Friday, 13 February 2015

டெம்பர் – சினிமா விமர்சனம்ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் டெம்பர் . தெலுங்கு படங்கள் என்றாலே , பச்சை ,மஞ்சள் போன்ற டாலடிக்கும் பேன்ட்களை போட்டுக்கொண்டு அலையும் ஹீரோ , கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பித்த பைத்தியம் போன்றதொரு ஹீரோயின் , அடி மட்டுமே வாங்கி காமெடி செய்யும் காமெடியன் , முந்தைய படத்தில் என்ன செய்தோமோ, அதையே இந்த படத்திலும் செய்யவேண்டும் என்ற குறிக்கோள் மிக்க இயக்குநர் , 3 குத்துப்பாட்டு, 1 ஐட்டம் சாங் , முக்கியமாக டிசைன் , டிசைனாக இருக்கும் 6 அடி கத்தி , மிகமிக கொடூரமான முகத்தோற்றம் கொண்ட வில்லன் , அவனைச்சுற்றி குறைந்தபட்சம் 20 அடியாட்கள் போன்ற சமாச்சாரங்கள் தான் இருக்கும் என்று நம்மை நம்பவைத்துவிட்டார்கள் . ஆனால் அவர்களோ டெக்னிக்கல் ரீதியாக தமிழ்சினிமாவை ஓரங்கட்டி விட்டார்கள் . நடனத்தில் அவர்களிடம் நம் ஹீரோக்கள் பிச்சையெடுக்கவேண்டும் . தெலுங்கு சினிமாவைப்பொறுத்தவரை , முழுக்க முழுக்க என்டர்டெய்னர் மட்டுதான் என்று முடிவு செய்யப்பட்டே எடுக்கப்படும் . அதில் பெரும்பாலான படங்கள் வெற்றிக்கொடியும் நட்டுவிடும் . நாம் என்னதான் அவர்களைக்கலாய்த்தாலும் நம்முடைய தமிழ்சினிமாவின் மாபெரும் ப்ளாக்பஸ்டர்களாய்த்திகழும் பல திரைப்படங்கள் அங்கிருந்து ரீமேக்கியவையே . இப்போது இந்தி திரையுலகம் , முக்கியமாக சல்மான் போன்றோர் தெலுங்குசினிமாவை நம்பியே பிழைப்பை ஓட்டிவருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை .

இக்காலகட்டத்தில் பவன்கல்யாண் , பிரபாஸ் , அல்லு அர்ஜூன் , ராம் சரண் என்று பல ஹீரோக்கள் இருந்தாலும் என்னுடைய பேவரைட் ஜூனியர் என்.டி.ஆர் தான் . கிட்டத்தட்ட தாத்தாவின் சப்போர்ட் இருந்தாலும் நந்தமுரி குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டே இருந்தவர் , தனியாகப்போராடி  இன்று இந்நிலைமைக்கு வந்துள்ளார் . அவரின் வெற்றிகளுக்குக்காரணம் முழுக்க முழுக்க அவருடைய திறமையே ஆகும் . என்னைப்பொறுத்தவரை இந்தியாவிலேயே பிரபுதேவாவுக்கு அடுத்த சிறந்த நடனம் ஆடும் ஹீரோ என்றால் அது என்.டி.ஆர் தான் . ஹீருத்திக் சிறந்த டேன்சர் என்றாலும் லோக்கல் FOLK வகையறா பாடல்களுக்கு அவரிடம் பெரிதும் எதிர்பார்க்கமுடியாது . ஒவ்வொரு தெலுங்கு ஹீரோக்களுக்கும் ஒரு பிரச்சனை இருக்கும் . மகேஷ் பாபுவுக்கு உணர்ச்சிவசப்படுத்தும் சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் வரவே வராது . பிரபாஸுக்கு காமெடியான காட்சிகள் கைக்கொடுக்காது . ஆனால் என்.டி.ஆருக்கு எல்லாமே அமையும் . நடிப்பு , நடனம் , சண்டைக்காட்சிகள் என அத்தனையும் பர்பெக்டாக செய்யும் ஒரே தெலுங்கு ஹீரோ இவர்தான் . இவரெல்லாம் சிம்மாத்ரியில் நடிக்கும்போது , சிக்ஸ்பேக்கில் வருங்காலத்தில் வருவார் என்று யாருமே நினைத்திருக்கமாட்டார்கள் .

