Posts

பயணம் @ டைம் மெஷின்-3

Image
அத்தியாயம்-1ஐப்படிக்க   இங்கே அழுத்துங்கள் அத்தியாயம்-2ஐப்படிக்க  இங்கே அழுத்துங்கள் அத்தியாயம் – 3 கி.மு 2-ம் நூற்றாண்டு பகுதி-1 ,காஞ்சிபுரம் நாள் – கி.மு 27.03.0210 ‘டேய் சந்துரு! நாம வந்துட்டோம்டோ ! ’ ‘ஆமாண்டா பாலா !’ பாலாவும், சந்துருவும் அந்த மெஷினிலிருந்து இறங்கி, மீண்டும் அதே வனாந்திரத்தை பார்த்தார்கள். முன்பைவிட அடர்ந்து காணப்பட்டது. அவர்கள் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட காடுகளின் அழிவுகளைக்காட்டிலும், அவர்கள் பயணித்த இரண்டு நூற்றாண்டுகளில் குறைவாக அழிக்கப்பட்டுள்ளது என்பதனை உணர்ந்தனர். முதல் வேலையாக அந்த டைம் மெஷினை மறைக்க எத்தனித்தார்கள்.அந்த வனத்தில் காணப்பட்ட புங்கை மரங்களின் தழைகளும் , நெருஞ்சிமரத்தின் இழைகளும் , அந்த டைம் மெஷனை மறைக்க , அவர்களுக்கு உதவியது. கிளம்பும் முன், அந்த முனிவரின் உபதேசத்தின் பேரில், அவருடைய வீட்டில் இருந்து தானம் பெறப்பட்ட வேட்டிகளை எடுத்து, அவரைப்போலவே மார்பு முதல் முழங்கால் வரை மறைக்க கடும் பிரயத்தனப்பட்டு கட்டி முடித்தார்கள். எப்படியும், தஞ்சாவூரை அடைய ஒரு வாரம் பிரயாணப்பட வேண்...

பாஸ்போர்ட்-சிறுகதை

Image
‘நாளைக்கு எத்தனை மணிக்குடா அப்பாயிண்ட்மென்ட்’ ‘காலைல 9.15 க்கு ணா’ ‘ எல்லா டாகுமென்ட்ஸ்சும் எடுத்து வச்சிட்டியா ? ’ ‘வச்சிட்டேன் ணா ’ அண்ணனின் கேள்விக்கு விடையளித்தவாறே ,தன் பிறப்பு முதல் படிப்பு வரை அத்தனை சான்றிதழ்களையும் தயார் செய்து கொண்டிருந்தான் , ருபேஷ் . ‘ டேய் ருபேசு , நாம காலைல 5 மணிக்குலாம் சேலம் பஸ் ஸ்டான்ட்ல இருந்தா தான் , கோயமுத்தூருக்கு, கரெக்டா போய்  சேர முடியும் ’ ‘சரி ணா ’ ‘என்னடா ! எல்லாம் ரெடி பண்ணிட்டிங்கலா ?’ அம்மாவின் குரலை கேட்டு இருவரும் திரும்பினர் . ‘எடுத்து வச்சிட்டேன் மா’ என்றான் ரூபேஸ் , அலட்சியமாக . ‘சரி, சரி நானும் அப்பாவும் உங்க பெரியப்பா பையன் கல்யாணத்துக்கு கிளம்பறோம் . காலைல வர 8 மணி ஆகிடும் .சாப்பாடு செஞ்சு வச்சிட்டே. ஒழுங்கா சாப்டு கிளம்புங்க . நீங்க கிளம்பனதும் எனக்கு போன் பன்னுங்க ’ என்றபடியே கிளம்பினாள் அவர்களின் தாய் . ‘ சரிம்மா ’ ‘ச்சே ! இந்த சனியம்புடிச்ச பாஸ் போர்ட்  இன்டர்வியூ நாளைக்கா வைக்கனும் ? ஏண்ணா , கல்யாணத்துல செம செமயா சாப்பாடு போடுவாங்கள்ள?’ ‘ அடப்பாவி ! சாப்பாடுல...

