BATMAN v SUPERMAN : DAWN OF JUSTICE – சினிமா விமர்சனம்

ஒவ்வொரு வருடமும் ரிலிசாகும் படங்களில் கண்டிப்பாக இந்த இந்த படங்களுக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற ஒரு லிஸ்ட் நம்மிடம் இருக்கும்; நானும் அம்மாதிரியே தான் இருந்தேன். ஆனால் இந்த ஆண்டு, ஒரே ஒரு திரைப்படம் மட்டும் பார்க்கவே கூடாது என்று ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவெடுத்தது இத்திரைப்படத்திற்குத்தான். முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோவை மக்கள் மத்தியில் ஒரு லெஜன்டாக உருவாக்கிவிட்டு அவர் சென்றார். பேட்மேனை ரீபூட் செய்த மாதிரி சூப்பர்மேனையும் ரீபூட் செய்தால் நன்கு கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்த வார்னர் பிரதர்ஸ் அதையும் சக்ஸசாக நிறைவேற்றியது. சூப்பர் மேனின் ரீபூட் வெர்சனனான மேன் ஆஃப் ஸ்டீல் 2013-ல் வெளிவந்து சூப்பர்மேனுக்கு உயிர்கொடுத்தது. சூப்பர்மேனின் இரண்டாம் பாகத்திற்காக வார்னர் பிரதர்ஸ் செய்த கொடுமை தான் இந்த படம். முதலில் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்முன் அவசியம் பார்க்கவேண்டிய இரண்டு திரைப்படங்களை இங்கு கூறிவிடுகிறேன். ஸ்னைடர் இயக்கத்தில் 2013-ல் வெளிவந்த மேன் ஆஃப் ஸ்டீல் மற்றும் ஜேய் ஓலிவா இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த அன...