VALKYRIE – சினிமா விமர்சனம்



சமகால ஹாலவுட்இயக்குநர்களில் நான் பெரிதும் எதிர்பார்க்கும் (அ) ரசிக்கும் இயக்குநர்களில் BRYAN SINGER-ம் ஒருவர் . இவரின் படங்கள் ,நோலனைப்போல் குழப்பும் விதத்தில் திரைக்கதை இருக்காது . டேரன் அர்வனாஸ்கியைப்போல் வித்தியாசமாகவோ அல்லது படத்தின் கதாபாத்திரங்கள் நம்மனதில் தாக்கத்தையோ ஏற்படுத்தாது . ஆனால் நம்மை அப்படியே படத்தினுள் இழுத்துச்செல்லும் விதமான மேஜிக் திரைக்கதை தான் இவருடைய ஸ்பெஷல் . ஆங்காங்கே அழகழகான ட்விஸ்டுகளுடன் அருமையாக நகர்த்துவார் . USUAL SUSPECTS படத்தின்மூலம் உலகிற்கு அறிமுகமானவர் (சினிமாத்துறைக்கு அல்ல ) , அடுத்த படத்திலேயே மண்ணைக்கவ்வி விட்டார் . ABT PUPIL எனும் நாஜிக்களைப்பற்றிய அவருடைய படம் ஓரளவு நன்றாயிருந்தாலும் ஏன் ஓடவில்லை என்று தெரியவில்லை . அதன்பின் X-MEN சீரிஸின் முதல்பகுதியை இயக்கி கமர்ஷியல் ரூட்டைப்பிடித்தார் . அதைத்தொடர்ந்து வந்த X2 வும் பெட்டிபெட்டியாக கல்லா , அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய SUPERMAN RETURNS – க்கு பலத்த எதிர்பார்ப்பு . படமும் பெயரைக்கெடுக்காமல் காப்பாற்றியது . அதன்பின் மீண்டும் இம்மாதிரியான சூப்பர்ஹிரோ டைப் படங்களைத்தவிர்த்து USUAL SUSPECTS மாதிரியான திரில்லர் படத்தை இயக்கலாமென்று முடிவு செய்தபோது கிடைத்தது தான் VALKYRIE . இந்த படமும் நாஜிக்களைப்பற்றியதே .

ஏற்கனவே இரண்டாம் உலகப்போரை வைத்து மையமாக வந்த LIFE IS BEUTYFUL , THE PIANIST , THE WAY BACK ஆகிய படங்களைப்பற்றி நமது தளத்தில் பார்த்திருப்பீர்கள் .(இதே மாதிரியான படங்களைப்பார்க்க விரும்புவோருக்கு SCHINDLER’S LIST , THE BOY IN STRIPPED PYJAMAS போன்ற படங்களைப் பரிந்துரைக்கிறேன் . ) ஆனால் மேலே நாம் பார்த்த படங்கள் பெரும்பாலும் FEEL GOOD அல்லது DRAMA ஜெனர்களில் இருக்கும் . நாஜிக்களால் யூதர்கள் அடைந்த துன்பம் , நாஜிக்களின் அதிகாரம் , நாஜிக்களில் உள்ள யாரெனும் ஒரு நல்லவர் மாதிரியான கான்செப்டில் தான் படங்கள் இருக்கும் . ஆனால் இது அப்படியல்ல.  முழுக்க முழுக்க திரில்லர் . நமது சுதந்திர போரில் வேலூர் சிப்பாய் கலகம் என்றதொரு தலைப்பை படித்திருப்பீர்கள் . 1801 மே 21 ல் நடைபெற்ற தென்னிந்திய புரட்சியில் , கதாநாயகரான மருதுபாண்டியர் புதுக்கோட்டை அரசனால் காட்டிகொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டதும் புரட்சி மெல்ல அடங்கியது . அதைத்தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நாயக்கர்களின் படையில் இருந்த பலர் வேறுவழியின்றி ஆங்கிலேயருடன் இணைக்கப்பட்டார்கள் . அதேசமயம்  ஆங்கிலேயருக்கு எதிராக போராடி இறந்த திப்புசுல்தானின் மகனும் அதே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் . ஏற்கனவே தங்களின்னஅரசர்களை கொன்றுவிட்டார்களே  என்று நாயக்க , பாளையக்கார சிப்பாய்கள் பொறுமிக்கொண்டிருக்க , அந்நேரத்தில் புதிதான பல விதிகளை கிழக்கிந்திய கம்பனி தங்களின் ராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியது . இந்த விதமுறைகள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வெறுப்பை உண்டாக்க ,அவர்களும் ஆங்கிலேயர்களைக்கண்டு துவேசம் கொண்டார்கள் . இச்சமயத்தை நன்குபயன்படுத்திக்கொண்ட திப்புவின் மகன் , அந்த சிப்பாய்களையும் , சிறையில் இருந்த தன்னுடைய படையினரையும் மூளைச்சலவை செய்தார் . 1806 , ஜூலை 9-ந்தேதி , திப்புவின் மகளுக்கு அந்த கோட்டையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது . அன்று இரவே தங்களின் திட்டங்களை ஒவ்வொருவரும் செயல்படுத்த ஆரம்பிக்க , அடுத்தநாள் காலை , வேலூர் கோட்டையில் திப்புவின் கொடி பறந்தது .சிப்பாய்களால் திப்பு மன்னராக அறிவிக்கப்பட்டார் . ஆனால் இது அதிகநேரம் நீடிக்கவில்லை . ஆங்கிலேயேருக்கு தகவல் சென்றதும் , ஆர்க்காட்டில் இருந்து ஒரு ஆங்கிலேய படை வந்து , கலகத்தை அடக்கி வேலூர் கோட்டையை மீட்டது .



கிட்டத்தட்ட இதேநிலைதான் ஹிட்லருக்கும் . ஹிட்லர் ஜெர்மனுக்கான ராணுவத்தை தனக்கானதாக்கி கொண்டார் . ராணுவவீரர்களை தாம்தான் ஜெர்மனி என்பதுபோல உருவாக்கி விட்டிருந்தார் . ஆரம்ப காலங்களில் RIECH GERMANY என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டிருந்த நிலை மாறி HEIL HITLER எனும் கோஷத்திற்கு மாற்றினார் . ஐரோப்பபிய கண்டத்தையே கிடுகிடுவென நடுங்கவைத்திருந்த ஹிட்லர் , தன்னுடைய படைகளை ஆப்பிரிக்காவிற்கும் அனுப்பியிருந்தார் . ஆனால் நேசநாடுகளின் எழுச்சியைத்தொடர்ந்து ஹிட்லரின் பேரரசுக்கு ஆப்பு வைக்கப்பட்டது . அதன் முதல் அடி ஆப்பிரிக்கா தான் எனலாம் . துனிசியா பகுதியில் நேசநாடுகளின் வான்வெளித்தாக்குதலால் காயத்திற்கு உள்ளானவர் காலினல் ஸ்டஃபன்பெர்க் (stauffenberg) . ஹிட்லர்தான் ஜெர்மனி என நம்பும் ஜெர்மானிய வீரர்களுக்கு மத்தியில் , ஜெர்மனிதான் தன்னுடைய தாய்நாடு , ஹிட்லர் அதை நாசமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷக்கிருமி என்று உணரும் ஜெர்மானிய காலினல்  . ஆனால் அந்த சண்டையில் அவனுடைய ஒருகையின் மணிக்கட்டுடன் துண்டிக்கப்படுகிறது . மேலும் மற்றொரு கையில் இரண்டு விரல்களையும் , இடது கண்ணையும் (இடதா ? வலதானு தெரியல .left கண்ணு அவுட்டு ) இழக்கிறான் . அந்நிலையில்தான் ஜெனரல் ஆல்ப்ரிட்ஜ் , பெர்க்கை ஜெர்மன் பாதுகாப்புப்படையில் சேர்த்துக்கொள்கிறார் . அங்கே ஹிட்லருக்கு எதிராக , ஜெனரல் ஆல்பிரிட்ஜ் போன்ற  சில பெரிய அதிகாரிகள் இயங்குவதையும் பெர்க் அறிகிறார் . ஆனால் அங்கிருக்கும் பெருந்தலைகளுக்கெல்லாம் ஹிட்லரைக்கொல்லவேண்டும் என்பதே தலையாய எண்ணமாக இருக்கிறது . ஹிட்லரைக்கொன்ற பின் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்கள் . அப்போதுதான் பெர்க் சொல்கிறார் OPERATION VALKYIRE .

