FAST & FURIOUS 7 – சினிமா விமர்சனம்




FAST தொடரில் ஜஸ்டின் அளவிற்கு ஜேம்ஸ் படுவேகமான இந்த சீரிசை எப்படி எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் , அதைக்காட்டிலும் ஜேசன் ஸ்டேதம் வில்லன் கேரக்டரில் என்ன செய்யப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும் படம் பார்க்கச்சென்றேன் . மேலும் ONE LAST RIDE என்ற PAPER AD – கள் வேறு இப்படமே இந்த சீரிஸின் கடைசிப் பாகமென்றும் கூறியிருந்தார்கள் . வழக்கமாக எங்கள் ஊர் தியேட்டரில் , அதுவும் ஆங்கிலப்படத்துக்கெல்லாம் ஷோ டைமிற்கு 10 நிமிடம் முன்னால் போனதுமே டிக்கெட் வாங்கிவிடலாம்.   அந்த நினைப்பிலேயே 11.30 ஷோவுக்கு 11 மணிக்குப்போனால் அப்படியே ஷாக்காகிட்டேன் . தல , தளபதி படம் எதுவும் ரிலிசாகியிருக்கா என்ற சந்தேகம் வேறு . என்னடான்னு பார்த்தா , எல்லாம் என்னைப்போலவே FAST சீரிஸின் , சீரியஸான ரசிகர்கள் . எப்படியோ என் நண்பனின் புண்ணியத்தால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உழ்நுழைந்ததும் ஒன்றைப் புரிந்துகொண்டேன். இந்த தலைமுறையில் திரைப்படம் பார்க்கவரும் பெரும்பாலான இளைஞர்கள் , தங்களின் சந்தோஷத்திற்காக வருகிறார்களோ இல்லையோ , சமூகவலைத்தளங்களின் மத்தியில் ,  தான் இந்தபடம் பார்த்துக்கொண்டிருப்பதாக சீன் போடுவதற்கே வருகிறார்கள் . எங்கெங்கு காணினும் அங்கங்கு போட்டோ மற்றும் FB ஷேரிங் . டேய் ! படத்தோட கதைய எழுதுடானா ,  போன கதை , வந்த கதையெல்லாம் எதுக்குடா எழுதுற ?னு நீங்கள் கடுப்பாவது தெரிகிறது . நான் மட்டும் வச்சிகிட்டா வஞ்சனை பன்றேன் . FAST படங்களில் எந்த படத்தில்தான் ஒழுங்கான கதை இருக்கிறது ? இதில் மட்டும் இருக்க . இருந்தாலும் கதை என்ற பெயரில் பழைய பதிவுகளைப்போல் ஏதாவதொன்றை எழுதியாகவேண்டிய கட்டாயத்தால் கதை என்னவென்று எழுதுகிறேன் .

ஜேசன் ஸ்டேதமின் ரசிகர் நீங்களென்றால் படத்தின் முதல்காட்சியே விசிலடிக்கத்தயாராகுங்கள் . ஏனென்றால் எடுத்தவுடன் படுமிடுக்காக தலைவர் வருகிறார் . அவரின் அண்ணனும் சென்ற பாகத்தின் வில்லனுமான ஷாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார் . திடுமென கிளம்புகிறார் . நேராய் டோக்கியா சென்று ஹேனைப்போட்டுத் தள்ளுகிறார் . இன்னொருபுறம் ஹாப்சின் கைகால்களை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்கபோட்டு விடுகிறார் . டாமினிக்கின் வீட்டில் பாமை வைத்து வீட்டையே தரைமட்டமாக்குகிறார் . உடனே வழக்கம்போல் டாமினிக்கின் டீம் ஒன்றாகிறது . ஆனால் , ‘ஸ்டேதமைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல ! அவன் ஒரு நிழல்மாதிரி . அவன் நினைத்தாலொழிய நம்மைச்சந்திக்கமுடியாது . அதற்கு நான் உதவுகிறேன் ’ என்று ஒரு சீக்ரட் ஏஜென்ட் அமைப்பினர் தெரிவிக்கின்றனர் .  அதற்கு பிரதிபலனாக  மோஸ் எனும் ஒரு அயோக்கியனிடம் ரான்ஸி எனும் ஹேக்கர் மாட்டிக்கொண்டிருக்கிறாள் எனவும் , அவளையும் அவள் கண்டுபிடித்த ஒரு ஹேக்கிங் டிவைசையும் கண்டுபிடிக்கும் பொறுப்பு டாமினிக்கின் குழுவுக்குத் தரப்படுகிறது . அந்த ஹேக்கிங் டிவைஸ் மூலம் , உலகிலுள்ள யாரையும் எளிதாக ட்ரேஸ் செய்துவிடமுடியும் என்பதால் , அதைவைத்து வில்லன் ஸ்டேதமையும் பிடித்துவிடலாம் என்பது டாமினிக்கின் ஐடியா .

இப்போது ரான்ஸியை மீட்க டாமினிக்கின் கும்பல் கிளம்புகிறது . இந்த சண்டைக்காட்சியைப்பார்த்து உங்களுக்கு உடல் சிலிர்க்கவில்லையெனில் ஆச்சர்யம் தான் . நம்மை ஒரு 20 நிமிடம் கண்கூட சிமிட்டவிடாதவாறு ஒரு அட்டகாசமான சண்டைக்காட்சி . ப்ளேனில் இருந்து காருடன் குதித்து பாரசூட்டை விரிக்கும் இடமும் , தொடர்ந்து காடு , மலை , மேடு , பள்ளமென கண்மூடித்தனமான கார் ரேசிங்கும் உங்களைக்கண்டிப்பாக அசத்தும் . அந்த சண்டையின் முடிவில் ரான்சியை மீட்டுவிடுகிறார்கள் .  ஆனால் அவள் கண்டுபிடித்த ஹேக்கிங் டிவைசானாது சவுதியில் ஒரு பேக் , சாரி ஷேக்கின் காரில் உள்ளது .  அந்த பணக்கார கோடிஸ்வரனிடமிருந்து அந்த டிவைசை மீட்டுவதற்குள் , ஒரு அட்டகாசமான லாம்போ காரை எடுத்து 100 மாடி கட்டிங்கள் மூன்றில் , பாலமே இல்லாமல் பறந்தே கிராஸ் செய்யும் காட்சியெல்லாம் நான் வாயைப்பிழந்தே விட்டேன் . அங்கிருந்து டிவைசை எடுத்துக்கொண்டு வந்தவர்கள் , ஜேசன் ஸ்டேதமை கொத்தோடு காலி செய்ய கெத்தாக போனால் அங்கு ஸ்டேதம்  , மோஸுடன் கூட்டணி சேர்ந்து டாமினிக்கையும் பிரெய்னையும் துரத்திவிடுவார் . அங்கு நடந்த மோதலில் டிவைஸ் வில்லர்களின் கைக்கு மாட்டிக்கொள்கிறது . இப்போது ஸ்டேதம் மற்றும் மோஸின் ஆட்கள் டாமினிக்கின் குடும்பத்தைப்போட்டுத்தள்ள வர , அவர்களிடமிருந்து எப்படி இவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதே கதை .

FAST சீரிஸ்களை உலகளவில் தலைநிமிரச்செய்த திரைப்படமென்றால்ல அது ஜஸ்டினின் இயக்கத்தில் வந்த நான்காவது பாகம்தான் . எப்படி அந்த படத்தின் வாயிலாக ஒரு அடித்தளத்தை ஜஸ்டின் அமைத்துக்கொடுத்தாரோ , அதேபோல் FAST சீரிஸின் அடுத்தகட்டத்திற்கு ஜேம்ஸ்வான் இப்படத்தின் மூலம் நகர்த்தியிருக்கிறார் .  சத்தியமாக இந்த படத்தில் கதை என்பதெல்லாம் ஒரு ஓரம்தான் . எனக்கு FAST சீரிஸ்களில் FAST 5 மிகமிக பிடித்த திரைப்படம் . ஆனால் இதுவரை வந்த FAST படங்களையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு படுகெத்தாக இப்படம் மின்னுகிறது . ஒரு படத்தில் வில்லனுக்கு கொடுக்கப்படும் இம்பார்ட்டன்டை பொறுத்தே படமும் அட்டகாசமாக இருக்கும் . இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு THE DARK KNIGHT –ஐக் குறிப்பிடலாம் . இதுவரை வந்த FAST படங்களில் வந்த வில்லன்கள் எல்லாம் டொக்காகி நிற்க , இப்படத்தின் வில்லனான ஜேசன் ஸ்டாதம் அதகளம் புரிகிறார் . கோவா படத்தில் லாரி ட்ரைவர் , படத்தின் ஆரம்ப காட்சியில் புதிய ஆசாமி , போலிஸ்ஆபிசர் , ஐயர் என பல கேரக்டரில் ஒருவரே வலம் வருவார் . அதேபோல் இந்த படத்தில் டாமினிக் எங்கு சென்றாலும் அவ்விடத்தில் திடீர் என்ட்ரியாகி ஜேசன் ஸ்டேதம் அதகளம் புரியும் காட்சிகள் அனைத்தும் அட்டகாசம் . டோனிஜாவை நான் பெரிதும் எதிர்பார்த்தேன் . ஆனால் இரண்டே சண்டைக்காட்சிகளில் வந்து ஆ வூ எனக்கத்திவிட்டு மண்டையப்போட்டுவிடுகிறார் .  ஹாப்சாக வரும் ராக்குக்கு ஆரம்பகாட்சியில் ஸ்டேதமிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தாலும் கிளைமேக்ஸில் எழுந்துவந்து ஒரு ஏவுகனையை வெடிக்கச்செய்யும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார் . பிரெய்னாக வரும் பால் வாக்கருக்கும் இப்படத்தில்  ஸ்கோர் செய்ய நிறைய இடமிருந்தது . அவருக்காக பயன்படுத்திய டூப்கள் , அச்சுஅசலாக அவரையே வெளிக்கொணர்ந்து காட்டியிருக்கிறார்கள் . கிளைமேக்ஸில் வரும் வசனங்கள் அனைத்தும் அவரைப்பற்றியே கூறுவது மனநெகிழ்ச்சியாக இருந்தது . ரோமன் பியர்ஸாக வரும் தைரிஸ் கிப்சன் வழக்கம்போல காமெடி வசனங்களால் நம்மைச்சிரிக்க வைக்கிறார் . தமிழ் டப்பிங்கில் அவருடைய வாய்ஸ் மாத்திரமே படுகேவலமாக இருந்தது . சீன் போஸ்வெல் கேரக்டரும் படத்தில் இணையும் என்று எதிர்பார்த்திருந்தேன் . ஆனால் அந்த கேரக்டரை அப்படியே ஓரங்கட்டிவிட்டார்கள் . அடுத்த பாகத்தில் ஜஸ்டின் அந்த கேரக்டரை உபயோகிப்பார் என நம்பலாம் . மியாவு்ககு இந்த படத்தில் எந்த வேலையும் இல்லை . ஆனால் அழகாக இருக்கிறார் . லெட்டிக்கு வழக்கம்போல கிளைமேக்ஸில் நினைவு திரும்பி அந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதெல்லாம் அசத்தல் . எப்போது பார்த்தாலும் கணினியிலேயே காலம் கடத்தும் தெஜ் பார்க்கர் கேரக்டர் இப்படத்தில் ஒரேஒரு அட்டகாசமான சண்டை போட்டு நம் வாயைப்பிழக்கவைக்கிறார்கள் .

சி.ஜி. , விஷுவல் எஃபெக்ட் , சினிமாட்டோகிராபி , இசை என அனைத்தும் அட்டகாசம் . ஸ்டன்ட் காட்சிகளை வடிவமைத்த புண்ணியவானை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் . வழக்கம்போல எல்லா படங்களிலும் வரும் ரேஸ் சீன்கள் இல்லாமலிருப்பது ஆறுதல் .  ONE LAST RIDE னு சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார்கள் . இன்னும் பத்து பாகம் எடுக்கப்படும் என நினைக்கிறேன் . அதனால் FAST படங்களின் ரசிகர்கள் வருத்தப்படவேண்டாம் . மற்றபடி இது  ஒரு அட்டகாசமான திரைப்படம் என்பதில் துளி சந்தேகமுமில்லை . FAST SERIES ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண ஆக்சன் பிரியர்களும் தாராளமாக சென்று படத்தினைக் காணலாம் . ஆனால் அதற்குமுன் மற்ற பாகங்களை ஒருமுறைப்பார்த்துவிட்டுச்சென்றால் முழுகுஷியுடன் படத்தினைக்காண முடியும் . என்ன ! அதற்கு நேரமில்லையா ? அப்படியானால் நான் எழுதிய FAST தொடர்களை ஒருமுறைப்படித்துவிட்டு செல்லுங்கள் . அதுவே போதும் . படத்தினை முடிந்தால் 3D யில் பாருங்கள் . அப்போதுதான் உண்மையான பிரம்மாண்டம் தெரியும் .






Comments

  1. தங்களுடைய விமர்சனம் படிக்கும்போதே படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது நண்பரே ஒரு வகையில் சந்தோஷம் பணம் மிச்சம் நலம்தானே பார்க்க முடியவில்லையே... சினிமா நிறைய பார்த்துக்கொண்டே இருகீங்களோ விமர்சனம் எழுத..
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. பார்க்க வேண்டும் நண்பா... நன்றி...

    ReplyDelete
  3. கண்டிப்பா 3D யில் பார்த்திட வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. வணக்கம் மெக் அசத்தல் பதிவு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  5. shot and shared in The Trend Setters WhatsApp group...

    ReplyDelete
  6. #நான் மட்டும் வச்சிகிட்டா வஞ்சனை பன்றேன்#
    நல்லாவே கதை விடுறீங்க மெக்னேஷ்ஜி:)

    ReplyDelete
  7. #நான் மட்டும் வச்சிகிட்டா வஞ்சனை பன்றேன்#
    நல்லாவே கதை விடுறீங்க மெக்னேஷ்ஜி:)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை