BIG - சினிமா விமர்சனம்
ஏற்கனவே தமிழில்
காபி அட்டம்ப்ட் என்று எக்கச்சக்கமான படங்களை பலர் கிழித்துத்தொங்கப்போட , நாமும் ஏன்
இந்தவேலையைச் செய்யவேண்டும் என்று ஒதுங்கியிருந்தேன் . சரி , ஒரு திரைப்பட விமர்சகராக
நாமும் ஒரு காபி அட்டம்ப்ட்டை எழுதி , நம் சமூக கடமையை ஆற்றிவிடவேண்டும் என்ற முனைப்பின்
பிரதிபலிப்புதான் இத்திரைப்படத்தின் விமர்சனம் .
நம்மூரில் குஷ்புவுக்கு
கோயில் கட்டி தமிழர்கள் என்று தலைநிமிர்ந்தார்கள் . ஆனால் ஹாலிவுட்டில் டாம் ஹேங்சுக்கு
கிடைத்த புகழின்முன் இதெல்லாம் தூசி எனலாம் . அந்த மனிதரின் பெயரில் விண்வெளியில் ஒரு
குறுங்கோளுக்கு டாம்ஹேங்ஸ் எனப் பெயர் வைத்து புகழாரம் சூட்டியுள்ளார்கள் நாசா விஞ்ஞானிகள்
. 5 ஆஸ்கார் நாமிநேசன்கள் , 2 தொடர்ச்சியான ஆஸ்கார் விருதுகள் என ஆஸ்கார் அவையை அதிரவைத்த
இவர் தான் இன்று உலகளவில் அதிக செல்வாக்குள்ள மற்றும் பவர்ஃபுல்லான நடிகர் . இவரின்
படங்கள் 480 பில்லியனைத்தாண்டி வசூல் செய்துள்ளன . இவருக்கு இருக்கும் மார்க்கெட் ,
உலகளவில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாதது . நடிப்பு என்பதற்கு வேறு பெயர் டாம்ஹேங்ஸ்
எனக்கூறும் அளவிற்கு சிறப்பான நடிகர் .பீல்குட் படங்களுக்கு அதிகமாய் ஆதரவு தரும் நடிகர்
. குடும்பத்துடன் காணும்படியான தரமான படங்கள் கொடுக்கும் ஒரே நடிகர். இவரின் TERMINAL , FORREST GUMP , SAVING
PRIVATE RIYAN , CAST AWAY போன்ற படங்களைப்பார்த்திருந்தால் , கண்டிப்பாய் நீங்கள்
டாம்ஹேங்சின் ரசிகராய் மாறிவிடுவீர்கள் .
ஆரம்பகாலங்களில்
டி.வி நடிகராய் அறிமுகமாகி , ஹாலிவுட்டில் உள்நுழைந்து தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த
டாம்ஹேங்சுக்கு ஒரு மாபெரும் திருப்புமுனையைக்கொடுத்த படம்தான் BIG . 1970 களில் அமெரிக்காவின்
தொலைக்காட்சிகளில் வலம்வந்த PENNY MARSHAL எனும் பெண் , எப்படியோ அடித்துப்பிடித்து JUMPIN JACK
FLASH எனும் திரைப்படத்தினை இயக்கினார் . படம்
எப்படியோ அப்படிஇப்படியென்று பாக்ஸ் ஆபிஸில் தப்பிப்பிழைக்க , அதற்கடுத்து அவர் இயக்கமுடிவெடுத்த
திரைப்படம் தான் BIG . 1980 களில் டாம் ஹேங்ஸ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும்
, ஆரம்பகால நமது சூப்பர்ஸ்டாரைப்போன்ற நிலையில்தான் இருந்தார் . அதன்பின் பென்னியின்
கண்களில் ஹேங்ஸ் சிக்க , அதைத்தொடர்ந்து வேகவேகமாய் , ஸ்பில்பெர்க்கின் சகோதரியின்
திரைக்கதைக்கு நாயகனாய் ஹேங்ஸ் அமர்த்தப்பட்டார் .
படத்தின் கதை என்னவென்று
கேட்டு நீங்கள் எல்லாம் கடுப்பாவது தெரிகிறது . ஜோஸ் (josh) எனும் 12 வயது சிறுவனும்
அவனுடைய நண்பன் பில்லியும் (பல்லி இல்லிங்கோ) ஜாலியாக தங்களின் வாழ்க்கையை கழிக்கிறார்கள்
. ஜோசை ஒரு பொண்ணு ரூட் அடிக்க , அவளை மடக்க நினைக்கிறான் ஜோஸ் . ஒருமுறை ஒரு பொருட்காட்சியில் கார்னிவல் ரைட்டஎனப்படும்
ராட்டிணத்தில் அவள் பயணிக்க காத்திருப்பதை கவனிக்கும் ஜோஸ் , அவளை இம்ப்ரஸ் செய்வதற்காக
அந்த ராட்டிணத்தில் ஏறச்செல்கிறான் . பெண்குழந்தைகளுக்கு ஆண்குழந்தைகளைக்காட்டிலும்
உடல்வளர்ச்சி படுவேகமாய் இருக்கும் என்பது இயற்கை நீதி . ஜோசின் வயதே உடைய அந்த பெண்ணோ
பனைமரத்தில் பாதி உயரத்தைத்தொட்டிருக்க , ஜோசோ குள்ளக்கத்திரிகாய் சைசில் இருப்பான்
. அவனுடைய உயரத்தைக்காரணம் காட்டி , ராட்டிணத்தில் ஏற அனுமதிக்கமாட்டார்கள் நிர்வாகத்தினர் . கடுப்பான ஜோஸ் , சோல்தார் எனும்
ஒரு மெஷினிடம் சென்று நாணயத்தை நுழைக்கிறான் . அந்த சோல்தார் எனும் மிஷின் , கேட்ட
வரத்தைக்கொடுக்கும் ஒரு மெஷின் என்று புளிப்புகாட்டி வசூல் கறப்பார்கள் அமெரிக்காவில்
. கிட்டத்தட்ட எடை மெஷின் போன்றதுதான் . இவனோ ராட்டிணத்தில் ஏறி அவளை கரெக்ட் பண்ணமுடியாததற்கு
காரணம் தன் உயரம்தான் என்றெண்ணி , அந்த மெஷினிடம் I WISH , I WAS BIG என்று வரம்கேட்க
,அந்த மெஷினும் தன்னுடைய கடமைக்கு ஒரு சீட்டை தன்னுள் இருந்து அனுப்பி PERMISSION
GRANTED என்று சொல்லிவிடும் . அதன்பின் அப்படியே வீட்டிற்கு போய் படுத்துறங்கி காலையில்
எழும் ஜோஸ் , இளைஞனாய் மாறிவிடுகிறான் . அதன்பின் என்னவென்றால் , அதான் ‘நியூ’னு ஒரு
படம் பார்த்துருப்பிங்களே . அதுல என்ன நடக்குமோ அதேதான் இப்படத்திலும் நடக்கும் . என்ன
, அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா , சிம்ரனை கல்யாணம் செய்துகொண்டு , தன் தாய் தேவயானிக்கு
தன்மீது இருக்கும் பாசம் , தாய்ப்பாசம் என அடித்துவிட்டிருப்பார் . இதில் காதலோடு சரி
.
நியூ படத்தில்
எஸ்.ஜே. சூர்யா தனக்கென்று உரிய பல கில்மா காட்சிகளை வைத்திருப்பார் . சயின்டிஸ்ட்
என்று மணிவண்ணனை வைத்து இழுக்கடித்திருப்பார் . நண்பனாக வரும் அந்த சின்னப்பையன் ,
கடைசியில் கடுப்பாகி சிம்ரனிடம் போட்டுக்கொடுத்துவிடுவான் . இந்த படத்தில் கில்மா காட்சிகள்
இல்லவே இல்லை . டாம்ஹேங்சின் படங்களில் நாம் என்ன எதிர்பார்ப்பாமோ , அது இப்படத்தில்
அப்படியே இருக்கும் . பெரும்பாலான காட்சிகள் நம் மனதுள் இருக்கும் குழந்தைத்தனத்தை
வெளிக்கொணரும் . பெரியவனானதும் ஹேங்ஸ் தங்குவதற்காக நகரில் இருக்கும் ஒரு குப்பை ஹோட்டலுக்குச்செல்வார்
. இரவு நேரங்களில் நகரில் நடக்கும் துப்பாக்கிச்சூடுகள் , பெண்களின் அலறல் , பக்கத்து
அறையில் தங்கியிருப்பவனின் சத்தம் என்று ஒவ்வொன்றிற்கும் பயந்து தலையணையைக்கட்டிபிடித்து
அழும் காட்சியில் டாம் ஹேங்ஸ் ஒரு நடிப்பைக்கொடுத்திருப்பார் பாருங்கள் . அப்பப்பா
, சொல்லிமாளாது . அதுவரை தாயின் அரவணைப்பில் இருக்கும் 12 வயது சிறுவன் , தாயைவிட்டுப்பிரிந்தால்
என்ன மனநிலையில் இருப்பான் என்பதை அச்சு அசலாய் திரையில் நம்கண்முன் வார்த்து எடுத்திருப்பார்
. அதேபோல் இப்படத்தில் நண்பனாய் வரும் சிறுவன் கடைசி வரை நல்ல நட்பிற்கு உதாரணமாய்
இருப்பான் . தன் நண்பனை இந்த இக்கட்டில் இருந்து எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்
வன் அலைவதும் , அவனைப்பற்றி அவ்வளவாய் கண்டுகொள்ளாமல் ஹேங்ஸ் தவிர்ப்பதும் என சிறப்பாக
செய்திருப்பார்கள். ஹேங்சின் தாயார் மகனைப்பிரிந்து
அழும் வேலையில் , பில்லி அவளைச்சமாதானப்படுத்தும் காட்சிகள் எல்லாம் அழகியல் ரசனையின்
வெளிப்பாடு .
தன்காதலியிடம்
கிளைமேக்ஸ் காட்சியில் தான் திரும்பவும் சிறுவனாக மாறவேண்டும் என் ஹேங்ஸ் சொல்வார்
.நான் திரும்பவும் சிறுவனாக லட்சம் காரணம் இருக்கு . ஆனால் இப்படியே இருக்க நீ ஒருத்திதான்
காரணம் என்பார் . தொடர்ந்து பேசாமல் நீயும் என்னுடன் சிறுமியாகிவிடு என்று ஹேங்ஸ் சொல்வதும்தைத்தொடர்ந்து
அவள் கூறும் வசனங்களும் கிளாஸ் ( டம்ளர் இல்லப்பா ) ரகம் .
மொத்தத்தில், குடும்பத்துடன்
தாரளமாய் பார்க்கும்வண்ணம் அழகான , அமைதியான திரைப்படம்தான் BIG . டாம் ஹேங்சின் ரசிகர் நீங்களென்றால் இத்திரைப்படத்தினை
தவறாது டவுன்லோடி பார்த்துவிடுங்கள் . ஏனென்றால் இளமைக்காலங்களில் டாம் ஹேங்சின் படங்களில்
பெஸ்ட் என்று இதைச்சொல்லலாம் . இந்த படத்திற்காகத்தான் முதன்முதலில் ஹேங்ஸ் , ஆஸ்கார்
நாமிநேசனுக்கு சென்றார் . இந்த படம் 1980 -90 களில் வந்த படங்களிலேயே ஒரு சென்சேசனல்
வெற்றி எனலாம் . மேலும் ஒரு பெண் இயக்குநர் இயக்கிய படம் 100 மில்லியன் வசூல் எடுத்தது
இந்தப்படம் தான் . இந்த படத்திற்குபின் 6 வருடங்கள் ஹேங்சின் படங்கள் பெரிய அளவில்
எடுபடவில்லை . அதன்பின் பிலாடெல்பியா எனும்
திரைப்படத்தின்மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் தலைவர் .இப்படத்தினை ஏற்கனவே பார்த்தவர்கள்
, இதன் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் சில காட்சிகள் இணைக்கப்பட்ட EXTENDED
VERSION டவுன்லோடி பார்க்கத்தவறாதிர்கள் .
படம் வெளிவந்த
ஆண்டு – 1988 .
தொடர்புடைய இடுகைகள்
"கில்"மா இல்லாதது நல்லதுமா...
ReplyDeleteசிலர் கில்மா மேலே கிறுக்குப்பிடித்து திரிகிறார்கள் அண்ணா .
Deleteசமூகக் கடமையை ஆற்றிய நண்பர்க்கு நன்றி!!
ReplyDeleteவருகைக்கும்மகருத்துக்கும் நன்றி அண்ணா
DeleteBig தான் உங்கள் பதிவு
ReplyDeleteதமிழ் மணம் 4
இதுவே big என்றால் எப்டிணே ? இன்னும் பெரிய பெரிய big பதிவெல்லாம் எழுதிட்டேன் .
Deleteஹை கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. தான் மேக்..
ReplyDeleteசமீபத்தில்
அடியேன் ஜாக் விக் பார்த்தேன் நீங்கள்?
தம +
ReplyDeleteதமிழ் new ன் மூலம் இதுதானா ,இருந்தாலும் நம்ம ஊரில் இப்படிப்பட்ட வரவேற்பில்லை !
ReplyDeleteத ம 7