறதுனா தாராளமா எழுதுங்ணா . அம்மையார் வாழ்க்கை அற்புதம்ம நிறைந்த ஒன்னு . உங்களோட கட்டுரைக்காக வெயிட்டிங் அண்ணா
Deleteஅடுத்த பதவின் தொடர்ச்சிகளையும் இதே சுவாரசியத்துடன் எதிர்பார்கின்றேன்...
ReplyDeleteநான் சுவாரஸ்யமா எழுதறேங்றது நீங்க சொல்லித்தான் சகோ எனக்கேத்தெரியும் . நன்றி சகோ.
Deleteபடத்தை விட உங்க பீர் அனுபவம் ரொம்ப கிக் தந்தது :)
ReplyDeleteத ம +1
பிரமாண்டம் என்பது இதுதானோ..??
ReplyDeleteஇன்னும் எக்கசக்க படம் இருக்கிறதா...!!!
ReplyDeleteஅடுத்தப் பதிவை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்
ReplyDeleteSuper👍
ReplyDelete