பூரிஜெகந்நாத் – சதா ஒரேகுட்டையில் ஊறிக்கொண்டிருக்கும் தெலுங்கு இயக்குநர்களுக்கு மத்தியில் , கொஞ்சம் டிபரண்டான இயக்குநர்கள் என்றால் ராஜமௌலியும் , பூரியும் தான் . பூரி ஜெகந்நாத் படங்களை இருவகையாக பிரிக்கலாம் . ஒன்று ப்ளாக் பஸ்டர் . மற்றொன்று அட்டர்பிளாப் . தலைவர் ஆவரேஜான படங்கள் என்று கணக்கில் பார்த்தால் ஒன்றுமே இருக்காது . இவரின் ஸ்பெசல் என்னவென்றால் அரசியல் மற்றும் நாட்டுநிலைகளை தன் படங்களினூடே கொண்டுவருவார் . அரசியல் , சமூகம் குறித்த இவரது படங்கள்  ப்ளாக்பஸ்டர் ரகம்தான் .


சரி , படத்தின் கதைக்கு வருவோம் . ஹீரோ ஒரு அநாதை . சிறுவயதிலேயே போலிஸ் என்றால் கெத்து என்ற மனநிலைக்கு வந்தவர் , எப்படியாவது போலிசாகிவிடவேண்டும் என்று நினைத்து போலிசாகவும் ஆகிறார் . ஆனால் இருப்பதிலேயே ரொம்ப வொர்ஸ்ட் போலிஸ் எனப்பெயரெடுக்கிறார் . அவரின் தேவை பணம் , அவ்வளவே . விசாகபட்டணத்தில் ரவுடியாக இருக்கும் பிரகாஷ்ராஜ் , தனக்கு சரிப்படாத எஸ்.ஐயை மந்திரியின் உதவியுடன் ட்ரான்ஸ்பர் செய்து விட்டு , அவ்விடத்தில் ஹீரோவைக்கொண்டு வருகிறார் . சாமி விக்ரம் போல் , ஹீரோவும் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாய் அவர் சொல்வதையெல்லாம் செய்கிறார் . நடுவே காஜலை சந்திக்க , அவளின்மேல் காதல்கொள்கிறார் . ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் கும்பல் காஜலை கொலைசெய்ய வர , அப்போது ஹீரோ தடுக்கிறார் . அதன்பின் தான் தெரிகிறது , அவர்கள் கொலைசெய்யவந்தது வேறொரு பெண் எனவும் , மாறுதலாக காஜலை சுற்றுப்போட்டதாகவும் பிரகாஷ்ராஜ் சொல்கிறார் . காஜலோ , அப்பெண் யாரென்று கண்டுபிடித்து காப்பாற்றுமாறு சொல்ல , காதலியின் ஆசைப்படி என்.டி.ஆர் அவளைக்காப்பாற்றுகிறார் . அதன்பின் அந்த பெண்ணால் ஹீரோவுக்கும் , வில்லனுக்கும் மோதல் .யார் அந்த பெண் போன்றவைதான் படத்தின் இரண்டாம் பாதி ..

இயக்குநர் பூரி , வழக்கம்போல ஒரு சென்சிட்டிவ் விஷயத்தைக்கையில் எடுத்து , அதை என்.டி.ஆருக்கென்றே செதுக்கி ஒரு ப்ளாக்பஸ்டரைக்கொடுத்திருக்கார் . ராமைய்யா வஸ்தாவய்யா , ரபாஷா போன்ற தொடர்தோல்விகளுக்கு ஈடுகட்டும் விதமாய் இப்படம் என்.டி.ஆருக்கு அமைந்துள்ளது என்றால் மிகையாகாது . மனிதர் ஒவ்வொரு பிரேமிலும் பட்டாசு கிளப்பிருக்கிறார் . நடிப்பில் பூந்து விளையாடும் இவர் , நடனத்திலும் அமர்க்களம் செய்திருக்கிறார் . பாட்ஷா படத்துக்குப்பின் ‘டெம்பர்’ எனும் பாடலுக்கு இவர் ஆடும் நடனத்துக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது . காஜலை லவ்வும்போது தலைவர் கொடுக்கும் ரியாக்சன்கள் எல்லாம் தாருமாறு . சண்டைக்காட்சிகள் , பிரகாஷ்ராஜிடம் அன்னையா அன்னையா என்று இவர் மினிஸ்டரை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டிகள் , ஏட்டாக வரும் நீதிமானிடம் இன்டர்வல்லுக்கு முன் பேசும் வசனங்கள் , கிளைமேக்சில் அந்தர்பல்டி அடித்தல் என , படம்முழுக்க என்.டி.ஆர் பிச்சிப்பேத்தெடுத்திருக்கிறார் . இன்ட்ரோ சீன் எப்படி வைக்கவேண்டும் என்பதை என்.டி.ஆரின் படங்களைப்பார்த்து தமிழ் சினிமாவில் கற்றுக்கொள்ளவேண்டும் .

காஜல் – அக்மார்க் லூசு தெலுங்கு ஹீரோயின் . நடிப்பில் அப்படியே பிஸினஸ்மேனை நினைவுப்படுத்தினாலும் நன்றாகத்தான் இருந்தது . கிட்டத்தட்ட ஹீரோவின் மனசாட்சிபோல வரும் அந்த ஏட்டு , அட்டகாசமாக செய்திருந்தாலும் , நான் இங்கே உட்கார்ந்து பாக்கறேன் சார் , நீங்க மாறிட்டிங்க னு வசனம் பேசும்போது மட்டும் செம காமெடியாய் இருக்கிறார் . சோனியா அகர்வாலுக்கு இந்த பரிதாப நிலை வந்திருக்கக்கூடாது .

பிரகாஷ்ராஜ் – தேவுடு சூசின மனசுலு , பிஸினஸ் மேன் ஆகிய இரண்டில் இருந்த கேரக்டரைசேசனை அப்படியே மொத்தமாக்கி உருவாக்கப்பட்டிருந்தாலும் மனிதர் வெளுத்துவாங்கியிருக்கிறார் . இரண்டாம் பாதியில் மந்திரியைக்கூட்டிகொண்டு சமாதானம் பேசவரும் என்.டி.ஆரிடம் பிரகாஷ்ராஜ் டென்சனாவது என எக்கச்சக்க காட்சிகளில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்  .

பேக்ரவுண்ட் மணிசர்மா . ஆங்காங்கே போக்கிரியை ஞாபகப்படுத்தினாலும் ஓ.கே ரகம் . இசை ஒரு இந்தி இசையமைப்பாளர் என நினைக்கிறேன் . பாடல்களும் ஓ.கே ரகம் . தமனின் சிந்தசைசேசர் இசையைத்தொடர்சியாய் என்.டி.ஆர் படங்களில் கேட்டுவிட்டு , இவருடைய இசையை கேட்கும்போது நன்றாக இருந்த பீலிங் . ஒளிப்பதிவாளர் சாம்.கே.நாயுடுவும் சிறப்பான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் .

படத்தின் மிகப்பெரும்பலம் , அதன் கருதான் . படத்தில் எடுத்தாளப்பட்டிருக்கும் விஷயம் , பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் பற்றியது . இநத வருடத்தில் நான் பார்த்த தமிழ் , ஆங்கில , தெலுங்குப் படங்களில் , டெம்பர் மட்டுமே என்னை முழுமையாக திருப்திபடுத்தியது என்றே சொல்லுவேன் . மொத்தத்தில் ஜாலியாக , அதேநேரம் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும் . இந்நேரம் இந்தியில் சல்மான்கான் சீட்டுப்பிடித்துவைத்திருப்பார் என நினைக்கிறேன் . தமிழிலும் ரீமேக் ரைட்சுக்கு போட்டிகள் நடக்கும் .


தொடர்புடைய இடுகைகள்உங்கள் விருப்பம்

9 comments:

 1. எதோ ஒரு தமிழ்படம் ஞாபகம் வருகிறதே....

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் ஏதேதோ படங்கள் மிக்ஸ் ஆகியிருக்கும்ணா . என்.டி.ஆரோட அஷோக் கூட கிட்டத்தட்ட இதே கான்செப்ட் தான் . கொஞ்சம் பட்டி , டிங்கரிங்லாம் பண்ணிடுவாங்க .
   நன்றி அண்ணே

   Delete
 2. அப்போ..தமிழுக்கும் நிச்சயம் வரும்............!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் எடுத்துருவாணுங்கணா .

   Delete
 3. சரி , படத்தின் கதைக்கு வருவோம்----அதான் கதையை சொல்லிட்டிங்களே....!!

  ReplyDelete
  Replies
  1. இது என்ன புதுக்கதையால்ல இருக்கு ? இம்புட்டு குசும்பு இருக்கக்கூடாதுணே உங்களுக்கு ...

   நன்றி அண்ணே !

   Delete
 4. விமர்சனம் பிமாண்டம் டம் டம் நண்பரே....
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. அண்ணே ! இத்தன டம்மா ? உடம்பு தாங்கதுணே !

   Delete