Wednesday, 11 March 2015

CN's - THE DARK KNIGHT RISES - சினிமா விமர்சனம்HEROES  GET REMEMBEREDBUT

LEGEND NEVER DIE
-    Babe Ruth

இப்படத்தைப்பற்றி பார்க்கும்முன் , இபடத்தைப் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி . இத்திரைப்படத்திற்கும் வரலாற்றில் இரு அரசர்களின் வரலாற்றுக்கும் மறைமுகமாக ஓரளவு சம்பந்தமிருக்கிறது . அந்த அரசர்கள் யாரென்றுத்தெரியுமா ?

பேட்மேன் பிகைன்ஸ் எடுக்கும்போது அதன் சீக்வலான தி டார்க் நைட் எடுப்பதைப்பற்றி எந்த ஐடியாவும் இல்லாமல் நோலன் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே . வழக்கம்போல BATMAN BEGINS ன் வெற்றியை கண்டதும் WB நிறுவனம் உடனே அடுத்த படத்திற்கு பரபரத்து THE DARK KNIGHT எடுக்கவைத்தார்கள் . அதன் இமாலய (சாரி சாரி) , மரியானா அளவு வெற்றியைப்பார்த்தபின் நோலனை WB விடுவர்களா என்ன ? அதன்பின் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் தி டார்க் நைட் ரைசஸ் .பேட்மேனின் ஒவ்வொரு பாகத்திற்கும் நடுநடுவே THE PRESTIGE , INCEPTION ஆகிய படங்களை எடுத்திருந்தார் நோலன் . இப்படம் நோலனின் முதல் ட்ரையாலஜி என்பதாலோ என்னவோ உலகமகா எதிர்பார்ப்பு . ஒரு இணையதளத்தில் நெகட்டிவ் விமர்சனம் கொடுத்ததற்காக , அந்த தளத்தையே ரசிகர்கள் ஊத்திமூடவைத்தார்கள் . ப்ரீமியர் ஷோ நடந்தபோது உலகமெங்கும் ஏற்பட்ட அடிதடிகள் கொஞ்சநஞ்சமல்ல . இந்தளவு  எதிர்பார்ப்புடன் வேறு படம் ஹாலிவுட்டில் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை . என்னைப்பொறுத்தவரை ட்ரையாலஜி தொடர்களிலே பெஸ்ட் ட்ரையாலஜி இந்தபடம்தான் என்பேன் (இதனுடன் டாய்ஸ்டோரியையும் சேர்த்துக்கொள்க ) .

டார்க் நைட் படம் பார்க்கவேண்டுமெனில் , அதன்முந்தைய பாகமான பேட்மேன் பிகைன்ஸ் பார்க்கவேண்டிய அவசியமிருக்காது (ஒரே ஒரு காட்சிக்காக மட்டும் பார்க்கவேண்டியிருக்கும் . பேட்மேனின் இன்ட்ரோ காட்சியில் வரும் ஸ்கேர்க்ரோ யார் என்று அறிந்துகொள்வதற்காக மட்டும் . ஆனால் அதுவும் ஒரே காட்சி மட்டும் என்பதால் தேவையில்லை .) ஆனால் , ரைசஸ் திரைப்படத்தைக்காண முந்தைய இருபாகங்களையும் அவசியம் பார்த்திருக்கவேண்டும் . முதன்முதலில் நான் திரையரங்கில் சென்று பார்த்த நோலன் திரைப்படம் இதுதான் . அதற்குமுன் வந்த இரு பேட்மேன் பாகங்களோ , நோலனின் மற்ற படங்களோ பார்க்காமல் தியேட்டருக்குச்சென்ற எனக்குத்தோன்றியது இதுதான் . படம் சுத்தமாக புரியவில்லை . சில காட்சிகள் இன்ட்ரஸ்ட்டாக நகர்ந்தாலும் பல காட்சிகள் புரியவில்லை .மேலும் படமும் எனக்குப்பிடிக்கவில்லை . ஏதோ சுமாரானதொரு படமாகவே  எண்ணிக்கொண்டு வெளியில் வந்தேன். ஆனால் தொடர்ந்த நாட்களில் இருபாகங்களையும் பார்த்து விட்டு மீண்டும் ரைசஸ் பார்க்கும்போது எனக்கு கிடைத்த அனுபவம் வேறெந்த படங்களிலும் கிடைக்கவில்லை . இதுவரை 35 முறை அப்படத்தைப்பார்த்துள்ளேன் . தமிழ் தெலுங்கு என எனக்குத்தெரிந்த ஒவ்வொருமொழியிலும் டப்பிங் எப்படி செய்திருக்கிறார்கள் என்பதை அறிய டி.வி.டியாக வாங்கித்தள்ளினேன் .  உங்களுக்கு இது ஓவராகத்தெரியலாம் . ஆனால் எனக்கு மிகப்பர்சனலாக இது ஒரு பாடமாகத்தான் இருந்தது . அப்படி என்ன இப்படத்தில் இருக்கிறது ? தேசப்பற்று , நம்பிக்கை , துரோகத்தினால் ஏற்படும் வலியைத்தாங்கும் மனநிலை, பிரிவு , காதல் , தன்னம்பிக்கை என எக்கச்சக்கமான விஷயங்களைச்சொல்லிக்கொண்டே போகலாம் .
விரிவான கதை

ஹார்வியைக் கெட்டவனாக சென்ற பாகத்தில் ஜோக்கர் மாற்றிவிடுவான் . கடைசியில் கோர்டனால் , ஹார்வி கொலைச்செய்யப்படுவான் . ஹார்வியின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்தால் , அவர்களுக்கு சக மனிதர்கள்மேல் நம்பிக்கை வராது எனத்தெரிந்து  பேட்மேன் , தான்தான் ஹார்வியைக்கொலை செய்ததாகச் சொல்லுமாறு பழியைத் தன்மேல் ஏற்றுக்கொள்வார் . அதனால் கோதம் நகர மக்களுக்கு பேட்மேன் வில்லனாகத்தெரிவார் . மேலும் தான் காதலித்த ரேச்சல் இறந்துவிட , அவள் நினைவிலேயே தன் சாகசங்களுக்கு முடிவு கட்டி வீட்டினுள்ளேயே முடங்கிவிடுகிறார் . அவள் நினைவின் காரணமாய் வேறு எவளையும் பார்க்கமாட்டார் . உண்மையில் ரேச்சல் , ப்ரூசைக்காதலிக்காமல் ஹார்வியைக் காதலித்துக்கொண்டிருப்பாள் . இந்த உண்மையையும் சொன்னால் , ஏற்கனவே மனதளவில் நொறுங்கி கிடக்கின்ற ப்ரூஸுக்கு வலி அதிகமாகும் என்றெண்ணி ஆல்பிரட் சொல்லமாட்டார் . இப்படியாக 8 வருடம் கழிகிறது . தன்னுடைய வெய்ன் என்டர்பிரைஸில் வருங்கால எரிபொருளுக்கான எனர்ஜி பிராஜெக்டில் நியுக்ளியர் டிவைசைத்தயாரிக்கிறார் ப்ரூஸ் . ஆனால் ரஷ்யாவில் உள்ள ஒரு ஆராய்ச்சியாளர் , வெய்னின் எனர்ஜி ப்ராடெக்டை கன்வெர்ட் செய்து மாபெரும் அணு வெடிகுண்டாக மாற்றமுடியும் என்று ஆராய்ச்சிக்கட்டுரைத் தாக்கல் செய்ய , அதனால் தன் ப்ராஜெக்டை நிறுத்திவிடுகிறார் ப்ரூஸ் . இன்னொருபக்கம் வெய்ன் என்டர்பிரைசஸைத்தன் நிறுவனத்தின் கீழ்கொண்டுவரவேண்டும் என்ற பேராசையில் ஜான் டாக்கெட் என்பவன் பெய்ன் என்வனை கோதம் நகருக்கு அழைத்துவருகிறான் . பெய்ன் முதல் காட்சியிலேயே , அந்த ரஷ்ய விஞ்ஞானியைக்கடத்திவிடுகிறான் . இன்னொருபுறம் நகரில் கேட்வுமன் என்றழைக்கப்படும் செலினா என்பவள் நடமாடுகிறாள் . அவள் குற்றவாளி என போலிஸின் டேட்டாபேஸில் உள்ளது . அந்த டேட்டாபேசை அழித்துவிட்டு புதிய வாழ்க்கையைத்துவங்க வேண்டும் என்றெண்ணி ஜான் டெக்கட்டிடம் உதவி கோருகிறாள் . ஜானோ , ப்ரூஸின் கைரேகையை எடுத்துவந்தால் அவளுக்கு உதவுவதாகச் சொல்கிறான் . அதன்படி அவள் ப்ரூசை ஏமாற்றி அவனின் கைரேகையைக் கொண்டுவருகிறாள் . அதேநேரம் போலிஸில் ஜான் பிளேக் என்பவன் சேருகிறான் . அவனது வாழ்க்கையும் கிட்டத்தட்ட ப்ரூசின் வாழ்க்கைப்போன்றதுதான் .அவனுக்கு ப்ரூஸ் என்பவர்தான் பேட்மேன் என்று தெரியும் . இதெல்லாம் ஒருபுறமிருக்க மிரன்டா டேட் எனும் கோடிஸ்வரி , ப்ரூசிடம் எனர்ஜி ப்ராடக்டில் தானும் இணையவிரும்புவதாகக் கூறுகிறாள் . ஆனால் அதை ப்ரூஸ் மறுத்துவிடுகிறார் . ஆனால் தொடர்ந்து அவள் பிடிவாதமாக இருக்கிறாள் .


பெய்ன் , ஜான் டெக்கட்டின் மூலம் கோதம் நகர் முழுமைக்கும் சுரங்கம் அமைப்பதாகக்கூறி ஏதோ விபரீத வேலைகள் செய்துகொண்டிருப்பான் . ஒரு கட்டத்தில் கமிஷனர் கோர்டன் சுரங்கத்தில் இறங்கி , பெய்னைப்பார்த்துவிடுவார் . அங்கிருந்து அரைகுறை உயிருடன் தப்பித்து வருவார் . அதன்பின் அவர்நிலையைப்பற்றி ப்ரூசிடம் பேசவரும் ஜான் ப்ளேக் , மீண்டும் பேட்மேனாக மாறுமாறு வேண்டுகிறான் . கோர்டனும் இதையேச்சொல்ல மீண்டும் பேட்மேனாக முடிவெடுக்கிறார் . ஆனால் அவரின் விசுவாசியான ஆல்பிரட்க்கு பிடிக்கவில்லை . ஆல்பிரட் எவ்வளவுசொல்லியும் கேட்காமல் ப்ரூஸ் களத்தில் இறங்குகிறார் . பெய்ன் ஒருமுறை ஷேர் மார்க்கெட்டில் கொள்ளையடிக்க , பேட்மேன் தடுக்கமுயன்று தோற்றுவிடுகிறார் . அதேநேரம் அவரின் கைரேகையை வைத்து அவரின் சொத்து முழுவமதையும் ஏமாற்றி பிடுங்கப்பட , எல்லாவற்றையும் இழந்து வீட்டிற்கு வருகிறார் . எனர்ஜி மிஷன் யாரிடமும் சிக்கவிடக்கூடாது என்றெண்ணி , மிரன்டாவிடம் பாதுகாப்பாக வைத்திருக்கச்சொல்லி கொடுத்துவிடுகிறார் . இதெல்லாம் வேலைக்காகாது என்றெண்ணி , கேட்வுமனைச்சந்தித்து அவளிடம் பெய்னின் இடத்தைக்காட்டுமாறு வேண்டுகிறார் . அவளும் அவனின் இடத்தைக்காட்டுவதாகக்கூறி  பெய்னிடம் பேட்மேனைக் காட்டிக்கொடுத்துவிடுகிறாள் . அங்கு நடக்கும் சண்டையில் பேட்மேனின் முதுகெலும்பு உடைகிறது . மேலும் பேட்மேனின் ஆயுதக்கிடங்கும் பெய்னால் கைப்பற்றப்படுகிறது . தான் கூட்டிவந்த பேட்மேன் தான் ப்ரூஸ்வெய்ன் என அறிந்ததும் குற்ற உணர்ச்சியில் சிக்குகிறாள் செலினா. முதுகெலும்பு உடைக்கப்பட்ட ப்ரூஸ் , ஒரு பாதாள சிறையில் அடைக்கப்படுகிறான் . கோதம் அழிவதைப்பார்த்துவிட்டுத்தான் நீ சாக வேண்டும் என்று பெய்ன் கூறிவிட்டுச்செல்கிறான் .

கோதம் நகருக்குத்திரும்பிய பெய்ன் , போலிஸார் அனைவரின் கவனத்தையும் சுரங்கத்தில் திருப்பி , சுரங்கத்தினுள்ளே சிக்கவைத்துவிடுகிறான் . அதன்பின் அந்த நியூக்ளியர் ரியாக்டரை பெய்ன் கைப்பற்றிவிடுகிறான் . ரஷ்ய விஞ்ஞானியை வைத்து அந்த ரியாக்டரை வெடிகுண்டாக மாற்றிவிட்டு , அவரையும் கொன்றுவிடுகிறான் . மக்களிடம் இன்னும் ஆறு மாதத்தில் இந்த ரியாக்டரை வெடிக்கப்போவதாகவும் , நகரை விட்டுத்தப்பி செல்ல முயன்றாலோ , நகரைக்காக்க ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ ரியாக்டரை உடனே வெடிக்கவைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறான் . மக்கள் அனைவரும் பயத்தில் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள் . மேலும் ப்ளாக் கேட் ஜெயிலில் டென்ட் ஆக்டால் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளை விடுவித்து தனக்குக்கீழே ஒரு ராணுவத்தை உருவாக்குகிறான் . கமிஷனர் கோர்டனின் மூலம் கண்டறிந்த ஹார்வியின் உண்மையான முகத்தை மக்களுக்குத்தெரிவிக்கிறான் . பேட்மேன் நல்லவன் என்று மக்களுக்குத்தெரிகிறது .

ப்ரூஸ் வெய்னோ , சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் சிறையில் தவிக்கிறான் . முதலில் தன் உடலையும் பின் தனது மனதையும் தயார்படுத்துகிறான் . தன்னம்பிக்கையை மனதில்  வைத்து தப்பிக்க முயற்சி செய்கிறான் . மூன்றாவது அட்டம்ப்டில் தப்பித்து கோதம் நகருக்கு வருகிறான் . மீண்டும் செலினாவிடம் சென்று உதவி கேட்கிறான் . அவளும் உதவுவதாக சொல்கிறாள் . அதன்பின் எப்படி கோதம் நகரைகாப்பாற்றுகிறார்கள் என்பதே கிளைமேக்ஸ் .யார் இந்த பெய்ன் ? வெல் , இதுக்கு உங்களுக்கு விடை தெரிஞ்சிருக்கும் . பெய்ன் ஒரு சிறைக்கைதி . அவனை உலகிலேயே மிக மோசமான பாதாள சிறையில் அடைத்துவைத்திருப்பார்கள் . அப்படி என்ன மோசமான ஜெயில் என்கிறீர்களா ? சிறைச்சாலை படத்தில் வருவது போன்று பெரிய கொடுமையெல்லாம் அவ்வளவாக இருக்காது . ஆனால் மனதளவில் நம்மை நம்பவைத்து , நம் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையை மனதில் விதைத்து அந்நம்பிக்கையிலேயே இறந்துவிடுவோம் . ஆனால் கடைசி வரை தப்பிப்பது என்பது நடவா விஷயம் . ஏற்கனவே பேட்மேன் பிகைன்ஸ்சில் ராஸ் அல் குல் ஒரு காட்சியில் சொல்லியிருப்பார் . எனக்கு ஒரு மனைவியும் குழந்தையும் இருந்ததென்று . உண்மையில் ராஸ் ராணுவத்தில் பணியாற்றும்போது , தலைமையின் மகளையே டாவடித்து மாட்டிக்கொள்வார் . அவரைத்தப்பிக்க வைத்து , அவரின் மனைவி தண்டனையை ஏற்றுக்கொள்வார் . கர்ப்பிணியாக இருந்த அவர் அந்த ஜெயிலில் மாட்டிக்கொள்ள , அங்கு அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . சில நாட்களில் தாய் இறந்துவிட ஜெயிலில் நடக்கும் ஒரு கலவரத்திலிருந்து  அந்த குழந்தையை ஒருவன் தப்பிக்கவைக்கிறான் . அவன்தான் பெய்ன். அந்த குழந்தை ராஸைக்கண்டுபிடித்து பெய்னை மீட்க வைக்கிறது . மீண்ட பெய்னுக்கு ராஸ் அல் குல்  , லீக் ஆஃப் ஷேடோஸில் இணைத்துக்கொண்டு அனைத்துவித்தைகளையும் கற்றுக்கொடுக்கிறார் . ஆனால் சில பிரச்சனைகளால் பெய்ன் , லீக்கை விட்டு வெளியேற்றப்படுகிறார் . ராஸ் இறந்தபின் , லீக்கை நடத்த பெய்னும் , ராஸின் குழந்தையும் தயாராகிறார்கள் . பெய்ன் ( BANE – பேன் என்ற உச்சரிப்புதான் வரும் . ஆனால் நம் ஆட்கள் தலையில் இருக்கும் பேனை உச்சரிப்பது போல உச்சரிப்பார்கள் என்பதால் தான் பெய்னாக்கினேன் . இதையும் வலிக்குச்சொல்லும் PAIN ஆக உச்சரிக்காதீர்கள்   ) – உலகிலேயே மிகமோசமான சிறைச்சாலையில் வாழ்ந்தவன் . மிகக்கொடூரமான மருந்து ஒன்று அவன் மூளையில் நேரடியாக செலுத்தப்பட்டதால் அவனுக்கு சக்தி கிடைக்கிறது என்று காமிக்ஸில் உள்ளது . ஆனால் நோலன் அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இயல்பாக எடுத்திருப்பார் . காமிக்ஸின்படி ஜோக்கர் அதிகிறுக்குத்தனம் செய்பவனாகவும் , புத்திசாலித்தனம் குறைந்தவனவாகவும் இருக்கும் . ஆனால் அதை நோலன் கிறுக்குத்தனத்தைக்குறைத்து அதீத புத்திசாலித்தனமாக தன்னுடைய ஜோக்கரை உருவாக்கியிருப்பார் . அதேபோல் தான் பெய்னும் . காமிக்ஸின்படி அதீத பலசாலி , ஜோக்கருடன் கம்பேர் செய்யும்போது ஜோக்கரைக்காட்டிலும் அதிபுத்திசாலி . ஆனால் நோலன் அப்படியே அதை பின்பற்றாமல் தன்னுடைய பெய்னை அதீத பலசாலியாகவும் ஜோக்கரைக்காட்டிலும் குறைந்த புத்திசாலியாகவும் காட்டியிருப்பார்  . அப்படிக்காட்டினால் மட்டுமே நம்மால் உணர்ந்து பார்க்கமுடியும் . அதன்காரணமாகத்தான் பெய்னை ஜோக்கரிடமிருந்து நோலன் வேறுபடுத்திக்காட்டியிருப்பார் என்பது என் எண்ணம்
THE DARK KNIGHT படத்தில் ஒரு பெரிய DISADVANTAGE ஆக ஹீரோயினைக் குறிப்பிட்டிருப்பேன் . அதையெல்லாம் சமன் செய்யும் பொருட்டு அட்டகாசமான இரு அழகிகளைத்தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் . அதுவும் இப்படத்தில் வரும் கேட்வுமனைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் . வெய்ன் மேன்னருக்குள் பணிப்பெண்ணாக நுழைந்து , வெய்னின் கைரேகை மற்றும் அவரது தாயாரின் முத்துமாலையைத் திருடியதும் , அப்போது வெய்னிடம் மாட்டிக்கொள்ளும்போது பாவமாக முகத்தைவைத்துக்கொண்டு பேசும் காட்சியும் , அதைத்தொடர்ந்து “Oops” என்றவாறே குரலையும் முகத்தையும் மாற்றிக்கொண்டு அவர்எஸ்ஸகும் காட்சியும் அட்டகாசமாக இருக்கும் . அதேபோல் கைரேகையை வில்லன் குருப்பிடம் கொண்டுபோய் சேர்க்கும் காட்சியும் , அதைத்தொடர்ந்து நடைபெறும் சண்டையும் போலிஸ் அங்கே வந்தவுடன்  அவரின் நடிப்பும் அருமையாக இருக்கும் .  ANNE இதில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் என்றால் மிகையில்லை . ஆனே தொடர்ந்தாற்போல் இன்டர்ஸ்டெல்லரிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  பெய்னுடன் வில்லியாக வரும் மரியான் காட்டிலார்டு ஏற்கனவே PUBLIC ENEMIES எனும் படத்தில் கிறிஸ்டின் பேலுடன் நடித்துள்ளார் . மேலும் இவர்தான் நோலனின் இன்செப்ஷனில் காப்பின் மனைவி மால் கேரக்டரிலும் நடித்திருப்பார் .


ஜான்ப்ளேக்குக்கு பேட்மேனை எப்படித்தெரியும் என்று நமக்குக்குழப்பும் . அதற்கு அவன் சொல்லும் காரணமும் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது . THE PRESTIGE படத்தில் இதேபோன்றதொரு காட்சி வரும் . ஒரு மேஜிக் ஷோவில் புறாவைக்கொல்வதை ஒரு சிறுவன் பார்த்து விட்டு கிறிஸ்டின்பேலிடம் தெரிவிப்பான் . அதற்கு பேல் இதோ அந்த பறவை வந்துவிட்டது என்பார் . அதற்கு சிறுவன் இது அதனுடைய சகோதரன் , இறந்த அந்த பறவை எங்கே எனக்கேட்பான் . அங்கிருக்கும் யாரும் , ஏன் நாம்உட்பட யாரும் அதைக்கவனிக்க மாட்டோம் . ஆனால் அந்த சிறுவன் கண்டுபிடித்திருப்பான் . அதேமாதிரி தான் இப்படத்தில் ஜான் ப்ளேக் கேரக்டரும் .

இப்படத்தில் பெய்னாக வந்த டாம் ஹார்டி , தன் இளம்வயதில் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கும்போது அவரின் நடிப்பைப்பார்த்துவிட்டு மைக்கேல் கெய்ன் திட்டித்தீர்த்தாராம் . ஆனால் இப்படத்தில் அவரின் பர்பாமென்ஸைப்பார்த்து மிரண்டு போனாராம் . டாம் ஹார்டியின் உழைப்பைப்பார்த்த பேல் , தான் ஒருவேளை படம் இயக்கினால் அதில் கண்டிப்பாக டாமுக்கும் வேடமிருக்கும் என்று கூறுகிறார் . INCEPTION முடித்த கையோடு TINKER TAILOR , THIS MEANS WAR போன்ற படங்களில் நடித்தார் . எல்லாம் செகன்ட் ஹீரோ கேட்டகரி தான் . ஆனால் இந்த திரைப்படம் , டாமுக்கு ஒரு திருப்புமுனை என்றால் அதிசயமில்லை . அந்த இன்ட்ரோ பிளைட் காட்சிகளும் அப்போது பேசும் வசனங்களும் அட்ட்காசமாக இருக்கும் . இவரின் பெய்ன் வாய்ஸ் மாடுலேசன் எனக்கு மிக மிக பிடித்திருந்தது . தமிழிலும் டப்பிங் அருமையாக செய்திருப்பார்கள் . ஒருவன்
“HAVE WE STARTED THE FIRE ?” என்று வினவும்போது ,
‘YES , THE FIRE RISES ’ என்று அவரின் வாய்ஸ் வரும் காட்சியெல்லாம் சூப்பராக இருக்கும் .  ஜோக்கரின் அளவிற்கு இல்லையென்றாலும் டாம் ஹார்டியும் தன்னால் முடிந்தவரை சிறப்பாக செய்திருக்கிறார் . அவருடைய கோவம் , கொடூரம் , வெறி என எல்லாவற்றையும் கண்களாலே காட்டியிருப்பதில் வெற்றியும் பெறுகிறார் .

கிறிஸ்டின் பேல் . பேட்மேன் பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்த ஒரே உருப்படியான சட்டை என்றால் அது இவருடையதுதான் .பேட்மேன் பிகைன்ஸ் முழுக்க இவருடைய வாழ்க்கை என்பதால் நடிக்க செம ஸ்கோப் . டார்க் நைட் முழுக்க வில்லனுக்கு முக்கியத்துவம் என்பதால் கொஞ்சம் நடிக்கும் வாய்ப்புக்குறைவு தான் . ஆனால் ரைசஸில் இவர் டார்க் நைட்டுக்கும் சேர்த்து வைத்து நடித்திருப்பார் . ஆல்பிரட்டிடம் பேசும் காட்சிகள் , கிளைமேக்ஸ் காட்சியில் செலினாவிடம் பேசும் காட்சிகள் , சிறையிலிருந்து எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்று போராடி , அது முடியாதபோது இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நடித்திருக்கிறார் . படத்தில் ஹீரோ , வில்லனிடம் முரட்டு அடி வாங்குவது போன்று காண்பித்திருப்பார்கள் . எட்டுவருடம் பார்ம் அவுட்டில் இருந்துவிட்டு சச்சின் , கவாஸ்கர் , முகமது அலி , பில்கேட்ஸ் என எவர் வந்தாலும் அவர்களுடையத்துறையில் சிறந்துவிளங்கிவிட முடியாது . அவர்கள் கடுமையான பயிற்சிகளை எடுத்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் . அதைத்தான் நோலன் காட்சிப்படுத்தியிருப்பார் . இருவரும் லீக் ஆஃப் ஷேடோசைச்சார்ந்தவர்கள் . ஒருவரின் ட்ரிக் கண்டிப்பாக இன்னொருவருக்குத்தெரியும் . அதிலும் பெய்ன் , வாழ்நாள் முழுக்க இருளிலே கிடந்தவன் . பேட்மேனைக்காட்டிலும் பலசாலி . அவனால் பயிற்சியின்றி இருக்கும் இருளின் இளவரசனான பேட்மேனை எளிதாக வீழ்த்த முடியும் .   அதைத்தான் சரிவிகிதமாக காண்பித்திருப்பார் . அதேநேரம் வில்லனின் வேகத்தை ஆல்பிரட் முன்பே எச்சரித்திருப்பார் . அப்படியிருந்தும் முறையான பயிற்சி இல்லாமல் சென்றால் வில்லன் சும்மா விடுவாரா ? கிளைமேக்ஸ் காட்சியில்கூட பெய்னின் மாஸ்க் உடைந்துபோவதால் தான் பேட்மேனிடம் அடிவாங்குவான் .

மைக்கேல் கெய்னைப்பற்றி கூறவேண்டுமெனில் படத்தில் மனிதர் ஆல்பிரட்டாக சீரியஸ் முகம் காட்டியிருப்பார் . அவர் ஒவ்வொருமுறை வெய்னிடம் வேண்டாம் என்று கூறும்போதாகட்டும் , வெய்ன் குடும்பத்தில் மிச்சமிருக்கும் உங்களையும் இழக்கவிரும்பவில்லை என்று சொல்லிவிட்டு ரேச்சலைப்பற்றிச் சொல்லும்போதாகட்டும் , கண்கலங்க வைத்திருப்பார்ஆனால் நிஜத்தில் செம ஜாலியான மனிதர் . முடிந்தால் அவருடைய இன்டர்வியூக்களைப் பாருங்கள் .


WORKING WITH THE DAMNED IN 1980 PREPARED ME FOR A LIFE WITH CHRIS NOLAN .

இதைச்சொன்னவர் வேறு யாருமில்லை . நம்ம ஹன்ஸ் ஜிம்மர் தான் . நோலன் படங்களில் தனியாக எப்போதும் இசைத்தெரியாது . அது படத்திற்கான இசை . படத்துடன் பார்க்கும்போது மட்டும்தான் அதன் உயிர்ப்புத்தன்மை தெரியும் . இவ்விஷயத்தில் குப்ரிக்கின் படங்களையும் குறிப்பிடலாம் . டாரன்டினோ  , ஸ்கார்சேசே போன்றோர்களின் படத்தில் இசை என்பது தனியாய்த்தெரியும் . குறிப்பாக டாரன்டினோ படங்களில் இசை அட்டகாசமாக இருக்கும் . படத்துடன் லிங்க் ஆகுதோ இல்லையோ , மொபைலில் ரிங்டோனாக வைக்கும்வண்ணம் இருக்கும் . ஆனால் படத்தில் இசையின் வீச்சு நம்மை பாதிக்காது . காரணம் அது காட்சியைத்தாண்டிய இசை . சர்க்கரைப்பொங்கலில் அரிசிக்கு அடுத்தபடியாக வெல்லம் இருந்தால்தான் நன்றாய் இருக்கும் . அரிசியைக்காட்டிலும் வெல்லம் அதிகமானால் திகட்டும் . ஆனால் ஜிம்மரின் இசை அப்படிக்கிடையாது . இப்படத்தில் மிரன்டா ஒரு ஆர்கனைசேசனுக்கு டொனேட் செய்தவர்களை வைத்து ஒரு பார்ட்டி கொடுப்பார் . வரும் செலிபிரைட்டிகளை வெளியில் நின்று மீடியாக்காரர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள் . அந்நேரத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ்கார் வரும் . ‘யாருப்பா அது ?’ என்று ஒருவர் கேட்கஏதாவது பழைய கிழடுகட்டை , ஸ்போர்ட்ஸ் கார்ல வந்திருக்கும்என்று மற்றொரு மீடியாக்காரர் தெரிவிப்பார் . ஆனால் உள்ளே இருந்து ப்ரூஸ் வெய்ன் இறங்குவார் . ‘ஹே அது ப்ரூஸ் வெய்ன்என்று ஒருவன் சொன்னதும் படபடவென அங்கிருக்கும் அனைத்து போட்டோ கிராபர்களும் போட்டோ எடுப்பார்கள் . அடுத்த 10-வது நொடி அனைவரின் ரோல்களும் தீர்ந்துவிடும் . 8 வருடங்களுக்குப்பின் பார்க்கவே முடியாத ஒரு பில்லியனரான ப்ரூசைப்பார்த்தவுடன் அவர்களுக்கு தோன்றும் மனநிலையை , பேட்மேனின் இன்ட்ரோ காட்சியில் நமக்குத்தோன்ற வைத்திருப்பார் நோலன்  . ஆனால் நோலனைக்காட்டிலும் அக்காட்சியை நம் மனதில் ஆழமாகப்பதியச்செய்து உள்ளுக்குள் அதுவரைத் தூங்கிகொண்டிருக்கும் பேட்மேனின் வெறியனை  வெளியே கிளப்பிவிடுபவர் ஹன்ஸ் ஜிம்மர்தான் . அந்த இடத்தில் வரும் பிண்ணனி இசை , நமக்குள் ஏற்றும் ஒருவிதமான மாயை வேறு எந்த இசையமைப்பாளராலும் ஏற்படுத்தியிருக்கமுடியாது . பொதுவாக ஹன்ஸ் எக்கச்சக்கமான படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் எனக்கு அவரிடம் பிடித்த இசை “HE IS A PIRATE” தீம் தான் . ஆனால் அதையும் தூக்கிசாப்பிடவைக்கும் விதமாக இப்படத்தில் பேட்மேனின் தீம் அமைந்திருக்கும் . அதேபோல் கேட்வுமன் செலினா வரும்காட்சியிலெல்லாம் பியானோவை வைத்து  கேட்வுமன் தீம் வாசிக்கும்போதும் அட்டகாசமாக இருக்கும் . படத்தின் மாபெரும் ப்ளஸ்ஸாக திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு அடுத்து நான் கருதுவது இசையைத்தான் .

சரி , இப்படத்தில் நோலன் தவறே செய்யவில்லையா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்லுவேன் . நோலன் இப்படத்தில் செய்த மிகப்பெரிய தவறு போலிஸ்காரர்களை டனலுக்குள் அடைத்தது தான் . அதற்குப்பதிலாக அத்தனைபேரையும் அர்காமிலோ அல்லது ஏதேனும் ஒரு தீவிக்குள் சென்று மாட்டிவிட்டிருக்கவேண்டும் . ஆனால் கிளைமேக்ஸில் வரும் போர்க்காட்சிகளுக்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு விட்டிருப்பார் என நினைக்கிறேன் . எனக்கெல்லாம் மிரன்டா டேட் தான் வில்லி என்று கண்டுபிடிக்கமுடியவில்லை . ஒருவேளை சினிமா ஞானம் குறைவாகக் இருக்கலாம் அல்லது காமிக்ஸ் பரிட்சயம் இல்லாமலிருக்கலாம்  . அந்தவேளையில் பேட்மேனின் முகத்தில் தோன்றும் துரோகத்தின் வலியை நம்மாலும் உணரமுடியும் . ஒருவேளை டேட் வில்லி என்பது முதலிலே தெரிந்தாலும் அதன்பின் வரும் காட்சிகள் அவ்வளவு அசுவாரஸ்யமானது கிடையாது என்பது என் எண்ணம் (.கா - மெமென்டோ) . அதை வில்லன்குழு எப்படி செய்யப்பாக்கிறார்கள் , அதை பேட்மேன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை விறுவிறுப்புடன்தான் சொல்லியிருப்பார்கள் . அதேபோல் இப்படத்தில் நோலன் எடுத்த விஷயம் முழுக்கமுழுக்க தேசப்பற்று . டார்க்நைட் படத்திலும் தேசப்பற்றும் தியாகமும் இருந்தாலும் இப்படத்தில் வருவது போன்றதில்லை . அப்படத்தில் ஜோக்கர் என்பவனை ஒடுக்கி ஊரைக் காப்பாற்றினால் போதும் . ஆனால் இதில் மரண பயத்தில் இருக்கும் தன் நகருக்கு , போராட்டகுணத்தை உண்டாக்கி , அவர்களின் தேசப்பற்றைக் காட்டியதால் தான் இப்படம் எனக்கு மிகமிக பிடித்திருந்தது .மொத்தத்தில் பேட்மேன் சீரிஸின் அற்புதமான ட்ரையாலஜி என்பது மட்டுமில்லாமல் உலக சூப்பர்ஹீரோ வரலாற்றிலும் நம்பர் .1 ட்ரையாலஜி என்று எல்லோர் மனதிலும் இடம்பெறவைத்திருக்கிறார் நோலன் . இதுவரை மட்டுமல்ல , இனிமேல் எவ்வளவு ட்ரையாலஜி சீரிஸ்கள் , சூப்பர்ஹீரோ சீரிஸ்கள் வந்தாலும் அத்தனையும் நோலனின் பேட்மேன் முன்பு லீகோ பொம்மைப்படம் போல்தான் இருக்கும் . WB காசு பார்க்க இன்னும் 50 பேட்மேன் திரைப்படங்களைக்கூட தயாரிக்கும் . அதற்கு குறிப்பிட்ட வருமானமும் வரும் . ஆனால் அதற்கு மூலகாரணமாக இருப்பது நோலனின் பேட்மேன் சீரிஸ்கள் என்பதாகத்தான் இருக்கும் . எப்படி காமிக்ஸ்களால் இதற்கு முந்தைய பேட்மேன்கள் ஓடியதோ , அதேபோல் இனிமேல் வரும் பேட்மேன் திரைப்படங்கள் நோலனின் பேட்மேனால் ஓடப்போகிறது . இப்படம் டெத் ஸ்லோ என்பவர்கள் டார்க் நைட் தவிர்த்து நோலனின் மற்ற படங்களை மீண்டும் ஒருமுறைப்பார்த்தார்கள் என்றால் புரியும் . இது ஸ்லோவான படம் என்றாலும் பேட்மேன் சீரிஸ்க்கு ஒரு சிறப்பான முற்றுப்புள்ளி என்றே கூறுவேன் . பேட்மேன் பிகைன்ஸிலிருந்து பார்த்தால் ஒன்று முழுக்க முழுக்க புரியும் . இது ஒரு சூப்பர்ஹீரோவின் சாகசத்தைப்பற்றிய திரைப்படமல்ல . அவனின் வாழ்க்கையைப்பற்றிய சிறந்த திரைப்படம் . இதனைப்பார்த்து மார்வல் கூட தன்னுடைய கேப்டன் அமெரிக்காவை முடிந்தவரை இயல்பாக எடுக்கமுயற்சித்திருப்பது நன்றாகத்தெரியும் . அவெஞ்சர் , கேப்டன் அமெரிக்கா , சூப்பர்மேன் , அயர்ன் மேன் என ஒவ்வொரு திரைப்படமும் படத்தில் நடிப்பவர்களுக்காக , காமிக்ஸில் படித்த கதாபாத்திரத்தை பார்ப்பதற்காக , முக்கியமாக கிராபிக்ஸ் காட்சிகளுக்காகத்தான் திரையரங்குச்செல்வார்கள் . ஆனால் , அந்த முறையை மாற்றி , நோலன் என்ற பெயருக்காக படம் பார்க்கச்சென்றார்கள் என்றால் அது பேட்மேன் மட்டும் தான் .

"The key thing that makes the third film a great possibility for us is that we want to finish our story [...] rather than infinitely blowing up the balloon and expanding the story [...] Unlike the comics, these things don't go on forever in film and viewing it as a story with an end is useful. Viewing it as an ending, that sets you very much on the right track about the appropriate conclusion."
-    CHRIS NOLAN

திரைக்குப்பின்னால்


ஷூட்டிங்கின் போது நோலன் , மானிட்டரில் ப்ளேபேக் எனப்படும் பின்னோட்டக்காட்சிகளைப் பார்ப்பது கிடையாது . பெரும்பாலான காட்சிகளை படம்பிடிக்கும்போது கேமராவின் மானிட்டர்வழியே பார்த்துக்கொள்வார் . அதில் மனதிருப்தி ஏற்பட்டால் அடுத்த ஷூட் ரெடியாகிவிடும் . ஒருசில காட்சிகள் உறுத்தலாக இருக்கும்பட்சத்திலே மானிட்டரின் உதவியை நாடிச்செல்வார் .

கோதம் நகரில் அமெரிக்கன் கால்பந்து விளையாடும் காட்சியில் தயாரிப்பு நிறுவனம் 500 பேருக்கான பணத்தைக்கொடுத்திருந்தது . மீதமுள்ள மக்கள் கூட்டம் , ஏறத்தாழ சுமார் 10000 பேர் வெறுமனே ஆடியன்சாக ஷூட்டிங் பார்க்க வந்திருந்தவர்கள் . மைக்கேல் பே , ரோலன்ட் எம்ரிச்சின் கிராபிக்ஸ் சாகசமெல்லாம் அறியாத ஆளாக இருக்கும் நோலன் , இக்கூட்டத்திற்கு ஒரு போட்டிவைத்து அதில் வென்றவர்களுக்கு மெர்சிடன்ஸ் காரைகொடுத்து வழியனுப்பி வைத்தார் .

தி டார்க் நைட் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிகாகோவில் எடுக்கப்பட்டிருந்தது . TDKR – ல் லொகேசன்கள் ரிப்பீட் ஆகக்கூடாது அதேநேரம் லிங்க் ஆகவும் இருக்கவேண்டும் என்பதற்காக பிட்ஸ்பெர்க்கில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டது . இந்தியா , இங்கிலாந்து , ஸ்காட்லாந்து ,லாஸ் ஏஞ்சல்ஸ் , நியூயார்க் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடந்தது . இந்தியாவில் ஷூட்டிங் நடந்ததற்கு முக்கிய காரணம் , நோலனிடம் சில இந்திய இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதும் ஒரு காரணம் .


BATMAN BEGINS திரைபடத்தில் WAYNE MANNER – ஆக வரும் கட்டிடத்தின் பெயர் MENTMORE TOWERS . இங்கிலாந்தில் உள்ளது . ஆனால் TDKR –ல் வரும் WAYNE MANNER இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் 1580 –ல் கட்டப்பட்ட WALLATTON PARK எனும் கட்டிடமாகும் .

இப்படம் 2012-ல் வெளிவந்த ஹாலிவுட் சூப்பர்ஹீரோ திரைப்படங்களில்  3D டெக்னாலஜி இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரே திரைப்படம் . மேலும் அந்த ஆண்டில் , பிலிம் ரோலை உபயோகித்து எடுக்கப்பட்ட திரைப்படமும் இதுதான் .


உண்மையில் கேரி ஓல்ட்மேனிடம் நோலன் அணுகியது வில்லன் வேடத்திற்குத்தான் . ஆனால் அதை கேரி அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் பின் நோலன் கமிஷனர் கோர்டன் வேடத்தை கேரிக்கு ஒதுக்கினார் . அந்த மனிதர் வில்லன் வேடங்களில் நடித்து அலுத்துப்போய் இருந்த போது பேட்மேன் திரைப்படங்கள் அவருக்கு ஒரு புதுப்பாதையை உண்டாக்கியது என தாரளமாகச்சொல்லலாம் . ஆனால் அவருக்குச் சொல்லிக்கொள்ளும்படியான வேலை ரைஸசில் இல்லை , Except பேட்மேனை மீண்டும் வரவைப்பதைத்தவிர .


மேலே முதலில் நான் கேட்ட கேள்விகளுக்கு விடை பாபர் மற்றும் அவரது மகன்  ஹூமாயுன் . அவர்களிருவரின் வாழ்க்கை வரலாறுகளின் தாக்கம் இப்படத்தின் கதையமைப்பு மற்றும் பல காட்சிகளில் வெளிப்படும்.I KNOW . I  AM DONE WITH BATMAN
-    CHRIS NOLAN & MEGNEASH
RELATED POSTS :


FOLLOWING

MEMENTO

MEMENTO - 2

INSOMNIA

BATMAN BEGINS

THE PRESTIGE

THE DARK KNIGHT

INCEPTION

INTERSTELLAR


உங்கள் விருப்பம்

5 comments:

 1. கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தபோது தாங்கள் கடைசியில் பதிலைச் சொல்லிய விதம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 2. அடேங்கப்பா, படத்தைவிட தங்களது விமர்சனம் பிரமாண்டமாக இருக்கிறது... அசத்துங்க, அசத்துங்க....
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 3. மிக நீண்ட தெளிவான பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 4. 35 தடவை...! யம்மாடி...!

  வாழ்க வளமுடன்...

  ReplyDelete
 5. கதையைப் படித்தால் படத்தை பார்த்தாக தானே அர்த்தம்

  ReplyDelete