IN TIME – சினிமா விமர்சனம்



உலகில் இருக்கும் அனைவரும் வயதாகாமல் ,25 வயது இளைஞர்களாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள் . வேறமாதிரி இருக்கும் அல்லவா ? அதுதான் இப்படத்தின் கரு .



எதிர்காலத்தில் மனிதர்கள் , மரபணு ஆராய்ச்சியில் ஒரு புதிய சாதனையைச் செய்கின்றனர் . மனிதர்களுக்கு 25 வயதுக்குமேல் ஆகாமல் , ‘என்றும் 25  ‘ஆக இருப்பதே அந்த சாதனை . அப்படியே இருந்திருந்தால் ஜாலியாய் தான் இருந்திருக்கும் . ஆனால் , 25 வயதைத்தாண்டிய பின் ஒரு வருடம் மாத்திரமே வாழமுடியும் . அதற்குமேல் வாழவேண்டுமெனில் உழைக்கவேண்டும் . புரியவில்லையா ?

இப்போது நான் பிறக்கிறேன் என்றால் , என்னுடைய 25 வயது வரை , இப்போது இருப்பதுப் போல சாதாரணமாகவே  வளர்வேன் . ஆனால் என்னுடைய 25 –வது வயதைக்கடந்த பின் , எனக்கு வயதாவது நின்றுவிடும். அதன்பின் எத்தனை ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் , 25 வயதுடையவன் தோற்றம் போலவே இருப்பேன் . ஆனால் என் 25வது வயது முடிந்தபின் , எனக்கிருக்கும் வாழ்நாள் நேரம் வெறும் 1 ஆண்டுதான் . அதற்குமேல் வாழவேண்டும் என்றால் , நான் வேலைசெய்து எனக்கான வாழ்க்கைநேரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் .இப்போது இருப்பதுபோல் ,பணத்திற்காக வேலைசெய்வது போய், நேரத்திற்காக வேலைசெய்வது போன்று எதிர்காலத்தில் மாறிவிடும் . அதாவது , இப்போது நிறைய பணம் சம்பாதிப்பவன் , சந்தோஷமாய் நினைத்ததை வாங்கி ஆடம்பரமாய் திரிவான் . ஆனால் , எதிர்காலத்தில் ,பணத்திற்கு பதில் நேரத்தை சம்பாதித்து , அந்நேரத்தைகொண்டே ஆடம்பரமாய் இருப்பான் .அதற்காக அவர்களிடம் 20 ஆண்டுகள் வாழ்க்கை இருக்கிறது ; அதுவரை அவர்களுக்கு மரணமே இல்லை என்று அர்த்தம் கிடையாது . இயற்கையான மரணம் வருதற்குத் தான் 20 ஆண்டுகள் . நடுவில் செயற்கையாக இறந்துவிட வாய்ப்புகளுண்டு (யாராவது கொலை செய்துவிட்டாலோ , அல்லது தற்கொலையைத் தழுவினாலோ , அவர்களின் நேரத்திற்கு முன்பே இறந்துவிடுவார்கள்). நம்முடைய காலத்தில் ஒரு காபியின் விலை 10 ரூபாய் எனில் , வருங்காலத்தில் ஒரு காபியின் விலை 20 நிமிடம் . அதாவது ,இப்போது சாதாரணமாய் ஒரு 10 ரூபாய் சம்பாதிக்க நமக்கு ஆகும் நேரம் 20 நிமிடம் எனில் , வருங்காலத்தில் அந்த நேரம்தான் காபியின் விலையாய் இருக்கும் . பொருட்களின் விலை உட்பட அனைத்தும் நேரத்தைச் சார்ந்தே அமைந்திருக்கும் . இதுதான் இப்படத்தின் தெளிவான கரு .



சரி , இப்போது கதைக்கு வருவோம் . வருங்காலத்தில் மனிதர்கள் வாழும் இடங்களை TIME ZONE –களாகப் பிரித்துக்கொள்கின்றனர் . அதாவது TIME – 0 அல்லது GREENWITCH TIME ZONE என அழைக்கப்படும் நேரமண்டலத்தில் வாழ்பவர்கள் , பெரும்நேரக்காரர்களாகவும் (பணம் தான் இப்படத்தில் இல்லையே !)  , TIME ZONE 2, 3, 4 போன்றவற்றில் வாழ்பவர்கள் அவர்களின் வாழ்க்கை நேரத்தைப்பொறுத்து , பிரித்து வைத்திருக்கிறார்கள் . அப்படியொரு சூழலில் வாழ்பவன்தான் ஹீரோ வில் சாலஸ் . அவனுடைய இளமையான தாயுடன் ஒரு வறுமையான நேரமண்டலத்தில் வாழ்ந்துவருகிறான் . ஒரு பாரில் , ஹாமில்டன் என்பவனை வில்லன் க்ரூப்பிடம் இருந்து காப்பாற்றுகிறான் . அந்த ஹாமில்டன் 105 வயது வாழ்ந்து ,வாழ்க்கையை வெறுத்துவிட்டதாகக் கூறுகிறான் . ‘வில்’லுக்குத்தெரியாமலேயே , தன்னிடம் இருக்கும் 106 ஆண்டுகளை வில்லுக்குத் தந்துவிட்டு ஹாமில்டன் இறந்து போகிறான் . அதன்பின் தன் தாயின் 75 –வது பிறந்தநாளைக்கொண்டாடலாம் என செல்பவனுக்கு , ஒரு அதிர்ச்சி . அவன் கண்முன்னே , கையிலேயே நேரம் முடிந்து இறந்துவிடுகிறாள் . அதன்பின் ஹீரோ , பெரும் நேரக்காரர்கள் வாழும் க்ரீன்விச் நேரமண்டலத்துக்கு சென்று , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறார் . அதேநேரம் டைம் கீப்பர்ஸ் எனப்படும் காவல் அதிகாரிகள் ,106 ஆண்டுகளை ஒரேநொடியில் எப்படிகைமாற்றப்பட்டது என்பதைத்தீவிரமாக ஆராய்ந்து வில் , ஹாமில்டனைக்கொன்றதாகக் கருதி அவனைத்தேடுகின்றனர் .