காப்பி கூச்சலில் புலம்பும் இணையம்

Image
இந்த FACEBOOK பக்கம் வந்தாலே, இப்போலாம் காப்பி கூச்சல், டீ ட்ரெண்ட், செம ஸ்டண்டுனு ஒரே அட்டூழியம் பன்றாய்ங்க, இந்த இணைய போராளிங்க!! சரி, அப்படி என்னதான் காபி அடிச்சிருக்காய்ங்கனு பாத்தா, ஒரு சீன்ல ஹீரோ கக்கூஸ் போற மாதிரி நின்னுட்டுருக்கார்ல, அந்த காட்சி ஒரு கொரியன்லருந்து சுட்டது, அவர் நடக்கற காட்சி ஈரான்லருந்து சுட்டது, அவரு போட்டுருக்க கண்ணாடி அமெரிக்காவுலருந்து சுட்டது, ஷூ , ஜப்பான்லருந்து சுட்டதுனு என்னமோ வடை சுட்ட கணக்கா சொல்றாய்ங்க. ஒரு படத்த, அப்பட்டமா வெறும் காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி , கேமரா ஆங்கில் மாத்தி வச்சு எடுத்தா தானே அது காப்பி, நாலைஞ்சு படங்கள்ல வர்ற சீன்லாம் ஒன்னா சேர்த்தா அது பேரு இன்ஸ்பிரேசன்தானயா-னு கேட்டா, யோவ் ஒரு வட சுட்டாலும் ஒன்னுதான் , பல வட சுட்டாலும் ஒன்னுதான் அப்படிங்றாய்ங்க. என்னைப்பொறுத்த வரை, ஒவ்வொரு துறையிலும் , ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் காதல் என்பது ஒன்று தான். அதை அனைவரும் உணர்ந்ததே. பணக்காரன் ஆயினும் ஏழை ஆயினும் அவன் மனதில் தோன்றும் காதல் என்பது ஹீரோயினை தன் நெஞ...

அந்த 7 நாட்கள் 1-8-2013 - 8-8-2013

Image
நண்பர்களே!! இப்பதிவின் வாயிலாக , ஒரு வாரத்தில் நான் பார்த்த படங்களை பற்றி பகிர்வதே, இப்பதிவின் நோக்கம். ORPHAN(2009) - திரில்லர் மிகச்சாதாரணமாக ஆரம்பிக்கும் திரைப்படம், வாவ் சொல்ல வைக்கும் கிளைமேக்ஸ் உடன் முடியும், ஒரு சிறந்த திரில்லர் வகையிலான திரைப்படம். ஒரு 12வயது பெண்குழந்தையை , அநாதை இல்லத்திலிருந்து தத்து எடுத்து வளர்க்கிறார்கள் ஒரு தம்பதியினர். அக்குழந்தை மிக SMART ஆகவும், திறமைசாலியாகவும் இருக்கிறது. திடிரென சில கொலைகளை செய்கிறது. அவ்வீட்டில் இருக்கும் தம்பதியின் குழந்தைகளை கொலை செய்யவும் முயற்சிக்கிறது. அதைத்தாண்டி, அவ்வீட்டின் தலைவனை படுக்கையறைக்கு அழைக்கிறது. எதற்காக இப்படி செய்கிறது , யார் அந்த குழந்தை போன்றவைகளுக்கு, நம்மை திகைக்க வைக்கும் கிளைமேக்சில் விடை உள்ளது. கிளைமேக்சை முதலிலே கண்டுபிடிப்பவர்களுக்கு ‘ யுரேகா தளபதி’ பட்டம் வழங்கப்படும் படத்தின் கேமரா கோணங்கள் , எடிட்டிங் ஆகியவை சிறப்பு . த்ரில்லர் ரசிகர்கள் , தவறவிடக்கூடாத படம். THE DEPARTED(2006) – ட்ராமா , திரில்லர் , ஆக்சன் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கார்...

THE FOUNTAIN-2006 சினிமா விமர்சனம்

Image
ஒரு சில வார்த்தைகள் நம் தமிழ் இயக்குனர்களுக்கு , எட்டுப்போட்டாலும் சுட்டுப்போட்டாலும் வர்றாத ஜெனர் என்றால் , அது FANTASY வகையறா திரைப்படங்கள் தான்.கடைசியாக ரிலிசான மான் கராத்தே கூட இந்த வகையறா படம் என்றாலும், அது மான் கராத்தே போலில்லாமல் , நத்தை கராத்தே அளவுக்கு கூட இல்லாமல் சொத்தையாக இருந்தது. தமிழில் FANTASY வகை படங்கள் என்றால், இப்போதைய நிலையில் இருரை சொல்லலாம். முதலாமாவர் செல்வராகவன். என்னைப்போலவே FANTASY வெறிபிடித்தவர்.ஆனால் இனி தமிழே வேண்டாம்னு தெலுங்கு மக்களை மகிழ்விக்க ப்ளைட் பிடித்துவிட்டதாக கேள்விபட்டேன். இரண்டாமாவர் சிம்புதேவன். இவரின் அறை எண் 305-ல் கடவுள் சுமாராக இருக்கும். 12B மற்றும் தேவுடு சேசின மனசுலு படங்களின் தாக்கத்தில் இவர் எடுத்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ,சரக்கடித்துவிட்டு எடுத்த வாந்தி போல ஆனது. சரி, வேறு படங்கள் எதுவும் தமிழில் இருக்கிறதா என்று அண்ணன் கூகிளில் தேடினால், ஏதோ வேலாயுதம் என்ற FANTASY படம் இருப்பதாக தெரிவித்தது.எப்படி நாம அந்த படத்த மிஸ் பன்னோம்னு யோசிச்சிகிட்டே பாத்தப்ப தான் தெரிஞ்சது, அது இளைய தளபதியின் படம்னு. 'எங்க ...

Abraham Lincoln-சினிமா விமர்சனம்

Image
ஆப்ராகம் லிங்கன் என்று பெரிய எழுத்தில் போட்டிருந்த டைட்டிலை படித்த நான், THE VAMPIRE HUNTER  என சின்னதாக கொடுத்திருந் த கேப்சனை என்பதை கவனிக்கவில்லை. கவனித்திருந்தாலும் , அவ்வளவு சிரத்தையாக பாத்திருக்கமாட்டேன்.இது ஏதோ ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை பற்றிய படம் என்ற எண்ணம்தான் இருந்தது. THE VAMPIRE, WOLF போன்ற FORMULA-களில் வந்த ஆங்கில படங்களில் எனக்குப்பிடித்தது இரண்டு தான். ஒன்று X-MEN , மற்றும் VAN HELSING.இதைத்தவிர TWLIGHT SERIES படங்கள் அதி அற்புதமாக இருக்கும் என்று கூரிய என் நண்பனை படம் பார்த்துவிட்டு வெளியே வந்து நானே, WOLVERINE-ஆக மாறி கொல்லலாம் என்றுதான் தோன்றியது. ஒருவேஏளை முதல் பாகத்திலிருந்து பார்த்திருந்தால், பிடித்திருக்கலாம். ஆபிரஹாம் லிங்கன் என்ற மனிதரின் பெயர் இடம்பெறாமல், அமெரிக்காவில் எந்தவிழாவும் நடைபெறாது என என் அமெரிக்கவாழ்நண்பர்கள் மூலமாக அறிந்திருக்கிறேன்.நிறத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்டிருந்த , அமெரிக்க கருப்பின மக்களை , அடிமைகள் எனும் சங்கிலியிலிருந்து விடுவித்தவர் இவர். 'மக்களால் , மக்களுக்காக , மக்களே தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி '-என்ற...