Friday, 9 January 2015

THE TIME TRAVELER’S WIFE - சினிமா விமர்சனம்இன்று  TWILIGHT SAGA எனும் காதல் காவியத்தைப்பபற்றி தான் எழுதலாம் என்றிருந்தேன் . ஒருசில படங்களைப்பார்த்தால் தான் தூக்கம் வரும் . ஆனால் TWILIGHT பற்றி எழுலதலாம் என்று நினைத்தாலே தூக்கம் வந்ததால் , மற்றொரு பதிவில் அதை விழிப்புடன் எழுதலாம் என்று விட்டுவிட்டேன் . அதைக்காட்டிலும் சிறப்பான ஒரு படத்தை இத்தனைநாட்களாக எழுதாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவு .அழகான , மெதுவான , அதேநேரம் பரவசப்படுத்தும்படியான ஒரு பேன்டசி காதல் சித்திரம் தான் டைம் ட்ராவலர்ஸ் வைஃப் . படத்தின் டைட்டிலை வைத்தே இந்நேரம் கதை என்ன என்று முடிவு செய்திருப்பிர்கள் . இருந்தாலும் விமர்சகர் என்றமுறையில் மானே , தேனே என்று ஏதாவது எழுதவில்லையெனில் அசிங்கமாகிவிடும் என்பதால் கதையைப்பற்றி எழுதுகிறேன் .

ஹென்றி எனும் சிறுவன் தன் தாயுடன் காரில் பயணித்துக்கொண்டிருக்கிறான் . அப்போது ஒரு விபத்து ஏற்பட அந்நேரத்தில் அப்படியே மறைகிறான் ஹென்றி . அந்த விபத்தில் அவனுடைய தாய் இறந்துவிடுகிறாள் . மறைந்த இவன் திடீரென தன்னுடைய வீட்டில் இருக்கிறான் . அங்கே தனது தாயும் தந்தையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் . என்ன நடக்கிறதென்றே புரியாமல் இருப்பவன் மறுபடியும் மறைகிறான் . அந்நேரம் தன் தாய் ஓட்டிய கார் ஆக்சிடன்ட் ஆவதைப்பார்க்கிறான் . அழும் அவனை ஆறுதல் படுத்தும் ஒருவன் , நான் தான் நீ என்றும் , அந்த சிறுவன் செய்தது காலப்பயணம் என்றும் கூறுகிறான் . கூறிய அந்த இளைஞன் மறையத்தொடங்குகிறான் . அவன் மறைந்து நிகழ்காலத்தில் ஒரு நூலகத்தில் நிர்வாணமாய் இருக்கிறான் (டைம் ட்ராவல் பன்னுறது உடல் மட்டும் தான் . ட்ரெஸ்ஸெல்லாம் அங்கேயே கழன்டு உழுந்துடும் ) . அந்த நூலகத்தில் ஏற்கனவே அவன் வைத்திருந்த துணிகளை உடுத்திக்கொண்டு வெளியே வருகிறான் . அந்த இளைஞனும் ஹென்றி தான் . அதாவது , அவனுடைய நிகழ்காலத்திலிருந்து , இறந்த காலமான தன் பால்ய வயதுக்கு டைம் ட்ராவல் செய்துவிட்டு மீண்டும் நிகழ்காலம் திரும்புகிறான் . நிகழ்காலத்தில் அவன் ஒரு லைப்ரேரியன் . ஒருநாள் அந்த நூலகத்திற்கு வரும் க்ளாரா எனும் மாணவி , ஹென்றியிடம் உன்னை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும் . நீயும் நானும் திருமணம் செய்துகொள்ளபோகிறோம் என்று கூறுகிறாள் . என்னடா விஷயம் என்று பார்த்தால் , சிறுமியாக க்ளாரா இருக்கும்போது , இளைஞன் ஹென்றி டைம் ட்ராவல் செய்து , அவளிடம் தங்களின் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி கூறி , அப்போதிலிருந்தே அவளைக்காதலிக்க வைத்துள்ளான் . இவனின் டைம் ட்ராவலைப்பற்றி அறிந்துள்ள க்ளாரா , ஒரு கட்டத்தில் ஹென்றியைத்திருமணம் செய்துகொள்கிறாள்  (அதிலும் ஒரு கோக்குமாக்கு ஆகிவிடும் . திருமணத்தன்று திடீர் டைம் ட்ராவல் ஆகிவிடும் ஹென்றி , எதிர்காலத்தில் இருந்து ஒரு வயதான ஹென்றி வந்து க்ளாராவை மணப்பான் ). இப்போது விஷயம் என்னவென்றால் ஹென்றியால் தன்னுடைய டைம் ட்ராவலை கன்ட்ரோல்செய்யமுடியாது . அதன் போக்கிலேயே இருந்துவிடுவான் . எதிர்காலத்துக்கு ஒரு முறை டைம் ட்ராவல் செய்யும் ஹென்றி , தங்களின் வாழ்க்கைக்காக வெற்றிபெறும் லாட்டரி சீட்டின் நம்பரை வைத்து , நிகழ்காலத்தில் 5 மில்லியன் சம்பாதித்துவிடுவான் . ஒரு கட்டத்தில் க்ளாரா பிரசவிக்க , அந்த கருவோ அவள் வயிற்றில் தங்காது . காரணம் அந்த கருவும் டைம் ட்ராவல் செய்யப்பழகிவிடும் . இப்படியே அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்க , க்ளாரா தான் தனக்கு முக்கியம் , குழந்தை வேண்டாமென்று குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வான் ஹென்றி . ஆனால் கிளாரோவோ தனக்கு குழந்தை வேண்டுமென்பதில் உறுதியாய் இருப்பாள் . அந்நேரம் பார்த்து , இறந்தகாலத்தில் இருந்து டைம் ட்ராவல் செய்து வரும் ஹென்றியை சந்தித்து , அவனுடன் தனிமையில் இருப்பாள் . இப்போது சிக்கல் என்னவென்றால் , ஒருநாள் எதிர்காலத்தில் இருந்து டைம் ட்ராவல் செய்துவரும் ஹென்றி  , குண்டடிபட்டு கிடப்பான் . அதைப்பார்க்கும் நிகழ்கால ஹென்றி , தன் சாவினை நினைத்து பயம்கொள்ள ஆரம்பிப்பான் . ஹென்றியின் குழந்தை பிறந்ததா ? ஹென்றிக்கு கடைசியில் என்ன ஆனது போன்றவைதான் இப்படத்தின் முடிவு .இந்த திரைப்படம் இதே பெயரில் 2003 – ம் ஆண்டு நாவலாக வெளிவந்தது .ஆட்ரி எனும் அமெரிக்க பெண்மனி , தன் வாழ்க்கையில் தவறவிட்ட அல்லது இழந்த காதல் மற்றும் நிகழ்வுகளை தனக்குள்ளே போட்டு குழப்பிக்கொண்டிருந்தார் . அந்த குழப்பங்களுக்கு வடிகாலாக , எழுத்தைப்பயன்படுத்தினார் . அப்படி உருவானதுதான் இந்த நாவல் . உருவான பின் எவ்வளவோ முயற்சிக்குப்பின் இந்த நாவலை வெளியிட்டார் . வெளியான நாவல் , வசூலில் தூள் கிளப்ப , இதைக்கவனித்த பிராட்பிட் தன்னுடைய கம்பனியின்மூலம் இந்நாவலின் சினிமா உரிமம் வாங்கி , சுடச்சுட படமாக்கி வெளியிட்டுவிட்டார் . நாவல்மீதான எதிர்பார்ப்பில் சென்றவர்ரகளுக்கு படம் சரியானதொரு அனுபவமாய் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு படம் வெளிவந்தபோது வந்தது . ஆனால் நாம் கவலைப்படத்தேவையில்லை . நாவல் படித்திராத நம்ககு இத்திரைப்படம் ஒரு புது அனுபவமாய் இருக்கும் . படமும் வசூலில் ஒரு கலக்கு , கலக்கியிருக்கிறது . முக்கியமான விஷயம் , இப்படத்தில் ஒரு காட்சி கூட வேகமாக இருக்காது . இது ஒரு அக்மார்க் காதல் திரைப்படம் . ஆங்காங்கே டைம் ட்ராவல் நடப்பதால் கொஞ்சம் அதீத பரவசம் ஏற்படும் . இந்த படத்தில் உற்றுக்கவனித்தால் மெமென்டோ , TRIANGLE மாதிரி ஒரு LOOP மெத்தேடை திரைக்கதையில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம் . ஹீரோ சந்திக்கும் பெண்ணே , தான் தான் உன்னுடைய வருங்கால மனைவி என்பதும் , அதன்பின் இருவரும் திருமணம் செய்வதெல்லாம் ஓ.கே . ஆனால் திருமணத்திற்குப்பின் தான்  , ஹீரோ சிறுவயது ஹீரோவினைக்காண செல்லுவார் . அப்படியெனில் எப்போது அவளை சந்தித்து தனது காதலைப்பற்றி கூறுகிறார் என்ற உண்மை நிலவரம் தெரியவில்லை . ஆங்காங்கே நம்மைக்குழப்ப முயற்சிக்கும் திரைக்கதையெனினும் , நாம் உன்னிப்பாய் கவனித்தால் இப்படத்தில் இருக்கும் தவறுகளை அழகாய் கண்டுபிடிக்கமுடியும் .


இந்த படத்தின் இயக்குநர் ராபர்ட் , ஏற்கனவே எனக்கு RED , FLIGHT PLAN போன்ற படங்களில் அறிமுகமானவர் தான் .  இந்த படத்திலும் சிறப்பாக தன் பணியைச்செய்துள்ளார் . ஏனெனில் சிறிது தடம் மாறியிருந்தாலும் படம் புரியாமல் போயிருக்கும் . யார் இறந்தகால ஹென்றி , நிகழ்கால ஹென்றி என நமக்குப்புரியும் படிச்சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார் . நிகழ்காலத்தில் க்ளாராவுக்கும் ஹென்றிக்கும் சண்டை வர , அதேநேரம் சிறுமி க்ளாரைவை ஹென்றி சந்தித்து பேசும் அந்த காட்சி அழகானது . பலகாட்சிகள் நம்மை ஆஹா சொல்லவைக்கும் விதமாய் இருக்கும் .


சிறு சிறு தவறுகள் இருப்பினும்  இந்த படம் ஒரு புதுவகையான அனுபவம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை . காதல் திரைப்படங்கள் , சயின்ஸ் பிக்ஷன் ரசிகர்கள் , வித்தியாசமான திரைக்கதை உடைய திரைப்படங்களைப்பார்ப்போர் போன்றோருக்கு ஏற்ற திரைப்படம் .முடிந்தால் தனியாக , அமைதியாக , பொறுமையாகப்பாருங்கள் . இந்த படம் கண்டிப்பாய் பிடிக்கும் .தொடர்புடைய இடுகைகள்


உங்கள் விருப்பம்

2 comments:


 1. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அண்ணா ! சிறுகதைப்போட்டியில் நானும் கலந்துகொள்ளப்போகிறேன் !

   Delete