இங்கோ ஹீரோயினைச்சந்திக்கும் ஹீரோ,அவள் ஒரு பெரும் கோடிஸ்வர நேரக்காரரின் மகள் என்பதனை அறிந்துகொள்கிறான் .ஹீரோயினும் ஹீரோவும் காதலிக்க ஆரம்பிக்கும் சமயத்தில் டைம் கீப்பர்கள் வந்து வில்லைப்பற்றிய உண்மைகளைக்கூறி , அவனிடம் இருக்கும் நேரத்தையெல்லாம் அபகரித்துக்கொள்கிறார்கள் . அதன்பின் அவர்களிடமிருந்து ஹீரோயினைக்கடத்திக்கொண்டு  தப்பிக்கும் ஹீரோ என்ன ஆனார் என்பதை பக்கா ஆக்சன் கலந்த திரில்லராக எடுத்திருக்கிறார்கள் .

இது ஒரு துளிகூட லாஜிக் இல்லாத கான்செப்ட் எனினும் , அதை அழகாய் பயன்படுத்தி , ஒரு அமர்க்களமான சயின்ஸ் – பிக்சன் படத்தைத் தந்ததற்கு  இயக்குனர் ஆன்ட்ரூவைத் தாராளமாகப் பாராட்டலாம் . ஒரு சீன்கூட அலுக்கமால் போனது . டோட்டல் ரீகால் திரைப்படத்தினைப்போல் ஒரு அட்டகாசமான அனுபவத்தை இதுவும் கொடுத்தது .

ஒரு காட்சியில்   ஹீரோவிடம் , ஹீரோயினின் தந்தை தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைப்பார் . அந்த ஸ்னாப்ஸாட்டை இதில் அப்லோட் செய்கிறேன் பாருங்கள் .




பார்த்துவிட்டீர்களா  ? இப்போது  உங்களிடம் ஒரு கேள்வி . இதில் யார் ஹீரோயினின் அம்மா ? யார் ஹீரோயின் ? யார் ஹீரோயினின் பாட்டி ?

நடிகர்கள் பற்றியெல்லாம் பெரிதாய்க்கூற ஒன்றுமில்லை . டைம் கீப்பராக வருபவர் மாத்திரம் நமக்கெல்லாம் பேட்மேனில் ஸ்கேர் க்ரோவாக அறிமுகமாகிய சில்லியன் மர்பி . எல்லாரும் சிறப்பான நடிப்பைக்கொடுத்திருக்கிறார்கள் . ஒளிப்பதிவும் அருமை ரகம்  . பிண்ணனி இசைதான் படத்திற்கு முழுபலம் என்றே கூறலாம் .


ஆக்சன் விரும்பிகள் , சயின்ஸ் – பிக்சன் விரும்பிகள் , கமர்ஷியல் விரும்பிகளுக்கெல்லாம் படம் தாராளமாய் பிடிக்கும் .



தொடர்புடைய இடுகைகள்










Comments

  1. செம செம ... எப்படிய்யா இந்த மாதிரி படங்களை தேடி பாக்குறீங்க.
    பெரும் நாட்டமில்லை எனினும் ஒருமுறை பார்க்கத் தூண்டுகிறது டைம் கிறக்கம். உங்கள் தளத்தை ஒரு நோட்டம் விட்டுட்டு பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  2. Google Friend Connect ல ஏதோ பிரச்சினை இருக்குது. இணைந்து கொள்ள முடியல ... என்னனு பாருங்க ...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா அது செக் பண்ணேன் ணா ! நீங்க இணைந்த மாதிரி தான் காட்டுகிறது .

      ஏதோ எப்பவாச்சும் பாக்கற வித்தியாசமான படங்கள எழுதுவேன் ணா ! அந்த மாதிரி தான் இதுவும் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

      Delete
  3. தற்போது அபுதாபியில் இருக்கும் பைசல் ஒருமுறை தொலைபேசிய பொழுது இந்தப் படத்தை பார்க்க சொல்ல பார்த்தேன்...
    அருமையான படம் அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை