GOOD FELLAS – ஒரு பார்வை




பெரும்பாலும் பெரிய பெரிய டைரக்டர்களைப்பற்றி எழுதும்போது , இந்த படம் இவருடைய மாஸ்டர்பீஸ் , இந்த படங்களெல்லாம் இவரின் பெஸ்ட் என விமர்சகர்கள் லிஸ்ட் கொடுப்பார்கள் . ஆனால் மார்ட்டின் ஸ்கார்சேசேயின் படங்களைப்பற்றி எழுதவேண்டுமெனில் எல்லாப்படங்களையுமே பெஸ்ட் என்றுதான் கூறவேண்டும் . அவருடைய படங்களில் எது உங்களுக்கு மிகமிக பிடிக்கின்றதோ , அதுதான் அவருடைய மாஸ்டர்பீஸ் . எனக்கு இவரின் THE DEPARTED என்றால் உயிர் . அதற்கான காரணம் இப்படம் பார்த்தவர்களுக்கே தெரியும் . ஆனால் ஸ்கார்சேசேயின் மாஸ்டர்பீஸ் என்று உலகமே கொண்டாடும் திரைப்படம்தான் GOODFELLAS .

சத்யஜித்ரே , ஹிட்ஜ்காக் போன்றவர்களின் படங்களைப்பார்த்து வளர்ந்தவர் ஸ்கார்சேஸி .ஜேம்ஸ் காமரூன் , ஸ்பில்பெர்க் போன்ற பெரும்தலைகளுடன் நட்புடன் இருப்பவர் .AFI ன் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ( முதலிடம் ? வேற யாரு , ஆல்ப்ரட் ஹிட்ஜ்காக் தான் ) .உலகிலேயே அதிகளவு ஆஸ்கார் நாமிநேட் செய்யப்பட்ட டைரக்டர் . இவரின் திரைப்படங்களுக்கு மொத்தம் 80 ஆஸ்கார் நாமிநேட் , மற்றும் 20 விருதுகள் பெற்றுள்ளன . 56 கோல்டன் குளோப் நாமினேசன் மற்றும் 11 விருதுகள் . இன்னும் புதுப்புது பெயர்களில் எல்லாம் எக்கச்சக்க நாமிநேசன்கள் மற்றும் விருதுகள் பெற்றுள்ளார் . வயதானாலும் உன் ஸ்டைல் இன்னும் மாறல எனும் படையப்பா படத்தின் வசனம் அப்படியே கனகச்சிதமாக பொருந்தும் ஒரே ஆள் இவர்மட்டும்தான் . வாழ்நாள் சாதனை விருதெல்லாம் தந்து சினிமாவை விட்டு ஒதுக்க நினைத்தாலும் மனிதர் 70 –ம் வயதில் HUGO எனும் திரைப்படத்தினை இயக்கி 11 ஆஸ்கார் நாமினேசன்  உட்பட 116 விருதுகளுக்கு அந்த திரைப்படத்தின் பெயரை  பரிந்துரைக்க வைத்திருக்கிறார்  .  WOLF OF THE WALL STREET (18+++++) -லாம் இவர் இயக்கிய படமென்றால் , புதிதாய் பார்ப்பவர்களுக்கு வாய் தானாய் திறந்துவிடும் . 



தலைவர் இயக்கும் படங்களின் கதையின் நாயகர்களெல்லாம் இயல்பான சமூகத்தில் இருந்து முரண்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள் . THE DEPARTED , SHUTTER ISLAND , WOLF OF WALL STREET போன்ற படங்களையெல்லாம் பார்த்தால் தானாகவே தெரியும் .நல்லவர்களுக்கு இவர் படத்தில் வேலையே கிடையாது . வில்லன்கள் , மோசமான வில்லன்கள் , மிகமிக மோசமான வில்லன்கள் , துரோகிகள் , சைக்கோக்கள் ,  போன்றவர்கள் தான் இவரின் படங்களின் ஹீரோக்களாய் திரையில் உலா வருவார்கள் .அதற்காக படம் முழுவதும் வெட்டு , குத்து , ரத்தம் , சண்டை தான் இருக்கும் என்று நினைத்துவிடாதிர்கள் . மேலே குறிப்பிட்டவர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் நமக்குத்திரையில் காட்டுவதில் வல்லவர் . அதிலும் துரோகிகளைப்பற்றி இவர் எடுத்த படங்களெல்லாம் A1 ரகம். ஒரு முக்கிய குறிப்பு , இவரின் பெரும்பாலான படங்கள் அனைத்தும் உண்மைச்சம்பவங்களையும் , வாழ்ந்த மனிதர்களையும் பற்றியும்தான் இருக்கும் . அதுவும் அந்தந்த படங்களின் ஹீரோக்களோ தங்களின் கதைகளை ஆடியன்சிடம் சொல்லும் NARRATION முறையில்தான் இவரின் பல படங்கள் இருக்கும் .

அதேபோல் எனக்குத்தெரிந்து இசையை மிகச்சரியாய் பயன்படுத்தும் இயக்குநர்களில் இவரும் ஒருவர் . இசை மாத்திரம் கிடையாது , சின்னச்சின்ன ஒலிக்குறிப்புகள் , ஸ்பெசல் எஃபெக்டுகள் , கேமரா ஆங்கில் போன்றவற்றை பக்காவாக தன் திரைப்படங்கில் பயன்படுத்துபவர் இவர்தான் . TARANTINO படங்களிலும் இசை சரிவிகிதமாய் இருப்பினும் , ஒரு சில இடங்களில் காட்சியைத்தாண்டி , இசை மாத்திரம் தனியாய் தெரியும் . ஆனால் தலைவர் அப்படியெல்லாம் கிடையாது . ஒரு இடத்தில் கூட இப்படிசெய்திருக்கலாம் , இந்த காட்சிக்குப்பதில் அப்படி எடுத்திருக்கலாம் என்று நம்மை நினைக்கவைக்கமாட்டார் . அதுவும் இவரின் படம் மெதுவாக நகர்கிறது என்றால் கட்டாயமாக யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் படத்தினுள் வரப்போகிறது என்று அர்த்தம் . இன்னும் இவரைப்பற்றியும் இவரின் படங்களைப்பற்றியும் எழுதினால் குறைந்தது  1000 பக்கமாவது எழுத நேரிடும் என்பதால் GOOD FELLAS படத்தினைப்பற்றி பார்க்கலாம் .


துவக்கக்காட்சியில் மூன்றுபேர் காரில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் . அப்போது காரின் டிக்கியில் இருந்து யாரோ தட்டும் சத்தம் கேட்க , காரை நிறுத்துகிறார்கள் . நிறுத்திவிட்டு டிக்கியை திறந்துபார்ப்பவர்கள் கடுப்பாகிறார்கள் . உள்ளே முகமெல்லாம் ரத்தக்காயத்துடன் ஒருவன் அறைகுறை உயிருடன் இருக்கிறான் . அப்போது மூவரில் ஒருவனான டாமி , நீ இன்னும் சாகலையா என்று கூறி விட்டு தன்னிடம் இருக்கும் கத்தியை எடுத்து சதக் சதக் . பக்கத்தில் நிற்கும் ஜிம்மி என்பவன் துப்பாக்கியால் டிக்கியில் கிடந்தவனை டுமில் டுமில் . மீதம் இருக்கும் ஹென்றி என்பவன் நம்மிடம் சொல்கிறான் ‘சிறுவயதிலிருந்தே எனக்கு கேங்ஸ்டர் ஆகவேண்டும் என்பதுதான் ஆசை ’ . அப்புறம் என்ன , அவன் எப்படி கேங்ஸ்டர் ஆனான் ? அவன் வாழ்க்கை கடைசியில் என்ன ஆனது என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .

ஹென்றியாக வரும்  ரேய் லியோட்டோ தான் ஹீரோ . மனிதர் படத்தில் வாழ்ந்திருக்கிறார்  . ஜிம்மியாக வரும் ராபர்ட் டி நீரோவின் நடிப்பைப்பற்றி சொல்லத்தேவையில்லை .ஒரு அசால்டான , ஆர்ப்பாட்டமில்லாத கேங்ஸ்டராக அவர் வரும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம் . இவர்களையெல்லாம் தூக்கிசாப்பிடும் விதமாய் டாமி எனும் கேரக்டரில் நடித்திருக்கும் ஜோய்  அமர்க்களப்படுத்தியிருக்கிறார் . ஒரு அரைகுறை சைக்கோ போல ஜாலியாய் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென டென்சனாவதும்  , உடனே யார் கிடைத்தாலும் சுட்டுவிடுவதும் , அதனைத்தொடர்ந்து வழவழவென காமெடியாய் கதைப்பதுமாய் படத்தை கட்டி இழுத்துச்செல்லும் ஆபத்பாந்தவனாய் நிற்கிறார் . ஒரு முக்கிய விஷயம் , இப்படத்திற்கு இசையமைப்பாளர் என்று யாருமில்லை . ஸ்கார்சேசி அவர் கேட்டு ரசித்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளார் . ஒளிப்பதிவாளர் , எடிட்டர்  என அனைத்துத்துறைக்கலைஞர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை இத்திரைப்படத்திற்கு வழங்கியிருப்பார்கள் . இதுவும் வழக்கம்போல பெரும்பான்மையான படம் NARRATION முறையிலேயே நகர்கிறது . ஆனால் போர் அடிக்கவில்லை . நமக்கு எங்கெல்லாம் போர் அடிக்கிறது என தோன்றுகிறதோ , அங்கெல்லாம் திடும் திடுமென எதாவது ஒரு காட்சியை வைத்து , படத்துடன் ஒன்றவைத்துவிடுவார் .

மொத்தத்தில் ,  காமெடி , க்ரைம் மற்றும் ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு இந்த படம் ஒரு கியாரண்டி .

பின்குறிப்பு – இது 18+ க்கான படம் .
கிளைமேக்ஸ் முடியும்போது ஹீரோ பேப்பர் எடுக்கும் அந்த காட்சியை கொஞ்சம் கூர்மையாக கவனியுங்கள் . ஒலிக்குறிப்புகள் உபயோகிப்பதில் ஸ்கார்ஸேசி எத்தகைய வல்லுநர் என்பது தெரியும் .  
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியின் அடிப்படையில் ஒரு காட்சியை மட்டும்தான் இங்கே குறிப்பிட்டிருப்பேன் . ஏனென்றால் அந்த ஒரு காட்சியைப்பார்த்தாலே , படம் உங்களைத் தன்வசப்படுத்திக்கொள்ளும் .


தொடர்புடைய சினிமா விமர்சனங்கள்








Comments


  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    ReplyDelete
  2. அழகான முறையில் விமர்சனம் எழுதி இருக்கீங்க படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கொள்கிறது ஆனால் பின் குறிப்பு

    (இது 18+ க்கான படம்)

    இதைக்கண்டவுடன் பின் வாங்குகிறது மனம் காரணம் என்னை தியேட்டருக்குள் விடுவார்களா ?
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. கவலையே வேண்டாம் அண்ணா ! இந்தப்படம் வந்தது 1990 . இப்போ எந்த தியேட்டரிலும் ஓடவில்லை . டவுன்லோடிப்பார்த்துக்கொள்ளலாம் .

      அண்ணா , நல்லா பாருங்க , அது 81+ இல்ல , 18+ தான் . அதனால் தாரளமாய் நீங்கள் பார்க்கலாம் .

      Delete
  3. # WOLF OF THE WALL STREET (18+++++)#
    நம்ம கே .பி யின் மன்மத லீலை போன்றா :)
    கில்லர்ஜீயை தியேட்டருக்குள் விட மாட்டார்கள் என்றால் ,என்னை போஸ்டர் பார்க்கக் கூட விட மாட்டார்களே :)
    த ம 3.

    ReplyDelete
    Replies
    1. மன்மதலீலையெல்லாம் சாதாரணம் அண்ணா . wolf of the wall street படம் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க அந்தமாதிரி தான் .

      //கில்லர்ஜீயை தியேட்டருக்குள் விட மாட்டார்கள் என்றால் ,என்னை போஸ்டர் பார்க்கக் கூட விட மாட்டார்களே :)
      //
      அடங்கப்பா , இது உலகமகா நடிப்புடா சாமி ...

      Delete
  4. விமர்சனம் எழுதுவதில் வல்லுனரப்பா நீர்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை