FAST & FURIOUS 7 – சினிமா விமர்சனம்
FAST
தொடரில் ஜஸ்டின் அளவிற்கு ஜேம்ஸ் படுவேகமான இந்த சீரிசை எப்படி எடுப்பார் என்ற எதிர்பார்ப்பும்
, அதைக்காட்டிலும் ஜேசன் ஸ்டேதம் வில்லன் கேரக்டரில் என்ன செய்யப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும்
படம் பார்க்கச்சென்றேன் . மேலும் ONE LAST RIDE என்ற PAPER AD – கள் வேறு இப்படமே இந்த
சீரிஸின் கடைசிப் பாகமென்றும் கூறியிருந்தார்கள் . வழக்கமாக எங்கள் ஊர் தியேட்டரில்
, அதுவும் ஆங்கிலப்படத்துக்கெல்லாம் ஷோ டைமிற்கு 10 நிமிடம் முன்னால் போனதுமே டிக்கெட்
வாங்கிவிடலாம். அந்த நினைப்பிலேயே 11.30 ஷோவுக்கு 11 மணிக்குப்போனால்
அப்படியே ஷாக்காகிட்டேன் . தல , தளபதி படம் எதுவும் ரிலிசாகியிருக்கா என்ற சந்தேகம்
வேறு . என்னடான்னு பார்த்தா , எல்லாம் என்னைப்போலவே FAST சீரிஸின் , சீரியஸான ரசிகர்கள்
. எப்படியோ என் நண்பனின் புண்ணியத்தால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு உழ்நுழைந்ததும் ஒன்றைப்
புரிந்துகொண்டேன். இந்த தலைமுறையில் திரைப்படம் பார்க்கவரும் பெரும்பாலான இளைஞர்கள்
, தங்களின் சந்தோஷத்திற்காக வருகிறார்களோ இல்லையோ , சமூகவலைத்தளங்களின் மத்தியில்
, தான் இந்தபடம் பார்த்துக்கொண்டிருப்பதாக
சீன் போடுவதற்கே வருகிறார்கள் . எங்கெங்கு காணினும் அங்கங்கு போட்டோ மற்றும் FB ஷேரிங்
. டேய் ! படத்தோட கதைய எழுதுடானா , போன கதை
, வந்த கதையெல்லாம் எதுக்குடா எழுதுற ?னு நீங்கள் கடுப்பாவது தெரிகிறது . நான் மட்டும்
வச்சிகிட்டா வஞ்சனை பன்றேன் . FAST படங்களில் எந்த படத்தில்தான் ஒழுங்கான கதை இருக்கிறது
? இதில் மட்டும் இருக்க . இருந்தாலும் கதை என்ற பெயரில் பழைய பதிவுகளைப்போல் ஏதாவதொன்றை
எழுதியாகவேண்டிய கட்டாயத்தால் கதை என்னவென்று எழுதுகிறேன் .
ஜேசன்
ஸ்டேதமின் ரசிகர் நீங்களென்றால் படத்தின் முதல்காட்சியே விசிலடிக்கத்தயாராகுங்கள்
. ஏனென்றால் எடுத்தவுடன் படுமிடுக்காக தலைவர் வருகிறார் . அவரின் அண்ணனும் சென்ற பாகத்தின்
வில்லனுமான ஷாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார் . திடுமென கிளம்புகிறார் . நேராய் டோக்கியா
சென்று ஹேனைப்போட்டுத் தள்ளுகிறார் . இன்னொருபுறம் ஹாப்சின் கைகால்களை உடைத்து ஆஸ்பத்திரியில்
படுக்கபோட்டு விடுகிறார் . டாமினிக்கின் வீட்டில் பாமை வைத்து வீட்டையே தரைமட்டமாக்குகிறார்
. உடனே வழக்கம்போல் டாமினிக்கின் டீம் ஒன்றாகிறது . ஆனால் , ‘ஸ்டேதமைப்பிடிப்பது அவ்வளவு
எளிதானதல்ல ! அவன் ஒரு நிழல்மாதிரி . அவன் நினைத்தாலொழிய நம்மைச்சந்திக்கமுடியாது
. அதற்கு நான் உதவுகிறேன் ’ என்று ஒரு சீக்ரட் ஏஜென்ட் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்
. அதற்கு பிரதிபலனாக மோஸ் எனும் ஒரு அயோக்கியனிடம் ரான்ஸி எனும் ஹேக்கர்
மாட்டிக்கொண்டிருக்கிறாள் எனவும் , அவளையும் அவள் கண்டுபிடித்த ஒரு ஹேக்கிங் டிவைசையும்
கண்டுபிடிக்கும் பொறுப்பு டாமினிக்கின் குழுவுக்குத் தரப்படுகிறது . அந்த ஹேக்கிங்
டிவைஸ் மூலம் , உலகிலுள்ள யாரையும் எளிதாக ட்ரேஸ் செய்துவிடமுடியும் என்பதால் , அதைவைத்து
வில்லன் ஸ்டேதமையும் பிடித்துவிடலாம் என்பது டாமினிக்கின் ஐடியா .
இப்போது
ரான்ஸியை மீட்க டாமினிக்கின் கும்பல் கிளம்புகிறது . இந்த சண்டைக்காட்சியைப்பார்த்து
உங்களுக்கு உடல் சிலிர்க்கவில்லையெனில் ஆச்சர்யம் தான் . நம்மை ஒரு 20 நிமிடம் கண்கூட
சிமிட்டவிடாதவாறு ஒரு அட்டகாசமான சண்டைக்காட்சி . ப்ளேனில் இருந்து காருடன் குதித்து
பாரசூட்டை விரிக்கும் இடமும் , தொடர்ந்து காடு , மலை , மேடு , பள்ளமென கண்மூடித்தனமான
கார் ரேசிங்கும் உங்களைக்கண்டிப்பாக அசத்தும் . அந்த சண்டையின் முடிவில் ரான்சியை மீட்டுவிடுகிறார்கள்
. ஆனால் அவள் கண்டுபிடித்த ஹேக்கிங் டிவைசானாது
சவுதியில் ஒரு பேக் , சாரி ஷேக்கின் காரில் உள்ளது . அந்த பணக்கார கோடிஸ்வரனிடமிருந்து அந்த டிவைசை மீட்டுவதற்குள்
, ஒரு அட்டகாசமான லாம்போ காரை எடுத்து 100 மாடி கட்டிங்கள் மூன்றில் , பாலமே இல்லாமல்
பறந்தே கிராஸ் செய்யும் காட்சியெல்லாம் நான் வாயைப்பிழந்தே விட்டேன் . அங்கிருந்து
டிவைசை எடுத்துக்கொண்டு வந்தவர்கள் , ஜேசன் ஸ்டேதமை கொத்தோடு காலி செய்ய கெத்தாக போனால்
அங்கு ஸ்டேதம் , மோஸுடன் கூட்டணி சேர்ந்து
டாமினிக்கையும் பிரெய்னையும் துரத்திவிடுவார் . அங்கு நடந்த மோதலில் டிவைஸ் வில்லர்களின்
கைக்கு மாட்டிக்கொள்கிறது . இப்போது ஸ்டேதம் மற்றும் மோஸின் ஆட்கள் டாமினிக்கின் குடும்பத்தைப்போட்டுத்தள்ள
வர , அவர்களிடமிருந்து எப்படி இவர்கள் தப்பிக்கிறார்கள் என்பதே கதை .
FAST
சீரிஸ்களை உலகளவில் தலைநிமிரச்செய்த திரைப்படமென்றால்ல அது ஜஸ்டினின் இயக்கத்தில் வந்த
நான்காவது பாகம்தான் . எப்படி அந்த படத்தின் வாயிலாக ஒரு அடித்தளத்தை ஜஸ்டின் அமைத்துக்கொடுத்தாரோ
, அதேபோல் FAST சீரிஸின் அடுத்தகட்டத்திற்கு ஜேம்ஸ்வான் இப்படத்தின் மூலம் நகர்த்தியிருக்கிறார்
. சத்தியமாக இந்த படத்தில் கதை என்பதெல்லாம்
ஒரு ஓரம்தான் . எனக்கு FAST சீரிஸ்களில் FAST 5 மிகமிக பிடித்த திரைப்படம் . ஆனால்
இதுவரை வந்த FAST படங்களையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு படுகெத்தாக இப்படம் மின்னுகிறது
. ஒரு படத்தில் வில்லனுக்கு கொடுக்கப்படும் இம்பார்ட்டன்டை பொறுத்தே படமும் அட்டகாசமாக
இருக்கும் . இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு THE DARK KNIGHT –ஐக் குறிப்பிடலாம் . இதுவரை
வந்த FAST படங்களில் வந்த வில்லன்கள் எல்லாம் டொக்காகி நிற்க , இப்படத்தின் வில்லனான
ஜேசன் ஸ்டாதம் அதகளம் புரிகிறார் . கோவா படத்தில் லாரி ட்ரைவர் , படத்தின் ஆரம்ப காட்சியில்
புதிய ஆசாமி , போலிஸ்ஆபிசர் , ஐயர் என பல கேரக்டரில் ஒருவரே வலம் வருவார் . அதேபோல்
இந்த படத்தில் டாமினிக் எங்கு சென்றாலும் அவ்விடத்தில் திடீர் என்ட்ரியாகி ஜேசன் ஸ்டேதம்
அதகளம் புரியும் காட்சிகள் அனைத்தும் அட்டகாசம் . டோனிஜாவை நான் பெரிதும் எதிர்பார்த்தேன்
. ஆனால் இரண்டே சண்டைக்காட்சிகளில் வந்து ஆ வூ எனக்கத்திவிட்டு மண்டையப்போட்டுவிடுகிறார்
. ஹாப்சாக வரும் ராக்குக்கு ஆரம்பகாட்சியில்
ஸ்டேதமிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தாலும் கிளைமேக்ஸில் எழுந்துவந்து
ஒரு ஏவுகனையை வெடிக்கச்செய்யும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார் . பிரெய்னாக வரும் பால்
வாக்கருக்கும் இப்படத்தில் ஸ்கோர் செய்ய நிறைய
இடமிருந்தது . அவருக்காக பயன்படுத்திய டூப்கள் , அச்சுஅசலாக அவரையே வெளிக்கொணர்ந்து
காட்டியிருக்கிறார்கள் . கிளைமேக்ஸில் வரும் வசனங்கள் அனைத்தும் அவரைப்பற்றியே கூறுவது
மனநெகிழ்ச்சியாக இருந்தது . ரோமன் பியர்ஸாக வரும் தைரிஸ் கிப்சன் வழக்கம்போல காமெடி
வசனங்களால் நம்மைச்சிரிக்க வைக்கிறார் . தமிழ் டப்பிங்கில் அவருடைய வாய்ஸ் மாத்திரமே
படுகேவலமாக இருந்தது . சீன் போஸ்வெல் கேரக்டரும் படத்தில் இணையும் என்று எதிர்பார்த்திருந்தேன்
. ஆனால் அந்த கேரக்டரை அப்படியே ஓரங்கட்டிவிட்டார்கள் . அடுத்த பாகத்தில் ஜஸ்டின் அந்த
கேரக்டரை உபயோகிப்பார் என நம்பலாம் . மியாவு்ககு இந்த படத்தில் எந்த வேலையும் இல்லை
. ஆனால் அழகாக இருக்கிறார் . லெட்டிக்கு வழக்கம்போல கிளைமேக்ஸில் நினைவு திரும்பி அந்த
இடத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதெல்லாம் அசத்தல் . எப்போது பார்த்தாலும் கணினியிலேயே
காலம் கடத்தும் தெஜ் பார்க்கர் கேரக்டர் இப்படத்தில் ஒரேஒரு அட்டகாசமான சண்டை போட்டு
நம் வாயைப்பிழக்கவைக்கிறார்கள் .
சி.ஜி.
, விஷுவல் எஃபெக்ட் , சினிமாட்டோகிராபி , இசை என அனைத்தும் அட்டகாசம் . ஸ்டன்ட் காட்சிகளை
வடிவமைத்த புண்ணியவானை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் . வழக்கம்போல எல்லா படங்களிலும்
வரும் ரேஸ் சீன்கள் இல்லாமலிருப்பது ஆறுதல் . ONE LAST RIDE னு சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார்கள்
. இன்னும் பத்து பாகம் எடுக்கப்படும் என நினைக்கிறேன் . அதனால் FAST படங்களின் ரசிகர்கள்
வருத்தப்படவேண்டாம் . மற்றபடி இது ஒரு அட்டகாசமான
திரைப்படம் என்பதில் துளி சந்தேகமுமில்லை . FAST SERIES ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண
ஆக்சன் பிரியர்களும் தாராளமாக சென்று படத்தினைக் காணலாம் . ஆனால் அதற்குமுன் மற்ற பாகங்களை
ஒருமுறைப்பார்த்துவிட்டுச்சென்றால் முழுகுஷியுடன் படத்தினைக்காண முடியும் . என்ன !
அதற்கு நேரமில்லையா ? அப்படியானால் நான் எழுதிய FAST தொடர்களை ஒருமுறைப்படித்துவிட்டு
செல்லுங்கள் . அதுவே போதும் . படத்தினை முடிந்தால் 3D யில் பாருங்கள் . அப்போதுதான்
உண்மையான பிரம்மாண்டம் தெரியும் .
தங்களுடைய விமர்சனம் படிக்கும்போதே படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது நண்பரே ஒரு வகையில் சந்தோஷம் பணம் மிச்சம் நலம்தானே பார்க்க முடியவில்லையே... சினிமா நிறைய பார்த்துக்கொண்டே இருகீங்களோ விமர்சனம் எழுத..
ReplyDeleteதமிழ் மணம் 2
பார்க்க வேண்டும் நண்பா... நன்றி...
ReplyDeleteகண்டிப்பா 3D யில் பார்த்திட வேண்டியதுதான்.
ReplyDeleteவணக்கம் மெக் அசத்தல் பதிவு வாழ்த்துக்கள் ...
ReplyDeleteshot and shared in The Trend Setters WhatsApp group...
ReplyDelete#நான் மட்டும் வச்சிகிட்டா வஞ்சனை பன்றேன்#
ReplyDeleteநல்லாவே கதை விடுறீங்க மெக்னேஷ்ஜி:)
#நான் மட்டும் வச்சிகிட்டா வஞ்சனை பன்றேன்#
ReplyDeleteநல்லாவே கதை விடுறீங்க மெக்னேஷ்ஜி:)