ஹிட்லர் , தன்னுடைய பாதுகாப்புக்கும் நாட்டில் ஏற்படும் உள்நாட்டுக்கலவரத்தையும் தடுக்க SS எனும் பாதுகாப்பு ராணுவத்தை வைத்திருந்தார் . இவர்கள் , ஜெர்மன் மற்றும் ஜெர்மன் ஆக்கிரமித்த நாடுகளின் தலைமையகங்களில் இருப்பார்கள் . இவர்களை கோர்ட்டு , செனட் சபை , ராணுவம் , போலிஸ் என எந்த துறையும் கட்டுப்படுத்த இயலாது .  இவர்களின் ஒரே தலைவர் ஹிட்லர் மட்டும் தான் . அவரின் கட்டளைகள் இல்லாமல் இவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் . இவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம் , கொலையும் செய்யலாம் . நாடிடன்நிலை மோசமாகி , ஒருவேளை எதிரிகள் ஜெர்மானிய ராணுவத்தை தகர்த்து உள்நுழைந்தால் , நாட்டின் மு்ககிய கேப்பிடல்களை கன்ட்ரோல் செய்து எதிரிகளை துரத்தியடிக்கும் பொறுப்பு இவர்களுடையது . ஒருவேளை ஜெர்மானிய ராணுவமோ , போலிசோ அல்லது மக்களோ ஹிட்லருக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டால் , அவர்களைத்தடுத்து ஹிட்லரின் ஆட்சியை மீண்டும் கொணர்வதும் இவர்களுடைய வேலை . இவ்வாறு இவர்களை வைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் ஹிட்லரின் திட்டம்தான் VALGYRIE . பெர்க் இந்த திட்டத்தை வைத்து , அதில் சில மாற்றங்களை கொணர்ந்து , ஹிட்லரிடம் கையெழுத்து வாங்குகிறான் . பெர்க் , ஹிட்லரை சந்திக்க மறைமுகமாக FROMM எனும் ஜெர்மானிய ஜெனரலும் உதவுகிறான் .ஆனால் FROMM , ஹிட்லர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு உதவமுடியும் , உயிருடன் இருப்பின் நான் ஹிட்லரின் விசுவாசி என்று கூறுகிறான் . ஏற்கனவே பெர்க் மற்றும் கூட்டாளிகள் ட்ரஸ்கோவின் பிளான் பிடி ஹிட்லரை போட்டுத்தள்ள ஒரு பாம் செய்கிறார்கள் . இந்த ட்ரஸ்கோ என்பவர் , ஏற்கனவே ஹிட்லரை சாகடிக்க எக்கச்சக்கமான பிளான்களை போட்டு மண்ணைக்கவ்வியவர் . இன்னொருபுறம் கூட இருக்கும் கூட்டாளிகள் ஹிட்லரால் டார்கெட் செய்யப்பட , ஹிம்லர் என்பவனையும் போட்டுத்தள்ளினால் தான் இந்த ஆபரேசன் வெற்றிபெறும் என்றும் பெர்க்கிடம் சிலர் தெரிவிக்கிறார்கள் . ஒருமுறை பாம் கொண்டுசெல்லும்போது ஹிட்லர் மட்டும் தனியாக இருக்க , வேறுவழியின்றி அத்திட்டம் நிறைவேறாமல் முடிகிறது . யார் அந்த ஹிம்ளர் என்கிறீர்களா ? ஹிட்லரின் விசுவாசி என்று கூறலாம் . ஆனால் ஹிட்லரின் நாஜிப்படையில் இல்லாதவன் . ஹிட்லரின் தளபதிகளிலேயே சிறப்பானவன் இவன்தான் . அப்போதைய காலகட்டங்களில்  SS – ன் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் . இந்த ஹிம்ளர் தன் வாழ்நாளில் செய்த கொலைகள கணக்கில் சேர்த்தால் 50 லட்சத்தைத்தாண்டும் . இவன் வருகிறான் என்றாலே வெற்றிதான் . பயங்கர மதியூகக்காரன் . போலந்தை கைப்பற்ற , போலந்து நாடு காவல்துறை உடைகளை தன் படைகளுக்கு வழங்கி ,போலந்துகாரர்களாய் உள்நுழைந்து வெற்றிபெற வைத்தவன் . இத்தனைக்கும் ஹிட்லரிடம் அவ்வளவு தொடர்பு இல்லாதவன் . ஹிட்லர் அதிகமாய் நம்பிய நபர்களில் இவனும் ஒருவன் .சிம்பிளாக சொல்லவேண்டுமெனில் எள் என்றால் எண்ணெயாகும் ஆட்களில் இவனும் ஒருவன் . உலகப்போரில் ஜெர்மனி தோற்பது தெரிய வந்தவுடன் ஹிட்லருக்குத்தெரியாமல் நேசநாடுகளுடன் ஒப்பந்தம் போடச்சென்றான் . இவன் சென்ற விஷயம் தெரியாத ஹிட்லர் , கடைசியில் இவனையும் கொன்றுவிட்டார் .

