Tuesday, 23 December 2014

IN TIME – சினிமா விமர்சனம்உலகில் இருக்கும் அனைவரும் வயதாகாமல் ,25 வயது இளைஞர்களாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள் . வேறமாதிரி இருக்கும் அல்லவா ? அதுதான் இப்படத்தின் கரு .எதிர்காலத்தில் மனிதர்கள் , மரபணு ஆராய்ச்சியில் ஒரு புதிய சாதனையைச் செய்கின்றனர் . மனிதர்களுக்கு 25 வயதுக்குமேல் ஆகாமல் , ‘என்றும் 25  ‘ஆக இருப்பதே அந்த சாதனை . அப்படியே இருந்திருந்தால் ஜாலியாய் தான் இருந்திருக்கும் . ஆனால் , 25 வயதைத்தாண்டிய பின் ஒரு வருடம் மாத்திரமே வாழமுடியும் . அதற்குமேல் வாழவேண்டுமெனில் உழைக்கவேண்டும் . புரியவில்லையா ?

இப்போது நான் பிறக்கிறேன் என்றால் , என்னுடைய 25 வயது வரை , இப்போது இருப்பதுப் போல சாதாரணமாகவே  வளர்வேன் . ஆனால் என்னுடைய 25 –வது வயதைக்கடந்த பின் , எனக்கு வயதாவது நின்றுவிடும். அதன்பின் எத்தனை ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் , 25 வயதுடையவன் தோற்றம் போலவே இருப்பேன் . ஆனால் என் 25வது வயது முடிந்தபின் , எனக்கிருக்கும் வாழ்நாள் நேரம் வெறும் 1 ஆண்டுதான் . அதற்குமேல் வாழவேண்டும் என்றால் , நான் வேலைசெய்து எனக்கான வாழ்க்கைநேரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் .இப்போது இருப்பதுபோல் ,பணத்திற்காக வேலைசெய்வது போய், நேரத்திற்காக வேலைசெய்வது போன்று எதிர்காலத்தில் மாறிவிடும் . அதாவது , இப்போது நிறைய பணம் சம்பாதிப்பவன் , சந்தோஷமாய் நினைத்ததை வாங்கி ஆடம்பரமாய் திரிவான் . ஆனால் , எதிர்காலத்தில் ,பணத்திற்கு பதில் நேரத்தை சம்பாதித்து , அந்நேரத்தைகொண்டே ஆடம்பரமாய் இருப்பான் .அதற்காக அவர்களிடம் 20 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது ; அதுவரை அவர்களுக்கு மரணமே இல்லை என்று அர்த்தம் கிடையாது . இயற்கையான மரணம் வருதற்குத் தான் 20 ஆண்டுகள் . நடுவில் செயற்கையாக இறந்துவிட வாய்ப்புகளுண்டு (யாராவது கொலை செய்துவிட்டாலோ , அல்லது தற்கொலையைத் தழுவினாலோ , அவர்களின் நேரத்திற்கு முன்பே இறந்துவிடுவார்கள்). நம்முடைய காலத்தில் ஒரு காபியின் விலை 10 ரூபாய் எனில் , வருங்காலத்தில் ஒரு காபியின் விலை 20 நிமிடம் . அதாவது ,இப்போது சாதாரணமாய் ஒரு 10 ரூபாய் சம்பாதிக்க நமக்கு ஆகும் நேரம் 20 நிமிடம் எனில் , வருங்காலத்தில் அந்த நேரம்தான் காபியின் விலையாய் இருக்கும் . பொருட்களின் விலை உட்பட அனைத்தும் நேரத்தைச் சார்ந்தே அமைந்திருக்கும் . இதுதான் இப்படத்தின் தெளிவான கரு .சரி , இப்போது கதைக்கு வருவோம் . வருங்காலத்தில் மனிதர்கள் வாழும் இடங்களை TIME ZONE –களாகப் பிரித்துக்கொள்கின்றனர் . அதாவது TIME – 0 அல்லது GREENWITCH TIME ZONE என அழைக்கப்படும் நேரமண்டலத்தில் வாழ்பவர்கள் , பெரும்நேரக்காரர்களாகவும் (பணம் தான் இப்படத்தில் இல்லையே !)  , TIME ZONE 2, 3, 4 போன்றவற்றில் வாழ்பவர்கள் அவர்களின் வாழ்க்கை நேரத்தைப்பொறுத்து , பிரித்து வைத்திருக்கிறார்கள் . அப்படியொரு சூழலில் வாழ்பவன்தான் ஹீரோ வில் சாலஸ் . அவனுடைய இளமையான தாயுடன் ஒரு வறுமையான நேரமண்டலத்தில் வாழ்ந்துவருகிறான் . ஒரு பாரில் , ஹாமில்டன் என்பவனை வில்லன் க்ரூப்பிடம் இருந்து காப்பாற்றுகிறான் . அந்த ஹாமில்டன் 105 வயது வாழ்ந்து ,வாழ்க்கையை வெறுத்துவிட்டதாகக் கூறுகிறான் . ‘வில்’லுக்குத்தெரியாமலேயே , தன்னிடம் இருக்கும் 106 ஆண்டுகளை வில்லுக்குத் தந்துவிட்டு ஹாமில்டன் இறந்து போகிறான் . அதன்பின் தன் தாயின் 75 –வது பிறந்தநாளைக்கொண்டாடலாம் என செல்பவனுக்கு , ஒரு அதிர்ச்சி . அவன் கண்முன்னே , கையிலேயே நேரம் முடிந்து இறந்துவிடுகிறாள் . அதன்பின் ஹீரோ , பெரும் நேரக்காரர்கள் வாழும் க்ரீன்விச் நேரமண்டலத்துக்கு சென்று , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார் . அதேநேரம் டைம் கீப்பர்ஸ் எனப்படும் காவல் அதிகாரிகள் ,106 ஆண்டுகளை ஒரேநொடியில் எப்படிகைமாற்றப்பட்டது என்பதைத்தீவிரமாக ஆராய்ந்து வில் , ஹாமில்டனைக்கொன்றதாகக் கருதி அவனைத்தேடுகின்றனர் .

இங்கோ ஹீரோயினைச்சந்திக்கும் ஹீரோ,அவள் ஒரு பெரும் கோடிஸ்வர நேரக்காரரின் மகள் என்பதனை அறிந்துகொள்கிறான் .ஹீரோயினும் ஹீரோவும் காதலிக்க ஆரம்பிக்கும் சமயத்தில் டைம் கீப்பர்கள் வந்து வில்லைப்பற்றிய உண்மைகளைக்கூறி , அவனிடம் இருக்கும் நேரத்தையெல்லாம் அபகரித்துக்கொள்கிறார்கள் . அதன்பின் அவர்களிடமிருந்து ஹீரோயினைக்கடத்திக்கொண்டு  தப்பிக்கும் ஹீரோ என்ன ஆனார் என்பதை பக்கா ஆக்சன் கலந்த திரில்லராக எடுத்திருக்கிறார்கள் .

இது ஒரு துளிகூட லாஜிக் இல்லாத கான்செப்ட் எனினும் , அதை அழகாய் பயன்படுத்தி , ஒரு அமர்க்களமான சயின்ஸ் – பிக்சன் படத்தைத் தந்ததற்கு  இயக்குனர் ஆன்ட்ரூவைத் தாராளமாகப் பாராட்டலாம் . ஒரு சீன்கூட அலுக்கமால் போனது . டோட்டல் ரீகால் திரைப்படத்தினைப்போல் ஒரு அட்டகாசமான அனுபவத்தை இதுவும் கொடுத்தது .

ஒரு காட்சியில்   ஹீரோவிடம் , ஹீரோயினின் தந்தை தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைப்பார் . அந்த ஸ்னாப்ஸாட்டை இதில் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் .
பார்த்துவிட்டீர்களா  ? இப்போது  உங்களிடம் ஒரு கேள்வி . இதில் யார் ஹீரோயினின் அம்மா ? யார் ஹீரோயின் ? யார் ஹீரோயினின் பாட்டி ?

நடிகர்கள் பற்றியெல்லாம் பெரிதாய்க்கூற ஒன்றுமில்லை . டைம் கீப்பராக வருபவர் மாத்திரம் நமக்கெல்லாம் பேட்மேனில் ஸ்கேர் க்ரோவாக அறிமுகமாகிய சில்லியன் மர்பி . எல்லாரும் சிறப்பான நடிப்பைக்கொடுத்திருக்கிறார்கள் . ஒளிப்பதிவும் அருமை ரகம்  . பிண்ணனி இசைதான் படத்திற்கு முழுபலம் என்றே கூறலாம் .


ஆக்சன் விரும்பிகள் , சயின்ஸ் – பிக்சன் விரும்பிகள் , கமர்ஷியல் விரும்பிகளுக்கெல்லாம் படம் தாராளமாய் பிடிக்கும் .தொடர்புடைய இடுகைகள்


உங்கள் விருப்பம்

5 comments:

 1. செம செம ... எப்படிய்யா இந்த மாதிரி படங்களை தேடி பாக்குறீங்க.
  பெரும் நாட்டமில்லை எனினும் ஒருமுறை பார்க்கத் தூண்டுகிறது டைம் கிறக்கம். உங்கள் தளத்தை ஒரு நோட்டம் விட்டுட்டு பிறகு வருகிறேன்.

  ReplyDelete
 2. Google Friend Connect ல ஏதோ பிரச்சினை இருக்குது. இணைந்து கொள்ள முடியல ... என்னனு பாருங்க ...

  ReplyDelete
  Replies
  1. அண்ணா அது செக் பண்ணேன் ணா ! நீங்க இணைந்த மாதிரி தான் காட்டுகிறது .

   ஏதோ எப்பவாச்சும் பாக்கற வித்தியாசமான படங்கள எழுதுவேன் ணா ! அந்த மாதிரி தான் இதுவும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

   Delete
 3. தற்போது அபுதாபியில் இருக்கும் பைசல் ஒருமுறை தொலைபேசிய பொழுது இந்தப் படத்தை பார்க்க சொல்ல பார்த்தேன்...
  அருமையான படம் அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா !

   Delete