ஒருவழியாக ஜூலை 20 , 1944 பாம் வெடிக்கிறது . வெடிக்கவைத்தவர் பெர்க் . ஹிம்ளர் அந்த இடத்தில் இல்லை . அதைத்தொடர்ந்து Valkyrie operation தொடங்க , அன்று ஒருநாள் முழுதும் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை . நம்பினால் நம்புங்கள் ஹிட்லர் இறக்கும் முன்பு , கடைசி 10 வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட கொலைமுயற்சிகள் ஹிட்லருக்கு நடந்துள்ளன . ஆனால் அத்தனையிலிருந்தும் சாமர்த்தியமாக தப்பிய ஹிட்லரின் ஆயுசை என்னவென்று சொல்லுவது ? ஓருமுறை அவர் இறந்ததாக உடலையெல்லாம் காட்டிய நிகழ்வும்நடந்துள்ளது . ஆனால் அது அவரின் போலி என்று கடைசியில் தெரியவந்தது . இந்த ஜூலை 20 கலகத்திலும் ஒருவேளை அவ்வாறு நடந்திருக்கலாம் .உண்மையில் பெர்க்கைக்காட்டிலும் இந்த VALKYRIE OPERTAION-காக அதிகம் பிளான் போட்டு செயல்பட்டது , ட்ரஸ்கோ தானாம் . ஆனால் 2008 வரை பெர்க் மாத்திரமே அனைத்து விஷயங்களையும் செய்ததாக உலகம் நம்பியிருக்கிறது . அதன்பின் சோவியத் காரர்கள் இவ்வுண்மையை ஆராய்ந்து ட்ரஸ்கோவே ஜூலை 20 – ல் முக்கிய ஆள் என்பதை கண்டுபிடித்துத் தெரிவித்திருந்தார்கள் .



பெர்க்காக டாம் க்ரூஸ் . இவருக்கு சயின்ஸ் – பிக்சன் பைத்தியம் பிடித்து , சமீபகாலங்களில் ஒரே சயின்ஸ் – பிக்சன் படங்களாகவே நடித்துவருகிறார் . இப்படத்தின்போதே மைனாரிட்டி ரிப்போர்ட் மாதிரியான சயின்ஸ் – பிக்சனில் நடித்திருந்தாலும் , அப்போது இந்தளவு ஆர்வம் இல்லாததால் இப்படத்தில் நடித்திருக்கிறார் . உண்மையான ஸ்டஃபன்பெர்க் அளவிற்கு இல்லையெனினும் ஓ.கே ரகம் . ட்ரஸ்கோ கேரக்டரில் கென்னத்தும் , FROMM கேரக்டரில் டாம் வில்கின்சனும் நடித்துள்ளார்கள் . படத்தில் ஹிட்லராக வருபவர் , அச்சுஅசலாக ஹிட்லரை நம்முன்னே உலவவிட்டதைப்போலவே செய்திருந்தார் . படத்தில் ஹிட்லரின் அறிமுகக்காட்சிகளை தவறவிடாமல் பாருங்கள் . செம கெத்தான இன்ட்ரடக்சன் காட்சி .


இந்த SS  , ஹிம்ளர் , நேசநாடுகளின் எழுச்சி போன்ற விஷயங்களெல்லாம் பெரியளவில் படத்தில் வராது . இருந்தாலும் இந்த விஷயங்களையும் தெரிந்துகொண்டுபார்த்தால் , இம்மாதிரியான சம்பவங்களை அருகிலிருந்து பார்ப்பதுபோல் ஒரு உணர்வுதரும் . இதேபோல் தமிழிலும் படம் எடுக்க எக்கச்சக்க கதைகலங்கள் இருந்தாலும் , டைரக்டர்கள் இன்னும்  பஞ்சாயத்துத்தலைவர் , சாதி பிரச்சனை  , காதல்  என்று மொக்கையான வட்டத்தையே சுற்றிவருகிறார்கள் . இத்தனைக்கும் இந்த படம் முழுமுழுக்க கமர்ஷியலாகவே எடுக்கப்பட்டிருக்கும் . எல்லாருக்கும்  கண்டிப்பாக பிடிக்கும் . குடும்பத்துடன் பார்க்கும் வண்ணம் கண்ணியமான படமாக இரு்ககிறது .

படம் வெளிவந்த ஆண்டு - 2008

உபரி – இந்த கலகத்துக்குப்பின் 9 மாதங்களில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார் . அவரின் தற்கொலைக்குப்பின் 1993 – ல் கோன்ராட் என்பவர் , ஹிட்லரின் டைரி தன்னிடம் இருப்பதாக கூறி ஒரு பத்திரிக்கையிடம் 2.5 கோடி வாங்கிக்கொண்டு கொடுத்துவிட்டார் . அந்த டைரியை ஆராய்ந்தபோது அது போலி என கண்டறியப்பட்டது. மேலும் அந்த டைரியை எழுதியதே அந்த கதாசிரியரான கோன்ராட் தான் எனக்கண்டுபிடிக்கப்பட்டு , ஜெயிலில் தள்ளப்பட்டார் .


தொடர்புடைய இடுகைகள்







Comments

  1. முழுக்கதையையும் அழகாக சொல்லி விடுகிறீர்களே நண்பா... படத்தை விட விமர்சனம் பிரமாண்டம்.
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ! இன்னும் சொல்லப்போனால் நான் படத்தைப்பற்றி அதிகமாக எழுதவே இல்லை . எல்லாம் இரண்டாம் உலகப்போர் மற்றும் அதைச்சுற்றிய உண்மை நிகழ்வுகளைத்தான் எழுதினேன் . கடமைக்காக படத்தைப்பற்றி ஒரு பத்தி எழுதியிருப்பேன் . வருகைக்கும் , கருத்துக்கும் , இனைப்புக்கும் , ஓட்டுக்கும் நன்றி அண்ணா

      Delete
  2. தொடர்பில் இணைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  3. வாய்ப்பிருந்தால்..படத்தையும் பார்த்துவிடுகிறேன். தலைவரே.....

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பமைந்தால் பாருங்கள் அண்ணே ! நா டி.விய தொடர்ச்சியா 30 நிமிடம் பார்த்து 7 வருஷம் ஆச்சுங்ணே . அதுனால இப்போ அந்த அப்டேட் பத்தி எனக்கு தெரியல . வருகைக்கும் கருத்துக்கம் நன்றி அண்ணே

      Delete
  4. ஸ்டார்மூவிஸ்ஸில் போடாமலா இருப்பார்கள்........

    ReplyDelete
  5. நிஜக் கேரெக்டர்களை ஓரளவு சொன்ன இருவர் படம் தோல்வியை தழுவியது ,தமிழில் இம்மாதிரி முயற்சிகள் யாருக்கும் துணிச்சல் இல்லை !
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. தமிழில் நிஜத்தைப்பற்றி எடுப்பது என்பது புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையைப்பற்றிய டார்கெட்டாகவே இருக்கிறது . காவியத்தலைவன் கூட அப்படித்தான் . இம்மாதிரியான போர்கள் , சுதந்திர தியாகிகள் பற்றிய படமெல்லாம் எடுப்பது என்பதே தன் தலையில் தானே மண்வாரிப்போடுவது போன்றது எனும் சிந்தனை தமிழ் இயக்குநர்களிடம் ஊன்றிவிட்டது அண்ணா .

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !

      Delete
  6. நமஸ்காரம்.
    தகவல் தொடர்பில் ஏற்படும் குழப்பம் தடுமாற்றம் கோயபெல்ஸ் நாக்கின் அடியில் சயனடை வைத்துக்கொண்டு பேசுவது... வாவ் படம் மெக் இது... நானும் எழுதுவேன்.. ஆனா எப்போ:? தெர்ல

    ReplyDelete
    Replies
    1. அட ! சயனைட் மேட்டர மறந்துட்டனே . அது ஒரு அட்டகாசமான காட்சினுதாங்ணா சொல்லனும் . ஒருவேள ss நம்மள நம்பாத பட்சத்துல அப்படியே சயனைட விழுங்கிடலாம்னு அந்த மினிஸ்டர் நினைச்சு பன்றது பயங்கரமான ஒரு விஷ
      மாத்தான் தெரிஞ்சது. நன்றி அண்ணே உங்களோட ரிவியூக்குத்தான் ஐ யம் வெயிட்டிங் !!

      Delete
  7. விமர்சனத்தில் நிறைய வரலாறுகளும் அறிய முடிகின்றது... நீங்க சொன்ன மாதி ஹிட்லரை காட்டும் காட்சிகள் அட்டகாசம் செமையாக இருந்திச்சு...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை